தேவ அமுதம்

தேவ அமுதம், இரா. யுனி ஜோசப், மாவிகா அச்சகம், பக். 225, விலை 100ரூ. இரா. யுனிஜோசப் பக்தி பாடலாசிரியர், ஆலயத்தின் பாடகர் குழு தலைவராக உள்ளார். தேவ அமுதம் என்னும் இந்த இசை தொகுப்பின் வழியாக, திருவழிப்பாட்டு பாடல்களை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில் 14 தலைப்புகளில் 303 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கத்தோலிக்க கிறிஸ்தவ வழிபாட்டிற்கு உகந்த நூல். நன்றி: தினமலர், 2/10/2016

Read more

நவரத்தினங்கள்

நவரத்தினங்கள், லில்லி சகாதேவன், சாந்தா பப்ளிஷர்ஸ், பக். 128, விலை 80ரூ. இன்றைய கல்வி முறை குறித்த அனைவரது எண்ணங்களையும் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பதிவு செய்கிறது இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —-   மனசுக்கு ஒரு செக்போஸ்ட், க. கார்த்திகேயன், ஜி. சிவராமன், நர்மதா பதிப்பகம், பக். 144, விலை 70ரூ. லட்சியம், உழைப்பு, அதற்கு தேர்ந்த முறை, அவை அழைத்துச் செல்லும் வாழ்விற்கு இந்த செக்போஸ்ட் தடையல்ல வழிகாட்டி. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை

ஆளுமை மலர்ச்சிக்கு ஆன்ம பரிசீலனை, டி.ராம்பாபு, நர்மதா பதிப்பகம், பக். 200, விலை 100ரூ. இன்றைய இளைய தலைமுறைக்கு, எச்சரிக்கையாக, செய்தியாகவுள்ள பல விஷயங்களின் தொகுப்பு இந்நூல். நன்றி: தினமலர், 2/10/2016   —- வெளிநாட்டு கல்வி வழிகாட்டி, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 464, விலை 350ரூ. எந்த கல்வியை, எந்த நாட்டில் பயிலலாம் என்பதை விளக்கி, உலக நாடுகளில் கல்வி பயில வழிகாட்டியாக அமையும் நூல் இது. நன்றி: தினமலர், 2/10/2016

Read more

சாஸ்திரங்கள்

சாஸ்திரங்கள் (பாகம் 2), க. கோபி கிருஷ்ணன், பொன் பதிப்பகம்,பக். 80, விலை 50ரூ. முயற்சிகளில் வெற்றியடைந்து வாழவில் வளம் பெற இந்நூலில் உள்ள சாஸ்திரங்கள் ஊக்க விசைகளாக உள்ளன நன்றி: தினமலர், 2-10-2016.   —- தமிழர் வாழ்வு நெறிக் கருவூலம், அ.சா.குருசாமி, நர்மதா வெளியீடு, விலை 50ரூ. ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி ஆகிய நீதி நூல்களின் மூலமும், விளக்கமும் அடங்கிய புத்தகம். நன்றி; தினத்தந்தி, 14/9/2016.

Read more

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள்

இதய ஒலி என் வாழ்க்கை அனுபவங்கள், பழனி. ஜி. பெரியசாமி, வானதி பதிப்பகம், பக். 352, விலை 350ரூ. கல்லும் முள்ளும் நிறைந்த கடினப்பாதையில் தொடங்கி, நிறைந்த முன்னேற்றத்தை அடைந்த தொழிலதிபர் பழனி.ஜி.பெரியசாமி, தன் அனுபவங்களை இந்த நூலில் பகிர்ந்து கொள்கிறார். சிலம்பொலி செல்லப்பனாரின் மாணவரான பெரியசாமி, அமெரிக்காவுக்கு மேற்படிப்பிற்காக சென்ற முதல் தலைமுறை இந்தியர் ஆக செல்லும் முன், அங்கு செல்ல தன் மாமனார் தயங்கியதை சுட்டிக்காட்டியிருப்பது, அருமை. ஆனாலும் தன் மனைவி அதை மீறி அனுப்ப முன்வந்தது, தமிழக குடும்பங்களில் உள்ள, […]

