இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!

இந்தியா? இப்படியும்தான் இருக்கிறது!, ப. திருமலை, முன்னேற்ற பதிப்பகம், பக். 192, விலை 130ரூ. தமிழகம் அறிந்த பத்திரிகையாளர் ப. திருமலை எழுதிய அரசியல், பொருளாதாரம், தேசிய பிரச்னைகள் சார்ந்த கட்டுரைகளின் அருமையான தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளில், வெவ்வேறு சூழலில், வெவ்வேறு இதழ்களுக்காக எழுதியவை இவை. ‘நடுங்க வைக்கும் சீனா, நடுக்கத்தில் நாம்’ என, இந்தியா சார்ந்த சர்வதேச பிரச்னையையும் ஆசிரியர் விட்டுவைக்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் தானே என்று நினைத்து நாம் படித்தால், அதில் பல சம்பவங்கள் […]

Read more

மீண்டும் ஒரு மழைக்காலத்தில்

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாரூ, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 194, விலை 210ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024600.html மனிதாபிமானமும், சமூகப் பிரக்ஞையும், சிந்தனைத் தெளிவும் உள்ள சிறந்த, 21 கதைகள். ‘சாமுத்யகா’ என்ற முதல் கதையே தனிச்சிறப்பு வாய்ந்தது. மலர் விட்டு மலர் தாவும் வண்டு போன்ற கதாநாயகன். ஆனால் அவன் அன்பு மனைவியையே, ஒரு மாற்றான் காமப் பார்வை பார்க்கிறான் என்று உணரும் சமயத்தில், அவன் தவறு அவனுக்கு உரைக்கிறது. நடைபாதை வாசிகளை […]

Read more

நான் கண்ட அருட்செல்வர்

நான் கண்ட அருட்செல்வர், முனைவர் ஜி.ஜான் சாமுவேல், ஹோம்லாண்ட் பதிப்பகம், பக். 121, விலை 100ரூ. அருட்செல்வர் என்று அனைவராலும் அழைக்கப்படும் மறைந்த பெகாள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் நினைவை போற்றம் வகையில், தன்னுடன் அவர் கொண்டிருந்த நட்பையும், பொது தொடர்பையும் வெளிப்படுத்தி உள்ளார் நூலாசிரியர். ஆசியிவியல் நிறுவனத்தில் நடந்த, முதல் அனைத்துலக முருகன் மாநாட்டிற்கு, அருட்செல்வர் வழங்கிய ஒத்துழைப்பு முதற்கொண்டு, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில், அவர் கொண்டிருந்த ஈடுபாடு ஒவ்வொன்றும் விளக்கப்பெற்றுள்ளன. அருட்செல்வர் பற்றிய செய்திகளுடன், தமிழ் ஆய்வுச் சிந்தனைகளும், அரிய தமிழ்த் தரவுகளும் […]

Read more

முல்லை மண் – மக்கள் – இலக்கியம்

முல்லை மண் – மக்கள் – இலக்கியம், வாணி அறிவாளன், அருண் அகில் பதிப்பகம், பக். 200, விலை 150ரூ. தமிழகத்தின் ஐவகை திணைகளில், முல்லைத் திணை பற்றிய ஆய்வாக, இந்த நூல் திகழ்கிறது. முல்லை பற்றிய 233 பாடல்கள் பாடிய, 82 புலவர்கள் பட்டியல் இடப்பட்டுள்ளனர். கிரேக்க, லத்தீன் உலக இலக்கியங்களுடன், முல்லைப் பாக்கள் ஒப்பிடப்பட்டுள்ளன. முல்லை மலர்களால் இத்திணைப் பெயர்கள் அமைந்ததும், முல்லைப்பண், முல்லை யாழ் பற்றிய விளக்கமும் தரப்பட்டுளள்ன. கற்பை முல்லையோடு மட்டும் சேர்த்து ‘முல்லை சான்ற கற்பு’ என்பதன் […]

Read more

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம்

அரசர்கள் வளர்த்த ஆன்மிகம், கவுதம நீலாம்பரன், சூரியன் பதிப்பகம், பக். 256, விலை 175ரூ. கோபுரங்களின் வழியே வரலாறு ‘கவிதையின் உட்பொருளாகக் கவிஞரால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் விஷயத்தை கவனிக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆயிரம் காவியங்களைக் கற்பதால் என்ன பலன்’ என்று சொன்னார் மஹாகவி பாரதியார். ஒரே நாளில் ஒன்பது கோவில்கள், பத்துவிதமான பரிகார ஸ்தலங்கள், முக்கோண தரிசனம், நாற்கோணப் பயணம் என்கிற ரீதியில், இப்போது விளம்பரப்படுத்தப்படும் யாத்திரைகளுக்கும், பரபரப்போடு ஒவ்வொரு தலமாக ஏறி இறங்குவோருக்கும் பாரதியின் வரிகளைப் பொருத்திக் கொள்ளலாம். எந்தத் தலத்தையும் முழுமையாகப் […]

