வட சென்னை வரலாறும் வாழ்வியலும்

வட சென்னை வரலாறும் வாழ்வியலும், நிவேதிதா லூயிஸ், கிழக்கு பதிப்பகம், விலை 300ரூ. வடசென்னையில் இவ்வளவு அதிசயங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்ற வியப்பை இந்த நூல் தருகிறது. கால வெள்ளத்தில் புதைந்துபோன கட்டிடங்கள், மக்கள் மறந்துவிட்ட வரலாற்றச் சின்னங்கள் ஒவ்வொன்றையும் ஆசிரியர் சிறப்பாக ஆவணப்படுத்தி இருக்கிறார். இவற்றைத் தேடி அலைந்த கதை, அவற்றைப் பார்ப்பதற்கான அனுமதியைப் பெற செய்த முயற்சி, அவற்றைக் கண்டபோது ஏற்பட்ட ஆனந்தம், என்று பல வகையான உணர்வுகளை இந்த நூல் தருகிறது. சீனப்பெருஞ்சுவர் போன்று வட சென்னையில் கட்டப்பட்ட பெருஞ்சுவர், […]

Read more

தொ.ப.வும் நானும்

தொ.ப.வும் நானும், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், ஏ.எம்.புக். ஹவுஸ், விலை 80ரூ. சமீபத்தில் மறைந்த தமிழ் அறிஞர் தொ.பரமசிவனுடன் கொண்டு இருந்த தொடர்பு பற்றி, பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் சுவைபட விவரித்து இருக்கிறார். தொ.பரமசிவன் மதுரை தியாகராஜர் கல்லூரியில் பணியாற்றியபோது, அவருடன் இருந்த நாட்களில் கிடைத்த அனுபவங்கள், அவர் மூலம் கிடைத்த அரிய செய்திகள், பட்டிமன்றம் மற்றும் நகைச்சுவை பேச்சுக்கு தொ.ப.அளித்த ஆக்கபூர்வமான தூண்டுதல் ஆகிய அனைத்தையும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் இந்த நூலில் தந்து இருப்பதோடு, தனது நூல்களுக்கு தொ.ப. அளித்த முன்னுரைகளையும் இணைத்து இருப்பதால் படிக்க […]

Read more

குற்றவியல் சட்டங்கள்

குற்றவியல் சட்டங்கள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 800ரூ. 1860-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டத்தில் 2013-ம் ஆண்டு வரை செய்யப்பட்ட குற்றவியல் சட்டதிருத்தங்கள் உள்பட அனைத்து பிரிவுகளும் தரப்பட்டு இருக்கின்றன. என்னென்ன செய்கைகள் குற்றத்தன்மை கொண்டவை, அவற்றுக்கு என்ன தண்டனை ஆகியவை விளக்கி கூறப்பட்டுள்ளன. இந்திய சாட்சியச் சட்டம், குற்ற விசாரணை முறை சட்டம் ஆகியவற்றில் தற்போது வரை இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் நூற்றுக்கணக்கான வழக்கு தீர்வுகளும், தமிழ்நாடு தேர்வாணயத் தேர்வுகளுக்குப் பொருந்தும் சட்டங்களும் கொடுக்கப்பட்டு இருப்பதால் சட்டம் தொடர்பான […]

Read more

மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள்

மணவாழ்வு தொழில்யோகம் தரும் மகத்தான பரிகாரங்கள், ஐ. ஆனந்தி, சாருபிரபா பப்ளிகேஷன்ஸ், விலை 125ரூ. பிரசன்னம் மூலம் பலன்கள் சொல்லும் இந்த நூலின் ஆசிரியர், மணவாழ்வு, தொழில் யோகம், குழந்தை நலன், செவ்வாய் தோஷம், காதல் விவகாரம் பற்றியும் இவற்றால் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் பரிகாரங்கள் என்ன என்பதையும் எளிய தமிழில் சொல்லி இருக்கிறார். நன்றி : தினத்தந்தி, 18/4/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள்

சான்றுறுதி அதிகாரிகள் சட்டம் மற்றும் விதிகள், புலமை வேங்கடாசலம், கிரி லா ஹவுஸ், விலை 150ரூ. நோட்டரி பப்ளிக் எனப்படும் சான்றுறுதி அதிகாரிகள் தொடர்பான சட்டம் மற்றும் விதிகள் அவர்களது அதிகாரம் ஆகிய அனைத்தும் மாதிரி படிவங்களுடன் தமிழிலும் ஆங்கிலத்திலும் தரப்பட்டு இருக்கின்றன. நோட்டரி பதவிக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி, 19/9/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி

