பாரதியின் பாஞ்சாலி சபதம்

பாரதியின் பாஞ்சாலி சபதம், பதிப்பாசிரியர் பழ. அதியமான், காலச்சுவடு பதிப்பகம், பக். 200, விலை 180ரூ. பதிப்புலகின் புதுமை: 20ம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியான நூல் ஒன்றின், 21ம் நூற்றாண்டு பதிப்பு இந்நூல். ஆம்! பாரதியின் பாஞ்சாலி சபதத்தின் மறு பதிப்பு. பதிப்புரை எழுதும் கலையில் ஒரு புதுமையை இந்தப் பதிப்பின் முன்னுரை தெளிவுப்படுத்துகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதத்தை வியாசரின் பாஞ்சாலி சபதத்துடன் ஒப்பிட்டு மாறுபடும் இடங்களையும், பாரதியின் கவிதை வீரியத்தையும் இப்பதிப்பு வெளிப்படுத்துகிறது. வியாச பாரதத்தில் பாஞ்சாலி சபதம் பகுதி இடம் பெறும் […]

Read more

தொன்மைச் செம்மொழி

தொன்மைச் செம்மொழி, பேராசிரியர் க. முத்துசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 256, விலை 190ரூ. பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம் மூன்று பிரிவுகளாக இருந்தது என்றும் இந்த நூலின் முதல் கட்டுரை தெரிவிக்கிறது. குமரி, ஆறு, குமரி மலை, பறுளி ஆறு பற்றியும், சிவன், திருமால், காளி முதலான வழிபாடு பற்றியும் தெரிவிக்கும் செய்திகள் நம் காதில் தேனாகப் பாய்கின்றன. தொல் தமிழ் எழுத்து தான் பிராமி எழுத்து என்றும் […]

Read more

சூல்

சூல், சோ. தர்மன், அடையாளம், பக். 500, விலை 380ரூ. விடுதலையடைந்து, 70 ஆண்டு காலத்தில் இன்றைய நீர்நிலைகள், குடிமராமத்து ஒழிந்து, பொதுப்பணி துறை, வனத் துறை, கனிம வளத் துறை, வருவாய்த் துறை போன்ற அரசின் பல துறைகளின் கண்காணிப்பில் அமைந்த மாற்றங்களையும், பசுமைப் புரட்சி தந்த நவீன வேளாண்மையும், பகுத்தறிவுப் புரட்சி தந்த சித்தாந்த அறிவும் சம்சாரிகளை முன்னேற்றிஉள்ளதா என்பதை கேள்வி கேட்க முனைகிறது இந்நாவல். ஆன்மிகத்தின் ஆணி வேராகவும், நம்பிக்கைகளின் நாற்றங்காலாகவும் விளங்கும் கிராமங்களில் நிகழ்வுறும் நிகழ்வுகளை, வட்டார வழக்கில் […]

Read more

எண்ணுவது உயர்வு

எண்ணுவது உயர்வு (பாரதியின் புதிய ஆத்திசூடி விளக்கவுரை), முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக். 240, விலை 150ரூ. அச்சம் தவிர் துவங்கி’, ‘வவ்வுதல் நீக்கு’ வரை உள்ள, பாரதியின், 110 புதிய ஆத்திசூடி வரிகளுக்கு, 240 பக்கங்களில், நா.சங்கரராமன் விளக்கவுரை எழுதி உள்ளார். பலர், செய்யுளுக்கான விளக்கவுரையில், தாம் படித்த இலக்கியங்கள், தமது கருத்துக்களை எடுத்துக்காட்டி விளக்குவர். ஆனால், இந்த நூலில், முழுக்க முழுக்க, பாரதியின் மற்ற கவிதைகள், அவை இயற்றப்பட்ட சூழல், அவர் வாழ்வில் கடைபிடித்த நெறிகளை கூறி விளக்கி […]

Read more

கம்பர் வைணவநெறி

கம்பர் வைணவநெறி, பாவலர் மணிசித்தன், திருவரசு புத்தக நிலையம், விலை 80ரூ. பாவேந்தர் பாரதிதாசனால் பாராட்டப்பட்ட, இந்நூலாசிரியர் சிறந்த தமிழ் அறிஞர். இவர் கம்பர் குறித்தும், வைணவம் குறித்தும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக, இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில், 11 கட்டுரைகள் உள்ளன. ஒரு குரங்கை, கம்பன் கண்ட மனிதனாக கூறுவதும் (பக். 3), கண்ணனைச் சரயு ஆற்று ஓட்டத்தில் காண வைப்பதும் (பக். 12), நம்மாழ்வார் பிரபந்தங்களை தழுவிக் கொள்ளும் கம்பரின் பாடல்களை விளக்குவதும் (பக். 23), சிவபெருமானின் பெருமைகளை விளக்கும், கம்பரின் பாடல்களைக் […]

