சாதி ஒழிப்பு

சாதி ஒழிப்பு, கசி.விடுதலைக்குமரன், மக்கள் விடுதலை பதிப்பகம், விலை 90ரூ. இந்தியாவில் சாதி முறை தோன்றியது எவ்வாறு என்பதும், சாதியை ஏன் ஒழிக்க வேண்டும் என்பதும், சாதி ஒழிப்புக்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இந்த நூலில் விளக்கமாகச் சொல்லப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அறுபது கவிதைகள்

அறுபது கவிதைகள், அய்யாறு ச.புகழேந்தி, பாரதி பித்தன் பதிப்பகம், விலை 60ரூ. கவிஞர் அய்யாறு புகழேந்தி, தனது 60-வது பிறந்த நாளையொட்டி, 60 கவிதைகள் கொண்ட இந்தத் தொகுப்பைப் படைத்து இருக்கிறார். பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்தப் புதுக் கவிதைகள், ரசித்துப் படிக்கும் வகையில் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள்

புரட்சியை உண்டாக்கிய நாவல்கள், முல்லை பிஎல். முத்தையா, முல்லை பதிப்பகம், விலை:ரூ.600. இலக்கிய உலகில் புரட்சியை உண்டாக்கிய ‘மேடம் பவாரிகுஸ்தால் பிளாபர்), புது வாழ்வு போரும் காதலும்(லியோ டால்ஸ்டாய்), அதிசய மாளிகைருத்தானியல் ஹாவ்த்தான்), பெண் வாழ்க்கையாப்பஸான்). நான்கு நண்பர் கள்(அலெக்சாண்டர் டுமாஸ்) ஆகிய 6 நாவல்கள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன. நாவல்களின் சுருக்கம் என்ற போதிலும், அதன் பாதிப்பே தெரியாத வகையில் நேர்த்தியாகச் சுருக்கித் தரப் பட்டு இருக்கின்றன. அந்தந்த கலாச்சாரத்தினை வெளிப்படுத்தும் வகையில் நாவல்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருப்பதால், மூலக் கதையைப் படிக்கும் திருப்தி […]

Read more

திருமூலர் வாழ்வும் வாக்கும்

திருமூலர் வாழ்வும் வாக்கும், டாக்டர் துரை.இராஜாராம், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. திருமூலர் எழுதிய மூவாயிரம் மந்திரங்களில் முக்கியமான சில மநதிரங்களுக்கு, அவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் என்ன என்பது இந்த நூலில் சொல்லப்பட்டு இருக்கின்றது. திருமூலரின் வாழ்க்கைக் குறிப்பு, சித்தர்களின் சிறப்பு ஆகியவையும் இந்த நூலில் காணப்படுகின்றன. நன்றி: தினத்தந்தி, 26/9/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000006461_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

பிரபஞ்சன் சில நினைவுகள்

பிரபஞ்சன் சில நினைவுகள், பி.ராஜ்ஜா, இனிய நந்தவனம் பதிப்பகம், விலை:ரூ.100 தமிழிலும், ஆங்கிலத்திலும் புலமையோடு எழுதக்கூடிய இந்த நூலின் ஆசிரியர், பிரபல எழுத்தாளரான பிரபஞ்சனுடன் பழகிய நாட்களில் நடைபெற்ற செய்திகளை தனக்கே உரித்தான பாணியில் தந்து இருக்கிறார். இதில் பிரபஞ்சனின் தனித் திறமை நன்றாக வெளிப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அந்தக் காலப் பக்கங்கள்

அந்தக் காலப் பக்கங்கள், அரவிந்த் சுவாமிநாதன், தடம் பதிப்பகம், விலை:ரூ. 160. நூறு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாவல்கள், சென்னையில் இருந்த பீப்பிள்ஸ் பூங்கா, அந்தக் கால சினிமாவின் புகழ்பெற்ற நடிகைகள், தீபாவளிக்கு வெளியாகி சாதனை படைத்த சினிமா போன்ற மலரும் நினைவுகள் சுவாரசியமாகத் தரப்பட்டு இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/2/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000031315_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும்

