பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல்

பிரமிடுகள் தேசத்தில் ஞானத்தேடல், பிளாக்ஹோல் பப்ளிகேஷன்,  7/1, மூன்றாவது அவென்யூ, அசோக் நகர்,சென்னை 83, விலை 100ரூ. எகிப்தில் உள்ள பிரமிடுகள், கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எகிப்திய மன்னர்கள், அரசிகள் ஆகியோரின் சடலங்களை பாதுகாக்க இந்த பிரமிடுகள் கட்டப்பட்டன. சடலங்களுடன் உள்ளே வைக்கப்பட்ட தங்கம், வைரம், வைடூரியம் முதலிய விலை உயர்ந்த பொருட்கள் பிற்காலத்தில் கொள்ளையடிக்கப்பட்டன. மாலை நேரத்துக்குப் பின் பிரமிடுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. பால்பிரண்டன் என்ற இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானி, இரவு நேரத்தில் பிரமிடுக்குள் தங்கினார். […]

Read more

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு

சார்லி சாப்ளின் வாழ்க்கை வரலாறு, கவிதா பதிப்பகம், 8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-809-4.html ஊமைப்பட காலத்திலேயே உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகராகத் திகழ்ந்தவர், சார்லி சாப்ளின், அவருடைய நகைச்சுவையில் சிந்தனையும் கலந்திருக்கும். இளமைபில் சாப்ளின் வறுமையில் வாடினார். தாங்க முடியாத துன்பங்களை அனுபவித்தார். வேறொருவராக இருந்திருந்தால் தற்கொலை செய்து கொண்டிருப்பார் என்று சொல்லக்கூடிய விதத்தில் இருந்தது அவருடைய குடும்ப வாழ்க்கை. சாப்ளின் பற்றி பல […]

Read more

மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்

மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்,சஞ்சீவியார் பதிப்பகம், 11,கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 48ரூ மணமக்கள் இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளைக் கூறுகிறார். சி.எஸ். தேவநாதன். புதுமண மக்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல்.  – —- மணிச்சுடர் வெள்ளி விழா மலர்,பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை 1, விலை 300ரூ இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. […]

Read more

வாழ்வியல் சிந்தனைகள்

வாழ்வியல் சிந்தனைகள், தர்மராஜ் ஜோசப், யுவன் பப்ளிஷர்ஸ், 266 அம்மன் கோவில்பட்டி தென்பாகத்தெரு, சிவகாசி – 626 123, விலை 100ரூ. சமுதாய வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில், முதியோர் குரல், இலவசம் ஏற்கலாமா? ஊழல் என்றால் என்ன? திருமண முறிவுகள் போன்ற 32 கட்டுரைகளும் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கின்றன. கனவுகள் ஏற்படுவதற்கான காரணங்களை விளக்குவதுடன் அதற்கு பொருள் இருப்பதாக கருதினால் மூடநம்பிக்கை என்றும் கூறுகிறார் நூலாசிரியர். ஆங்கில மோகத்தால் தமிழ் சொற்கள் அழிவதை சுட்டிக்காட்டுவதுடன் தமிழ் மொழி, இனம் வளர எங்கும் தமிழை […]

Read more

வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு)

  வீணையின் குரல் (எஸ். பாலசந்தர் வாழ்க்கை வரலாறு), காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் – 629001, விலை 350ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-808-0.html 1934ல் பிரபல இந்தி டைரக்டர் வி. சாந்தாராம் தமிழில் தயாரித்த சீதா கல்யாணம் படத்தில் 7வயது சிறுவனாக கஞ்சிரா வாசித்தவர். 1948-ல் இரட்டை வேட நடிப்பில் வந்த முதல் சமூகப்படமான இது நிஜமாவில், கதாநாயகனாக இரட்டை வேடம் தாங்கி நடித்தவர். பாடல் – நடனம் இல்லாமல் எடுக்கப்பட்ட முதல் […]

