போதி தருமர்

திருக்குறள், ஏகம் பதிப்பகம், 3 பிள்ளையார் கோவில் தெரு, 2-ம் சந்து, முதல் மாடி, திருவல்லிக்கேணி, சென்னை – 5; விலை ரூ. 295 திருக்குறள் மூலமும் விளக்க உரையும் புத்தகத்தை மூத்த தமிழறிஞர் நன்னன் எழுதியுள்ளார். திருக்குறளுக்கு 100-க்கும் மேற்பட்ட உரைகள் வந்திருந்தாலும் புலவர் நன்னனைப் போல எளிய முறையில் கூறியிருப்பார்களா என்பது சந்தேகம்தான். ஒரு குறளைச் சொல்லி அதற்கான உரைநடை, சொற்பொருள், விளக்கம், கருத்துரை என்று மிக எளிய முறையில் விளக்கி இருக்கிறார் நன்னன். 90 வயதைத் தொட்ட புலவர் மா.நன்னன் கடலூர் […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 108, விலை 150 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-4.html சோழர்கள் ஆட்சி நடத்திய காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகும். தென்னிந்தியா முழுவதையும் சுமார் 300 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டனர். நாட்டில் அமைதி நிலவியது. கம்பர், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் சிறந்த நூல்களை எழுதி, தமிழை வளர்த்தனர். கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்த, சோழர் வரலாற்றை சிறப்புடன் எழுதியுள்ளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார். அவர் […]

Read more

நெஞ்சமதில் நீயா

நெஞ்சமதில் நீயா, வாணிப்ரியா, சுபம் பதிப்பகம், 15, மணிகண்டன் ஐந்தாவது தெரு, பழையவண்ணாரப்பேட்டை, சென்னை – 21, விலை 130 ரூ. வெளிநாட்டிற்குப் படிக்கச் சென்ற பெண், தன் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியை எப்படி காப்பாற்றுகிறாள், தான் சந்தித்த சவால்களை எப்படி சமாளித்து வெற்றி பெறுகிறாள் என்று விளக்கும் நாவல்.   —   மனுமுறை கண்ட வாசகம், ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம், ஓங்காரக்குடில், 1/3, நகர் விரிவாக்கம், துறையூர் – 621010, விலை 50 ரூ. ராமலிங்க சுவாமிகள் இயற்றிய மனுமுறை கண்ட வாசகம் […]

Read more

தென்னிந்திய சவுராஷ்ட்ர சமூக வரலாறு

கடலங்குடியின் மகாபாரதம், சசிரேகா, கடலங்குடி பதிப்பகம், 38, நடேச அய்யர் தெரு, தியாகராய நகர், சென்னை – 17; விலை ரூ. 80   மிகப்பெரிய இதிகாசமான மகாபாரதத்தை 168 பக்கங்களில் சுருக்கிக் கொடுத்திருக்கிறார்கள். மகாபாரதத்தை சுருக்கமாக அரிய இந்நூல் பெரிதும் உதவும்.   —   ஸ்ரீமாரியம்மனின் வரலாறு வழிபாடு அவதாரம், சு.சக்திவேல், வெளியிட்டோர்: எல்.தங்கவேலு, அயன்பொருவாய் (அஞ்சல்), பாலக்குறிச்சி (வழி), மணப்பாறை வட்டம், திருச்சி மாவட்டம், விலை ரூ.100   மாரியம்மன் வழிபாடுகளில் உள்ள பல முறைகள் சான்றுகளுடன் கூறப்பட்டுள்ளன. உடுக்கை […]

Read more

சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு

சோழர் காலத் தமிழ் மக்கள் வரலாறு, டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, பக்கங்கள் 288, விலை 250 ரூ. ‘சோழவள நாடு சோறுடைத்து’ என்று புகழப்படும் சோழ நாட்டின் தமிழ் மக்கள் வாழ்ந்த முறை பற்றிய வரலாற்று நூலாக இந்நூல் வெளிவந்ததுள்ளது. துலோக்கோல் போன்று சீர் துக்கிப் பார்த்துத் தம் கருத்துக்களை எழுதும் இந்நூலாசிரியர் இந்நூலில் தெள்ளத் தெளிவாக, சோழ நாட்டின் அன்றையச் சமுதாய மக்களின் வாழ்க்கை முறைகளை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார். சோழ மன்னர்களை, அவர்களின் ஊராட்சி, சமயம், கோவில்கள், பிராமணர்கள், […]

