குமரப்பா கலைக்களஞ்சியம்

குமரப்பா கலைக்களஞ்சியம், மா.பா. குருசாமி, மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியீடு. உள்ளூரில் தோல்வியுள்ள ‘தாய்மை பொருளாதாரம்’ மா.பா. குருசாமி எழுதிய ‘குமரப்பா கலைக்களஞ்சியம்‘ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். மதுரை சர்வோதயா இலக்கியப் பண்ணை வெளியிட்டு உள்ளது. எழுத்தாளர் குமாரசாமி, 80 வயது நிரம்பியவர். அவரது 150வது நூல் இது என்பது சிறப்பு அம்சம். ஜே.சி. குமரப்பா காந்தியின் சீடர். தஞ்சையில் பிறந்தவர். 1930களில், பட்டயக் கணக்கர் ஆவதற்கான சி.ஏ. தேர்வில் வெற்றிபெற்றார். லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், ‘இந்திய பொருளாதாரத்தை சுரண்டும் ஐரோப்பிய […]

Read more

இலட்சியப் பெண்டிர்

இலட்சியப் பெண்டிர், தாயம்மாள் அறவாணன், தமிழ்க்கோட்டம், பக். 160, விலை 125ரூ. பெண்களுக்கு மகுடம் சூட்டும் நூல்! சங்க காலத்தில், 45 பெண் புலவர்கள் இருந்தனர். இடைக்காலத்தில், காரைக்கால் அம்மையார், ஆண்டாளுக்குப் பிறகு, பெண்களுக்குக் கல்வி ஏன் மறுக்கப்பட்டது? இதை விரிவாக ஆய்வு செய்து, சாதனை செய்த ஒன்பது பெண்களின் சரித்திரத்தை அழகாகவும், ஆழமாகவும் இந்த நூலில் தந்துள்ளார் நூலாசிரியர், பாராட்டத்தக்கவர். அந்தண விதவைப் பெண்கள், ஆவுடையக்காள், துளசி அம்மாள், சுப்புலட்சுமி அம்மாள், லட்சுமி அம்மாள், செல்வம்மாள் போன்ற, 40க்கும் மேற்பட்ட கவிதாயினிகளை, கலங்கரை […]

Read more

சொலவடைகளும் சொன்னவர்களும்

சொலவடைகளும் சொன்னவர்களும், ச. மாடசாமி, சூரியன் பதிப்பகம், பக். 272, விலை 200ரூ. ஏழ்மையின் செல்வாக்கு! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024759.html பழமொழி என்ற சொல், சொலவடை என, புதுக்கப்பட்டது. நம் பண்பாட்டின் நிலைக்களனாய் உள்ள கிராமங்களில், உழைக்கும் மக்களிடமிருந்து உருவாகும், உன்னத அனுபவங்களில் இருந்து, பட்டை தீட்டப்பட்ட வைர வரிகளே, இந்த சொலவடைகள். வாழ்வியல் அனுபவம், கவித்துவம், நக்கல் மூன்றும் கலந்து இதில் மிளிர்கிறது. நாட்டுப்புற இலக்கியமாய் தெம்மாங்கு, பள்ளு, கும்மி, லாவணி ஏடுகளில் பதிவாகி உள்ளன. வீட்டுப்புற […]

Read more

உணவில் உறையும் வாழ்வியல் அறம்

உணவில் உறையும் வாழ்வியல் அறம், சாவித்திரி கண்ணன், மாணிக்கசுந்தரம் பப்ளிகேஷன்ஸ், பக். 80, விலை 50ரூ. உணவு தேர்வில் நிலவும் அறியாமை உடல் நலன் பேணுதல் குறித்த கவலை, தமிழகத்தில் ஏற்பட துவங்கி உள்ளது. அது பற்றிய சிந்தனை, எழுத்தாகவும், உணவு பரிமாற்ற முகாம்களாகவும், பயிற்சி பட்டறைகளாகவும் வெளிப்பட்டு வருகின்றன. விவாதங்களும் துவங்கி உள்ளன. நலவாழ்வுக்கு அடிப்படை, அறம் நிறைந்த உணவும் சுற்றுச்சூழலும்தான். அவற்றை கிட்டத்தட்ட இழந்த நிலையில்தான் தமிழகம் உள்ளது. இதை பெருகிவரும், நட்சத்திர அந்தஸ்திலான மருத்துவமனைகளின் எண்ணிக்கையை முன் வைத்தே நிரூபித்து […]

Read more

குமரி கண்டமா? சுமேரியமா?

குமரிகண்டமா? சுமேரியமா?, பா. பிரபாகரன், கிழக்கு பதிப்பகம், விலை 150ரூ. தமிழகத்தை நிர்மாணித்த சுமேரியர்கள்! To buy this Tamil book online: http://www.nhm.in/shop/9788184937909.html பா. பிரபாகரன் எழுதிய ‘குமரி கண்டமா? சுமேரியமா?’ என்ற நூலை சமீபத்தில் படித்தேன். கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கோவையில், 2010ல் நடந்த செம்மொழி மாநாட்டில், இது தொடர்பாக அவர் சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையின் நீட்சியாக இந்நூல் அமைந்துள்ளது. தமிழர்கள் எழுதிய நூல்கள் மிகக் குறைவுதான் என, சமஸ்கிருதத்தை ஒப்பிட்டு சில தகவல்களை சொல்கின்றனர். ஆனால், தமிழர்கள் அதிகளவில் நூல்களை […]