விடுதலைக்கு முன் தமிழ் இலக்கிய வளர்ச்சி, முனைவர் அ.பிச்சை, கபிலன் பதிப்பகம், விலை 400ரூ. 1930 முதல் 1950 வரையிலான காலகட்டத்தில் தமிழ் இலக்கிய வளர்ச்சி எவ்வாறு இருந்தது என்பதை இந்த நூல் பதிவு செய்து இருக்கிறது. கவிதை, சிறுகதை, நாவல், நாடகம், ஊடகம், திரைப்படம், கட்டுரை, வாழ்க்கை வரலாறு, பயண இலக்கியம், கடித இலக்கியம், நூல் பதிப்பு ஆகிய அனைத்துத் துறைகளிலும் காணப்பட்ட வளர்ச்சி, அவை தொடர்பாக பல்வேறு அறிஞர்கள் வெளியிட்ட கட்டுரைகள் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஊடகத் துறை வளர்ச்சிப் பகுதியில் […]

Read more

சேக்கிழாரின் பெரிய புராணம்

சேக்கிழாரின் பெரிய புராணம், பா.சு.ரமணன், தாமரை பிரதர்ஸ் மீடியா, விலை 360ரூ. இரண்டாம் குலோத்துங்கச் சோழ மன்னரிடம் அமைச்சராக இருந்த சேக்கிழார், 63 நாயன்மார்கள் தொடர்பான செய்திகளை பல்வேறு தரவுகள் மூலம் சேகரித்து, அவர்களின் வரலாற்றை பெரியபுராணம் என்ற நூலாக ஆக்கினார். பகவான் ரமணரின் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய, 63 நாயன்மார்களின் வரலாறு, எளிய தமிழில் உரைநடை வடிவத்தில் இந்த நூலில் இடம் பெற்றுள்ளது. நாயன்மார்களுக்கு அருள் புரிய அந்த இறைவன், சாதாரண வடிவத்தில் வந்து, அவர்கள் பெருமைகளை உலகறியச் செய்த வரலாறுகள் இலக்கியத்தரத்துடனும் […]

Read more

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம்

வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதம், அனந்தாச்சாரி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 230ரூ. மகாபாரதத்தை எழுதிய வியாசர், ஏராளமான கிளைக் கதைகளைக் கொண்ட ஸ்ரீமத் பாகவதம் என்ற மிகப் பெரிய நூலையும் எழுதியுள்ளார். அந்த நூலில் உள்ள அனைத்து கருத்துகளும், கிளைக் கதைகளும் எளிய முறையில் படித்து அறிந்துகொள்ளும் வண்ணம் இந்த நூல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. காக்கும் கடவுளான விஷ்ணு அனைத்து உயிரினங்களையும் காப்பதற்காக எடுத்த 20-க்கும் மேற்பட்ட அவதாரங்களும், அந்த அவதாரங்களின் சிறப்பும், அதன் மூலம் வெளிப்பட்ட அறநெறிகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. சிருஷ்டி […]

Read more

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள்

இந்தியப் பொருளாதாரம் வரலாறு காட்டும் வழிகள், தொகுப்பு ஆசிரியர் ஆ.அறிவழகன், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், விலை 250ரூ. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் கல்வி, ஏழைகளின் முன்னேற்றம் ஆகியவற்றைத் தனது குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிய மால்கம் ஆதிசேசய்யாவின் பன்முகத் தன்மைகளை இந்த நூல் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறது. சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் மூலம், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை, தொழிலாளர் நலன், வேலை வாய்ப்பு, வறுமை ஒழிப்பு, பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் லஞ்ச ஊழல், கருப்புப் பணம், சுற்றுச் சூழல் […]

Read more

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை

காமராஜ் எனும் தமிழ் ஆளுமை, வை.ஜவஹர் ஆறுமுகம், மணிமேகலைப் பிரசுரம், விலை 120ரூ. கர்மவீரர் காமராஜரின் ஆளுமைகளை இந்த நூல் புதிய கோணத்தில் தந்து இருக்கிறது. காமராஜரின் சுற்றுப் பயணத்தில் அவருடன் பல ஆண்டுகள் கலந்துகொண்ட இந்த நூலின் ஆசிரியர், அந்தப் பயணங்களின் போது வெளியான காமராஜரின் வியப்பான குணநலன்களை சிறப்பாகப் பதிவு செய்து இருக்கிறார். பத்திரிகைகளை காமராஜர் எந்த அளவுக்கு மதித்தார் என்பது, கடைநிலை ஊழியரின் குறையைக் கேட்டதும், அதற்குத் தீர்வு காணும் வகையில் அரசு ஆணையை மாற்றி அமைத்தது, விதிவிலக்கு கொடுத்து […]

Read more
1 5 6 7 8 9 223