மேதையையும் பேதையாக்கும் போதை

மேதையையும் பேதையாக்கும் போதை, முளுங்குழி இலாசர், குமரி முத்தமிழ் மன்றப் பதிப்பகம், விலை ரூ.130 மது குடிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை இந்த நூல் அழகாக படம்பிடித்து காட்டி இருக்கிறது.  உலகின் மிகப்பெரிய தலைவர்களாக இருந்த அலக்சாண்டர், ஸ்டாலின், சர்ச்சில் மற்றும் சாதனைகளை பல புரிந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தமிழ் பட கலைஞர்கள் ஆகியவர்கள் மது போதையால் எவ்வாறு சீரழிந்து என்ற விவரம் தொகுக்கப்பட்டிருக்கிறது. ஏலகிரி அருகே உள்ள மாடப்பள்ளி மடப்பட்டு கிராமத்தில் மட்டும் குடிப்பழக்கத்துக்கு பலியான ஆண்களால் 200 பேர் இளம் விதவைகள் ஆனார்கள் […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஆசிரியர் ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலை பிரசுரம், விலை 50 ரூ. சாதாரண நடிகராக திரைப்படத் துறையில் நுழைந்து குறுகிய காலத்தில் சூப்பர்ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக அதே சமயம் எதுவும் விட்டுப் போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டிருக்கின்றன. அபூர்வராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரையும் அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும் ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள்

சிவாஜியின் சிறப்பு வாய்ந்த கதாபாத்திரங்கள், தொகுப்பு ஆசிரியர் கோவை சுந்தரம், விலை ரூ. 50 நடிகர் திலகம் என்று கொண்டாடப்பட்ட சிவாஜிகணேசன் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை எனப்படுவது உண்டு. அவற்றில் குறிப்பாக வாழ்ந்து மறைந்த உயர்ந்த மனிதர்களான வ.உ.சி., கட்டபொம்மன், பாரதியார், ராஜராஜசோழன் உள்பட பலரது கதாபாத்திரங்களில் சிவாஜி நடித்ததன் மூலம் அந்தத் தலைவர்களின் சிறப்பை மக்கள் நன்கு அறிந்து கொள்ள முடிந்தது என்பதை இந்த நூல் சிறப்பாக எடுத்துக் காட்டியிருக்கிறது. இவற்றுடன் சிவன், திருமால், கர்ணன், பரதன் ஆகிய இடங்கள் உள்பட […]

Read more

கந்தன் கதை

கந்தன் கதை, இரவிக்குமார், அவனருளாலே பதிப்பகம், விலை 450ரூ கந்தபுராணம் என்ற பெயரைக் கேட்டவுடன், புராணம் எல்லாம் நமக்கு எதற்கு என்று தள்ளிவிடும் இளைய தலைமுறையினரும், கந்தனின் வரலாற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், இந்தப் புத்தகம், நாவல் வடிவத்தில் எழுதப்பட்டு இருக்கிறது. கந்தபுராணத்தில் விடுபட்டுப் போன பக்கங்களைக் கற்பனை கலந்து, அவற்றை கந்தபுராணத்துடன் இணைத்து இந்த நாவலை ஆசிரியர் உருவாக்கி இருக்கிறார். இந்த நாவலில் ஆனமீகக் கருத்துகளை சொல்வதோடு, அவற்றை நடைமுறை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு, சம்பவங்களைச் சொல்லி இருப்பதால் படிக்க ருசிகரமாக […]

Read more

இலக்கியத்தில் தேவதாசிகள்

இலக்கியத்தில் தேவதாசிகள், சி.எஸ்.முருகேசன், சங்கர் பதிப்பகம், விலை 165ரூ. சிவன் தனது தலை முடியில் உள்ள ஆதிசேடனை நடனமாடச் சொன்ன போது ஆதிசேடன் தலையில் இருந்து வந்த 5 பேரில் முதலில் வந்தவர்கள் ‘தாசிகள்’ என்ற தகவலைத் தரும் இந்த நூல், தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இருந்த கணிகையர், நிதிநூல் காலத்து விரைவின் மகளிர், நாயக்கர் காலத்து ஆடல் மகளிர் ஆகியோரின் ஒன்றுபட்ட இனம்தான் தேவதாசிகளாக உருமாற்றம் பெற்றனர் என்ற வரலாற்றுச் செய்தியையும் பதிவு செய்த இருக்கிறது. பக்தி இலக்கியங்களிலும், திரைத் தமிழிலும் […]

