சிறகை விரி, பற!
சிறகை விரி, பற!, பாரதி பாஸ்கர், கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 130ரூ. பட்டிமன்றப் பேச்சாளராக தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பாரதி பாஸ்கர் எழுதி இருக்கும் இந்த நூல், இலைகளே தெரியாத அளவுக்கு, ருசியான பழங்கள் கொத்துக் கொத்தாக பழுத்துத் தொங்கும் மரம் போல சிறப்பாகக் காட்சி அளிக்கிறது. 31 தலைப்புகளில் அவர் எழுதி இருக்கும் கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய சுவையான தகவல்களைக் கொடுக்கின்றன. இவற்றில் ஆன்மிகம் சற்றே தூக்கலாக இருக்கின்ற போதிலும், அனைத்துத் தரப்பினரும் படித்துப் பயன்பெறும் வகையில் அவை அமைந்து இருக்கின்றன. […]
Read more