வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு

வாழ்க்கைக்குத் தேவை விழிப்புணர்வு, எம். கருணாநிதி, மணிமேகலைப் பிரசுரம், விலை:ரூ. 175. மாணவர்கள், பெண்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என்று அனைத்துத் தரப்பினரின் பாதுகாப்பான வாழ்க்கைக்குத் தேவையான கருத்துகளை, ரசித்துப் படிக்கும் வகையில் நகைச்சுவை கலந்து எழுதி இருப்பவர் தமிழகக் காவல்துறையில் கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் என்பது வியப்பளிக்கிறது. காவல்துறைக்கு முற்றிலும் மாறான மென்மையான போக்குடன் அவர் தெரிவித்து இருக்கும் ஆலோசனைகள், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகை யில் இருக்கின்றன. மாமியார்-மருமகள் உறவு, பேருந்து பயணத்தில் மாணவர்கள் பாதுகாப்புடன் பயணிப்பது, போதை மருந்து, சமூக விரோதிகள், கட்டப்பஞ்சாயத்து ஆகியவற்றின் […]

Read more

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம்

புகழ்க் கம்பன் தந்த இராமாயணம், சக்திதாசன் சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை:ரூ.400. கம்ப ராமாயணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்களும், அவற்றுக்கு, அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலான விளக்கமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ஒவ்வொரு பாடலிலும் உள்ள அருஞ்சொற்களுக்கு விளக்கமும் தந்து இருப்பதால் பாடலின் முழுக் கருத்தையும் நன்றாகத் தெரிந்துகொள்ள முடிகிறது. புத்தகத்தின் முன்னுரையாக, கம்பர் காலம் எது? அவரது சொந்த ஊர் எங்கே இருந்தது? ராமாயண காவியத்தை கம்பர் இயற்றியது ஏன்? என்பது போன்ற விவரங்கள் அடங்கிய பெரிய கட்டுரை ஆராய்ச்சி நோக்கில் தரப்பட்டு […]

Read more

அழகு மல்லிகை

அழகு மல்லிகை, கவிஞர் வி.ஏ.நாராயணன், நாராயணன் பதிப்பகம், விலை:ரூ.50. இந்த நூலின் ஆசிரியர் சிறுவயதில் தான் கேட்ட செய்திகள், பார்த்த காட்சிகள், பட்ட அனுபவங்கள் அடிப்படையில், குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு ஏற்ற 31 பாடல்களைக் கொடுத்து இருக்கிறார். நீதியைச் சொல்லும் வகையிலும் இவை அமைந்து இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்க்கைப் படிகள்

வாழ்க்கைப் படிகள், புலவர் மா.அருள்நம்பி, சங்கர் பதிப்பகம், விலை:ரூ.75. வாழ்வில் முன்னேறுவதற்கு வழிகாட்டியாக, அறிஞர்களின் அனுபவ வா அறிவு, சிறப்பாக வாழ்ந்து காட்டியவர்களின் வாழ்வியல் முறை ஆகியவை திருமந்திரம், திருக்குறள், தேவாரம் திருவாசகம், மகாபாரதம், ராமாயணம் போன்றவற்றின் எடுத்துக்காட்டுகளுடன் தரப்பட்டு இருக்கின்றன.  நன்றி: தினத்தந்தி, 6/2/22 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சேதி சொல்லும் தேதி

சேதி சொல்லும் தேதி, தொகுப்பு ஆசிரியர்: சி.வீரரகு, சத்யா பதிப்பகம், விலை:ரூ.100 17-ம் நூற்றாண்டு முதல் 20-ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஞானிகள், விஞ்ஞானிகள், அறிவியல் ஆர்வலர்கள், இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள், பெருந்தலைவர்கள் பற்றிய குறுஞ்செய்திகளும், இந்தக் காலத்தில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், சாதனைகள் ஆகியவையும் தேதி வாரியாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் தெரிந்துகொள்வோம் என்ற தலைப்பில் கொடுத்துள்ள கட்டுரைகளும் பயனுள்ளவை ஆகும். நன்றி: தினதந்தி, 6/2/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் […]

Read more

தேன்கூடு

தேன்கூடு, தொகுப்பு ஆசிரியர்: உமையவன், நிவேதிதா பதிப்பகம், விலை:ரூ.110. சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக இருக்கும் வகை மிகச் சிறப்பான 100 பாடல்கள் தேர்ந்தெடுத்து இந்த நூலில் தரப்பட்டு இருக்கின்றன. குழந்தைகள் தொடர்பான பல நூல்களை எழுதியவரான இந்த நூலின் தொகுப்பாசிரியர் தேர்ந்தெடுத்து இருக்கும் ஒவ்வொரு பாடலும் சிறப்பு வாய்ந்தது ஆகும். மலரும் உள்ளம், சிரிக்கும் பூக்கள், பழைய கதை புதிய பாடல் உள்ளிட்ட நூல்களில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட 100 பாடல்களும் அறிவுக்கு விருந்தாவதோடு, சிறுவர்-சிறுமிகளை வெகுவாகக் கவரும் வண்ணம் உள்ளன. நன்றி: […]

