புதிய வானம் புதிய பூமி

புதிய வானம் புதிய பூமி, பட்டுக்கோட்டை ராஜா, சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ், விலை 333ரூ. தஞ்சையின் சோழ வம்சத்து புகழ் மிக்க மன்னரான ராஜராஜ சோழனுக்குப் பிறகு தஞ்சையை பல மன்னர்கள் ஆட்சி செய்து இருந்த போதிலும், அந்த தேசத்தை 34 ஆண்டுகள் ஆட்சி செய்து மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்த மன்னர் என்ற பெருமையைப் பெற்ற சரபோஜியின் வாழ்க்கையைச் சுற்றிப் பின்னப்பட்ட இந்த நாவல், பெரும்பாலான வரலாற்றுச் சம்பவங்களை சிதைக்காமல் வழங்கி இருக்கிறது. நாவல் ருசிகரமாகவும், படிப்பதற்கு விறுவிறுப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக […]

Read more

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?

வீரப்பன் மரணம் யாரால்? எப்படி?, நக்கீரன் கோபால், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், விலை 300ரூ. தமிழகம் கர்நாடக அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாக பல ஆண்டுகள் காட்டில் மறைந்து வாழ்ந்து, அதிகாரிகள் கொலை, முக்கிய பிரமுகர்கள் கடத்தல் உள்ளிட்ட பல கொடூரச் செயல்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பனும் அவனது கூட்டாளிகளும் 2004-ம் ஆண்டு சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் மக்கள் மனதில் இன்னும் நிழலாடிக் கொண்டு இருப்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்த நூல் அமைந்து இருக்கிறது. வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் […]

Read more

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்

திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை 200ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு திராவிட இயக்கம் எந்தவிதமான ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டது என்பது இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கிறது. குழந்தைகளுக்கு தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதில் திராவிட இயக்கம் ஆர்வத்துடன் ஈடுபட்டு இருக்கிறது என்பதை விளக்கி இருக்கும் ஆசிரியர், கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், சினிமா, மேடைப்பேச்சு, அறிவியல் போன்ற பல அம்சங்களில் திராவிட இயக்கம் தனது பங்களிப்பை செலுத்தியது எப்படி என்பதை ஆழமாகப் பதிவு செய்து இருக்கிறார். பிற்காலச் சோழர் […]

Read more

இளமையில் வெல்

இளமையில் வெல், செ.சைலேந்திரபாபு ஐ.ஏ.எஸ்., தினத்தந்தி பதிப்பகம், விலை 120ரூ. ஒரு நாட்டின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்பவர்கள் இளைஞர்கள். அவர்களை ஆற்றல் படைத்தவர்களான உருவாக்க வேண்டும். அதே வகையில் அவர்களிடம் உள்ள தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், கல்வி கற்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையிலும், ஐ.பி.எஸ். அதிகாரி செ.சைலேந்திரபாபு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இந்த கட்டுரைத் தொடர், தினத்தந்தி இளைஞர் மலரில் வெளியானபோது, லட்சக்கணக்கான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றது. அது இப்போது புத்தகமாக வெளிவந்துள்ளது. ‘பூமியில் புதைத்த மரத்துண்டுகளில் அதிக அழுத்தத்துக்கு உள்ளான கரித்துண்டுகளே […]

Read more

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்

சமுதாயச்சிற்பி பெருந்தலைவர் காமராசர்,வி.ஜி.சந்தோசம், பழனியப்பா பிரதரஸ், விலை 360ரூ. பிரபலமான ஒருவரின் வாழ்க்கை வரலாறு என்பதை பாட நூல் போல அல்லாமல், சுவாரசியமான நிகழ்வுகளைக் கோர்த்து, அவற்றை படிப்பதற்கு சுவை தரும் வகையில் அமைக்க முடியும் என்பதை இந்த நூல் மெய்ப்பித்துக் காட்டி இருக்கிறது. பெருந்தலைவர் காமராஜர் வாழ்வின் சுவடுகளை இந்த நூலில் ஆசிரியர் அழகாக படம் பிடித்துக்கொடுத்து இருக்கிறார். செய்தித்தாள் வினியோகப் பணியில் இருந்தபோது, சிறுவனான தனக்கு ‘தினத்தந்தி’ வினியோகம் செய்தமைக்கு 1954-ம் ஆண்டு தீபாவளியன்று காமராஜர் ஒரு ரூபாய் பரிசு வழங்கியதையும் […]

