கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை

கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவமனை, ஓ.சோமசுந்தரம், இணையாசிரியர் டி.ஆர்.சுரேஷ், விலை 350ரூ. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மனநோய் மருத்துவமனை 1794ம் ஆண்டு முதல் இயங்கி வருவது தொடர்பான வரலாற்றுச் செய்திகளை இந்த நூல் தாங்கி வெளியாகி இருக்கிறது. கீழ்ப்பாக்கம் அரசு மனநோய் மருத்துவ நிலையத்தின் நிலைமை, மனி நேயபாவத்துடன் நோயாளிகளுக்கு அங்கு அளிப்படும் சிகிச்சை பற்றிய தகவல்கள், இதை நிர்வகித்த முன்னாள் கண்காணிப்பாளர்கள் ஒவ்வொருவரின் சிறப்பான செயல்பாடுகள், மாநாடுகள் மற்றும் மருத்துவ மேல் படிப்பு பயிற்சித் திட்டங்களுக்கு இந்த மருத்துவமனையின் பங்களிப்பு போன்ற […]

Read more

கில்கமெஷ் காவியம்

கில்கமெஷ் காவியம், தமிழில் ஸ்டாலின், சாகித்திய அகாதமி, விலை 190ரூ. தற்போதைய ஈராக் நாட்டில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த மெசபொடோமியா நாகரிகத்தின் போது உருவான காவியம் என்றும், இதுவே உலகின் முதல் காவியம் என்றும் போற்றப்படும் கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் காவியம், பல ஆண்டுகளாக களிமண் சுவடிகளில் எழுதி பாதுகாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் காவியத்தை எழுதியவர் யார் என்பது கண்டறியப்படவில்லை. கில்கமெஷ் அவரது […]

Read more

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு

உயிர்ப்பு ஒரு தீரா வியப்பு, பேராசிரியர் க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், விலை 150ரூ. பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் உயிரினம் தோன்றியது எவ்வாறு என்பதை ஆய்வு நோக்கிலும், அதே சமயம் அறிவியல் துறையைச் சாராத சாமானியர்களும் தெரிந்துகொள்ளும் வகையிலும் இந்த நூல் தயாராகி இருக்கிறது. உயிரினம் தோன்றியது குறித்து 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிலவிய கருத்துக்கள் முதல் தற்காலத்தில் செயற்கையாக உயிரை மனிதன் படைத்தது வரையிலான தகவல்கள் எளிய நடையில் தரப்பட்டு இருக்கின்றன. பிக் பேங் எனப்படும் பெரு வெடிப்புக் கொள்கையை […]

Read more

தேசத் தந்தைகள்

தேசத் தந்தைகள், ராஜ்மோகன் காந்தி, தமிழில் ஜனனி ரமேஷ், கிழக்கு பதிப்பகம், விலை 180ரூ. மகாத்மா காந்தியின் மகள் வழிப்பேரனான ராஜ்மோகன் காந்தி இந்த நூலை எழுதி இருக்கிறார். மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் பற்றி குஜராத் சுவாமி சச்சிதானந்த், அமெரிக்கப் பேராசிரியர் பெர்ரி ஆண்டர்சன் ஆகியோர் வெளியிட்ட எதிர்மறையான கருத்தக்களுக்குப் பதில் அளிக்கும் வகையில் கட்டுரையாக எழுதத் தொடங்கி பின்னர் விரிவடைந்த இந்தப் புத்தகத்தில், இந்தியக் குடியரசின் தொடக்க கால வரலாறு சிறப்பாக ஆவணப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஏற்பட்ட […]

Read more

தென் இந்திய வரலாறு

தென் இந்திய வரலாறு, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, ஜீவா பதிப்பகம், விலை ரூ. 500. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி வரை தமிழகத்தில் நடைபெற்ற அத்தனை வரலாற்று நிகழ்வுகளும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன, தமிழகத்தின் புவியியல் அமைப்பு, பூர்வகுடி மக்களின் கலாச்சாரம், மௌரியப் பேரரசு, சாதவாகனர்களின் ஆட்சி,  பல்லவர், பாண்டியர் ஆகிய மூன்று அரசுக்கு இடையே நடைபெற்ற மோதல், பாமணி அரசர்கள், விஜயநகரப் பேரரசின் எழுச்சி மற்றும் வீழ்ச்சி ஆகியவை மிக விரிவாக இந்நூலில் தரப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்ட […]