Read more

குமரித் தமிழர் தொல்காப்பியர்

குமரித் தமிழர் தொல்காப்பியர், சி. ஞானாமிர்தம், முதற்சங்கு பதிப்பகம், விலை 100ரூ. அகத்தியம் முதல் இலக்கண நூல் இன்று அகப்படவில்லை. எனவே, தமிழின் முதல் இலக்கண நூலானது தொல்காப்பியம். அகத்தியரின், 12 மாணாக்கரில் தலைமை சான்றவர் தொல்காப்பியர். இவரது இடம், காலம் பற்றிய வரலாறு, ஆய்வுக்கு உரியதாகவே உள்ளது. மதுரையில், நிலந்தரு திருவின்பாண்டியன் அவையில், அதங்கோட்டு ஆசான் தலைமையில், ‘தொல்காப்பியர் அரங்கேற்றம் செய்தார். அதனால், ‘அதங்கோடு’ பகுதியில் வாழ்ந்தவர். ‘அதங்கோட்டு ஆசான்’ என்றும், ‘காப்பிக்காடு’ என்ற ஊரில், தொல்காப்பியர் பிறந்தார் என்றும் இந்த நூல் […]

Read more

கம்பதாசன் படைப்பாளுமை

கம்பதாசன் படைப்பாளுமை, ஆர். சம்பத், சாகித்ய அகாடமி, பக். 224, விலை 335ரூ. கம்பனை காட்டும் கவிஞர். இவர் கம்பதாசர் அல்லர்; கம்பரே’ என்று, ரசிகமணி டி.கே.சி.,யால் புகழப் பெற்ற கம்பதாசன் தமிழின் பெருங்கவிஞர்; திரைப்படப் பாடலாசிரியர்; நாடக நடிகர்; திரைப்படக் கலைஞர்; சிறுகதையாளர்; நாவலாசிரியர்; இதழாசிரியர் போன்ற பன்முக ஆளுமையாளர். மகாகவி பாரதிக்குப் பின், தமிழகத்தில் தோன்றி, கவிதையை வளம் செய்த ஆற்றல் மிகுந்த சிறந்த கவிஞர்களுள், கம்பதாசன் குறிப்பிடத்தகுந்தவர். பாரதி மரபினைப் பின்பற்றிப் படைப்புகளைப் படைத்தாலும், தனக்கென்று ஓர் இலக்கிய மரபினை […]

Read more

வாசலுக்கு வரும் நேசக்கரம்

வாசலுக்கு வரும் நேசக்கரம், முனைவர் இளசை சுந்தரம், விஜயா பதிப்பகம், பக். 104, விலை 70ரூ. எழுத்தாளரும், பேச்சாளருமான இளசை சுந்தரத்தின் சிந்தனையில் உருவான, 15 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. கட்டுரையில் கருத்து சொல்லும் வேளையில், அதனோடு நகைச்சுவையை கலந்து கலகலப்பாக்குவது இவரது பாணி. அன்றாடம் நாம் சந்திக்கும் வாழ்வியல் சவால்கள், அதற்கான தீர்வுகள், போகிற போக்கில் எளிதாய் எப்படி இவற்றை எதிர்கொள்வது என, எளிமை சொற்களில் தந்திருக்கிறார். தன் கருத்திற்கு கூட்டு சேர்க்க, குட்டி, குட்டி கதைகளையும் கட்டுரைகளில் கலந்து இருக்கிறார். […]

Read more

அப்துல் கலாம்

அப்துல் கலாம், வரலொட்டி ரங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 280, விலை 200ரூ. சிறகுகள் தந்த கனவு நாயகன் அப்துல் கலாம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த கனவு நாயகர் குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களை கோர்வையாக, படிக்க அலுப்பு தட்டாத வகையில், 280 பக்கங்களில் விவரித்துள்ளார் வரலொட்டி ரெங்கசாமி. ‘காந்தி காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என்று ஒரு தலைமுறை பெருமை பேசியது என்றால், ‘நாங்கள் இவர் காலத்தில் வாழ்ந்தவர்கள்’ என, இன்னொரு […]

Read more

நம்பிக்கை நாட்காட்டி

நம்பிக்கை நாட்காட்டி, முனைவர் நா. சங்கரராமன், விஜயா பதிப்பகம், பக்., 120, விலை 80ரூ. என் பெயர் நம்பிக்கை அனுபவங்கள் ஒவ்வொன்றும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்த அனுபவங்களே நம்முடைய வாழ்விற்கான அர்த்தங்கள். எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டும் என்றால், நம்முடைய நிகழ்கால வாழ்க்கை சிறப்பாகவும், ரசனையோடும் இருத்தல் அவசியமாகிறது என்பதை படைப்பின் மூலம் உணர்ந்து, மற்றவர்களையும் வாசிப்பின் மூலம் உணர வைத்திருக்கிறார் நூலாசிரியர் சங்கரராமன். மொத்தம், 48 தலைப்புகளில் பக்கத்திற்கு பக்கம் சிந்திக்க வைத்திருக்கிறார். தலைப்புகளின் துவக்கமும், முடிவிலும் ஒரு […]

Read more
1 132 133 134 135 136 240