தமிழர் பூமி

தமிழர் பூமி, தீபச்செல்வன், எதிர் வெளியீடு, விலை 350ரூ. இலங்கை போரால் அழிந்த கிராமங்களுக்கு பயணம் செய்து, அங்கு வாழும் இடம் பெயர்ந்த மக்களை சந்தித்து, அவர்களின் வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஈழ மக்களின் வாழ்வு, போராட்டம், சிங்கள அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் அரசின் இனப்படுகொலை ஆகியவை குறித்தும் இந்நூல் பதிவு செய்துள்ளது. இப்புத்தகம், ஒவ்வொரு நூலகத்திலும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணம். நன்றி: தினமலர், 17/1/2017.

Read more

காவிரி நேற்று இன்று நாளை

காவிரி நேற்று இன்று நாளை, பெ. மணியரசன், பண்மைவெளி பதிப்பகம், பக். 208, விலை 120ரூ. வரலாற்றுக் காலத்திலிருந்து இன்று வரை காவிரிக்கும், தமிழர்களுக்கும் உள்ள உறவு, கர்நாடகம் காவிரியைத் தடுக்கின்ற நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், தீர்ப்பாய, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், தமிழகத்தின் காவிரி உரிமை குறித்த இந்திய அரசின் செயல்பாடுகள் மற்றும் தமிழக அரசின் செயல்பாடுகள் இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. காவிரி பிரச்னை ஆரம்பித்த நாளிலிருந்து, 2016 டிசம்பர் வரை காவிரி சிக்கலில் நடந்த நிகழ்வுகள், வழக்குகள், நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளுடன், தண்ணீர் தகராறுச் […]

Read more

திணைக் கோட்பாடு

திணைக் கோட்பாடு, முனைவர் துரை. சீனிச்சாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 164, விலை 125ரூ. திணை என்பது ஒழுக்கம், கோட்பாடு என்பது கொள்கை. பாடாண்திணை என்பது பாடப்படும் ஆண் மகனது ஒழுகலாறு, பழக்க வழக்கங்கள் என்று அறியப்படுகிறது. திணை என்பது நிலத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு புனைவு நெறி எனலாம். திணை கோட்பாடு என்ற நூலில் தொல்காப்பியம் – இலக்கியத் திறனாய்வுத் தொடங்கி, இலக்கியக் கோட்பாடுகள் வரை ஏழு தலைப்புகளில் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ் மொழி தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது. […]

Read more

காரேய் கருணை இராமாநுஜா

காரேய் கருணை இராமாநுஜா, வேதா டி. ஸ்ரீதரன், வேதப்ரகாசனம், பக். 174, விலை 150ரூ. ஸ்ரீமத் ராமானுஜரின், 1,000வது ஆண்டில் அவரைப் பற்றி பலரும் நூல் எழுதுகின்றனர். இந்நூல் அவ்வரிசையில் வந்துள்ள போதிலும், சற்று மாறுபட்ட சிந்தனைகளுடன் வெளிவந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக, ராமானுஜர் தன் மனைவியைத் துறந்தது நியாயமா என்று ஆய்வு செய்கிறார். படிக்கச் சுவையாக உள்ளது. இந்நூலில், 11 தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. கட்டுரைகளின் இடையில் பெட்டிச் செய்திகள் பல, புதிய செய்திகளை நமக்குத் தருகின்றன. உதாரணமாக, மத்திய பிரதேசத்தில் விதிஷா நகருக்கு அருகேயுள்ள […]

Read more

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு

இந்துக்கள் – ஒரு மாற்று வரலாறு, வெண்டி டோனிக்கர், எதிர் வெளியீடு, பக். 904, விலை 750ரூ, இந்துக்களின் வாழ்க்கையில் பல முக்கியமான விஷயங்கள் எவ்விதம் பரிணமித்தன என்பதை விளக்கமாக விவரிக்கிறது இந்நூல். இந்துக்கள் ஒரு தனித்த மதத்தின் பகுதி தாங்கள் என்ற ஒரு வலுவான உணர்வைப் பிற மதங்கள் புகும் வரை உருவாக்கிக் கொள்ளவில்லை. பிறகு தான் தங்களை அவர்கள் வரையறுத்துக் கொள்ள வேண்டி வந்தது. வட்டாரம், மொழி, ஜாதி, தொழில், இனம் ஆகியவற்றால் அவர்களின் அடையாளங்கள் துண்டுபட்டிருந்தன. மேலும், உயர் ஜாதி […]

Read more

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!

