சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு

சட்ட சிக்கல் இல்லாத காவல் துறையின் கட்டுப்பாடு இல்லாத மருத்துவ சேவைக்கு, டாக்டர் கு.தங்கமுத்து, ஐ.ஆர்.ஐ.எஸ்.பப்ளிகேசன்ஸ், பக். 328, விலை 300ரூ. உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு ஏற்படும் இன்னல், வழக்குகளை எதிர் கொள்ளும் வழி முறையை விளக்கும் நுால். வழக்குகளில் தீர்வு காணும் முறையும் விளக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மருத்துவருக்கு பயன் தரும் நுாலாகும். – பேராசிரியர் இரா.நாராயணன் நன்றி : தினமலர், 16/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

ஜெய் அனுமன்

ஜெய் அனுமன், பிரபு சங்கர், தாமரை பிரதர்ஸ், பக். 168, விலை 170ரூ. ராம நாமம் பெருமைக்கும், போற்றுதலுக்கும் உரியதைப் போலவே, ராம நாமத்தை உச்சரிக்கும் அனுமனும் போற்றுதலுக்குரியவர். வன வாசத்திற்கு பின் அனுமன் வந்தாலும், அடுத்தடுத்த அவதாரங்களிலும் ராம பக்தனாகவே அனுமன் தொடர்கிறார்; கிருஷ்ணரை புறக்கணிக்கிறார் எப்படி என்பதை கதையோட்டத்துடன் விவரிக்கிறார் ஆசிரியர் பிரபுசங்கர். வீரம், ஆற்றல், மேன்மை, விசுவாசம், நல்லொழுக்கம், மனதாலும் தவறு நினையாத நல்ல குணம் இவையெல்லாம் நினைவு வரும். அது மட்டுமல்ல… சொல்லும் வார்த்தைகளின் இலக்கணமாக திகழ்ந்தவர் என்பதை […]

Read more

நான் தான் கொவிட் 19

நான் தான் கொவிட் 19, பேராசிரியர் ப.க.பொன்னுசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 64, விலை 70ரூ. இது நடந்தது, 1960களில். சளியின் நீர்மத் துகள்களை மூன்று விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். அப்போது, அவை ஒளிரும் வைர கிரீடம் போல மின்னியது. ஆய்வு முடிவில், 1965ல் கொரோனா என்ற பெயரை சூட்டினர். அப்போதிருந்து கொரோனா தொடர்கிறது என்ற ஆய்வை நம் முன் வைக்கிறார் பேராசிரியர் பொன்னுசாமி. இது முழுக்க அறிவியல் விளையாட்டு… மூலக்கூறு, புரதங்களின் தன்மையை புரிந்து கொண்டால் இந்த உண்மை விளங்கும். வைரஸ் தானாக […]

Read more

காலவெளிக் கதைஞர்கள்

காலவெளிக் கதைஞர்கள், தொகுப்பாசிரியர் சுப்பிரமணி இரமேஷ், சாகித்ய அகாடமி, பக். 356, விலை 300ரூ பிரபல எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன், பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், மவுனி, க.நா.சுப்ரமண்யம், லா.ச.ரா., சி.சு. செல்லப்பா, எம்.வி.வெங்கட்ராம், கு.அழகிரிசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், ஜி.நாகராஜன், சுந்தர ராமசாமி, கிருஷ்ணன் நம்பி, ஆர்.சூடாமணி, அசோகமித்திரன், ஆதவன், ஜெயந்தன், கந்தர்வன், கோபிகிருஷ்ணன் ஆகியோரின் கதைகள் பற்றிய பார்வையை வெளிப்படுத்தும், 20 கட்டுரைகள் கொண்ட தொகுப்பு நுால். பல கால கட்டங்களில், நுால், இதழ்களில் வெளியானவை. தமிழ்ச் சிறுகதை வரலாற்றை வெளிப்படுத்தும் மதிப்பீடாக அமைந்துள்ளது நுாலின் முன்னுரை. […]

Read more

அருள்மழை தாராயோ

அருள்மழை தாராயோ, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 216, விலை 220ரூ. இந்த எண்ணம் நமக்கும் அடிக்கடி வரும். கோவிலுக்குள் செல்லும் போது சிலர் சிறப்பு தரிசனம் செல்ல, பலர் விழிபிதுங்கி கூட்ட நெரிசலில் சிக்கி வரிசை நகராதா என ஏங்கிக் கொண்டே செல்வர்.ஆசிரியர் வரலொட்டி ரெங்கசாமிக்கும் இந்த சிந்தனை வந்தது. தாயே… மீனாட்சி… ஒரு நாளாவது நீயா சிறப்பு தரிசனத்துக்கு வழி பண்ண மாட்டியா என, உள்ளுக்குள் கோபமும் சலுகையுமாய் கேட்க, மகனின் அசைவுக்கு இசையும் தாயாய், அர்ச்சகர் வடிவில் வந்து […]