Read more

நலவாழ்வின் படிகள் நான்கு

நலவாழ்வின் படிகள் நான்கு (நான்கு நூல்கள்), பேராசிரியர் எம். ராமலிங்கம், விஜயா பதிப்பகம், பக். 264, 152. 232, 264, விலை ரூ. 170, 95, 145, 170. உணவு, உடல், உள்ளம், வாழ்க்கை என, மொத்தம் நான்கு நூல்கள். உணவு- உணவின் அவசியம், பகுதிப் பொருட்கள், உணவில் குற்றமும், உண்பவர் குற்றமும் என, பயனுள்ள கருத்துகளை உள்ளடக்கியது இந்த நூல். உடல்-உடற்பயிற்சி, தூக்கம், ஆகாயம், சூரியன், காற்று, நீர், உணவும், உபவாசமும், மவுனத்தின் மாண்பு ஆகியவை இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள்ளம்- ஏற்றத்திற்குப் […]

Read more

மாற்றம்

மாற்றம், மோ – யான், தமிழில் பயணி, காலச்சுவடு பதிப்பகம், பக். 87, விலை 80ரூ. மாற்றம் என்ற இந்தப் படைப்பு, நாவல் வடிவில் எழுதப்பட்ட சுயசரிதை, நாயகனின் பள்ளிப்பருவ வாழ்க்கையில் துவங்குகிறது கதை. நாயகன் எந்தத் திட்டமிடலும் இல்லாமல் வாழ்க்கையின் போக்கில் பயணித்து, எங்கெங்கோ அலைந்து, இலக்கியவாதியாகி, அவனுடைய கதை சினிமாவாக எடுக்கப்பட்டு, பிரபலமாகி கடைசி அத்தியாயத்தில் அதே கிராமத்துக்கு வந்து சேர்வதுடன், கதை முடிகிறது. நூலின் இடையிடையே பழமொழிகள், தத்துவங்கள் போகிறபோக்கில் இரைந்து கிடக்கின்றன. சீன வழக்குமொழி நடையில் எழுதப்பட்டிருப்பது சுவையாக […]

Read more

சீதாவின் பதி

சீதாவின் பதி, யத்தனபூடி, சுலோசனா ராணி, தமிழில் கவுரி கிருபானந்தன், வானவில் புத்தகாலயம், பக். 312, விலை 250ரூ. இல்லற வட்டத்திற்க வெளியில், ஒரு பெண் சிநேகிதியை தேடிக்கொள்ளும் கணவன்மார்கள், எத்தனை அவஸ்தைகளுக்கு ஆளாகின்றனர் என்பதைச் சொல்லும் நாவல் இது. வித்யாபதி, இந்திரா ஆகியோர், ஒருவரை ஒருவர் நேசிக்கின்றனர். சூழ்நிலையால், பெற்றோர் நிச்சயித்த சீதாவை மணம்புரிகிறான் வித்யாபதி. ஆனால், வித்யாபதியால் இந்திராவை மறக்க முடியவில்லை. இந்திராவாலும் வித்யாபதியை மறக்க முடியவில்லை. சீதா, தான் கணவனின் முதல் காதலைப் பற்றி, திருமணம் ஆன அன்றே தெரிந்து […]

Read more

வந்தே மாதரம்

வந்தே மாதரம் (ஒரு வரலாற்று கண்ணோட்டம்), ஆர்.பி.வி.எஸ். மணியன், வர்ஷன் பிரசுரம், பக். 208, விலை 120ரூ. சுதந்திர போராட்ட காலத்தில், காங்கிரஸ் மேடைகளில் எதிரொலித்த வந்தே மாதரம், மதச்சாயம் பூசப்பட்டு நிறுத்தப்பட்டது. ஆனாலும், பக்கிம் சந்திர சட்டர்ஜியின் ‘வந்தே மாதரத்தின்’ தாக்கம், மற்ற மொழி கவிஞர்களிடம் கொஞ்சமும் குறையவில்லை. வந்தே மாதரத்தின் உள்வாங்கல், தமிழ் கவிஞர்களிடமும், திரை இசைப் பாடல்களிலும் இருப்பதை உணர முடியும். வந்தே மாதரத்தின் வரலாற்றை, சுதந்திர போராட்டத்தின், பின்னி பிணைந்துள்ள அதன் வரலாற்றை விளக்கியுள்ளார். சுதேச இயக்கத்திற்கு வலுகொடுத்த […]

Read more

அம்ருதா

அம்ருதா, திவாகர், பழனியப்பா பிரதர்ஸ், பக். 448, விலை 335ரூ. ஒரு சித்ரா பவுர்ணமியின் அடுத்த பத்து நாளின் நிகழ்வுகளைச் சித்தரித்து குலோத்துங்க சோழனின் வரலாற்றை ஒட்டிய புதினம் இது. என்றாலும் சோழர் காலத்திய முந்தைய வரலாற்று நிகழ்வுகள் பலவும் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. இக்கதை நிகழ்வின் காலம் கி.பி. 1070. கதை நாயகி, அம்தா ஒரு கற்பனை கதாபாத்திரமே. காம்போஜ தேசத்துப் பேரழகி அம்ருதா. தேச ஜாதகத்தின் படி வரவிருக்கும் ஒரு பிரளயத்தையே நிவர்த்திக்கக்கூடிய அவளது சாதகமான ஜாதகத்தின் காரணமாக, சோழ மன்னன் […]

Read more
1 144 145 146 147 148 240