விதையாக இரு

விதையாக இரு, வழக்கறிஞர் த.இராமலிங்கம், விகடன் பிரசுரம், விலை 210ரூ. தமிழ் இலக்கியங்களில் அனைவருக்கும் பயனளிக்கும் கருத்துகள் ஏராளம் இருப்பதை இந்த நூல் சுட்டிக்காட்டி இருக்கிறது. தமிழ் இலக்கியங்களில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பாடல்களை எடுத்துக்கூறி, அவற்றில் காணப்படும் வாழ்க்கைக்குத் தேவையான முன்னேற்ற சிந்தனைகள் என்ன என்பது, ஆர்வத்துடன் படிக்கும்வகையில் தரப்பட்டு இருக்கின்றன. அவ்வையார் பாடல்கள், உலகநீதி, வெற்றிவேற்கை, திரிகடுகம், நீதிவெண்பா, திருமந்திரம் போன்றவற்றின் இலக்கிய வரிகள் கூறும் அறநெறிகள், ஆங்காங்கே கதை வடிவிலும் உரை நடையாகவும் கொடுத்து இருப்பது அனைத்துக் கருத்துகளையும் படிக்க […]

Read more

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள்

தூண்டிலில் சிக்கிய கிளிஞ்சல்கள், தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், இனிய நந்தவனம் பதிப்பகம், விலை 100ரூ. கவிக்கோ பிறந்த நாளையொட்டி நடைபெற்ற போட்டியில் கலந்துகொண்ட 100 கவிஞர்கள் எழுதிய 500 ஹைக்கூ கவிதைகள் இந்த நூலில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த நூலின் தொகுப்பு ஆசிரியர் மு.முருகேஷ், 16-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஜப்பானிய மக்களின் வாழ்வில் ஏற்பட்ட மறுமலர்ச்சியால் உருவான ஹைக்கூ கவிதைகள், பின்னர் எவ்வாறு பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை ஆய்வு நோக்கில் விரிவாகச் சொல்லி இருக்கிறார். அனைத்து ஹைக்கூ கவிதைகளும், கருத்தை அழகாகச் சொல்வதால், […]

Read more

பாட்டி சொன்ன பழங்களின் கதைகள்

பாட்டி சொன்ன பழங்களின் கதைகள், மலரடியான், கார்குழலி பதிப்பகம், விலை 150ரூ. ஆரஞ்சு, இலந்தை, நாவல் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட பழங்களைச் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் என்ன என்பது, பேரக் குழந்தைகளுக்கு பாட்டி கதை சொல்லும் பாங்கில் தரப்பட்டு இருக்கின்றன. இந்தக் கருத்துகள், சிறுவர்கள் மனதில் பதியும் வண்ணம் தந்து இருப்பது சிறப்பு. நன்றி: தினத்தந்தி, 31/10/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பெரியார் திரைக்கதை

பெரியார் திரைக்கதை, ஞானராஜசேகரன், காவ்யா, விலை 280ரூ. சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருது பெற்ற ‘பெரியார்’ என்ற சினிமாவின் திரைக்கதை, ஒவ்வொரு காட்சிவாரியாக முழு விவரமாகத் தரப்பட்டு இருக்கிறது. திரைப்படத்தை நேரில் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தரும் இந்த நூல் மூலம், பெரியாரின் வாழ்வில் நடந்த ஏராளமான ஆச்சரியங்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. நன்றி: தினத்தந்தி, 13/12/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வால்மீகி அறம்

வால்மீகி அறம், நல்லி குப்புசாமி ரெட்டியார், பிரய்ன் பேங்க் பப்ளிகேஷன், விலை 395ரூ. வியாசர் அறம் என்ற நூல் மூலம் மகாபாரதத்தைத்தந்த தொழில் அதிபர் நல்லி குப்புசாமி ரெட்டியார். அவர் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் உள்ள கதைகள் கூறும் அறம் என்ன என்பதை இந்த நூலில் கொடுத்து இருக்கிறார். இந்த நூலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்தில் ஓர் அறவுரையும், அதனைத் தொடர்ந்து ராமாயணக் கதைகளும் நீதிகளும் சொல்லும் அறமும், அந்த அறத்தை சமீபகால நடப்புகளுடன் ஒப்பிட்டு, அதன் மூலம் நாம் பெற வேண்டிய பாடம் […]

