மோகினி

மோகினி, வ. கீரா, யாவரும் பப்ளிஷர்ஸ், பக். 104, விலை 90ரூ. கிராமத்தில் இருந்து, நகரத்திற்கு இடம் பெயர்ந்து வரக்கூடிய மனிதர்களின் வாழ்வியல் சச்சரவு, ஒரு கிராமத்து காதல், காமம், வாழ்வியல், கலாசாரம் உள்ளிட்டவை இடம் பெறும் வகையில், ‘மோகினி’ என்ற பெயரில் சிறுகதை தொகுப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ‘தமிழு’ என்ற சிறுகதையில் வரும், பாலியல் தொழில் செய்யக்கூடிய பெண், தன் மகளை அத்தொழிலில் வர விடாமல் பாதுகாக்கிறாள். ஆனால் அந்த ஊரில் உள்ள இளைஞர்களிடம் இருந்து, தன் மகளை காப்பாற்ற, அவள் […]

Read more

நீர்

நீர், விநாயகமுருகன், உயிர்மை, விலை 150ரூ. தமிழ் நிலத்தின் நினைவுகளில், கடற்கோளால் அழிந்த நகரங்களைப் பற்றிய சித்திரங்கள் ஆழமாக இருக்கின்றன. 2015 டிசம்பர் 5ம் தேதி, சென்னை நகரம் நீரால் சூழப்பட்டது. என்றென்றைக்கும் மாறாத வடுவாக, அந்த ஊழிக்காலம் நிகழ்ந்தது. மாபெரும் மானுட அவலம் ஒன்றின் சாட்சியமாக, அந்தத் தினங்கள் இருந்தன. தண்ணீராலும் உதவி கேட்டு அலறும் அபயக் குரல்களாலும், அதனூடே பெருகும் மகத்தான மானுட அன்பினாலும், இந்த நகரம் நிரம்பியிருந்தது. அந்த அழிவின் காலத்திற்கு சாட்சியம் சொல்கிறது இந்த நாவல். நன்றி: தினமலர், […]

Read more

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள்

கிம் கி-டுக்கின் சினிமாட்டிக் உடல்கள், ஜமாலன், நிழல் பதிப்பகம், பக். 128, விலை 120ரூ. தமிழ் சமூக அழகியல், கலை, சமூக உணர்வை கட்டமைக்க தேவையான ஊடகம் சினிமா. அதற்கான அத்தனை கதவுகளையும் திறப்பதாக உள்ளது, தென் கொரிய சினிமா இயக்குனர், கிம் கி-டுக்கின் சினிமாக்களை முன் வைத்து எழுதப்பட்டுள்ளது இந்த நூல். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும்

மார்க்சியமும் தமிழ் இலக்கியமும், கோவை ஞானி, புதுப்புனல் வெளியீடு, பக். 220, விலை 190ரூ. சங்க இலக்கியம் துவங்கி, 1980களின் படைப்புகள் வரை, உலக இலக்கிய பின்னணியுடன், தமிழ் இலக்கியங்களை ஆய்வு செய்யும், கோவை ஞானியினி 18 கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

நயனுறு நடைச்சித்திரம்

நயனுறு நடைச்சித்திரம், புதுகை மு. தருமராசன், புதுகை தென்றல், பக். 120, விலை 90ரூ. இலக்கிய அமைப்புகளின் மூலம், இலக்கியங்களையும், வளர்த்து பெருமைப்படுத்தும், 22 இலக்கிய ஆளுமைகளை பற்றிய, அறிமுக கட்டுரைகளின் தொகுப்பு, நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும்

அய்யனார் கோயிலும் அபுபக்கர் வகையறாவும், கவி. வளநாடன், இருவாட்சி பதிப்பகம், பக். 110, விலை 90ரூ. ‘பேஸ்புக்’ என்ற சமூக வளைதளத்தில் தான் பதிவு செய்தவற்றை, புத்தகமாக வெளியிட்டுள்ளார். நீண்ட நெடிய கட்டுரைகள் இதில் இடம் பெறவில்லை. இந்த நூல் மூலம், முகம் தெரியாத, மண்ணின் மைந்தர்கள் நமக்கு அறிமுகம் ஆகின்றனர். பேச்சு மொழியில் இடம் பெற்றிருக்கும் துணுக்குகள் ரசிக்க வைக்கும். நன்றி: தினமலர், 8/1/2017.