அடிமை முறை ஒழிப்பும் ஆபிரகாம் லிங்கனும், வி.என்.ராகவன், அலைகள் வெளியீட்டகம், விலை:ரூ. 110. அமெரிக்காவில், கறுப்பினத்தவரின் அடிமை வாழ்வுக்கு எதிரான அடிமை முறை ஒழிப்பும் குறித்த முதல் தமிழ் நூலாக இது காணப்படு கிறது. இளமைப் பருவத்தின்போதும், அரசியலில் ஆபிரகாம் லிங்கனும் ஈடுபட்டபோதும் ஆபிரகாம் லிங்கன் எதிர் கொண்ட சவால்கள், அவற்றை மன உறுதியுடன் சந்தித்து அமெரிக்க ஜனாதிபதியாக உயர்ந்தது எவ்வாறு என்பது விளக்கமாகத் தரப்பட்டு இருக்கிறது. அவர் பதவி ஏற்றதும் நடைபெற்ற உள்நாட்டுப் போர், 1862-ஆம் ஆண்டு அடிமை முறை ஒழிக்கப்பட்டு வெளியான […]

Read more

வீரபாண்டிய கட்டபொம்மன்

வீரபாண்டிய கட்டபொம்மன், மு.கோபி சரபோஜி, கிழக்கு பதிப்பகம், விலை: ரூ.140. ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுத்தவர் என்றும், கொள்ளைக்காரர் என்றும் இருவிதமாக அடையாளப்படுத்தப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மன்னின் உண்மையான வரலாறு என்ன என்பது இந்த நூலில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு இருக்கிறது. கட்டபொம்மன் தொடர்பான இரண்டு கருத்துகளையும் எடுத்துக்கூறி, உண்மை என்ன என்ற தேடலில் இந்த நூல் ஈடுபட்டு இருப்பதை நன்கு உணரமுடிகிறது. ராமநாதபுரம் அரண்ம னையில் கட்டபொம்மனும் ஜாக்சன் துரையும் சந்தித்தபோது நடந்தது என்ன? அங்கு இருந்து கட்டபொம்மன் தப்பியது எப்படி? என்பவை […]

Read more

திருச்சி ஜெயில்

திருச்சி ஜெயில், எல்.எஸ்.கரையாளர், அழிசி, விலை:ரூ.170; இரண்டுமுறை கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்ட எல்.எஸ்.கரையாளரின் சுதந்திரப் போராட்ட சிறை அனுபவங்களாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. 1940-ம் ஆண்டு சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தியதால் 6 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர், அங்கு இருந்த ராஜாஜி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், பி.எஸ்.குமாரசாமி ராஜா, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், டாக்டர் சுப்பராயன் ஆகியோரின் சிறை அனுபவங்களையும் தெரிவித்து திருக்கிறார். சிறையில் அன்றாடம் என்ன நடக்கும்? சிறை மருத்துவமனை எப்படி இருக்கும் […]

Read more

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும்

ஆதித்தநல்லூரும் பொருநைவெளி நாகரிகமும், சாத்தான்குளம் அ.இராகவன், அழகு பதிப்பகம், விலை 220ரூ. தமிழர்களின் நாகரிகத் தொட்டில் என்று வர்ணிக்கப்படும் ஆதித்த நல்லூர் நாகரிக வரலாற்றை தமிழில் முதல் முறையாக விளக்கமாக ஆதித்தநல்லூரும் | எடுத்துக் கூறியவர் என்ற பெருமையைப் பெற்ற பொருநைவெளி நாகரிகமும் இந்த நூலின் ஆசிரியர், தமிழர்களின் ஆதிகால நாகரிகத் தன்மை குறித்து வியப்பான தகவல்களைத் தந்து இருக்கிறார். ஆதித்தநல்லுர் நாகரிகம், சிந்துவெளி நாகரிகத்துக்கு முற்பட்டது என்பதையும், இரும்பை முதன் முதலாகக் கண் டுபிடித்தது தமிழர்களே என்பதையும் சான்றாதாரங்களுடன் தெரிவித்து இருக்கிறார். ஆதித்தநல் […]

Read more
1 2 3 4 223