Read more

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர்

வெள்ளுடை வேந்தர் சர் பிட்டி. தியாகராயர், புலவர் ம. அய்யாசாமி, திருக்குறள் பதிப்பகம், பக்கங்கள் 336, விலை 225 ரூ. சென்னை சென்ட்ரலைத் தாண்டிப் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் செல்லும்போது வலப்பக்கத்தில் ரிப்பன் மாளிகை, அனைவரது கண்ணையும் கவரும். சென்னை மாநகராட்சிக் கட்டம் என, இன்று சிறப்பிக்கப்படும் இந்தக் கட்டடத்தின் முகப்பில் அமைந்திருக்கும் சிலைதான் பிட்டி தியாகராயர். எப்போதும் வெள்ளை ஆடை அணிந்ததால், ‘வெள்ளுடைவேந்தர்’ என்று போற்றப்பட்டவர். எனவே, அவரது சிலையும் வெள்ளை நிறத்திலேயே அமைந்துள்ளது. ராவ் பகதூர், திவான் பகதூர், சர் முதலான பட்டங்களை […]

Read more

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி

டாக்டர் மு.வ.வின் தனிப்பெரும் மாட்சி, கவிவேந்தர் கா. வேழவேந்தன், கீதை பதிப்பகம், பக்கம் 184, விலை 100 ரூ இலக்கியம் தோய்ந்த கவிஞராகவும், அரசியல் துறை சார்ந்த நெறியாளராகவும், நல்ல வழக்கறிஞராகவும், மானடத்தை நேசிக்கும் மாண்பாளராகவும் உலா வருகின்ற கவிவேந்தர் டாக்டர். மு.வ., எனத் துவங்கி, ‘டாக்டர் மு.வ., அவர்களும் நானும்’ என 30 கட்டுரைகளோடு நிறைவு செய்துள்ளார் வேழவேந்தன். மாண்பு என, பல கட்டுரைகளில் நூலாசிரியர் அழகாய் பதிவு செய்துள்ளார். பேராசிரியரது படைப்புகளில் செந்தாமரை, கள்ளோவியமோ, அந்த நாள், கரித்துண்டு, கயமை, அகல்விளக்கு, […]

Read more

அமுதே மருந்து

கல்விச் செல்வம் தந்த காமராசர், ஈசாந்திமங்கலம் முருகேசன், மகேஸ்வரி பதிப்பகம், 12, ஸ்டேஷன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை 33, விலை 116. தமிழக முதல்-அமைச்சராக பதவி  வகித்தபோது கல்வி வளர்ச்சிக்காக அருந்தொண்டாற்றினார்.  புதுப் பள்ளிக்கூடங்களை  ஏராளமாகத் திறந்தார். மதிய  உணவுத் திட்டத்தைக் கொண்டு  வந்தார். கல்விக்கண் திறந்த காமராஜரின்  வாழ்க்கை வரலாற்றை சுவைபடி  எழுதியுள்ளார். ஈசாந்திமங்கலம்  முருகேசன் இளைய  தலைமுறையினர் அவசியம்  படிக்க வேண்டிய புத்தகம். — கண்ணீரில் மிதக்கும் கதைகள்,  டாக்டர் க.ப. அறவாணன், தமிழ்க்கோட்டம் வெளியீடு, 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமிஞ்சிக்கரை,   சென்னை 29, விலை 80ரூ வரலாற்று நூல்களையும்,  ஆராய்ச்சி […]

Read more

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே

குற்றவாளிக் கூண்டில் ராஜபக்ஷே, ப. திருமாவேலன், வெளியீடு விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை சென்னை 2, விலை 80ரூ. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தலைமையில் இலங்கை முள்ளி வாய்க்கால் பகுதியில் நடந்த இறுதிப்போர் வரையிலான நிகழ்ச்சிகளை தொகுத்து ‘ஈழம் இன்று’ என்ற தலைப்பில் எழுத்தாளர் ப. திருமாவேலன் எழுதிய நூல் ஏற்கனவே வெளிவந்தது. போருக்கு பின்னால் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்ட இலங்கை தமிழர்களின் துயரம், ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 225 அகதிகள் இந்தோனேசியா கடல் எல்லையில் தடுக்கப்பட்ட அவலம். வேலுப்பிள்ளையின் […]

Read more
1 221 222 223