சாலாம்புரி

சாலாம்புரி, அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 400ரூ. கைத்தறி நெசவு தொடர்பான சொல் சாலாம்புரி என்பதைத் தலைப்பாகத் தாங்கி இருக்கும் இந்த நாவல். தமிழகத்தில் 1950 களில் நடைபெற்ற அரசியல், அப்போதைய நெசவாளர்களின் வாழ்க்கை ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டு இருக்கிறது. திராவிடர் கழகத்தில் இருந்து விலகி தொடங்கப்பட்ட தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைக்கும் கதாநாயகன், அவரைச் சுற்றி நடைபெறும் நெசவாளர்களின் வாழ்க்கைச் சம்பவங்கள், சாதி பிரச்சனை ஆகியவை கண் முன் படம் பிடித்துக் காட்டப்பட்டு இருக்கின்றன. சரளமான நடை, கதாபாத்திரங்களின் அப்பட்டமான பேச்சு, விறுவிறுப்பான […]

Read more

இந்திய பாரம்பரியம்

இந்திய பாரம்பரியம், சி.செல்வராஜ், சி.எஸ்.ஆர்.பப்ளிகேஷன்ஸ், விலை 375ரூ. பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு மாணவர்களின் வரலாற்றுப் படிப்பு முழுமைபெற வேண்டும் என்றால், நமது பாரம்பரியப் பெருமைகளை முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்ற நோக்கில் இந்த நூல் எழுதப்பட்டு இருக்கிறது. இந்தியப் பாரம்பரியம், வரலாற்றுப் பாரம்பரியம், ஆன்மிகப் பாரம்பரியம், கவின்கலை மற்றும் கைவினைப் பாரம்பரியம் ஆகிய 5 அம்சங்களை விளக்குவதுடன், இவற்றை உலக நாடுகளுடன் ஒப்பிட்டு, நமது பாரம்பரியம் எந்த அளவுக்கு சிறந்தது என்பது எடுத்துக்காட்டப்பட்டு இருக்கிறது. மனித இனம் முதன்முதலில் இந்தியாவில்தான் தோன்றி […]

Read more

தமிழ் சமஸ்கிருதம் உறவு

தமிழ் சமஸ்கிருதம் உறவு, தி.முருகரத்தினம், வீரா.அழகிரிசாமி, க.மணிவாசகம், ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு மன்றம், விலை 200ரூ. தமிழ் மொழிக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே உள்ள உறவு தொடர்பாக ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வுமன்ற கருத்தரங்கில் தமிழ் அறிஞர்கள் அரங்கேற்றிய கட்டுரைகளில் 10 கட்டுரைகள் தேர்ந்து எடுக்கப்பட்டு இந்த நூலில் பிரசுரிக்கப்ட்டுள்ளன. ஒவ்வொரு அறிஞரும், தமிழ் மற்றும் திராவிடத்தின் தாக்கம் சமஸ்கிருதத்தில் இருக்கிறது. சமஸ்கிருதம் எந்த வகையிலும் தமிழில் பாதிப்புச் செய்யவில்லை என்பதையும், தமிழ் இலக்கணம், வடமொழி இலக்கணத்திற்குக் காலத்தால் முந்தியது என்பதையும், மொழிகளுக்கெல்லாம் முதல்மொழி சமஸ்கிருதம் […]

Read more

அந்தியில் மலர்ந்த மொட்டுகள்

அந்தியில் மலர்ந்த மொட்டுகள், உமையவன், நிவேதிதா, விலை 110ரூ. கொரோனா காலம் தந்த நன்மைகளில் ஒன்றாக, இந்த நூலில் மொட்டுகளான குழந்தைகள் எழுதிய கதைகள் மலர்ந்து மணம் வீசுகின்றன. 6 வயது முதல் 16 வயது வரையிலான குழந்தைகள், அவர்களாகவே எழுதிய கதைகள் மனதைக் கவருவதுடன் வியக்க வைக்கின்றன. குழந்தைகளே வரைந்த ஓவியங்களும், கதைகளுக்கான காணொளி கியூஅர் கோட் வடிவில் இணைத்து தரப்பட்டு இருப்பதும் சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள்

எத்தனை கோடி உயிர்கள் எனக்குள், பேராசிரியர் க.மணி, அபயம் வெளியீடு, விலை 120ரூ. கொரோனா காலத்தில், பாக்டீரியாக்கள் (நுண்கிருமிகள்) என்றதும் அச்சத்துடன் பார்க்கும் நிலையில், பாக்டீரியாக்கள் மனித உடலுக்கு எந்த அளவு தேவையானவை என்பது இந்த நூலில் விளக்கப்பட்டு இருக்கிறது. அர்க்கியா, பாக்டீரியா ஆகிய இரண்டு வகை செல்கள் பல கோடி ஆண்டுகளுக்கு முன் இணைந்து புதிய செல் உருவானதால்தான் மனித இனம் தோன்றியது என்பது போன்ற வியப்பான பல செய்திகள் இந்த நூலில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம்

திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம், வேணுசீனிவாசன், அருணா, விலை 55ரூ. வைஷ்ணவ ஆச்சாரியரான ஸ்ரீராமானுஜரை சந்தித்த திருக்கோளூரைச் சேர்ந்த சாதாரணப் பெண் ஒருவர் தெரிவித்த 81 வாக்கியங்களில் பொதிந்துள்ள ஆழமான கருத்துகள், அவை தொடர்பாக இதிகாச, புராண சம்பவங்கள் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. பகவான் மீது பற்று வைக்க வலியுறுத்தும் இந்த உபதேசங்களை ஆன்மிக பக்தர்கள் படித்துப் பயன்பெறலாம். நன்றி: தினத்தந்தி, 20/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள்

பாடும் நிலா பாலு பற்றிய பல்சுவைத் தகவல்கள், டி.என்.இமாஜான், மணிமேகலைப் பிரசுரம், விலை 170ரூ. கொரோனா தாக்கியதால் மரணம் அடைந்த பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் வாழ்க்கை வரலாறு, திரைப்படம் தொடர்பான பல துறைகளிலும் அவர் ஆற்றிய சாதனைகள் இந்த நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் திரைப்படத் துறையில் எவ்வாறு நுழைந்தார் என்பதும் அவரது நேரம் தவறாமை, எளிமை, நகைச்சுவை உணர்வு, எல்லோரிடமும் அன்பாகப் பழகும் தன்மை போன்ற அவரது குணாதிசயங்கள், பல்வேறு சம்பவங்ளை சுட்டிக்காட்டி அழகாகப் படம்பிடித்து தரப்பட்டுள்ளன. […]

Read more

கம்பன் : புதிய பார்வை

கம்பன் : புதிய பார்வை, அ.ச.ஞானசம்பந்தன், வைகுந்த் பதிப்பகம், விலை 345ரூ. முதுபெரும் தமிழ் அறிஞர் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் எழுதியதும், சாகித்திய அகாதமி பரிசு பெற்றதுமான இந்த நூலில் கம்பரின் புதிய பரிணாமத்தைக் காண முடிகிறது. புலனடக்கத்திற்குக் கம்பன் கொடுத்த முக்கியத்துவம் நூல் முழுவதும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. கடவுளர்களை இந்த உலகத்திற்குக் கொண்டுவந்து அவர்களை நாயகர்களாக ஆக்கியதில் உலக இலக்கியங்கள் வெற்றிபெறாத நிலையில், கம்பர் மட்டும் வெற்றி பெற்றதும் எடுத்துக்கூறப்பட்டுள்ளது. ராமரைப் பற்றிய கதைகள் சங்க கால இலக்கியங்களிலும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்களிலும் மிகுதியாக […]

Read more

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம்

ஆயுதங்களின் நடுவே எழுந்த ஆத்மராகம், நெல்லை கிருஷ்ணன், ராஜமரகம் வெளியீடு, விலை 400ரூ. மகாபாரத போர்க் களத்தில் ஆயுதம் ஏந்த தயங்கி நின்ற அர்ச்சுனனுக்கு பகவான் கிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதை கவி நாடக வடிவில் தரப்பட்டு இருக்கிறத. பகவத் கீதையை மட்டும் சொல்லாமல், போர்க்களம் தொடர்பான அத்தனை நிகழ்வுகளையும் நாடகமாக ஆக்கி இருக்கிறார் ஆசிரியர். திருதராஷ்டிரனுக்கும் சஞ்சயனுக்கும் இடையே நடைபெறும் விவாதம் தொடங்கி, பகவத் கீதை உபதேசம் உள்பட அத்தனை சம்பவங்களும் திறம்பட காட்சி ரூபம் ஆக்கப்பட்டு, எளியநடையிலான மரபுக் கவிதைகளாகக் கொடுக்கப்பட்டு இருக்கிறது. […]

Read more

தமிழை நன்றாக எழுதுவோம்

தமிழை நன்றாக எழுதுவோம், பேராசிரியர் வே.சங்கர், நன்மொழிப் பதிப்பகம், விலை 150ரூ. தமிழை எழுதும்போது பலருக்கும் சாதாரணமாக ஏற்படக்கூடிய பிழைகளை எவ்வாறு தவிர்க்கலாம் என்பதற்கான வழிகாட்டி நூலாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. பொதுவாக எப்படிப்பட்ட பிழைகள் நேருகின்றன என்பதை விளக்கி, அந்தப் பிழைகளை எவ்வாறு சரி செய்து, நல்ல தமிழில் எழுத வேண்டும் என்பதை அருகில் இருந்து ஒருவர் சொல்லிக் கொடுக்கும் வண்ணம் ஆசிரியர் இந்த நூலை எழுதி இருக்கிறார். சந்திப் பிழை இல்லாமல் எழுதுவது, பேச்சு வழக்கு சொற்களை தவிர்த்து எழுதுவது, […]

Read more
1 11 12 13 14 15 223