சாவர்க்கரின் வாக்குமூலம்

சாவர்க்கரின் வாக்குமூலம், ஜனனி ரமேஷ், தடம் பதிப்பகம், விலை 100ரூ. மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட இந்து மகாசபைத் தலைவரான சாவர்க்கர், தான் குற்றமற்றவர் என்று கொடுத்த வாக்குமூலத்தின் முழு விவரம் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாவர்க்கரின் இந்த வாக்குமூலத்தில் இந்திய வரலாற்றுச் செய்திகள் பல இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031349_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள்

சங்க இலக்கியத்தில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள், ம.சுஜாதா, காவ்யா, விலை 580ரூ. சங்க இலக்கியங்களில் தமிழ்ப் பண்பாட்டுத் தரவுகள் தொடர்பாக ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர், தனது ஆய்வு அறிக்கையை புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை ஆகிய சங்க காலப் பாடல்கள் மட்டும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றன. இல்வாழ்க்கை, விருந்தோம்பல், உணவு முறை, வாணிபம், விளையாட்டு, சடங்குகள், சமயம் சார்ந்த நம்பிக்கைகள், அழகுக் கலை ஒப்பனை ஆகியவை சங்க காலத்தில் எவ்வாறு இருந்தன என்பது தகுந்த மேற்கோள்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. […]

Read more

சிறுவருக்கான அறக்கவிதைகள்

சிறுவருக்கான அறக்கவிதைகள், செ.ஏழுமலை, பானு ஏழுமலை, விலை 125ரூ. எளிமையான பாடல்கள் மூலம் சிறுவர்களின் மனதில் நல்ல கருத்துகளை விதைக்க முடியும் என்று அடிப்படையில் இந்த நூல் ஆக்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள கவிதைகளில் வாழ்வுநெறி, கல்வியின் முக்கியத்துவம், பெற்றோரின் சிறப்பு, யோகா, நடைப்பயிற்சியின் அவசியம் உள்பட பல நல்ல கருத்துகள் சொல்லப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சர்வ ஜோதிட சஞ்சீவி

சர்வ ஜோதிட சஞ்சீவி, கண்ணையா நாயுடு, ஆனந்த நிலையம், விலை 220ரூ. 1907-ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஜோதிட நூல் இப்போது மறுபதிப்பு செய்யப்பட்டு இருக்கிறது. குழந்தை பிறந்தபோது லக்னம் குறிப்பது, ஓரை பற்றிய விவரம், விவாகப்பொருத்தம் போன்ற பல தகவல்கள் இதில் உள்ளன. ஜோதிடம் பற்றிய அடிப்படை தெரிந்தவர்களுக்கு இந்த நூல் பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கலாட்டா குடும்பம்

கலாட்டா குடும்பம், மு.அருளப்பன், விலை 90ரூ. ஆசிரியர், எழுத்தாளர், பத்திரிகையாளர் என்று பன்முகம் கொண்ட இந்த நூலின் ஆசிரியர் எழுதிய முதல் கவிதை தொகுப்பு இது. கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்பு, நல்ல இல்லறம், வரதட்சணைக்கொடுமை, பாலியல் கொடுமை, கொரோனாவை விரட்டுவோம் என்பது போன்ற சமூக அக்கறை கொண்ட கவிதைகள் சிந்தனையைத் தூண்டும் வகையில் உள்ளன. காதல், ஊடல் ஆகியவற்றை சித்தரிக்கும் கவிதைகளும் மனதைக் கவருகின்றன. நன்றி: தினத்தந்தி,2/5/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

இதழியல் நுணுக்கங்கள்

இதழியல் நுணுக்கங்கள், எஸ்.ஸ்ரீகுமார், என்.கிருஷ்ணன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 280ரூ. ஊடகங்களில் பணிபுரிய இப்போது பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. செய்திகளை சேகரிப்பது, துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரின் பணிகள் என்ன? சிறப்புக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை ஆகியவற்றை எழுதும் முறை, பத்திரிகை தொடர்புடைய சட்டங்கள், தமிழகத்தில் இதழியல் வளர்ந்த வரலாறு போன்றவற்றையும் இந்த நூல் தாங்கி இருப்பதால், இதழியல் பயில்வோருக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் […]

Read more

சுக்கா மிளகா சமூக நீதி

சுக்கா மிளகா சமூக நீதி, மருத்துவர் ச.ராமதாஸ், செய்திப்புனல், விலை 500ரூ.   நாட்டின் விடுதலைப் போராட்டத்தைவிட, இட ஒதுக்கீட்டுப் போராட்டம் மேலானது என்று கூறும் மருத்துவர் ச. ராமதாஸ், சமூக நீதி என்றால் என்ன? அதைப் பெறுவதற்காக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எவை? சமூக நீதியினால் கிடைக்கும் பயன்கள் என்ன? போன்றவற்றை இந்த நூலில் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். உயிரைப் பலி கொடுத்தும், அடக்குமுறைகளை எதிர்கொண்டும் பெற்ற இடஒதுக்கீட்டின் முழுமையான வரலாறு, இன்றைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டியவை ஆகும். பெரியார், அண்ணா, காமராஜர் ஆகியோருக்கும் […]

Read more

மக்கள் நேயச் சுயமரியாதை

மக்கள் நேயச் சுயமரியாதை, பொற்கோ, இசையமுது பதிப்பகம், விலை 200ரூ. சுயமரியாதைக்கென்று ஓர் இயக்கம் பிறந்தது தமிழகத்தில் மட்டும்தான் என்பதும், சுயமரியாதை உணர்ச்சிதான் மனிதனை மனிதன் ஆக்குகிறது என்பதும் இந்த நூலில் விவரமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. சுயமரியாதை குறித்து உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் பெரியார் அறக்கட்டளை திட்டத்தில் ஆசிரியர் ஆற்றிய இந்த உரைத் தொகுப்பில், பெரியார் தெரிவித்த புரட்சிகரமான கருத்துகளும் இடம்பெற்றுள்ளன. நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள்

உலகப் புகழ்பெற்ற மாவீரர்கள், மணிமேகலைப் பிரசுர ஆசிரியர் குழு, மணிமேகலைப் பிரசுரம், விலை 140ரூ. பல்வேறு நாடுகளிலும் அரசியல் வாழ்வில் மகத்தான சாதனை புரிந்த 31 வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களின் சாதனைச் சரித்திரம், அவனைவருக்கும் உந்து சக்தியைத் தரும் வகையில் தரப்பட்டு இருக்கிறது. இத்தாலியின் மாவீரன் கரிபால்டி, பிரான்ஸ் நாட்டின் ஜோதன் ஆப் ஆர்க், மங்கோலியாவின் செங்கிஸ்கான், இந்தியாவின் ஜான்சி ராணி, மன்னர் அசோகர் போன்றவர்களின் வீரச் செயல்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன. தமிழகத்தின் மாமன்னர்கள் ராஜராஜன், ராஜேந்திரன் போன்றவர்களில் ஒருவரை இந்த நூலில் இணைத்து […]

Read more

தமிழ் தமிழ் அகராதி

தமிழ் தமிழ் அகராதி, தமிழ்ப்பிரியன், அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 250ரூ. தமிழ் மொழியில் உள்ள ஒவ்வொரு சொற்களுக்கும் உரிய பொருள் என்ன என்பதைக் கூறும் வகையில் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. மாணவர்களுக்கும் தமிழைக் கற்க விரும்புகிறவர்களுக்கும் இந்த அகராதி சிறந்த கையேடாகத் திகழும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 9 10 11 12 13 223