விதைக்குள் ஒரு விருட்சம்

விதைக்குள் ஒரு விருட்சம், புலவர் அ. செல்வராசு, டாக்டர் வ.செ. நடராசன் ஆதிபராசக்தி கிளினிக், பக். 112, விலை 120ரூ. இந்தியாவில் மூப்பியல் மருத்துவ துறை, முதன் முதலில் சென்னை அரசு மருத்துவமனையில்தான், 1978ல் துவக்கப்பட்டது. இந்தியவிலேயே முதன்முறையாக, டாக்டர் வ.செ. நடராஜன் தான் முதன் முதலில் மூபபியல் மருத்துவ துறையில் மேற்படிப்பு முடித்தவர். லண்டனில் சௌத் தாம்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் நடராஜன். முதலில் வெளி நோயாளிகள் பிரிவாக துவங்கப்பட்டு, 1988ல் படுக்கை வசதிகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, 2014ல் மண்டல முதியோர் […]

Read more

இனியவளே

இனியவளே, என்.சி.மோகன்தாஸ், கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 208, விலை 130ரூ. ‘இனியவளே வா… கால் சிலம்புகள் கண்ணகியிடமே இருக்கட்டும். கானல் வரிகள் கனவிலும் வேண்டாம். நாம் மூவரும் இணைந்து, இங்கே சிலப்பதிகாரத்தைத் திருத்தி எழுதுவோம்’ என்று சொல்லும் மோகன்தாஸ், ஒரு அருமையான முக்கோணக் காதல் கதையை தந்திருக்கிறார். கோபியின் காதலி யாமினி. இருவரும் வேளாங்கண்ணிக்கு, சுற்றுலா செல்கின்றனர். ஒரு மழைநாளில் அவர்கள் முதலிரவு. இடி எனும் மேளதாளத்தோடு, மின்னல் தெறிக்கும் மத்தாப்போடு, காற்று எனும் சாமரத்தோடு, மழை எனும் அட்சதையோடு அங்கே நடந்து முடிகிறது. […]

Read more

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!

டாக்டர் புரட்சித் தலைவி அம்மா!, பொறியாளர் எஸ்.டி.எஸ்.செல்வம், போர்வாள் பதிப்பகம், பக். 192, விலை 150ரூ. முதல்வர் ஜெயலலிதாவின் வரலாற்றுடன், அவர் முதல்வராக நிறைவேற்றிய சாதனைகளையும் சுருக்கமாக சொல்வது இந்த நூல். ‘இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி’ எனும் அந்நாளைய ஆங்கில வார இதழில், ஜெயலலிதாவின் கட்டுரை வெளியானது முதல், திரைப்படங்களில் நடித்தது, அவரின் மொழிப்புலமை, பேச்சாற்றல், அரசியலுக்கேற்ப தன்னை தயார்படுத்திக்கொண்டது என, ஜெயலலிதாவின் வாழ்க்கை சுவடுகளை எளிமையான நடையில் தந்துள்ளார், நூலாசிரியர். ஆணுக்கு பெண் சமம் என பேசப்படும் இந்த காலத்திலும், ஆணாதிக்கமே மிஞ்சியுள்ள நிலையில், […]

Read more

யுகாந்தா

யுகாந்தா, மராத்தி மூலம் ஜராவதி கார்வே, தமிழில் அழகிய சிங்கர், ஓரியன் பதிப்பகம். இவர்களைப்போல் பெண்கள் வாழக்கூடாது! ஜராவதி கார்வே, மராத்தியில் எழுதி ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளில் மொழி பெயர்ப்பாகி உள்ள, ‘யுகாந்தா’ என்ற நூலை, சமீபத்தில் படித்தேன். சாகித்ய அகாடமி விருது பெற்ற அந்த நூலை, தமிழில் நானும் மொழி பெயர்த்துள்ளேன். ஓரியன் பதிப்பகம் வெளியிட்டு உள்ளது. மகாபாரதம், ராமாயணம் இரண்டும் இந்தியர்களின் மாபெரும் காப்பியங்கள். இந்த இரண்டிலும் வரும், பெண் கதாபாத்திரங்களைப் பற்றியதுதான், ‘யுகாந்தா’. இரு காப்பியங்களில் வரும் பெண்களின் […]

Read more

நடிப்பு

நடிப்பு (கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு பண்டுவம்), மு. இராமசுவாமி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 161, விலை 145ரூ. தமிழ் நவீன நாடகத் துறையில் தவிர்க்க முடியாத பெயர், மு. இராமசுவாமி. தான் அவ்வப்போது, அங்கங்கே எழுதிய சற்றே நீண்ட குறிப்புகளைத் தொகுத்துப் புத்தகமாக்கியிருக்கிறார். வெற்றுக் குறிப்புகள் அல்ல. அத்தனையும் சுவாரசியம்! ஈ.வெ.ரா., தனிநாயக அடிகள் போன்ற ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள், நாடகம் தொடர்பான வரலாறு- நடப்புப் போக்குகள், நாடக ஆக்கம் பற்றிய அனுபவங்கள், தொட்டுக்கொள்ள கொஞ்சம் சினிமா […]