Read more

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி

எம்.ஜி.ஆர். ஒரு ஜீவ நதி, சே ராஜேஸ்வரி வெளியீடு, சந்திரோதயம் பதிப்பகம்,விலை ரூ 200 புரட்சித் தலைவர் எம் ஜி ஆரை வித்தியாசமான கோணத்தில் படம் பிடித்துக் காட்டும் நூல்களில் இந்தப் புத்தகம் சிறப்பான இடத்தைப் பிடித்து இருக்கிறது. பெண்கள் மீது எம்.ஜி.ஆர். வைத்திருந்த அபரிதமான மதிப்பு பற்றிய பல செய்திகள் இந்த நூலில் காணப்படுகின்றன. பெண்களுடன் பேசுவதற்கு எம்ஜிஆர் எந்த அளவு கூச்சப் படுவார் என்பது பல சம்பவ சான்றுகளுடன் தரப்பட்டிருக்கின்றன. அதேபோல் எம்ஜிஆர் நடித்த படங்களில் அண்ணன் தங்கை பாசம் எந்த […]

Read more

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம்

சாரணர் இயக்கம் கலைக்களஞ்சியம், கோ பெரியண்ணன், வனிதா பதிப்பகம், விலை ரூ. 150. ஒழுக்கத்துடன் வாழ்வது, விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்றவற்றைக் கற்றுத் தரும் சாரணர் இயக்கம் பற்றிய முழு விவரத்தை தொகுப்பாக இந்த நூல் விளங்குகிறது. சாரணர் இயக்கத்தின் சிறப்பு சின்னங்களை பெறும் முறை, உற்று நோக்கும் பயிற்சி முதலுதவி சிகிச்சை குழுவுடன் கலந்து பணி செய்தல், செய்கை பேச்சு யோகாசனம் போன்ற பல அம்சங்கள் படங்களுடன் விளக்கிக் கூறப்பட்ட இருக்கின்றன. இந்தியாவில் சாரணர் இயக்கம் முதன் முதலில் எவ்வாறு […]

Read more

இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை ரூ.165. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாட சொன்னபோது ஆதிசேடன் தலையிலிருந்து வந்த ஐந்து பேரில் முதலில் வந்தவர்கள் தாசிகள் என்ற தகவலைத் தரும் இந்த நூல் தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நீதிநூல் காலத்து விரைவிலன் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றன என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும் திரை தமிழிலும் தேவதாசிகள் எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறார்கள் […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், தொகுப்பாசிரியர் மு கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை ரூ. 500 இயல் இசை நாடகம் ஆகிய மூன்று வகை தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்துகொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்நூல் காணப்படுகிறது. மூவகை தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகள் தொகுப்பு இந்த நூல் இடம் பெற்றிருக்கிறது. தமிழின் பல வகையான நாடகங்கள் கூத்துகள் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் ஆடல் கலை சங்க காலம் முதல் […]

Read more

பழைய சோறு

பழைய சோறு, கோமல் அன்பரசன், தினத்தந்தி பதிப்பகம், விலை 70ரூ. புதிய கோணம் புதிய தகவல்களுடன் எப்போதும் சுவாரஸ்யம் நிறைந்திருக்கும் கோமல் அன்பரசன் எழுத்தில் பழைய சோறு நூல் உருவாகி இருக்கிறது. பழைய சோறு உணவு என்பதை தாண்டி ஆண்டாண்டு காலமாக நம் வாழ்வியலோடு கலந்த கலாச்சார குறியீடு. இத்தகைய பழைய சோற்றால் உடலுக்கும் மனசுக்கும் கிடைக்கும் நன்மைகள் கொஞ்ச நஞ்சமல்ல. அவற்றையெல்லாம் தன் சொக்கவைக்கும் நடையில் கவளம் கவளமாக தாயன்போடு நம் கைகளில் தருகிறார்கள். அறிவியல்பூர்வமான ஆதாரங்களுடன் எழுதப் பட்டிருப்பதால் படிப்பவருக்கு பழைய-சோறு […]

Read more
1 14 15 16 17 18 223