மனம் செய்யும் மாய வித்தை

மனம் செய்யும் மாய வித்தை, ரவி வல்லூரி, தமிழில் சுசர்ல வெங்கடரமணி, மணிமேகலைப் பிரசுரம், விலை 260ரூ. பலவிதமான பயிற்சிகள் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும் என்றும், மனதை கூர்மையாகவும் அமைதியாகவும் வைத்துக்கொள்வதன் மூலம், மனம் தானாகவே வலிமை பெற்றுவிடுகிறது என்பதையும் விளக்கும் இந்த நூல், ஆரோக்கியத்துடனும், மனதிடத்துடனும் வாழ்வதற்குச் சிறந்த வழிகாட்டியாக அமைந்து இருக்கிறது. பிராணாயாமத்தின் சக்தியைக் கூறும் அதேசமயம், யூடியூப் மூலம் வெளிவரும் போலிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. போதையில் இருந்து மீள்வதற்கான வழிகள், […]

Read more

மகா பெரியவா

மகா பெரியவா, வீயெஸ்வி, விகடன் பிரசுரம், விலை 350ரூ. காஞ்சி மடாதிபதியாக இருந்தவரும், பக்தர்களால் மகா பெரியவா என்று அழைக்கப்பட்டவருமான சந்திரசேகரேந்திர சரசுவதி சுவாமிகளின் விரிவான வாழ்க்கை வரலாறு இந்த நூலில் தரப்பட்டு இருக்கிறது. அவர் நிகழ்த்திய அற்புதங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், அவர் பிறந்தது முதல் முக்தி அடைந்தது வரை நடைபெற்ற நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பை விவரித்து வரும் அதே நேரம், இடையிடையே காஞ்சிப் பெரியவர் வழங்கிய உரைகளின் சுருக்கமும் தரப்பட்டு இருக்கிறது.  காஞ்சிப் பெரியவருக்கும், ஆங்கிலேயரான பால்பிரண்டன் […]

Read more

ஆகாயக் கதவு

ஆகாயக் கதவு, ஏ.இளமதி, குறி வெளியீடு, விலை 100ரூ. நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி எழுதிய 32 கவிதைகள் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அனைத்தையும் அந்த சிறுமியின் கையெழுத்திலேயே கொடுத்து இருப்பதுடன், அதற்குத் தக்க அந்தச் சிறுமி வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச் செய்து இருப்பது பாராட்டுக்குரியது. நன்றி: தினத்தந்தி, 5/12/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

இந்திரநீலம்

இந்திரநீலம், அ.வெண்ணிலா, அகநி வெளியீடு, விலை 150ரூ. பெண்களின் காம வெளிப்பாடு, சங்க காலத்தில் இருந்து தொடரும் மரபுதான் என்றாலும், சங்கத்திற்குப் பின்னால் அதற்கு நீண்ட தொடர்ச்சி இல்லை என்பதையும்,காமம், நறுமணம் மிக்கப்பூவின் மலர்ச்சியைப் போல் அல்லாமல் கெடுபிடிகள் நிரம்பிய சடங்குகளாக ஆக்கப்பட்டுவிட்டது என்பதையும் நுணுக்கமான உளவியல் அடிப்படையில், 8 சிறுகதைகள் மூலம் மென்மையாக வெளிப்படுத்தி இருக்கிறார் ஆசிரியர். மகாபாரதத்தின் திரவுபதி, சிலப்பதிகாரக் கண்ணகி, காரைக்கால் அம்மையார் ஆன புனிதவதி, மாதவியின் மகள் மணிமேகலை போன்றவர்களைக் கதை மாந்தர்களாக ஆக்கி, அவர்களது உள்மனப் போராட்டத்தை […]

Read more

ஊதா நிறத் தீவு

ஊதா நிறத் தீவு, ராஜேஷ்குமார், ஸ்ரீபாரதி பப்ளிகேஷன்ஸ், விலை 115ரூ. உயிர்க்கொல்லி நோயான எயிட்சுக்கு கண்டுபிடித்த ரகசியமான மருந்தை மையமாக வைத்து எழுத்தாளர் தனக்கே உரித்தான பாணியில் திடீர் திருப்பங்களுடன் இந்த மர்மக் கதையைத் தந்து இருக்கிறார். நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஸ்ரீமத் பகவத் கீதை