Read more

உலகவர் போற்றும் முத்தமிழ்

உலகவர் போற்றும் முத்தமிழ், மு.கலைவேந்தன், தமிழ் ஐயா வெளியீட்டகம், விலை 500ரூ. இயல், இசை, நாடகம் ஆகிய மூன்று வகைத் தமிழும் எவ்வாறு வளர்ச்சி பெற்றன என்பதை அறிந்து கொள்ள உதவும் ஆய்வு நூலாக இந்த நூல் காணப்படுகிறது. மூவகைத் தமிழின் வளர்ச்சி தொடர்பாக அனைத்துலக அளவில் திருச்சியில் நடந்த முத்தமிழ் மாநாட்டில் வாசிக்கப்பட்ட பல அறிஞர்களின் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூலில் இடம் பெற்று இருக்கிறது. தமிழின் பலவகையான நாடகங்கள், கூத்துகள், மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் ஆடற்கலை, சங்ககாலம் முதல் தற்காலம் வரையிலான […]

Read more

ரஜினிகாந்த் எனும் காந்தம்

ரஜினிகாந்த் எனும் காந்தம், ஸ்ரீநிதி ஸ்ரீனிவாசன், மணிமேகலைப் பிரசுரம், விலை 50ரூ. சாதாரண நடிகராகத் திரைப்படத் துறையில் நுழைந்து, குறுகிய காலத்தில் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் அளவுக்கு உயர்ந்த ரஜினிகாந்த் பற்றி சுருக்கமாக, அதே சமயம் எதுவும் விட்டுப்போகாத வகையில் எல்லா விவரங்களும் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான லிங்கா படம் வரை அவர் நடித்த படங்கள் அத்தனையும் வரிசைக்கிரமாக அதற்கு உரிய படக்காட்சிகளுடனும், ஒவ்வொரு படத்திலும் ரஜினிகாந்த் ஏற்று நடித்த கதாபாத்திரம் பற்றிய […]

Read more

நபிகளார் வரலாறு

நபிகளார் வரலாறு, ஆயிஷா பதிப்பகம், விலை 350ரூ. மாமேதை இப்னு கஸீர் (ரஹ்) எழுதிய வரலாற்றுத் தொகுப்பு முதலும் முடிவும் என்ற அரபு நூலாகும். இது மிகவும் பிரபலமான நூல். இந்த நூலை ஆயிஷா பதிப்பகத்தார் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டு வருகிறார்கள். இந்த நூலில் நபிமார்கள் வரலாற்றுப் பகுதி முதல் மூன்று பாகங்களிலும், இஸ்ரவேலர்கள், முற்கால அரபியர்கள் வரலாறு நான்காம் பாகத்திலும் இடம் பெற்றுள்ளன. ஐந்தாம் பாகத்தில் இருந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாறு தொடங்குகிறது. இந்த நூல் நபிகளாரின் வரலாற்றைக் […]

Read more

கடாரம் வென்றான் காவியம்

கடாரம் வென்றான் காவியம், மேத்தா சரஸ்வதி, மணிமேகலைப் பிரசுரம், விலை 150ரூ. தமிழகத்தில் சோழப் பேரரசை வேரூன்றச் செய்த விஜயாலயச் சோழர், ஆதீத்த சோழர் ஆகியோரின் வீரத் தீரச் செயல்களையும் அவர்கள் காலத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளையும் நாவல் வடிவத்தில் ருசிகரமாகத் தந்துஇருக்கிறார் ஆசிரியர். திருப்புறம்பயம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில், விஜயாலயச் சோழர் தனது கால்களின் பலத்தை இழந்த நிலையிலும் அடுத்தடுத்து வந்த வீரர்களின் தோள் மீது அமர்ந்தபடி போரிட்டு வெற்றி வாகை சூடிய வரலாற்றை சிறப்பாகப் படம் பிடித்துக்காட்டி இருக்கிறார். இந்த […]

Read more

செம்மொழிகளின் வரிசையில் தமிழ்

செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ஜி.என். சாமுவேல், முல்லை நிலையம், விலை 120ரூ. தமிழ் மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நிகழ்வுகளை முதன் முறையாக 2007 ம் ஆண்டு பதிவு செய்த இந்த நூல், இப்போது மறுபதிப்பாக வெளியாகி இருக்கிறது. தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மை அழிந்தும், அழிக்கப்பட்டும் வருகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தமிழ மொழியின் சிறப்பைக் காப்பதும் உலகம் முழுவதும் அதனைப் பரவச் செய்வதும் சமுதாயப் பொறுப்புணர்வு கொண்ட தமிழனின் கடமை என்பதை இந்த நூல் வலியுறுத்திச் சொல்லி இருக்கிறது. நன்றி: […]

Read more
1 15 16 17 18 19 223