Read more

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்

லஞ்சமும் சட்ட நடைமுறைகளும், க. விஜயகுமார், விஜயா பதிப்பகம், பக். 96, விலை 60ரூ. லஞ்சம் எனும் அரக்கன் இந்தியாவில் தீர்க்க முடியாத பிரச்னையாக பயமுறுத்துவது லஞ்சமும், ஊழலும்தான். உண்மையில் லஞ்சம் என்பது தீர்க்க முடியாத பிரச்னையா, இதற்குக் காரணம் அரசும், அரசு சார்ந்த நிர்வாக அமைப்புகள் மட்டும்தானா? மக்களுக்க இதில் எந்தவிதமான பங்கும் இல்லையா எனப் பல கேள்விகள் எழுகின்றன. இப்படிப் பல கேள்விகளுக்கான விளக்கப் புத்தகமாக வெளிவந்துள்ளது க. விஜயகுமார் எழுதியிருக்கும் ‘லஞ்சமும் சட்ட நடைமுறைகளும்’ என்ற இந்தப் புத்தகம். லஞ்சம் […]

Read more

வறட்சியிலும் வளமை

வறட்சியிலும் வளமை, ஆர்.எஸ். நாராயணன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 127, விலை 100ரூ. தமிழகத்தில் ஒரு காலத்தில், புஞ்சை பயிர்களுக்கு என்று ஒரு தனி இடம் இருந்தது. நெல், வாழை, கரும்பு போன்றவற்றை எல்லா இடங்களிலும் பயிர் செய்ய முடியாத, பாசன வசதி இல்லாத சூழலில், புஞ்சை பயிர்களான தானிய வகைகள் பெருமளவு விவசாயிகளுக்கு கைகொடுத்து வந்தன. குறைவான தண்ணீரில், கம்பு, கேழ்வரகு, இவற்றுடன் சிறு தானியங்களான வரகு, குதிரை வாலி போன்றவையும் கணிசமாக சாகுபடி செய்யப்பட்டன. ஆனால், […]

Read more

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன்

ஆழ்வார்கள் நோக்கில் அரங்கன், கல்யாணி ஸ்ரீதரன், சார்யன் பதிப்பகம், பக். 404, விலை 300ரூ. திருவரங்கம் பெரிய கோவிலின் சிறப்புகளையும், அக்கோவில் குறித்த அனைத்துச் செய்திகளையும் இந்த நூல் தொகுத்துக்கூறுகிறது. திருவரங்கம் செல்வோர், இந்த நூலைப் படித்துவிட்டுச் சென்றால், மிகவும் பயனடைவர். நூலில் திருவரங்கம் கோவிலின் அமைப்பு, மிக விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.(பக். 30-50). ஆழ்வார்கள் காவிரி குறித்துப் பாடியுள்ள பாசுரங்களை மிக விரிவாக விளக்கிக் காட்டுவதும் (பக். 60-68), சோலைகள், பூம்பொழில்களின் விளக்கமும் (பக். 69 -77), ஆழ்வார்களின் பாசுரங்கள் வாயிலாக, அரங்கனின் குணங்களையும், […]

Read more

தலைவலி பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்

தலைவலி பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம், டாக்டர் என். பாலமுருகன், கோகி பதிப்பகம், பக். 72, விலை 200ரூ. தலைவலிக்கான காரணங்களும் அதிகம். தலைவலிகளின் வகைகளும் அதிகம். ‘மைக்ரேன்’ என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலி, ஏனைய தலைவலிகளிலிருந்து எப்படி வேறுபட்டது. ஒற்றை தலைவலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஒற்றை தலைவலியைக் கண்டறியும் சோதனைகள் எவை, அவற்றுக்கான சிகிச்சை முறைகள் எவை என்பன உள்ளிட்ட தகவல்கள், ஆலோசனைகள், அனுபவங்கள் என, அனைத்தையும் அடங்கியது இந்த நுல். தலைக்கு என, தனியே ஒரு தலபுராணம் சிறப்பாக அமைந்திருக்கிறது(பக். 11). […]

Read more

கம்பதாசன்

கம்பதாசன், சிற்பி. பாலசுப்பிரமணியன், சாகித்ய அகாடமி, பக். 144, விலை 50ரூ. கண்கள் குளமாகும் கம்பதாசனின் வாழ்க்கை! உணர்வின் கூர்மையும், கலை வடிக்கும் கனித்திறனும் கொண்டிருந்த கம்பதாசன், சிறுகதை, நாடகம், திரைப்பாடல்கள், கவிதை, குறுங்காவியம் என, பன்முகம் கொண்ட படைப்பாளி. புதுக்கவிதையின் கூறுகளும், வியக்கத்தக்க கற்பனைகளும் புதிய புதிய உவமைகள், உருவங்கள், ஆழ்ந்த சிந்தனைகளுமாக விளங்கிய ஓர் ஆளுமைதான் கம்பதாசன். புரசைவாக்கம், குயப்பேட்டை நகராட்சிப் பள்ளியில், எட்டாம் வகுப்பைத் தாண்டாத, ‘அப்பாவு’ எனும் இயற்பெயர் கொண்ட கம்பதாசன், பெற்றோருக்கு தெரியாமல் நாடக தொழிலில் ஈடுபட்டு, […]

Read more
1 143 144 145 146 147 240