ஸ்ரீமத் பகவத் கீதை, பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம், விலை 150ரூ. பகவத் கீதை பிறந்த கதை, அதன் தனிச்சிறப்பு, 18 அத்தியாயங்களில் உள்ள அனைத்து வரிகளுக்கும் எளிய தமிழில் விளக்கம் ஆகியவை ராமகிருஷ்ண பரமஹம்சரின் மேற்கோள்களுடன் தரப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி,28/2/21 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006395_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை)

கல்கியின் பொன்னியின் செல்வன்(சித்திரக் கதை), ஓவியர் ப.தாகம், தங்கப்பதுமை பதிப்பகம், விலை 200ரூ. கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் சரித்திர நாவலைப் படிக்கும்போது அதில் இடம்பெற்ற அருள்மொழி, வந்தியத்தேவன், குந்தவை, நந்தினி, பெரிய பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் போன்ற கதாபாத்திரங்கள், ஒவ்வொருவர் மனதிலும் இடம்பிடித்து இருக்கும். அந்தக் கதாபாத்திரங்களை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தும் வகையில், 10 தொகுதிகளைக் கொண்ட இந்த சித்திரக் கதை நூல் அற்புதமாகத் தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும், அந்தக் காலத்திற்கு ஏற்ற உடை, அலங்காரங்களுடன், அதற்கேற்ற பின்னணிக் காட்சிகளுடன், […]

Read more

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு

வாழ்வை வளமாக்கும் திருக்கோயில் வழிபாடு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு வெளியீடு, விலை 200ரூ. அடிக்கடி ஆலயம் செல்பவர்களுக்கு அதிகமாக நோய்கள் வருவதில்லை என்று கூறி இருக்கும் ஆசிரியர், அதற்கான அறிவியல் விளக்கத்தையும் தந்து இருக்கிறார். கோயில் கோபுர வகைகள், கருவறை, கொடிமரம், பலிபீடம் போன்ற அனைத்து விவரங்களையும், வழிபாட்டு முறைகள், அபிஷேகம், நைவேத்தியம் போன்றவை பற்றிய தகவல்களும், நந்தியை வழிபடுவதால் கிடைக்கும் சிறப்பு, 18 வகை பிரதோஷங்களின் பயன்கள், ருத்திராட்சம், சாளக்கிராமம், தர்பைப் புல் போன்றவற்றின் சிறப்புகளும் எளிய நடையில் […]

Read more

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு

நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு, தொகுப்பு ஆசிரியர் க.செந்தமிழ்ச் செல்வன், மணிமேகலைப் பிரசுரம், விலை 225ரூ. இந்த நூல், நாடார் சமூகத்தின் போராட்ட வரலாறு என்ற பெயரைக் கொண்டு இருந்தாலும், நாடார் சமூகம் பற்றிய முக்கியமான தகவல்கள் அனைத்தையும் தாங்கி இருக்கிறது. திருச்செந்தூரின் தென் கிழக்குப் பகுதியே நாடார்களின் தாய் பூமி, பழங்காலத்தில் எகிப்தில் குடியேறியவர்கள் குமரிக்கண்டத்தில் இருந்து சென்ற நாடாகள், குறுந்தொகையில் 40-க்கும் மேற்பட்ட பாடல்களில் நாடன் என்ற சொல் உள்ளது. 63 நாயன்மார்களில் ஒருவரான ஏனாதி நாயனார் நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர் […]

Read more

சிதைந்த கூடு

சிதைந்த கூடு, ரவீந்திரநாத் தாகூர், தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி, சாகித்திய அகாடமி, விலை 175ரூ. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய 10 சிறுகதைகளும் பெண்களின் ஆழ் மன ஓட்டத்தைக் கருப்பொருளாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் சரிவரப் புரிந்துகொள்ளப்படாததால், அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களும் கொடுமைகளும் மனதைத் தொடும்வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளன. தற்காலப் பெண்களின் சிந்தனைக்கு சமமாக 120 ஆண்டுகளுக்கு முன்பே ரவீந்திரநாத் தாகூர் படைத்த புதுமைப் பெண்களின் கதாபாத்திரங்கள் வியக்க வைக்கின்றன. வங்காள மொழியில் எழுதப்பட்ட கதைகளை தமிழில் பிசிறுதட்டாமல் மொழிமாற்றம் செய்து இருப்பதைப் பாராட்டலாம். நன்றி: தினத்தந்தி,18/4/21. இந்தப் […]

Read more
1 4 5 6 7 8 223