மகாரதத்தில் குறளின் குரல்

மகாரதத்தில் குறளின் குரல், கு.பாலசுந்தரி, மணிமேகலைப் பிரசுரம், விலை 80ரூ. மகாபாரதமும், திருக்குறளும் பல நூற்றாண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்டவை என்றாலும், இரண்டு நூல்களிலும் உள்ள பல கருத்துக்கள் ஒன்றாக இருக்கின்றன என்பதை இந்த நூல் சிறப்பாக விளக்கி இருக்கிறது. ராஜாஜி எழுதிய வியாசர் விருந்து என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு, அதில் மகாபாரதம் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள சம்பவங்கள், சிறுகதைகள் ஆகியவற்றைக் கூறி, அதே கருத்தை சுருக்கமாக விளக்கும் திருக்குறளை அடையாளப்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்க முயற்சி. இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 30 கட்டுரைகளும், நீதி […]

Read more

சேரன் செங்குட்டுவன்

சேரன் செங்குட்டுவன், குன்றில் குமார், குறிஞ்சி வெளியீடு, விலை 165ரூ. கற்புக்கரசி, கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக இமயமலை வரை சென்று அங்கு இருந்து கல் எடுத்து வந்த சேர மன்னர் செங்குட்டுவன் பற்றிய முழு தகவல்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. இமயமலையில் இருந்து எடுத்துவரப்பட்ட கல்லை, போரில தோற்கடித்த கனகவிஜயன் தலையில் ஏற்றிக் கொண்டுவரப்பட்டதாகக் கூறப்படுவதில், கனகவிஜயன் என்பது ஒரு மன்னர்தான், இருவர் அல்ல என்ற தகவலும் இந்த நூலில் காணப்படுகிறது. வரலாற்றுச் செய்திகளை நாவல் போல எழுதி இருப்பதால் படிக்க சுவாரசியமாக […]

Read more

சட்டத்தின் ஆன்மா

சட்டத்தின் ஆன்மா, எம்.குமார், வானதி பதிப்பகம், விலை 280ரூ. இந்திய அரசியல் சட்ட நுணுக்கங்களின் அடிப்படையை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதையும், சாதாரண குடிமக்கள் மனதில் பதிய வைப்பதற்காக அரசியல் சாசனத்தை பள்ளி, கல்லூரிகளில் ஒரு பாடமாக வைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதையும் இந்த நூல் வலியுறுத்துகிறது. இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து ஆகிய நாட்டு அரசியல் சட்டங்களின் பல பிரிவுகள் இந்திய அரசியல் சட்டத்துடன் தொடர்புடையவை என்பதால், அந்த நாடுகளின் அரசியல் சட்டத்திற்கும், நம் நாட்டின் அரசியல் சட்டத்திற்கும் […]

Read more

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும்

செப்புத் திருமேனிகள் வார்த்தெடுக்கும் செய்முறைகளும் அமைப்பு முறைகளும், ம.பாபு, காவ்யா, விலை 320ரூ. கோவில்களில் பெரும்பாலும் உற்சவ மூர்த்தியாக இருக்கும் செப்புத் திருமேனிகள் ஐம்பொன்னால் எவ்வாறு செய்யப்படுகின்றன? அவற்றில் எந்த உலோகங்கள் எவ்வளவு அளவில் சேர்க்கப்படுகின்றன என்பது போன்ற நுணுக்கமான செய்திகளை இந்த நூல் சிறப்பாக பதிவு செய்து இருக்கிறது. பல்லவர் காலம் முதல் தற்காலம் வரை செப்புத்திருமேனிகளை செய்வதற்கு கையாளப்படும் பாணிகளையும் இந்த நூல் தருகிறது. நடராசர் சிலையான ஆடவல்லானின் தத்துவம், ஆடற்கலை இலக்கணங்கள், சிலைகளில் இடம்பெறும் ஆடை, ஆபரண, ஆயுதங்கள் பற்றிய […]

Read more

கொங்கு தமிழக வரலாறு

கொங்கு தமிழக வரலாறு, கா.அப்பாதுரையார், ஜீவா பதிப்பகம், விலை 180ரூ. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட பல பகுதிகளைக் கொண்ட கொங்கு மண்டலம் என்பது, பழங்காலந்தொட்டு மிகச் சிறப்புடன் விளங்கியது என்பதை, ஆய்வு நோக்கில் எழுதப்பட்ட இந்த நூல் தெளிவாக விளக்குகிறது. ஆதிகாலம் முதல் சங்க காலத்தின் இறுதியான கி.பி. 240 முடிய கொங்கு மண்டலம் எவ்வாறு சிறப்புடன் இருந்தது? அங்கு நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், பல நாடுகளுடன் நடைபெற்ற வாணிபம், படையெடுப்புகள், மன்னர்களின் ஆட்சி முறை என்று பலதரப்பட்ட விஷயங்களை பன்மொழிப் […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், விலை 110ரூ. அரசு அலுவலர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, எந்த விதமான வருமானத்திற்கு வரி உண்டு? எந்த வருமானத்திற்கு வரியில் இருந்து சலுகை உண்டு என்பது தெரியாமல் அவதிப்படுவது உண்டு. இது போன்றவர்களுக்கெல்லாம் அருமருந்தாக் இந்த நூல் விளங்குகிறது. பொதுவாக வருமான வரி தொடர்பான நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகும் என்ற நிலையை மாற்றி, எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் […]