நாடகம் – திரை இன்னுமே பேசலாம்!, மு. இராமசாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 82, விலை 70ரூ. நவீன நாடக இயக்கங்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்து ஆசிரியர் பேசுகிறார். ஜாம்பவான்கள் குறித்தும் அலசுகிறார். இப்பொழுது, 80 வயதில் பயணிக்கிற ந.முத்துசாமியின் முதல் நாடகம் அவரின், 33வது வயதில் வெளிவந்திருக்கிறது. அதிலிருந்து நாடக ஆசிரியராகவே இருந்து வருகிறார். ந.முத்துசாமி என்ற ஆளுமையை எந்த வகையிலும் கடக்காமல், எவரொருவரும், இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் நாடகம் பற்றி பேச முடியுமென்று எனக்குத் தோன்றவில்லை என்கிறார். ‘என் […]

Read more

முதுமை இனிமை

முதுமை இனிமை, பேராசிரியர் ச. வின்சென்ட், பன்முகம், பக். 80, விலை 80ரூ. முதுமை தவிர்க்க முடியாதது. முதுமையை ரசிக்கும் பண்பை கொண்டிருந்தால், முதுமையை வெல்லலாம் என, இந்த நூலில் பல உதாரணங்களை காட்டி அழகாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். முதுமையின் தனிமையிலிருந்து தப்பிக்க, குறிக்கோளை வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், நகைச்சுவை வாழ்க்கையை அமைத்துக் கொள்வதும் முதுமையை மறக்கச் செய்யும் என விளக்கியிருப்பது வித்தியாசமாக இருக்கிறது. முதுமையில் உடல் நலம் பேணுவதில் அக்கறை காட்டுவதன் அவசியத்தை, கதைகளுடன் விளக்கியிருப்பது, நூலைப் படிக்க அலுப்பு தட்டாமல் […]

Read more

நான் ப்ரம்மம் (முதல் பகுதி)

நான் ப்ரம்மம் (முதல் பகுதி), மராத்தி ஒலிப்பதிவுகள், ஸ்ரீ நிசர்கதத்த மஹராஜ், ஆங்கிலத்தில் மோரிஸ் பிரைட்டன், தமிழில் சி. அர்த்தநாரீஸ்வரன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 408, விலை 250ரூ. இருபதாம் நூற்றாண்டில் இந்தியாவின் மிகப் பெரும் ஞானிகளில் ஒருவராகக் கருதப்பட்டவர் ஸ்ரீ நிசர்கத்த மஹராஜ். மஹாராஷ்டிராவில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த இவருக்கு மாருதி என்பதே இயற்பெயர். திருமணம் செய்து கொண்டு (ஒரு மகன், மூன்று மகள்கள்) சிறு வியாபாரம் செய்வதன் மூலம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தவருக்கு, ஸ்ரீசித்தராமேஷ்வர் மஹராஜ் என்ற ஆன்மிக குரு […]

Read more

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்

1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம், கா. அப்பாதுரை, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 352, விலை 200ரூ. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த இனம் தமிழினம். இதன் வரலாற்றை ஆய்ந்து, ‘1,800 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம்’ என்ற நூலாக வி.கனகசபை ஆங்கிலத்தில் எழுதினார். இதைப் பழகு தமிழில் பன்மொழிப் பாவலர் பேரறிஞர் க.அப்பாதுரையார் இந்த நூலில் தந்துள்ளார். பழமைக்குச் சான்றளிக்கும் சங்கப் புலவர்களின் பாடல்கள் ஆராயப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் கூறும் மகத நாட்டுச் சதகர்ணியும், இலங்கைக் கயவாகு […]

Read more

ஒன்ஸ் அபான் ய டைம்

Once upon A Time, சேது, மொழிபெயர்ப்பு கே.டி. ராஜகோபாலன், சாகித்திய அகாதெமி, பக். 256, விலை 180ரூ. மலையாள நூலாசிரியர் சேது எழுதி, சாகித்திய அகாதெமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ எனும் புதினத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு இந்நூல். மொழிபெயர்த்திருப்பவர் கே.டி.ராஜகோபாலன். குறிப்பாகத் தளங்கள் எதையும் புனையாவிட்டாலும், கேரளாவில் நடப்பதாக களங்கள் சித்தரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை. கருத்து வேறுபாட்டால் கணவனைப் பிரிந்து மகளோடு வாழும் கதையின் நாயகி, ஒரு மாபெரும் கூட்டாண்மை நிறுவன குழுமத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும்கூட. பெரும் போராட்டங்களுக்கு இடையே, […]

Read more
1 127 128 129 130 131 240