வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4

வீரப்பன் வாழ்ந்ததும் வீழ்ந்ததும் 4, பெ.சிவசுப்ரமணியம், சிவா மீடியா வெளியீடு, விலை 500ரூ. சந்தனக் கடத்தல் வீரப்பன் பற்றிய பரபரப்பான தகவல்களைக் கொண்ட நூல்களின் 4- வது பாகமாக இது வெளியாகி இருக்கிறது. இந்த புத்தகத்திலும் வீரப்பன் தொடர்பான திடுக்கிடும் செய்திகள் நிறைந்து காணப்படுகின்றன. கன்னட நடிகர் ராஜ்குமார் விடுதலைக்குப் பின் நடந்த நிகழ்வுகளும், இறுதியில் வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதும் விவரிக்கப்பட்டு இருக்கிறது. வீரப்பன் ரூ.13 கோடி வைத்து இருந்தார் என்பதும் அவரால் கடத்தப்பட்ட நாகப்பா எவ்வாறு கொலையுண்டார் என்பதும் […]

Read more

பௌத்தமும் தமிழும்

பௌத்தமும் தமிழும், மயிலை சீனி.வேங்கடசாமி, அலைகள், விலை 220ரூ. தமிழகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குடன் இருந்த பவுத்த மதம், பின்னர் தடயமே இல்லாமல் அழிந்து போனது எப்படி என்ற வரலாற்றை பல இடங்களுக்குச் சென்று, கள ஆய்வு செய்து இந்த நூலைப் படைத்து இருக்கிறார் ஆசிரியர். தமிழகத்தில் பவுத்தம் எந்தெந்தப் பகுதிகளில் பரவி இருந்தது, பவுத்த மதத்தால் கிடைத்த நன்மைகள், பவுத்தர்கள் தமிழ் மொழிக்குச் செய்த தொண்டுகள், பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மன்னர் அசோகர் பவுத்த மதத்தை எவ்வாறு தமிழகத்தில் பரப்பினார், ஜைனம் […]

Read more

யோகா அறிவியலும் ஆரோக்கியமும்

யோகா அறிவியலும் ஆரோக்கியமும், பி.கே. அய்யாசாமி, மணிமேகலைப் பிரசுரம், விலை 280ரூ. கொரோனா காலத்தில் அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவதற்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. அமெரிக்க பல்கலைக் கழகத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று பேராசிரியராகப் பணிபுரிந்து பல்வேறு நாடுகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்த இந்த நூலின் ஆசிரியர், உடல் நலத்துக்கான அனைத்து ஆசனங்களின் செய்முறை, அதனால் ஏற்படும் பலனகள், ஆசனத்தின் போது கடைபிடிக்க வேண்டிய எச்சரிக்கைகள் ஆகியவற்றை அறிவியல் நோக்கிலும், பட விளக்கங்களுடனும் எளிமையாகத் தந்து இருக்கிறார். யோகாவின் வரலாறு, […]

Read more

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும்

நட்சத்திர பலன்களும் ஆன்மிக குறிப்புகளும், ஆர்.ஹேமா பாஸ்கர் ராஜு, விலை 200ரூ. ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் 27 நட்சத்திரங்கள் பற்றியும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உரிய ஆலயம், அந்த ஆலயம் அமைந்துள்ள இடம், அங்கு செல்வதற்கான வழி, ஒவ்வொரு கோவிலிலும் நடைபெறும் சிறப்பு பூஜைகள் போன்ற அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் தொகுத்துத்தரப்பட்டு இருக்கின்றன. நட்சத்திரங்களுக்கு உரிய தமிழ் விளக்கம்,ஆங்கில மாதங்களுக்கு அந்தப் பெயர்கள் வந்த விதம், தமிழ் மாதங்களின் சிறப்பு, ஒவ்வொரு மாதத்திலும் நடைபெறும் திருவிழாக்கள் ஆகியவற்றுடன் ஆன்மிக பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய 300க்கும் மேற்பட்ட […]

