நபிகளாரின் பொன்மொழிகள்

நபிகளாரின் பொன்மொழிகள், ஆலிம் பப்ளிகேஷன் பவுண்டேசன்; விலை:ரூ.650; இறைவனின் அருள் வேதமாகிய திருக்குர்ஆனுக்கு அடுத்தபடியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் பெரிதும் போற்றப்படுகின்றன. பெரும்பாலான நபி மொழித் தொகுப்புகள் இறைநம்பிக்கை, தூய்மை, தொழுகை எனப் பாடத்தலைப்புகளைக் கொண்டு அமைந்து இருக்கும். ஆனால் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் தொகுத்த முஸ்னது அஹ்மத், இதில் இருந்து வேறுபட்டது. இது நபித் தோழர்கள் பெயர்களால் வரிசைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு நபித் தோழர் அறிவித்திருக்கும் நபிமொழிகளை ஒரே இடத்தில் காணலாம். மூன்றாம் பாகமாக வெளியாகி […]

Read more

தேசம் நேசித்த தலைவன்

தேசம் நேசித்த தலைவன், ஆதலையூர் சூரியகுமார், தாமரை பிரதர்ஸ் பீடியா,  விலை:ரூ.240. ஆயுதத்தின் துணையோடு ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்துக் களமாடிய வீரர் தேசம் நேசித்த தலைவன் சந்திரபோராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. வாழ்க்கைக் குறிப்பு என்ற அளவில் அமைக்காமல், முக்கிய வரலாற்றுச் சம்பவங்கள் அனைத்தையும் தனித் தனித் தலைப்புகளில் கொடுத்து இருப்பதால் இந்த நூலை ஆர்வத்துடன் படிக்க முடிகிறது. நேதா ஜியின் இளமைக்கால வாழ்க்கை, வெளிநாடு சென்று கல்வி கற்றது. இந்தியாவுக்கு வந்து […]

Read more

எனது வாய்மொழி பதிவுகள்

எனது வாய்மொழி பதிவுகள்,  கி.ராஜநாராயணன், அன்னம்,  விலை:ரூ.300. கரிசல்காட்டு இலக்கியவாதியான கி.ராஜநாராயணன், வார, மாத நாளிதழ்களுக்கும், செய்தியாளர்களுக்கும் அளித்த நேர்காணல்கள் அனைத்தும் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. அவர் மனதில் புதைந்துள்ள ஆசாபாசங்கள், பலதரப்பட்ட மக்கள் பற்றிய அவரது புரிதல்கள், மற்ற எழுத்தாளர்கள் குறித்த அவரது கண்ணோட் டம் ஆகியவை இந்த நேர்காணல்களில் வெளிப் பட்டு இருக்கின்றன. பள்ளிக்கூடமே செல்லாத அவர் கல்லூரி பேராசிரியரானது, எழுத்துலகில் அறிமுகம் ஆனது, கரிசல் பூமி மீது அவருக்கு உள்ள கரிசனம் ஆகிய அனைத்தையும் இந்த நூலில் காணமுடிகிறது. கி.ராஜநாராயணனை […]

Read more

எனது இமாலயப் பயணம்

எனது இமாலயப் பயணம், தாமரை செந்தூர்பாண்டி, சிவகாமி புத்தகாலயம், விலை:ரூ.120. தாமரை செந்தூர்பாண்டி, பானியட், குருஷேத்திரம், எழுத்தாளர் சண் சிம்லா, டேராடூன், ஹரித்துவார் என்ற பல இடங்களுக்கு பயணித்ததை அவருக்கே உரிய பாணியில் சிறப்பாகச் சொல்லி இருக்கிறார். நடுத்தரவர்க்க சுற்றுலாப் பயணிகளுக்கு உதவும் வகையிலும், நம்மையும் அவருடன் அழைத்துச் சென்று விளக்கும் உணர்வைத் தரும் வகையிலும் இவற்றைத் தந்து இருக்கிறார். அவர் எடுத்த புகைப்படங்கள், இந்தப் பயண அனுபவத்தைப் புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும்