Read more

வண்ண நிலவன் சிறுகதைகள் – தாசன் கடை வழியாக அவர் செல்வதில்லை

தாசன் கடைவழியாக அவர் செல்வதில்லை (வண்ண நிலவன் சிறுகதைகள்), நற்றிணை பதிப்பகம், 243ஏ, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5, விலை 200ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0000-471-0.html நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் நிறைய எழுதி, இலக்கிய உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைத் தேடிக்கொண்டிருப்பவர் வண்ண நிலவன். சில இலக்கியப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருந்தார். ருத்ரையாவின் அவள் அப்படித்தான் திரைப்படத்தில் வசன கர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். பல துறைகளில் பணிபுரிந்தாலும், சிறுகதை ஆசிரியராக உச்சத்தைத் தொட்டவர். இப்போது, […]

Read more

தமிழ்நாட்டில் காந்தி

தமிழ்நாட்டில் காந்தி, சந்தியா பதிப்பகம், 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், சென்னை – 83. விலை ரூ. 75 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-8.html சுதந்திரப் போராட்டத்தின்போது 1934 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தி இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். தமிழ்நாட்டில் 23.2.1934 முதல் ஒரு மாத காலம் ரெயிலிலும் காரிலும் வண்டியிலும் பயணம் செய்தார். அப்போது காந்தியுடன் சென்றவர்களில், திருச்சியில் பிரபல டாக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரஸ் மந்திரிசபையில் இடம் பெற்றவருமான டாக்டர் டி.எஸ்.எஸ். […]

Read more

பாஷாவும் நானும்

பாஷாவும் நானும், வெளியிட்டோர்: வெஸ்ட்லேண்ட், வெங்கட் டவர், 165, பூந்தமல்லி ஐரோடு, மதுரவாயல், சென்னை – 95. விலை ரூ. 125 ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்க்கையில் ஒரு மைல்கல் “பாட்ஷா.” அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல, வசூல் சக்ரவர்த்தி என்று எடுத்துக்காட்டிய படம். ரஜினி நடித்த பாட்ஷா, அண்ணாமலை, வீரா ஆகிய படங்களை டைரக்ட் செய்தவர் சுரேஷ்கிருஷ்ணா. பாட்ஷா படமாகும்போது நடந்த சுவையான சம்பவங்கள், படப்பிடிப்பில் ரஜினி காட்டிய ஆர்வம், படத்தில் செய்யப்பட்ட மாறுதல்கள்… இவைகளை எல்லாம் கதைபோல் எழுதியிருக்கிறார்கள், சுரேஷ் […]

Read more

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…

நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி…, முனைவர் அ.அய்யூப், நவமணி பதிப்பகம், 44, எல்டாம்ஸ் ரோடு, சென்னை – 18. விலை ரூ. 90 “இந்தியா முன்னேற வேண்டுமானால் கனவு காணவேண்டும்” என்றார், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம். நாம் எதை எண்ணி கடுமையாக உழைக்கிறோமோ, அத்துறையில் நமக்கு வெற்றி நிச்சயம் என்கிறார், முனைவர் அ.அய்யூப். சாதாரண நிலையில் இருந்த பல தொழில் அதிபர்கள், பிரமுகர்கள் எப்படி உழைப்பால் உயர்ந்தார்கள், வாழ்க்கையில் வெற்றி பெற்றார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறார். அதிர்ஷ்டம் இருந்தால்தான் முன்னேறலாம் என்று நினைப்பது தவறு […]

Read more

மணி மணி மணி! பணத்தை பெருக்கும் வழிமுறைகள்

கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜன், டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு,  தி.நகர், சென்னை – 17. விலை ரூ. 70 ஈரோட்டில் பிறந்த கணிதமேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாறு. ராமானுஜன் வாழ்வில் நடைபெற்ற சுவையான, முக்கிய சம்பவங்கள் தொகுத்து தரப்பட்டுள்ளன. 33 வயதே வாழ்ந்த இந்த வாலிபரின் கண்டுபிடிப்புகள், கணக்கியலில் புரட்சியை, மறுமலர்ச்சியை நேரடியாக ஏற்படுத்தி உள்ளது. தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ளவேண்டிய வரலாறு.   —   துளிர்க்கும், இந்திரா சவுந்தர்ராஜன், திருமகள் நிலையம், 13, […]

Read more
1 219 220 221 222 223