Read more

கால்தடம் இல்லா நீலவானம்

கால்தடம் இல்லா நீலவானம், ஓஷோ, தமிழில் வானமாமலை, கண்ணதாசன் பதிப்பகம், விலை 230ரூ. சீனாவைச் சேர்ந்த புத்தமதத் துறவியான இஸான் ரியு என்ற குரு தொடர்பான பல செய்திகளை இந்த நூலில் தந்து இருக்கிறார் ஓஷோ, இந்தத் தகவல்களுடன், வழக்கம்போல அவரது கேள்வி-பதில் ரூபமான பிரசகங்கங்களும் பெரும் அளவில் இந்த நூலில் இடம்பிடித்து இருக்கின்றன. இடையிடையே அவர் கூறி இருக்கும் கவுதம புத்தர் பற்றிய கதைகளும், ஜென் கதைகளும் ருசிகரமானவை என்பதோடு ஆழமான கருத்துகளையும் கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் தன் வழியிலேயே ஞானம் […]

Read more

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5

தமிழ்வாணனின் மர்மநாவல்கள் பாகம் 5, தமிழ்வாணன், மணிமேகலைப் பிரசுரம், விலை 440ரூ. மர்மக் கதை மன்னர் தமிழ்வாணன் எழுதிய மர்ம நாவல்கள் தொகுப்பின் 5-ம் பாகமாக வெளியாகி உள்ள இந்த நூலில், 5 பெரும் நாவல்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ்வாணனின் ஆகச் சிறந்த மர்ம நாவல்களில் ஒன்றான ‘கருநாகம்‘ என்ற திகில் நாவல், ஏராளமான மர்மங்களும், எதிர்பாராத திடீர் திருப்பங்களும் கொண்டு தனித்துவம் பெற்று இருக்கிறது. ஓரே மூச்சில் படித்துவிடவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இநத் நாவலை தமிழ்வாணன் படைத்து இருக்கிறார். மர்ம […]

Read more

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005, புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 650ரூ. அரசு அலுவலகங்களில் ஊழில் ஒழிப்பு நடவடிக்கைகளின் ஓர் அம்சமாகக் கொண்டு வரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முழு விவரங்களையும் இந்த நூல் தாங்கி இருக்கிறது. ஒவ்வொருவரும் நீதி மன்றத்தை அணுகாமலேயே வீட்டில் இருந்தபடி குறைந்த செலவில் நீதியைப் பெற முடியும் என்பதை இந்த நூல் விளக்கி இருக்கிறது. ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவலைக் கேட்டுப் பெற 30 நாட்கள் காத்திருக்கத் தேவை இல்லை, 48 மணி நேரத்திலேயே தகவலைக் […]

Read more

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை, வானொலி அண்ணா என்.சி. ஞானப்பிரகாசம், கற்பக வித்யா பதிப்பகம், விலை 120ரூ. பத்திரிகைத் துறை, கல்வி, ஆன்மிகம், விளையட்டு, பொது மக்கள் சேவை போன்ற பன்முகத் துறைகளில் ஒப்பற்று விளங்கிய டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் வாழ்க்கைக் குறிப்பும், அவர் செய்த சாதனைகள், சேவைகள் ஆகியவற்றின் சுருக்கமான வரலாறும் இந்த நூலில் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. தொழிலாளர்களோடு தொழிலாளியாக நெருங்கிப் பழகிய அவரது பண்பு, அரசியலில் ஈடுபடாமலேயே, அனைத்து அரசியல் தலைவர்களாலும் கொண்டாட்டப்பட்ட அதிசயம் ஆகியவை உள்ளிட்ட டாக்டர். பா.சிவந்தி […]

Read more

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி

அரசஞ் சண்முகனாரின் தமிழ்ப்பணி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், காவ்யா, விலை 370ரூ. பன்முக வித்தகரான பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து சமர்ப்பித்தவை அடங்கிய இந்த நூலில் தனது சொந்த ஊரான சோழவந்தானைச் சேர்ந்த தமிழ் அறிஞர் அரசஞ் சண்முகனார் ஆற்றிய தமிழ்ப் பணிகளைத் திறம்பட வெளிக்கொணர்ந்து இருக்கிறார். அரசஞ் சண்முகனார், வ.உ.சி.க்கு தொல்காப்பிய இலக்கணத்தைக் கற்றுக்கொடத்தார் என்பதையும், பாரதியார், உ.வே.சா., மறைமலையடிகள், ராகவையங்கர் போன்ற ஆளுமைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டு இருந்தார் என்பதையும் இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. அரசஞ் சண்முகனாரின் இலக்கண, […]

Read more
1 6 7 8 9 10 223