மனிதர்களைப் படியுங்கள்

மனிதர்களைப் படியுங்கள், த்தலைச் சாத்தன், ஒப்பில்லாள் பதிப்பகம், பக். 76, விலை 85ரூ. ஒவ்வொரு மனிதனிடமும் தனித்த வரலாறு உண்டு. அந்த வரலாறுகளால் இந்தச் சமுதாயத்திற்குப் பயன் ஏற்படலாம். வங்கித் துறையில் பணியாற்றியவர், ஓய்வுக்கு பின் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார்.நிதி நிறுவனம், பங்குச் சந்தை, ஆலயப் பணி, பத்திரிகைப் பணி என துவங்கி, அவற்றில் பார்த்த ஏற்றத்தையும், இறக்கத்தையும் உள்ளது உள்ளபடி தந்துள்ளார். மொழியையும் சிக்கனமாகப் பயன்படுத்தியுள்ளார். – முகிலை ராசபாண்டியன் நன்றி:தினமலர், 20/9/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் […]

Read more

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம்

திரைப்பாடல்களில் சுயமுன்னேற்றம், கமலா கந்தசாமி, அருணா பப்ளிகேஷன்ஸ், பக் 104, விலை 40ரூ. திரைப்படப் பாடலுக்கு என, நிறைய ரசிகர்கள் உண்டு. எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருந்தாலும், காலத்தை வென்று ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பாடல்கள் சிலவே. சுய முன்னேற்ற சிந்தனை தரும் பாடல்கள், கருத்தாழம் மிக்க வரிகள் கொண்ட தத்துவப் பாடல்கள் வழிகாட்டியாக இருந்து வருகின்றன. அத்தகைய பாடல்களை, 45 அத்தியாயங்களாக தொகுத்து, உட்கருத்தை விளக்கி, அதன் சுவையை அறிய வைக்கிறார். நன்றி: தினமலர், 13/9/2020. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன்

சரித்திர நாயகனோடு ஒரு சாமானியன், கே.மகாலிங்கம்,  மூன்றெழுத்து பதிப்பகம், விலைரூ.400. மக்கள் திலகம், புரட்சித் தலைவர் என, புகழப்படும் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சினிமா, அரசியல் வாழ்க்கை சம்பவங்களின் தொகுப்பு.தி.மு.க.,விலிருந்து நீக்கம், மனதை மாற்றிய மூதாட்டிகள், இடைத் தேர்தலும் இரட்டை இலை சின்னமும் உள்ளிட்ட தலைப்புகள், அவரது அரசியல் வாழ்வை படம் பிடிக்கின்றன. அறையில் மது பாட்டில்கள், விரும்பிக் கேட்ட சுறா மீன் குழம்பு, மறக்க முடியாத நகைச்சுவை, பூரியும் பாஸந்தியும், உதவியாளராக ஆசைப்பட்ட தமிழாசிரியர் போன்ற தலைப்புகள் சுவாரசியம் மிக்கவை. அரசியல், சினிமா […]

Read more

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல்

சித்த மருத்துவ போட்டித் தேர்வு வினா விடை தொகுப்பு நூல், டாக்டர் ஒய்.ஆர்.மானக்சா, பக். 1560, விலை 1500ரூ. மருத்துவத் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கு உதவும் வகையில், தயாரிக்கப்பட்டுள்ள பயிற்சி நுால். கேள்வி – பதில் தொகுப்பாக உள்ளது. மத்திய, மாநில அரசு பணிகளில் சேர தேர்வு எழுதுவோருக்கும் உதவும். சுலபமாக பயன்படுத்த வசதியாக மூன்று புத்தகங்களாக தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்த மருத்துவக் குழு தயாரித்துள்ளது. சித்த மருத்துவம் தொடர்பான துல்லிய விபரங்கள், கேள்வி – பதில் வடிவில் உள்ளது. தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் […]

Read more

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும்

கவனக் குறைவுகளும் அவற்றின் தீர்வுகளும், டாக்டர் எம்.பிர்லா பவளம், மணிமேகலைப் பிரசுரம், பக். 192, விலை 160ரூ. மனிதனின் வாழ்க்கையில் கவனம் பெறும் இடத்தைக் கவன வேல் என்னும் தலைப்பில் நுணுக்கமாக ஆய்ந்துள்ள நூல். தலைப்பின் ஆழத்தையும் அகலத்தையும் கனமாக்காமல் எளிமையாக உணர்த்துவதற்கு இசையைத் துணைக்கு அழைத்துள்ளார். எம்.எல்.வசந்தகுமாரி, பி.சுசீலா, இளையராஜா, எம்.எஸ். சுப்புலட்சுமி என்று பல இசைக் கலைஞர்களின் இசை லயத்தை எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். மூன்று பாகங்களாகப் பகுத்து அவற்றில் பதினொரு அத்தியாயங்களை வகுத்துத் தந்துள்ளார். மருத்துவ ஆர்வலர்களை நிச்சயம் கவரும். ஆங்கிலத்தில் […]