Read more

விகடன் இயர்புக் 2022

விகடன் இயர்புக் 2022, பதிப்பாளர் பா.சீனிவாசன், விகடன் பிரசுரம், விலை:ரூ.275. 10 -ம் ஆண்டாக வெளியாகி இருக்கும் இயர்புக் 2012 நூலில், பல்வேறு நாடுகளின் மக்கள் சந்தித்த முக்கிய பிரச்சினைகள், உலகம், இந்தியா, தமிழகம் ஆகியவற்றின் நடப்பு நிகழ்வுகள், மத்திய அரசின் 2021-ம் ஆண்டின் பட்ஜெட் முக்கிய அம்சங்கள், பல்வேறு துறைகளில் விருது பெற்றவர்கள் விவரம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. போட்டித் தேர்வுகளில் பங் கேற்பவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் யு.பி. எஸ்.சி. தேர்வு வினா-விடை, தேர்வு அட்டவணை, குடிமைப் பணித் தேர்வில் வெற்றிபெற்றவர்களின் அனுபவக் […]

Read more

தலைத் தாமிரபரணி

தலைத் தாமிரபரணி, முத்தாலங்குறிச்சி காமராசு, காவ்யா; விலை:ரூ.1000. தமிழகத்தில் உற்பத்தியாகி, தமிழ்நாட்டுக்குள் ஓடி, கடலில் கலக்கும் புண்ணிய நதியான தாமிரபரணி தொடர்பான தகவல்கள் இந்த ‘நூலில் பொதிந்து கிடக்கின்றன. தாமிரபரணி தோன்றிய வரலாறு, அதன் குறுக்கே உள்ள கள், நீர்த்தேக்கங்கள், அருவிகள், இந்தப் பகுதியில் வாழ்ந்த அகத்தியர் பற்றிய செய்திகள், நதி தொடர்பான பழங்கதைகள், நதி செல்லும் வழியில் உள்ள ஆலயங்கள், முக்கிய ஸ்தலங்கள் போன்றவையும் இதில் தரப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொரு கட்டுரையும் அது தொடர்பான புராணம் மற்றும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் கதை […]

Read more

இரண்டாவது உலக யுத்தம்

இரண்டாவது உலக யுத்தம், வி.அ.மத்சுலேன்கோ, தமிழில்: டாக்டர் இரா.பாஸ்கரன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை:500. பல லட்சக்கணக்கான மக்களைப் பலிகொண்ட இரண்டாவது உலக யுத்தம்(1939-1945) தொடர்பான வரலாற்று நிகழ்வுகள் இதில் தரப்பட்டு இருக்கின்றன. இந்த யுத்தம் ஏற்பட்டதற்கான காரணங்கள், அதில் ஒவ்வொரு நாடுகளின் செயல்பாடுகள், இந்த யுத்தத்தால் விளைந்த முடிவுகள் ஆகியவை, இதுவரை வெளிவராத ஆவணங்களின் அடிப்படையில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அவற்றுடன் ரஷியா மற்றும் பல நாடுகளின் அரசியல் பிரமுகர்கள் போர் குறித்து வெளியிட்ட தகவல்கள், ராணுவ நிபுணர்கள் நினைவுக் குறிப்புகள் ஆகியவற்றை யும் பயன்படுத்தி […]

Read more

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள்

தளபதி மு.க.ஸ்டாலின் சட்டமன்ற உரைகள், பூம்புகார் பதிப்பகம், விலை: முதல் பாகம் ரூ.360; 2-ம் பாகம் ரூ.290; 3-ம் பாகம் ரூ.340;     முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 1989-ம் ஆண்டு முதல் சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நேரங்களில், சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரைகள் 3 பாகங்களாகத் தொகுத்துத் தரப்பட்டு இருக்கின்றன. 1989 ஏப்ரல் 1-ந் தேதி நிதிநிலை அறிக்கை மீதான அவரது உரையுடன் இது தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் நிதிநிலை அறிக்கைகள் மீதான உரைகள், ஆளுநர் உரை மீதான பதில் உரைகள் ஆகியவை 1-ம் பாகத்திலும், […]

Read more
1 2 3 4 5 223