Read more

பாபாயணம்

பாபாயணம், ஜி.ஏ.பிரபா, விகடன் பிரசுரம், விலை 350ரூ. மதபேதம் இல்லாமல், அனைவருக்கம் அருள் மழை பொழியும் சாய்பாபா, நிகழ்த்திய ஏராளமான அற்புதங்கள் இந்த நூலில் தொகுத்துத்து தரப்பட்டு இருக்கின்றன. சாய்பாப நிகழ்த்திக் காட்டிய அருஞ்செயல்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள், அவர் தொடர்பான வியப்பான சம்பவங்கள் அனைத்தும் படித்துப் பரவசம் அடையும் வகையில் இந்த நூலில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதுவரை அதிரகம் பகிரப்படாத பாபாவின் அற்புத நிகழ்வுகளையும் இதில் காணமுடிகிறது. இவை, சாய்பாபாவின் உயிரோட்டம் நிறைந்த வண்ணப்படங்களுடன் கொடுக்கப்பட்டு இருப்பதால் மனதை ஈர்க்கின்றன. […]

Read more

வைரமுத்து வரை

வைரமுத்து வரை, பேராசிரியர் சு.சண்முகசுந்தரம், காவ்யா, விலை 1600ரூ. இமாலயச் சாதனை என்று பாராட்டும்வண்ணம் 1550 பக்கங்களைக் கொண்ட இந்தப் பிரம்மாண்ட நூல் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 1931-ஆம் ஆண்டு முதல் 2020 -ஆம் ஆண்டு வரை தமிழ் சினிமாப் படங்களுக்குப் பாடல்கள் எழுதிய அத்தனைபேர் பற்றிய விவரமும் இதில் தரப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு பாடல் எழுதியவரைக் கூட விட்டுவிடாமல், அனைவரைப் பற்றிய தகவல்களையும் பதிவு செய்து இருப்பது வியப்பளிக்கிறது. காலவரிசைப்படி, ஒவ்வொரு பாடலாசிரியர் பற்றிய குறிப்பு, அவர் எழுதிய பாடல் வரிகளில் காணப்படும் […]

Read more

பெண் எனும் பேரிலக்கியம்

பெண் எனும் பேரிலக்கியம், கவிஞர் துரைசாமி, நவீனா பதிப்பகம், விலை 60ரூ. பெண்மை தொடர்பாகவும், மனித வாழ்வின் உள்ளடக்கத்தைக் கொண்டவைகள் குறித்தும் எழுதப்பட்ட 33 கவிதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. அனைத்துக் கவிதைகளும் படிப்பதற்கு இதமாக இருக்கின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வாழ்க்கை எனப்படுவது யாதெனின்

வாழ்க்கை எனப்படுவது யாதெனின், இரா.சாந்தகுமார், இரா.சாந்தகுமார் வெளியீடு, விலை 50ரூ. 33 புதுக்கவிதைகளை இந்த நூல் தாங்கி இருக்கிறது. டாலர் மோகம், ஒன்பது உயர்ந்ததே, பிறப்பொக்கும் அரவாணிகளுக்கும் என்ற கவிதைகள் சிந்தனையைத் தூண்டுகின்றன. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம்

அயோதித்தாசப் பண்டிதர் எழுத்துச் சீர்திருத்தம், முனைவர் அ. அன்பாநந்தன், அறம் பதிப்பகம், விலை 50ரூ. ஈ.வெ.ரா. பெரியாருக்கு முன்னதாக அயோத்திதாசப் பண்டிதர், தமிழ் எழுத்துக்களில் கொண்டு வந்த சீர்திருத்தத்தை ஆய்வு நோக்கில் இந்த நூல் தந்து இருக்கிறது. தற்போதைய தமிழ் எழுத்து, ‘தமிழி’ மற்றும் ‘வட்டெழுத்து’ மூலம் எவ்வாறு உருவானது என்ற பட்டியலும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நன்றி: தினத்தந்தி, 13/6/21. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும், எஸ்.பி.சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. ராகு கேது கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், பலாபலன்களும், செய்ய வேண்டிய பரிகாரங்களும் இந்த நூலில், உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய தகவலும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more
1 8 9 10 11 12 223