Read more

இயேசு அந்தாதி

இயேசு அந்தாதி, மா.அய்யாத்துரை, டாக்டர் மா. அய்யாத்துரை செல்லத்தாய் அறக்கட்டளை, விலை 90ரூ. தமிழ் மொழியில் அந்தாதி இலக்கியங்கள் 270 இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள நிலையில் முதன் முறையாக இயேசுநாதர் மீது அந்தாதிப் பாடல்களைப் பாடும் இலக்கியமாக இந்த நூல் வெளியாகி இருக்கிறது. இயேசுநாதரின் வாழ்க்கை வரலாறு 100 பாடல்களில் தரப்பட்டு இருக்கிறது. இந்த பாடல்கள் அனைத்திலும் எளிய சொற்களையே பயன்படுத்தி இருந்தாலும், ஒவ்வொரு பாடலுக்கும் கீழே அதன் விளக்கமும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சுலபமாகப் படிக்க முடிகிறது. கவிதை இலக்கியத்துக்கு உரிய எதுகை, மோனை, இயைபு, […]

Read more

வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும்

வள்ளற்பெருமானும் வாரியார் சுவாமிகளும், வ.ஞானப்பிரகாசம், அருள்வடிவேலன் பதிப்பகம், விலை 100ரூ. வள்ளற்பெருமான் என்னும் ராமலிங்க அடிகளாரும், கிருபானந்தவாரியாரும் தமிழகத்தின் தவப்புதல்வர்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை என்ற தகவலை இந்த தகவலை இந்த நூல் தெளிவாகத் தருகிறது. வள்ளற்பெருமானுக்கும் வாரியார் சுவாமிகளுக்கும் இடையே இவ்வளவு ஒற்றுமையான கருத்துகள் இருந்தனவா என்று வியக்கும் வகையில் அவர்கள் இருவர் பற்றிய பல செய்திகளைத் தொகுத்துத் தந்து இருக்கிறார் ஆசிரியர். ராமலிங்க அடிகளார் மற்றும் கிருபானந்த வாரியார் பற்றி தனித் தனிக் கட்டுரைகளாக எழுதாமல், அவர்கள் இருவரின் […]

Read more

கோவை மு. கண்ணப்பன் வாழ்வும் பணியும்

கோவை மு. கண்ணப்பன் வாழ்வும் பணியும், ஒ.சுந்தரம், சிவகாமி பதிப்பகம், விலை 200ரூ. தி.மு.க. ஆட்சியின்போது அமைச்சராகவும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் உள்பட பல்வேறு பதவிகளும் வகித்துப் பணியாற்றிய கோவை மு. கண்ணப்பனின் வாழ்க்கை வரலாறு இந்த நூலில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. அறநிலையத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழில் அர்ச்சனை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்ட முன்வடிவு கொண்டு வந்தது போன்ற இவரது பல பணிகள் இந்த நூலில் சிறப்பாகத் தொகுத்து வழங்கப்பட்டு இருக்கின்றன. சில முக்கிய வரலாற்றுச் சம்பவங்களை பெட்டிச் செய்திகளாகவும், […]

Read more

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்

மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும், சர்மிலா வினோதினி, பூவரசி பப்ளிகேஷன்ஸ், விலை 150ரூ. ஈழத்தைச் சேர்ந்த படைப்பாளி சர்மிலா வினோதினியின் வித்தியாசமான கதை தொகுப்பான இந்த நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமாக காணப்படுகின்றன. பெரும்பாலான கதைகள், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போருக்குப் பின் நிகழ்ந்த சம்பவங்களையும், போர் ஏற்படுத்திய இழப்புகள், மற்றும் ரணங்களை மையப்படுத்தி இருப்பதால் அவற்றைப் படிக்கும் போது மனம் கனக்கிறது. இந்தக் கதைகளின் வரிகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை. ஆனால் கதைகயை நகர்த்திச் செல்லும் ஒவ்வொரு சம்பவங்களுக்கும் ஏற்ற வர்ணிப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன. […]

Read more
1 18 19 20 21 22 223