பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம்

பிருஹத் பராசர ஹோர சாஸ்திரம், அல்லூர் வெங்கட்ராமய்யர், விலை 600ரூ. பழங்கால இந்தியாவில் ஜோதிட சாஸ்திரம் பற்றி 18 மகரிஷிகள் பல கருத்துக்களைத் தெரிவித்து இருந்தாலும், அவர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் பராசரர் என்ற மகரிஷி அருளிய ஜோதிட சாஸ்திர ஸ்லோகங்களை இந்த நூல் தமிரீல் உரைநடையாகத் தந்து இருக்கிறது. ஜோதிடத்தை ஓரளவு தெரிந்து கொண்டவர்கள் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. எம்.ஜி.ஆர்., அமிதாப்பச்சன் ஆகியோரின் ஜாதக விவரங்களுடன், ராஜயோகம் மற்றும் செல்வந்தராகும் யோகம் யாருக்கு, வறுமையைக் கொடுக்கும் நிலை […]

Read more

புதுமைப்பித்தன்

புதுமைப்பித்தன், தொ.மு.சி.ரகுநாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், விலை 105ரூ. தமிழ் சிறுகதை இலக்கியத்தில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தியவர் என்று போற்றப்படும் புதுமைப்பித்தன் 42 ஆண்டுகளே வாழ்ந்த போதிலும், அந்தக் குறுகிய காலத்துக்குள் மகத்தான சிறுகதைகளை எழுதி மங்காப் புகழ் பெற்றார் என்பதை அவரது வாழ்க்கை வரலாற்று நூலான இந்தப் புத்தகம் சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறது…. பிறந்தது முதல் புதுமைப்பித்தன் சந்தித்த சவால்கள், வேதனைகள், அவரது கதைகள் ஏற்படுத்திய தாக்கம் ஆகிய அனைத்தும் இந்த நூலில் விரிவாகத் தரப்பட்டு இருக்கின்றன. கபாலி, நந்தி, சுக்கிராச்சாரி, கூத்தன் போன்ற […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு, மா.ராசமாணிக்கனார், ஜீவா பதிப்பகம், விலை 260ரூ. தமிழகத்தை 7 நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த பல்லவ மன்னர்களின் பூர்வீகம் எது என்பதுஇன்னும் உறுதிப்படாத நிலையிலும், கி.பி.250ல் தொடங்கி, கி.பி.882 வரை நீடித்த பல்லவ மன்னர்களின் ஆட்சி பற்றிய அரிய செய்திகளின் தொகுப்பாக இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. பல்லவ மன்னர்கள் ஒவ்வொருவர் பற்றிய விவரம், அவர்களின் ஆட்சித் திறமை, அவர்கள் காலத்தில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் என்று அனைத்து விவரங்களையும் அடக்கியுள்ள இந்த நூல், பல்லவ மன்னர்களின் வரலாற்றின் முழுமையான ஆவணமாகத் திகழ்கிறது. […]

Read more

இலக்கிய இணையர் படைப்புலகம்

இலக்கிய இணையர் படைப்புலகம், இரா.ரவி, வானதி பதிப்பகம், விலை 175ரூ. கணவர், மனைவி இருவருமே இலக்கியவாதிகளாக இருந்து பல படைப்புகளை வழங்கி இருக்கிறார்கள் என்ற சிறப்பான தகவலை அறிந்து கொள்ள இந்த நூல் வகை செய்து இருக்கிறது. பேராசிரியர் இரா.மோகனும், அவரது மனைவி நிர்மலா மோகனும் ஆக்கிய சிறந்த பல நூல்களுக்கு கவிஞர் இரா.ரவி இணையங்களிலும், வலைப்பூ மற்றும் முகநூலிலும் மதிப்புரைகள் எழுதி இருக்கிறார். அந்த மதிப்புரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலவற்றைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் இரா.மோகன், நிர்மலா மோகன் […]

Read more

தமிழ்ச் சிறுகதை வரலாறு

தமிழ்ச் சிறுகதை வரலாறு, கி.துர்காதேவி, கி.ராஜம் வெளியீடு, விலை 225ரூ. தமிழகத்தில் பிரசண்ட விகடன் என்ற இதழ், 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த இதழில் 1935 முதல் அந்த இதழ் நிறுத்தப்படும் வரை ஆசிரியராக இருந்த எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணன் காலத்தில் அந்த இதழில் பல்வேறு சிறுகதைகள், கவிதைகள் வெளியிடப்பட்டன. இவற்றில் 1951 முதல் 1952 வரை உள்ள ஓராண்டு காலத்தில் வெளியான சிறுகதைகளின் ஆய்வு நூலாக இந்த நூல் தயாராகி இருக்கிறது. அந்த காலத்தில் வெளியான கதைகளின் சுருக்கம், அந்தக் கதைகளின் பாடுபொருள், […]