Read more

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம்

யோக நித்திரை என்னும் மெஸ்மெரிசம், மறைமலை அடிகள், பாலாஜி பதிப்பகம், பக். 191, விலை 200ரூ. வசிய மந்திரம்’ என்று வாயளவில் பேசப்படும் ஹிப்னாடிசம், மெஸ்மெரிசம் பற்றிய அறிவியலை விளக்கியுள்ள நுால். 100 ஆண்டுகளுக்கு முன், ஞானசாகரம் என்ற மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு. திருமாலின் அறிதுயிலுடன் இதை ஒப்பிடுகிறார். அருள் துாக்கம், இருள் துாக்கம் என்றும் வகைப்படுத்துகிறார். மூச்சுப் பயிற்சி, அமைதி காத்தல், நரம்புகளை இளக்கச் செய்தல், நினைவை நிறுத்தல், விரல்களால் உடலில் ஆற்றல் செலுத்தல், சொல்லி சொல்லி அறிதுயிலில் ஆழ்த்தும் […]

Read more

குதிப்பி

குதிப்பி, ம.காமுத்துரை, வெளியீடு, டிஸ்கவரி புக் பேலஸ், விலை: ரூ.400/- அதிக அளவில் இலக்கியக்கவனம் பெறாமல் இருந்த நாவிதர்கள், சோழியர்கள், தூய்மைப் பணியாளர்கள், வண்ணார்கள், நாகசுரக் கலைஞர்கள் குறித்து சமீப காலங்களில் காத்திரமான படைப்புகள் தமிழில் வெளிவருகின்றன. அவை வாசக கவனத்தையும் குவித்திருக்கின்றன. அவற்றின் தொடர்ச்சியாகத்தான், சமையல் கலைஞர்களின் வாழ்க்கையைப் பேசும் ‘குதிப்பி’ நாவலையும் பார்க்க வேண்டும். சாரதி என்ற சமையல்காரரின் குவாட்டர் பாட்டில் மூடித் திறப்பில் நாவல் தொடங்குகிறது. சாரதியின் மகன் சரவணன் குவாட்டர் பாட்டிலைத் தூக்கி வெளியே எறிவதில் நாவல் முடிவடைகிறது. […]

Read more

நிழல்களின் உரையாடல்

நிழல்களின் உரையாடல்; ஆசிரியர்,மார்த்தா த்ராபா, தமிழில்: அமரந்த்தா, காலக்குறி – யாழ் வெளியீடு, விலை: ரூ.250. ஐந்து ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஒரு வீட்டில் சந்தித்துக்கொள்ளும் இரண்டு பெண்களின் உரையாடல்தான் ‘நிழல்களின் உரையாடல்’ நாவல். உருகுவே நாட்டில் மோன்தேவீதேயோ நகரத்தில் புகழ்பெற்ற முன்னாள் நாடக நடிகை ஐரீனுக்கும், அவளைவிட இளையவளுமான தொலோரெஸுக்கும் நடக்கும் உரையாடல் அது. இரண்டு பெண்களுக்குள் நடக்கும் உரையாடல், இரண்டு பெண்களும் உரையாடலின் இடையில் தங்கள் மனதில் அசைபோடும் எண்ணங்கள், கதையைக் கூறும் மூன்றாவது குரல் என்று மாறி மாறி வெளிப்பட்டு, […]

Read more

எண்பதுகளின் தமிழ் சினிமா

எண்பதுகளின் தமிழ் சினிமா; ஸ்டாலின் ராஜாங்கம், நீலம் வெளியீடு, விலை: ரூ.150. எண்பதுகளில் வெளியான தமிழ் சினிமாக்களைச் சமூக, அரசியல் கண்ணோட்டத்தோடு அணுகியிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கத்தின் ‘எண்பதுகளின் தமிழ் சினிமா: திரைப்படங்களின் ஊடான தமிழ்ச் சமூக வரலாறு’ என்ற புத்தகம் ஒரு முக்கியமான வரவு. எண்பதுகளில் வெளியான சினிமாக்கள் என்னென்ன விஷயங்களைக் கையாண்டன, சமூகங்களை – குறிப்பாக, சாதிய உரையாடல்களை – சினிமாக்கள் எப்படிப் பிரதிபலித்தன, சினிமாக்களைச் சமூகங்கள் எப்படி உள்வாங்கிக்கொண்டன என்று சமூகத்துடன் திரைப் பிரதிகள் நிகழ்த்திய ஊடாட்டங்களை விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது […]

Read more

ஐம்பேரியற்கை

ஐம்பேரியற்கை; மாற்கு, தமிழினி வெளியீடு, விலை: ரூ.300/- 2018-ல் வெளிவந்த இந்நாவல் நல்லூர் என்ற கற்பனைக் கிராமத்தைப் பற்றியது. அரசு உதவிகளைப் பெற மறுக்கிறார்கள் அவ்வூர் மக்கள். உண்மை நிலையறிய விரும்பும் மாவட்ட ஆட்சியர் தனது அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஒரு பயணியாக அந்த ஊருக்குச் செல்கிறார். நல்லூரின் வாழ்க்கைமுறைதான் சரியானது எனத் தெளிந்து அங்கேயே நிரந்தரமாகத் தங்கிவிடுகிறார். மக்கள்விரோத கொள்ளைத் திட்டங்களுக்கு அனுமதியளிக்க மறுத்து, தனது பதவியிலிருந்தும் விலகிவிடுகிறார். மக்களுக்குத் தனது பதவியால் ஏதாவது நல்ல காரியங்களைச் செய்ய முடியும் என்று உண்மையாகவே நம்பி, […]

Read more
1 43 44 45 46 47 240