சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம்

சித்தர்கள் சொன்ன மூலிகை மருத்துவம், சம்பத் குமார், திருவரசு புத்தக நிலையம், விலை 450ரூ. மனிதர்களைத் தாக்கும் 4,448 வித நோய்களுக்கும் இயற்கை அளித்த கொடையான மூலிகைகள் மூலம் சித்தர்கள் தீர்வு கண்டனர் என்பதை இந்த நூல் விளக்குகிறது. மக்கள் உயிர் வாழப் பயன்படுத்தக்கூடிய அத்தனைப் பொருள்களிலும் புதைந்துள்ள மருத்துவக் குணங்கள் எவை என்பதையும் இந்த நூல் தருகிறது. மலர்கள், காய்கள், பழங்கள், எண்ணெய் ஆகியவற்றின் மருத்துவ குணங்கள், ஒவ்வொரு நோய்க்கும் மூலிகை மருத்துவம் என்ன? அவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்வத போன்ற விவரங்களும் இந்த […]

Read more

மண்ணும் மக்களும்

மண்ணும் மக்களும், இறையன்பு, கற்பகம் புத்தகாலயம், விலை 230ரூ. மனிதநேயப் பண்புகளை மதித்துப் போற்றும் நூலாக இதனை ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு எழுதி இருக்கிறார். இளமைக் காலம் முதல் அவரது வாழ்வில் ஏதோ ஒருவகையில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை உணர்ச்சிகரமான வார்த்தைகளால் நம்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறார். அவர்கள் காட்டிய அன்பின் வெளிப்பாடும், அவற்றை ஆசிரியர் மன நிறைவோடு நினைவு கூர்ந்து இருப்பதும் உள்ளத்தை தொடுகின்றன. இந்தப் புத்தகத்தைக் கை தவறி கீ போட்டுவிடாதீர்கள். இதில் இருக்கிற எளிய மனிதர்களுக்கு அடிபட்டு காயம் ஏற்பட்டுவிடலாம் […]

Read more

தொடுவானம் தேடி

தொடுவானம் தேடி, அ.தில்லைராஜன், கோ. அருண்குமார், சஜிமேத்யூ, வானவில் புத்தகாலயம், விலை 299ரூ. இளைய சமுதாயத்தினர் பலர், சுயசார்புடன் தொழில் முனைவர்களாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பயன் உள்ளதாக இருக்கும் வகையில் இந்த நூல் திகழ்கிறது. சிறு, குறு தொழில்களை எவ்வாறு முன்னெடுப்பது, அவற்றை வெற்றிகரமாக நடத்த உதவும் வணிக உத்திகள் என்ன, நிதி உதவி திரட்டுவது எவ்வாறு, தொழில் நடத்தும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன, அவற்றுக்கு எவ்வாறு தீர்வு காண்பது போன்ற அனைத்து அம்சங்களும் இந்த நூலில் எளிய […]

Read more

இமய பொக்கிஷங்கள்

இமய பொக்கிஷங்கள், ஆர்.கண்ணதாசன், ஸ்ரீ அனந்த நிலையம், விலை 200ரூ. இமய மலைப் பகுதியில் அமைந்துள்ள ஆன்மிகத் தலங்களான பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தர்காசி, குப்த்காசி, ஜோஷிமத், பஞ்சபத்ரி, கோமுக், ரிஷிகேஷ், ஹரித்துவார் ஆகிய இடங்களுக்குச் செல்ல விரும்புகிறவர்களுக்கு இந்த நூல் சிறந்த வழிகாட்டி. ஒவ்வொரு இடங்களின் தலவரலாறு, அங்குள்ள இறைவன் பற்றிய விவரம், அந்த இடங்களுக்குச் செல்லும் வழி ஆகியவையும், புண்ணிய தலங்களின் புகைப்படங்களும் இந்த நூலில் அடங்கி இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 14/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000031027_/ இந்தப் […]