மாமல்லபுரம் வரலாற்று புதிர்களும் விடைகளும், அமுதன்; வெளியீடு: மணிமேகலைப் பிரசுரம்; விலை:ரூ.200; மாமல்லபுரம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்திருந்தாலும், சுவாரசியமான ஆய்வுத் தகவல்களோடு, தொடர்கதைக்கே உரித்தான விறுவிறுப்போடு, ஆங்காங்கே பொருத்தமான படங்களைச் சேர்த்து, வாசகர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று காட்டும் சுகானுபவங்களோடு வந்திருக்கும் இந்தப் புத்தகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது. ஆசிரியர், மாமல்லபுரம் கடற்கரை பற்றிய வர்ணனைகளோடு புத்தகத்தைத் தொடங்கி இருப்பதே தனி அழகு. மாமல்லபுரம் சிற்பங்களில் புதைந்துள்ள புதிர்களை வரலாற்றுப் பின்னணியோடும், பக்தி இலக்கியங்களோடும் அலசி ஆராய்ந்து சொன்ன விதம், மாமல்லபுரம் கடலில் மூழ்கிய […]

Read more

எகிப்திய தொன்மைக் கதைகள்

எகிப்திய தொன்மைக் கதைகள்,  ஏவி.எம்.நஸீமுத்தீன், நேஷனல் பப்ளிஷர், விலை:ரூ.120. எகிப்து வரலாற்றில் பின்னிப் பிணைந்த அமானுஷ்ய சம்பவங்கள், மன்னர்கள் குடும்பத்தில்  வித்தியாசமான திருமணமுறை, பதவிப் போட்டிக்கு நடந்த கொலைகள் ஆகியவற்றை இந்தக் கதைகள் வெளிப்படுத்துகின்றன. நன்றி: தினதந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

மகாத்மாவும் மருத்துவமும்

மகாத்மாவும் மருத்துவமும்,  தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,  விலை: ரூ.95. மருத்துவத்துக்கும் காந்திக்குமான உறவையும் அதில் அவருடைய ஈடுபாட்டையும் விளக்கும் வகையில், மருத்துவத் துறை நிபுணர்கள், காந்தியர்கள் உள்ளிட்டோர் எழுதிய 20 கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன. காந்தியரும் சமூகச் செயல்பாட்டாளருமான மறைந்த மருத்துவர் வெ.ஜீவானந்தம் இந்தக் கட்டுரைகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். நன்றி: தமிழ் இந்து, 9-4-22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b5%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

சுவாசிக்கும் பூக்கள்

சுவாசிக்கும் பூக்கள்,  முனைவர் பொ.பொன்முருகன், பயணம் பதிப்பகம், விலை:ரூ.250. ஏ ராளமான பூக்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட பல பூக்களின் முழு விவரத்தை இந்த நூல் தருகிறது. ஒவ்வொரு பூக்களின் மருத்துவ குணங்கள், பூஜைக்கு உகந்த மலர்கள், பெண்கள் விரும்பும் பூக்கள், பூக்களின் ஆங்கிலப் பெயர்கள் போன்ற அனைத்து விவரங்களுடன் பூக்களின் படங்களும் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினதந்தி, 20/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818  

Read more

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள்

நீதியரசரின் சிந்தனை முத்துக்கள், நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், விஜய இராஜேஸ்வரி பதிப்பகம், விலை:ரூ.150. உன்னதமான வாழ்க்கைக்கு வழிகாட்டிபோல இந்த நூல் அமைந்து இருக்கிறது. நீதியரசர் எம்.கற்பகவிநாயகம், அவரது சிந்தனையில் உதித்தது, பல மேடைகளில் தெரிவித்த கருத்துகள், பல்வேறு அனுபவங் களில் இருந்து கற்றுக் கொண்டது, படித்து அறிந்தவை ஆகியவற்றைத் தொகுத்து 36 கட்டுரைகளாகக் கொடுத்து இருக்கிறார். ஒவ்வொன்றும் சிறப்பான கருத்தைத் தாங்கி இருப்பதுடன், படிப்பவர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. ஆடம்பரம் என்பது ஆடும் பம்பரம். எப்போது வேண்டுமா னாலும் சாய்ந்துவிடலாம் என்பது போன்ற […]

Read more

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள்

அயோத்திதாச பண்டிதரின் சொற்பொழிவுகள், தொகுப்பு ஆசிரியர் முனைவர் பெ.விஜயகுமார், பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம், விலை 150ரூ. அயோத்திதாச பண்டிதர் 100 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட விமர்சனத்துடக்குள்ளான சொற்பொழிவுகள் இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. நன்றி: தினத்தந்தி, 8/8/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 2 3 4 5 6 223