Read more

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை

திருக்குறளின் அறத்துப்பாலுக்குப் புதிய உரை, சுரேஜமீ, மணிமேகலைப் பிரசுரம், பக். 94, விலை 100ரூ. உலக மக்களால் உயர்த்திப் பார்க்கப்படுவது திருக்குறள். மக்களுக்குக் குறள் நெறிகளை எளிதாக உணர்த்தும் நோக்கில் உரை, வார்ப்புரை, சிறுகதைகள் எனப் பலவும் வந்த வண்ணமுள்ளன. செறிந்த செய்யுளின் கருத்தை அதன் பொருள் மாறாமல் வாசிப்புக்கு எளிமைப்படுத்தி வழக்கப்படுவது உரை. குறள்களுக்கான உரைக்கு அப்பாற்பட்டு புதுமைச் சிந்தனைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாறுபட்ட எண்ணத் தெறிப்புகள் பலவும் பயனுள்ள அறிவுரைகளாக விளங்குகின்றன. அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் எனும் முப்பால் அடங்கிய திருக்குறளின் […]

Read more

வீணையடி நீ எனக்கு

வீணையடி நீ எனக்கு, வரலொட்டி ரெங்கசாமி, தாமரை பிரதர்ஸ், பக். 220, விலை 240ரூ. நேற்று கண்ணனைப் பற்றி பாடினீர்கள். இன்று சிவனைப் பற்றி சொல்கிறீர்கள். நீங்கள் எதை வணங்குவீர்கள் என்று சிறுபிள்ளையாய் கேட்கும் மாணவியிடம், அன்னை ராஜராஜேஸ்வரி சொல்லும் எளிமையான விளக்கம், நம்மை உருகச் செய்துவிடும். அன்பு என்பது மதங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம். கர்மக்கணக்கும் அந்த அன்புக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் பரிதவிக்கும் என்பதுதான் கதையோட்டத்தின் சிறப்பு. வழக்கம்போல விறுவிறுப்பான எழுத்தோட்டத்தாலும், எளிமையான கதையின் ஓட்டத்தாலும் கதையோடு பயணிக்க வைக்கிறார் ஆசிரியர் […]

Read more

திருவாய்மொழி

திருவாய்மொழி, பி.கே.வெங்கடேசன், பாதுகா பவனம், பக். 287, விலை 150ரூ. ஆழ்வார்கள் அருளிச் செய்த திருப்பாசுரங்கள் நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். இயலாதோருக்குத் துணை நிற்பது திருவாய்மொழி. இதை அருளியவர் நம்மாழ்வார். இதில் 1,102 பாசுரங்கள் அடங்கியுள்ளன. திவ்யப் பிரபந்தத்திலிருந்து எடுத்து அனைவரும் படித்துப் பயன் பெறும்வகையில் மலிவு பதிப்பாக வெளிவந்துள்ள நூலாகும். இந்நூல், ‘எம்பெருமானால் சொல்லப்பட்ட எம்பெருமானின் புகழ் கூறும் நூல்’ என்று நம்மாழ்வாரால் கூறப்பட்ட பெருமை உடையது. ஓதுபவரது மனத்தை இறைவனிடம் சேர்ப்பிக்கும் அருமை உடையது. திருவாய்மொழியுடன், திவ்யப் பிரபந்தத்தில் ஓதுதற்கு அருமையுடைய […]

Read more

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா

நுரையீரலை வலுப்படுத்தும் யோகா, பி.கிருஷ்ண பாலாஜி, ஸ்ரீபதஞ்சலி மஹரிஷி யோகாலயம் டிரஸ்ட், பக். 48, விலை 100ரூ. நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எளிய யோக முறையை விளக்கும் நுால். கொரோனா போன்ற வைரஸ் நோய்களை தடுக்கும் வழிமுறை என அறிமுகமாகி உள்ளது. வண்ணப் படங்களுடன், யோகா, முத்திரை, தியானம், உணவு முறை என பல விளக்கங்கள் உள்ளன. பயம் களைந்து, வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள உதவும் வகையில் பயிற்சி முறை பற்றி விளக்கம் தரப்பட்டு உள்ளது. நன்றி: தினமலர், 9/8/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

கீர்த்தன மாலை

கீர்த்தன மாலை, எஸ்.வி.ரமணி, மணிமேகலைப் பிரசுரம், பக். 124, விலை 100ரூ. பக்தியில் மனம் லயித்து எழுதப்பட்டுள்ள பாடல்களின் தொகுப்பு நூல். 147 பாடல்கள் உள்ளன. எளிமையாக புரிந்துகொள்ளும் வடிவத்தில் உள்ளன. இசையுடன் பாடி உருக ஏற்றது. இந்த பாடல்களை எழுதிய ரமணி, ஆப்ரிக்க நாடான கென்யா, நைரேபி நகரில் வசிக்கிறார். நாடு கடந்தும், இறை எண்ணத்தில் ததும்பி துதிகளை இயற்றியுள்ளார். பக்தி பரவசத்தில் கனிந்துருகி பாட உதவும் கீதங்கள். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more
1 42 43 44 45 46 240