பார்வை தொலைத்தவர்கள்

பார்வை தொலைத்தவர்கள், யோசே சரமாகோ, தமிழில் எஸ். சங்கரநாராயணன், பாரதி புத்தகாலயம், பக். 383, விலை 295ரூ. கடந்த, 1998ம் ஆண்டில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வென்ற போர்த்துக்கீசிய நாவல் இது. யோசே சரமாகோ (1922 – 2010) ஒரு போர்த்துக்கீசியர். கவிஞர், நாவலாசிரியர், நாடகாசிரியர், பத்திரிகையாளர். இந்த உலகத்தை, ‘மொத்தமுமே பார்வையற்ற குருடர்களின் உலகம்’ என்று சொல்கிறார் ஆசிரியர். ஒரு தனி மனிதன் (38 வயதினன்) கார் ஓட்டிச் செல்கையில் திடீரென்று பார்வையை இழக்கிறான். அவன் காரைத் திருடிச் செல்லும் திருடனும் குருடாகிறான். […]

Read more

வான் தொட்டில்

வான் தொட்டில், முனைவர் ஆ. மணிவண்ணன், வானதி பதிப்பகம், பக். 192, விலை 125ரூ. தன்னை உணர்ந்தவன் ஞானி. சமுதாயத்தை உணர்ந்தவன் மனிதன். இந்த இரண்டையும் உணர்ந்தவன் கலைஞன் என்ற கவிதையாய் கொட்டுகிறது இந்நுல். நன்றி: தினமலர், 06/11/2016.   —-   வளர்பிறைகளும் தேய்பிறைகளும், கழனியூரன், நேஷனல் பப்ளிஷர்ஸ், பக். 144, விலை 100ரூ. ஆசிரியர் தன் முதல் நாவலில் அனைத்து வகை சுவைகளையும் கூட்டி எழுதியுள்ளார். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

மலரும் நினைவுகளில் காமராஜர்

மலரும் நினைவுகளில் காமராஜர், விருதை ராஜா, கண்ணப்பன் பதிப்பகம், பக். 112, விலை 70ரூ. அனைவரின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ள கர்மவீரர், அவரது வாழ்க்கையில் நடந்த 100 நிகழ்வுகளை நம் கண் முன் காட்டுகிறது இந்நூல் நன்றி: தினமலர், 06/11/2016.   —- நீயே உனக்கு நிகரானவன், ஆர்.சி. சம்பத், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 128, விலை 100ரூ. திரைப்படங்களில் வில்லனாக சித்தரிக்கப்பட்ட எம்.ஆர்.ராதா, தனிமனித வாழ்க்கையில் ஒரு உன்னத மனிதராகத் திகழ்ந்தார் என்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 06/11/2016.

Read more

பாரதியும் ஆங்கிலமும்

பாரதியும் ஆங்கிலமும், சிலம்புச் செல்வர் டாக்டர் ம.பொ.சிவஞானம், பூங்கொடி பதிப்பகம், பக். 64, விலை 30ரூ. தமிழ் மொழியின் வளர்ச்சி, ஆங்கில ஆதிக்க ஒழிப்பு பற்றி மகாகவி வெளியிட்டுள்ள கருத்துக்களை கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —-   மாணவப் பருவம் பிரச்சனைகளும் தீர்வுகளும், சு. தங்கவேலு, அமராவதி பதிப்பகம், பக். 48, விலை 23ரூ. பல நிலைகளையும் தாங்கி வளரும் மாணவனே சிறந்த மனிதனாக வடிவம் பெறுகிறான் என்கிறது இந்த நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

புனித அன்னை தெரசா

புனித அன்னை தெரசா, குன்றில்குமார், குறிஞ்சி வெளியீடு, பக். 216, விலை 190ரூ. ஒழுக்கம், கட்டுப்பாடு, சேவையின் திலகமாக வாழ்ந்த அன்னை தெரசாவின் அழியா புகழைக் கூறுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.   —- நின்று ஒளிரும் சுடர்கள், உஷாதீபன், கவிதா பப்ளிகேஷன், பக். 184, விலை 130ரூ. காலத்தால் அழியாத சிறந்த திரைப்படக் கலைஞர்களின் நடை சித்திரங்களை பிரதிபலிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 13/11/2016.