Read more

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்

தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள், பொன். வாசுதேவன், டிஸ்கவரி புக் பேலஸ், பக். 488, விலை 400ரூ. புலன் விசாரணையில் தெரியாத புதிர்கள் ‘இரண்டாம் வகுப்பிலேயே பாட்டியிடம் இலக்கணம் படித்தேன்’ என்ற பிரகாஷின் முகப்பு வரிகளுக்குப் பின், தொகுப்பின் கதைகள் துவங்குகின்றன. முப்பத்தியொரு கதைகளைக் கொண்ட இந்தத் தொகுப்பைப் படிக்கும்போது, அதை நம்பித்தான் ஆகவேண்டும். கதையின் இரண்டாம் வாக்கியத்துக்குப் போகும்போதே, வாசகர்கள் எங்கே நின்று, கதை மாந்தர்களைத் தொடரவேண்டும் என, கடிவாளம் கட்டி விடுகிறார் பிரகாஷ். வாசகர்களுக்குத் தான் கடிவாளமே தவிர, கதை மாந்தர்களுக்கு இல்லை. […]

Read more

ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம், தமிழில் கார்த்திகை பாண்டியன், எதிர் பதிப்பகம். ஒரு முகமூடிக்குப் பின்னால் ஜப்பான் மொழியில், ‘யுகுயோ மிசிமா’ எழுதி, ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு, பின் தமிழில், ‘ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்’ என வெளியான நாவலை, சமீபத்தில் படித்தேன். கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த இந்த நாவலை, எதிர் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் ஆண், பெண் என்ற இரு இனங்களுக்கு மட்டுமே அங்கீகாரம் உள்ளது. மூன்றாம் பாலினத்துக்கு உரிய அங்கீகாரம் இல்லை. நாவல் ஆசிரியர் யுகுயோ மிசிமாவுக்கும் இதுபோன்ற பிரச்னை […]

Read more

வேத கணிதம்

வேத கணிதம், அன்பழகன், நோஷன் பிரஸ், பக். 187, விலை 220ரூ. வேத கணிதம் எனப்படும் கணித சிந்தனையில், எளிய முறையில் எண்களின் செயல்பாடுகளை புரிந்து கொள்ள முடிகிறது. கடந்த 30 ஆண்டு காலமாக பிரபலமாக விளங்கி வரும் இந்த சிந்தனைகளையே நூலாசிரியர், ‘வேத கணிதம்’ என்ற தலைப்பில், இந்த நூலில் வழங்கியுள்ளார். ஆங்கிலத்தில் பல புத்தகங்கள் இந்த கருத்துகளை குறிப்பிட்டிருந்தாலும், தமிழில் அவ்வளவாக புத்தகங்கள் அமையவில்லை. அந்த குறையை இந்த புத்தகம் நீக்கி உள்ளது. அதற்கு நூலாசிரியரை பாராட்டலாம். வேத கணித கருத்துகளில் […]

Read more

ரெகுராரத்தம்மா

ரெகுராரத்தம்மா, இரா. இராம் மோகன், இரா. இராம் மோகன் வெளியீடு, பக். 116, விலை 60ரூ. பதினோரு சிறுகதைகள் உள்ள இந்தத் தொகுதியில், பல கதைகள் சிறப்பாக அமைந்துள்ளன. ‘நீ யாதுமாகி நின்றாய் ரமணா’ என்ற கதை முதலிடம் பெறுகிறது. காதல் மனைவியின் கல்வி ஆர்வத்தை மதித்து, அவள் மேற்படிப்பு ஆசை நிறைவேற தாம்பத்ய சுகத்தையே தள்ளி வைக்கிறான், கதையின் நாயகன் ரமணன். பெண் சிசுக் கொலைக்கு எதிராகக் குரல் கொடுத்து, பெண் சிசுவின் பெருமையைப் பேசும் கதை, ‘அபாமிப் பாப்பாவும், அபிராமிப் பாட்டியும்’. […]

Read more

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2)

புதுச்சேரி கோவில்கள்(பாகம் 1, பாகம் 2),  டாக்டர் சி.எஸ். முருகேசன், சங்கர் பதிப்பகம், பக். 672, 440, விலை 550ரூ, 400ரூ. அந்நாளில், வணிகத்தின் பொருட்டு புதுச்சேரிக்கு வரும் கப்பல்கள், சரக்குகளை துறைமுகத்தில் இறக்கிவிட்டு, புதுச்சேரியிலிருந்து பல பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்லும், துறைமுகப் பகுதியை ஒட்டி இருந்த மணற்குளங்களில், குடிநீரைச் சேமித்து வைத்திருப்பர். அந்த நீரை கப்பல்கள் சேகரித்து, தங்கள் பயணத்தை துவங்கும். இந்த மணற்குளங்களுள், விநாயகர் வீற்றிருந்த சிறிய கோவிலை ஒட்டிய மணற்குளமும் ஒன்று. மக்கள் அடையாளத்திற்காக, மணற்குளத்து விநாயகர் என்று அழைக்க […]

Read more
1 146 147 148 149 150 240