Read more

பூமியின் பாடல்கள்

பூமியின் பாடல்கள் (வட கிழக்கு இந்தியக் கதைகள்), கைலாஷ் சி. பரல், தமிழில் சுப்பிரபாரதி மணி, சாகித்ய அகாடமி, பக். 204, விலை 140ரூ. வடகிழக்கு மாநிலங்களின், 16 கதைகளை தமிழில் மொழிபெயர்த்து தொகுக்கப்பட்ட நூல் இது. பதிப்பாசிரியர்: கைலாஷ். சி.பரல் திரட்டிய, 15 எழுத்தாளர்களின் கதைகளை, தமிழாக்கம் செய்திருப்பவர் சுப்பிரபாரதி மணி. அசாம், மணிப்பூரி, மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து பிரதேச, 16 கதைகளில், சில நெடுங்கதைகள், பல் வகையான மையப் பொருள்களில், அவரவருக்கே உரித்தான நடையில் படைத்தவற்றில், சில கருத்துமிக்க அழுத்தமான […]

Read more

நினைவில் நின்றவை

நினைவில் நின்றவை, கே. சிவகாமிநாதன், கலைஞன் பதிப்பகம், பக். 192, விலை 180ரூ. அரசு துறையான ஆவினில், மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்ற கே. சிவகாமிநாதன், தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ஒரு அரசு அதிகாரியாக, அரசியல் தலைவர்கள், வி.ஐ.பி.,க்கள் என பலரிடமும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்து இருந்திருக்கிறது. ஒரு தலைமுறைக்கு முன்பு நடந்த பல வரலாற்று தகவல்களையும், சுவையாகக் கூறியுள்ளார். விருதுநகரைச் சேர்ந்த அவர், தனது சொந்த ஊரில் இருந்து, நினைவுகளை தொடங்கியுள்ளார். சாதாரண கிராமமாக இருந்த […]

Read more

நனைந்த நதிகள்

நனைந்த நதிகள், கவிஞர் தமிழ்தாசன், காவ்யா பதிப்பகம், பக். 120, விலை 100ரூ. நனைந்த நதிகள் புத்தகம் முழுவதும் கவிதை துளிகளை தெளித்திருக்கிறார் கவிஞர் தமிழ்தாசன். ரத்தத் துளிகளால் எழுதப்பட்டது நம் சுதந்திர இந்திய வரலாறு தூசி படர்ந்து கிடக்கிறது என இது எங்கள் தேசம் என்ற தலைப்பில்(பக். 57) அவர் எழுதியுள்ள கவிதைகள் நடந்தவற்றை படம் பிடிக்கின்றன. சொல்லவந்த கருத்தை சுருங்கச் சொல்லி இருக்கும் முயற்சி பாராட்டுதற்குரியது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம், ரமணன், கவிதா பப்ளிகேஷன், பக். 264, விலை 800ரூ. இசையரசியின் வாழ்க்கைப் பயணம் இசையரசி எம்.எஸ்.,ஸின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே பலரால் எழுதப்பட்டு வெளிவந்திருந்தாலும் அவரது நூற்றாண்டை ஒட்டி வெளியாகிஇருக்கும் இந்த நூல் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. எம்.எஸ்.,ஸின் வாழ்க்கையின் உன்னத தருணங்களை மிகுந்த உணர்ச்சிகரமான நடையில் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். எம்.எஸ்., ஆறு வயது குழந்தையாக இருந்தபோதே, ‘ஆனந்தாரா’ என்ற மராட்டியப் பாடல் அருமையாக நம் முன்னால் பாடியதிலிருந்து, அவரது வாழ்நாள் இறுதி வரை எதிர்பாராத பல சம்பவங்களே […]

Read more

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை

கால்டுவெல்லின் தமிழ்க்கொடை, இரா. காமராசு, சாகித்ய அகாடமி, பக். 240, விலை 180ரூ. கால்டுவெல் தொண்டு தமிழின் கல்வெட்டு திராவிட மொழி இயலின் தந்தை ராபர்ட் கால்டுவெல். 202 ஆண்டுகளுக்கு முன் அயர்லாந்தில் பிறந்து, கிறிஸ்தவ சமயப் பணியாளராக, 1938ல் சென்னை வந்தார். மூன்று ஆண்டுகளில் தமிழைக் கற்றுத் தேர்ந்தார். வின் சுலோ, போப், பவர், ஆண்டர்சன் முதலான தமிழ் அறிஞருடன் இணைந்தார். 400 மைல் தொலைவு திருநெல்வேலிக்கு, சென்னையில்இருந்து நடந்தே சென்றார். தமிழ் மக்களை நேரில் கண்டு, அவரது மொழி, கலை, பண்பாடுகளை […]

Read more
1 131 132 133 134 135 240