Read more

முதல்வர் இவன்…

முதல்வர் இவன்… தமிழ்மறை தழைக்க வந்த ஸ்ரீ ராமானுஜர், முனைவர் கலியன் எதிராசன், வானதி பதிப்பகம், பக். 260, விலை 150ரூ. வைணவர்கள் தினமும் ஸ்ரீ ராமானுஜரை வழிபடுவதை வழக்கமாக கொண்டவர்கள். 120 ஆண்டுகள் வாழ்ந்த அம்மகானின், 1000மாவது ஆண்டை ஒட்டி இந்நூல் வெளிவந்துள்ளது. ஸ்ரீ ராமானுஜரின் வரலாற்றை நாலாயிர திவ்யப் பிரபந்த பாசுரங்களின் அடிகளை உரைநடைபோல் எழுதி, விளக்கிய பான்மை நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டாகும். ஆழ்வார்கள், ஆசாரியர்கள் வைணவத்தை வளர்த்தது, முதல் பகுதியிலும், ஸ்ரீ ராமானுஜர் அவதரித்தது முதல் அவர் ஸ்ரீ […]

Read more

சீன இதிகாசக் கதைகள்

சீன இதிகாசக் கதைகள், ஏவி. எம், நஸீமுத்தீ, கிழக்கு பதிப்பகம், பக். 127, விலை 110ரூ. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சீன இதிகாசக் கதைகள் கற்பனையில் சிறகடித்து, நம்பிக்கையில் கால் பதிக்கிறது. மனிதனின் அச்சம், ஆசை, ஆற்றாமை, கற்பனை, தனிமை, தன்னிரக்கம் என்ற உணர்வுகளை, இக்கதைகள் வெளிப்படுத்துகின்றன. சீனாவின் சமூக, சமய வரலாற்றையும் இக்கதைகள் தொட்டுக்காட்டுகின்றன. மாயாஜலம், கற்பனை, வினோதம், அற்புதங்கள் இக்கதைகளில் இழையோடும், ஆனாலும், சீன மண்ணின் மரபுகளையும், நம்பிக்கைகளையும் அவை தாண்டி விடாது. இந்தியாவுக்கு வந்த யுவான் சுவாங் என்ற சீனப் […]

Read more

பூமி

பூமி, மூலம் ஆஷா பகே, தமிழில் பி.ஆர். ராஜாராம், பக். 400, விலை 225ரூ. சாகித்திய அகாடமி விருது பெற்ற மராத்தி மூல நூலாசிரியர் ஆஷா பகேயின் பூமி எனும் நாவலின் தமிழாக்கமே இந்நூல். தமிழக, கடலூர் மாவட்ட கடலோரக் குடும்பத்தில், இந்து தந்தைக்கும், கிறிஸ்தவ தாய்க்கும் பிறந்த ஒரு சிறுமி, சிறு வயதிலேயே தந்தையை இழந்து, பள்ளிப் பருவத்திலேயே தாயையும் இழந்து தனிமையாகிறாள். நிராதரவாக நிற்கும் அவளை, அவளது அத்தை மும்பைக்கு தன்னோடு அழைத்துச் சென்று, படிக்க வைத்துக் கரையேற்றுகிறாள். தந்தையில்லா பெண்ணாக, […]

Read more

சித்தர்களின் சாகாக் கலை

சித்தர்களின் சாகாக் கலை, சுவாமி அகமுகநாதர், கற்பகம் புத்தகாலயம், பக். 392, விலை 275ரூ. உலகத்தில் மனித இனம் தோன்றிய வரலாறு, விழுப்புரத்தில் கிடைத்த, 1,80,000 ஆண்டுகள் பழக்கமுள்ள மண்டை ஓடு, முதலான பிரமிப்பான தகவல்களுடன் நூல் துவங்குகிறது. கண்டங்களின் தோற்றம், சுனாமி என்னும் ஆழிப் பேரலை, எரிமலை வெடிப்புகளின் தாக்கம், அதனால் ஏற்படும் பேரொலி முதலான, அரிய தகவல்களை தருகிறது இந்த நூல். உலகத்தில், மக்கள் தோற்றத்தை, ஏழாயிரம்… எட்டாயிரம்… ஆண்டுகளுக்கு முன் என, சில சமயவாதிகள் வரையறை செய்து கொண்டிருக்கும்போது, நம் […]

Read more

வருகிறார்கள்

வருகிறார்கள், கரன் கார்க்கி, பாரதி புத்தகாலயம், பக். 392, விலை 295ரூ. ‘‘தண்ணீர் வியாபாரமாக்கப்படுவதை எதிர்த்தும், சுத்தமான பாதுகாக்கப்பட்ட குடிநீரை, ஒவ்வொரு குடிமகனுக்கும் தருவது அரசின் கடமை என வலியுறுத்தி, பூமி எங்கும் போராடும், போராடுகின்ற போராடத் துணிகிற இளைஞர்களுக்கு இந்நூல் என்ற சமர்ப்பணத்துடன் துவங்குகிறது இந்த நாவல். மதங்கள், ஜாதிகள் பெயரால் நாளும் நடந்தேறும் கவுரவக் கொலைகள், தண்ணீரை அநியாய விலைக்கு விற்று மக்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளும் தனியார் நிறுவனங்கள், எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள், யார் […]

Read more
1 129 130 131 132 133 240