Read more

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும்

அந்தோன் சேகவ் சிறுகதைகளும் குறுநாவல்களும், அந்தோன் சேகவ், தமிழில் ரா.கிருஷ்ணய்யா, ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 300ரூ.   ரஷிய எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவரான அந்தோன் சேகவ் எழுதிய கதைகள் அனைத்தும் இலக்கியத் தரம் வாய்ந்தவை. அவற்றில் இருந்து 4 சிறுகதைகளும் 4 குறுநாவல்களும் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்துக் கதைகளிலும், அந்த ககால ரஷியாவின் சமூக கலாசாரம், மக்களின் போக்கு ஆகியவை யதார்த்தமான முறையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதிகாரிகள் எவ்வாறு ஆட்சியாளர்களுக்கு அனுசரணையாக நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பச்சோந்தி என்ற சிறுகதை அழகாகப் […]

Read more

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார், முல்லை பி.எல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை 50ரூ. ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கிய சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் உன்னதமான வாழ்க்கைக் குறிப்பும், அவரைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் தெரிவித்த கருத்துகளும் இந்த நூலில் காணப்படுகின்றன. வ.உ.சி.யின் மகன் எழுதிய கட்டுரை மனதைத் தொடுகிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

ஒற்றைப் புளியமரம்

ஒற்றைப் புளியமரம், சுவாமிதோப்பு ஜி.லிங்கி, அனன்யா வெளியீடு, விலை 200ரூ. இந்த நூலின் ஆசிரியை, தனது வாழ்வைப் பாதித்த மற்றும் தான் பார்த்த நிகழ்வுகளையே அடிப்படையாக வைத்து 20 சிறுகதைகளைப் படைத்து இருக்கிறார். ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கோணத்தில் பயணிப்பதால் ரசிக்க முடிகிறது. அனைத்துக் கதைகளிலும் நெல்லைத் தமிழ் மணம் கமிழ்கிறது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள், அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி: தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818/p>

Read more

ஸ்ரீ சாயி சித்திர சரிதம்

ஸ்ரீ சாயி சித்திர சரிதம், இளஞாயிறு மாணிக்கம், இளங்கோ கோ, மாணிக்கம், தென்காசி ஷீரடி வைத்திய சாயி கோயில், விலை 360ரூ. ஷீரடி சாயி பாபா மற்றும் அவரது பக்தர்களின் வாழ்வில் நடந்த 150 நிகழ்வுகள், வண்ணப்படங்களுடன் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஓவியத்தின் கீழே, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. சாயி பாபா தனது 16-வது வயதில் ஷீரடிக்கு வந்து தவம் செய்தது. எண்ணெய் கலந்த தண்ணீர் ஊற்றி விளக்கை எறிய வைத்தது, எங்கோ நெருப்பில் விழுந்த குழந்தையை […]

Read more

ஊழியர்கள் வேலை வழக்குகள்

ஊழியர்கள் வேலை வழக்குகள், ஏ.கே.எஸ்.தாஹிர், ஏ.எஸ்.பிலால், கதிஜாஜி புத்தகம் வெளியீடு குழு, விலை 80ரூ. ஊழியர்களின் வேலையில் ஏற்படும் பிரச்சனை தொடர்பான வழக்குகள், அவற்றின் தீர்ப்புகள் ஆகியவற்றைக் கூறும் இந்த நூல், சமூக அக்கறை உள்ள பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறது. காணாமல் போன பெண்ணை தேடுவதில் அக்கறை கொள்ளாத காவலர்கள், உணவுப்பொருளில் கலப்படம், தொலைக்காட்சித் தொடர் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவற்றையும் எடுத்துக் கூறப்பட்டு இருக்கின்றன. தொழிற்சங்கம் உருவான வரலாறு, புரட்சி எண்ணம் கொண்ட 19 தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்பு ஆகியவையும் இந்த நூலில் தர […]

Read more
1 7 8 9 10 11 223