Read more

நன்மைகளின் கருவூலம்

நன்மைகளின் கருவூலம், பிரியசகி, ஜோசப் ஜெயராஜ், பாரதி புத்தகாலயம், விலை 150ரூ. வாழ்வில் வெற்றி பெறும் வகையில் குழந்தைகளை எவ்வாறு வளர்ப்பது? பதின்பருவத்தினர் சமுதாயத்தில் சந்திக்கும் பிரச்சினைகளை அவர்கள் எப்படி மேற்கொள்வது? அந்தப் பருவத்தில் அவர்களுடன் பெற்றோர் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பது உள்பட பயனுள்ள பல தகவல்களை இந்த நூல் தருகிறது. வாழ்வியலுக்குத் தேவையான ஆலோசனைகளை அறிவுரை போல அல்லாமல் கதையைச் சொல்லும் வித்தில் அவற்றைத் தந்து இருக்கிறார்கள். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதில் உள்ள கருத்துகள் சார்ந்த நல்ல கவிதையைத் தேர்ந்தெடுத்துக் […]

Read more

தொல்காப்பியம்

தொல்காப்பியம், புலியூர்க்கேசிகன், ஜீவா பதிப்பகம், விலை 400ரூ. உலக மொழிகளின் இலக்கண வரம்பினை உறுதிப்படுத்தும் நூல்கள் அனைத்துக்கும் முற்பட்டது என்று போற்றப்படும் தொல்காப்பியத்திற்கு எளிய விளக்க உரையாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. நச்சினார்க்கினியர், இளம்பூரணனார் ஆகியோரின் உரைகளைத் தழுவி இந்த விளக்க உரை எழுதப்பட்டு இருக்கின்றது என்ற போதிலும், தொல்காப்பியம் முழுவதையும் புரிந்து கொள்ளத் தக்க வகையில் சுருக்கமான வரிகளைக் கொடுத்து இருப்பதன் மூலம் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது. தொல்காப்பியத்தின் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்க உரையுடன் எடுத்துக்காட்டுகள் கொடுத்து இருப்பதால் படிக்க […]

Read more

போகரின் சப்தகாண்டம் 7000

போகரின் சப்தகாண்டம் 7000, பதிப்பாசிரியர் சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், முதல்பாகம் விலை 500ரூ, இரண்டாம் பாகம் விலை 400ரூ. அமானுஷ்மான சக்திகள் கொண்டவர்கள் என்று பலராலும் நம்பப்படும் சித்தர்கள் பற்றிய செய்திகள் எல்லாமே வியப்பானவை என்றாலும், சித்தர் போகர் எழுதியதாகக் கூறப்படும் இந்த நூலில் உள்ள தகவல்கள் நம்மை ஆச்சரியத்தின் உச்சிக்கே கொண்டு சென்று விடுகின்றன. சிவபெருமாள் உமைக்கு அருளிய 7 லட்சம் பாடல்களான ஞானவிளக்கத்தை உமையிடம் இருந்து நந்தியும், நந்தியிடம் இருந்து திருமூலரும், திருமூலரிடம் இருந்து காலாங்கி சித்தரும் அவரிடம் இருந்து போகர் […]

Read more

இஸ்லாமின் தொழுகை முறை

இஸ்லாமின் தொழுகை முறை, அறிவு நாற்றங்கால் பதிப்பகம், விலை 100ரூ. இறை நம்பிக்கை (ஈமான்), தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகிய ஐம்பெரும் கடமைகள் மீது எழுப்பப்பட்ட மாளிகை இஸ்லாம். தொழுகை, இஸ்லாத்தின் பிரதான தூண். அது முஸ்லிமாகிய ஒவ்வொரு ஆணும் பெண்ணும் நிறைவேற்ற வேண்டிய கடமை ஆகம். ஐவேளை தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்த படி தொழுவதுதான் சரியான முறையாகும். அதை இந்த நூலில் நாகூர் சா.அப்தூர்ரஹீம், அழகிய முறையில் ஆதாரத்துடன் விளக்கியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 4/12/19 இந்தப் […]

Read more

வியாசர் அறம்

வியாசர் அறம், நல்லி குப்புசாமி செட்டியார், பிரெய்ன்பேங்க், விலை 200ரூ. வாழ்க்கைக்குத் தேவையான நல்ல கருத்துகளை, அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் போலக் கொண்டு இருக்கும் மகாபாரதத்தில் இருந்து அறம் சார்ந்த சிறந்த செய்திகளைத் தாங்கியுள்ள கதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ருசிகரமாகப் படிக்கும் வகையில் தந்து இருக்கிறார், ஆசிரியர். மகாபாரதத்தில் வியாசர் கூறி இருக்கும் கதைகளில், 60 கதைகள் இந்த நூலில் இடம் பெற்று இருக்கின்றன. ஒவ்வொரு கதைக்கும் முகப்பு வாசகம் கொடுத்து இருப்பது, அந்தக் கதையைப் படிக்கத் தூண்டும் அம்சமாக அமைந்து […]

Read more
1 12 13 14 15 16 223