Read more

சொட்டாங்கல்

சொட்டாங்கல், எஸ். அர்ஷியா, எதிர் வெளியீடு, விலை 220ரூ. மதுரைமக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஆழமாகவும், கூர்மையாகவும் பேசியுள்ளது. ‘கொட்டாங்கல்’ நூல். இது மதுரையில் நடக்கும் கதையாக இருந்தாலும், தமிழக மக்கள் அனைவரையும் பாதிக்கும் கதையாகவும் உள்ளது. நன்றி: தினமலர், 17/1/2017.   —-   உங்கள் தேகமும் யோகமும், கவியோகி வேதம், கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், விலை 100ரூ. யோகா பற்றிய நல்ல நூல். யோகாவினால் பொங்கி வரும் ஆழ்மன சக்தி, சபலத்தை ஒழித்தலும் அமைதியாகச் செயல்படுதலும், பொறுமையும் நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையும் […]

Read more

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு

எல்லீஸின் தமிழ் மொழி ஆய்வு, ஜோ.சம்பத் குமார், நெய்தல் பதிப்பகம், பக்.208, விலை ரூ.130. “பிரான்சில் ஒயிட் எல்லீஸ்‘’ தமிழ் ஒலிக்கேற்ப தன் பெயரை “எல்லீசன்‘’ என்று மாற்றிக் கொண்டவர். திருக்குறளை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த இவர், ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வருவாய்த்துறைத் துணைச் செயலர், வருவாய்த்துறைச் செயலர், மசூலிப்பட்டின மாவட்ட நீதிபதி மற்றும் மாஜிஸ்டிரேட், நிலத்தீர்வை ஆட்சியர், சென்னை ஆட்சியர் முதலிய பல உயர் பதவிகளை வகித்தவர். தம் வாழ்நாளில் பெரும் பகுதியைச் சென்னையில் கழித்தவர். திருக்குறள் மேல் கொண்ட விருப்பத்தால், திருவள்ளுவரின் […]

Read more

மேடைப்பேச்சு

மேடைப்பேச்சு, தா.பாண்டியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக்.204, விலை ரூ.170. சிறந்த மேடைப் பேச்சாளர்களில் ஒருவரான நூலாசிரியர், மேடைப் பேச்சு தொடர்பான அனைத்து விவரங்களையும் இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தலைவர்களின் மேடைப் பேச்சுகள் சுதந்திரப் போராட்ட காலத்தில் எவ்வாறு பயன்பட்டன? சுதந்திரப் போராட்ட காலத்தில் “மேடை ஏறியோர்க்கு மேடையில் ஏறுவது தெரியும்; இறங்கியவுடன் எங்கு போவோம் என்பது தெரியாது. ஏறினால் ரயில் – இறங்கினால் ஜெயில்’‘ என்ற நிலை அப்போது இருந்தது என்பன போன்ற பல தகவல்கள் வியக்க வைக்கின்றன. […]

Read more

பண்டைய இந்தியா

பண்டைய இந்தியா, (எதிர்நிலை கருத்துக்களுக்கான மறுப்புகள்), ஆர்.எஸ். சர்மா, தமிழில் சுவிதா முகில், புதுமை பதிப்பகம், விலை 35ரூ. கடந்த, 1977ல், ‘பண்டைய இந்தியா’ எனும் வரலாற்று நூல் ஆர்.எஸ். சர்மாவால் எழுதப்பட்டது. கல்வி ஆராய்ச்சிக்கான தேசிய கவுன்சிலில், பிளஸ் 1 வகுப்பு வரலாற்று பாடப்புத்தகமாக பதிப்பிக்கப்பட்டது. இதில், பண்டைய இந்திய வரலாற்றை மிக எளிமையாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் எழுதிய நூல் பண்டைய இந்தியா. அதன் தமிழாக்கம் இது. நன்றி: தினமலர், 17/1/2017.

Read more
1 126 127 128 129 130 240