Read more

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும்

பி.எஸ்.நடராஜ பிள்ளையும் திருவிதாங்கூர் அரசியலும், எஸ்.மோதிலால், சைவப் பிரகாச சபை, விலை 450ரூ. நீராரும் கடல் உடுத்த.. என்ற தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைத் தந்த மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையின் ஒரே மகனான பி.எஸ்.நடராஜபிள்ளை பற்றிய அரிய பல தகவல்களை இந்த நூல் கொண்டு இருக்கிறது. கேரள தலைவர்களில் ஒருவரான பட்டம் தாணுப்பிள்ளையுடன் இணைந்து திருவிதாங்கூர் அரசியலில் பி.எஸ்.நடராஜபிள்ளை எவ்வாறு பெரும் ஆளுமையாக விளங்கினார் என்பதும், அவரது சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற பணிகள் தொடர்பான தகவல்களும் சிறந்த முறையில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. பி.எஸ்.நடராஜபிள்ளை […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.ராஜகோபாலன், வானதி, விலை 200ரூ. எதற்கும் அஞ்சாமல் தனது கருத்தக்களை துணிந்து ஆணித்தரமாகக் கூறக்கூடிய எழுத்தாளர் என்ற நற்பெயரைப் பெற்ற பேராசிரியர் தி.ராஜகோபாலன் எழுதிய 33 கட்டுரைகளைத் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போதைய சமுதாயத்தில் நிலவும் அவல நிலை, சித்தர்கள் பெருமை, பத்திரிகைகள் நிலைமை, பாலியல் துன்புறுத்தல்கள், கவிஞர் கண்ணதாசனின் சிறப்பு, ஓட்டு அரசியல், சுற்றுச் சுழலை பாதுகாத்த டாக்டர் பிந்தேஸ்வர் பதக், மத சகிப்புத்தன்மையின் முக்கியத்துவம், தீண்டாமைக் கொடுமை, தேவதாசி முறை, மீ டூ இயக்கம் […]

Read more

கேம் சேஞ்சர்ஸ்

கேம் சேஞ்சர்ஸ், உலகை மாற்றயி ஸ்டார்ட் அப்களின் கதை, கார்க்கிபவா, விகடன் வெளியீடு, விலை 240ரூ. மின்னல் போன மனதில் சட்டென்று தோன்றும் வித்தியாசமான யோசனையை ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுத்தி, முன்னேற்றம் காணும் தொழில்நுட்பம் ஸ்டார்ட் அப் என்று கொண்டாடப்படுகிறது என்பதை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. தற்காலத்தில் தவிர்க்க முடியாத சேவைகளாக விளங்குவதோடு, ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி, மிக அதிக அளவு பொருளீட்டும் நிறுவனங்களான ஊபர், ஸ்விக்கி, பிளிப்கார்ட், அமேசான், பே டிஎம் மற்றும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ரெட் […]

Read more

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள்

இந்தியக் கிறிஸ்தவ அருளாளர்கள், மதுரை இளங்கவின், காவ்யா, விலை 170ரூ. ஏழைக் குழந்தைகளுக்கு கல்விப் பணி, நோயுற்றவர்களுக்கு மருத்துவ வசதி என்று ஏராளமான அன்புப் பணிகளைச் செய்த கிறிஸ்தவ அருளாளர்களை இந்த நூல் சிறப்பாக அடையாளம் காட்டி இருக்கிறது. தந்தை லெவே, புனிதர் அல்போன்ஸ், தேவசகாயம் பிள்ளை, அன்னை தெரசா, இறை ஊழியர் ஞானம்மா ஆகிய ஐவரின் வாழ்க்கைக் குறிப்பு, அவர்கள் ஆற்றிய தொண்டுகள், அவர்கள் எதிர்கொண்ட சவால்கள், துயரங்கள் ஆகிய அனைத்தும் இந்த நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 9/10/19 இந்தப் புத்தகத்தை […]

Read more

இனிய இணையதள நூலகம்

இனிய இணையதள நூலகம், ப.பாலசுப்பிரமணியன், சங்கர் பதிப்பகம், விலை 110ரூ. நூலகம் தொடர்பான அனைத்துச் செய்திகளையும் கொண்டு இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே தமிழக அரசுதான் 1948 ம் ஆண்டு சென்னைப் பொது நூலக சட்டத்தை இயற்றி நூலகப் பணிகளைச் சீராக்க முயற்சி மேற்கொண்டது என்பது போன்ற பல செய்திகள் இந்த நூலில் இருக்கின்றன. நூலகப் பணிக்கு இணையதளம் எவ்வாறு பயன்படுகிறது? தமிழ் இணையம் எவ்வாறு செயல்படுகிறது? மின் நூல் எனப்படுவது என்ன? என்பது போன்ற பல விவரங்கள் நன்றாகத் தொகுத்துத் தரப்பட்டு […]

Read more
1 17 18 19 20 21 223