தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2

தமிழ்நாட்டு கொலை வழக்குகள் பாகம் 2, கோமல் அன்பரசன், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 132, விலை 120ரூ. இரண்டாம் பாகமாக இரட்டிப்பு கொலை வழக்குகளுடன் சுடச் சுட வந்துள்ளது, ‘தமிழ்நாட்டு கொலை வழக்குகள்!’ பல நேரங்களில் செய்திகளை விட அதன் பின்னணி ஆச்சரியம், அதிர்ச்சி தரும் என ஆசிரியர் கோமல் அன்பரசன் தன், ‘என்னுரை’யில் குறிப்பிட்டு, உண்மை தன்மை மாறாத கதை படிக்கலாம் என நம்பிக்கை தருகிறார். ஆட்டோ சங்கர், நாவரசு, பிரேமானந்தா, டாக்டர் பிரகாஷ் என முக்கிய வழக்குகளின் […]

Read more

நினைத்ததை நிறைவேற்றலாம்

நினைத்ததை நிறைவேற்றலாம், அ.கருணாகரன், சாகரி பதிப்பகம், பக். 246, விலை 235ரூ. நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற தொடருக்கு ஏற்ப, நுாலாசிரியர் அ.கருணாகரன், அவரது துணைவியார் ச.ஞானசேகரி விளங்கினார் என்பதற்கு இந்நுால் ஓர் எடுத்துக்காட்டு. இவருடைய இரண்டு பெண் குழந்தைகளையும் ஐ.பி.எஸ்., ஆகவும், சிவில் ஜட்ஜாகவும் பதவியில் அமர வைத்து பெருமை கொண்டனர். நுாலில் உள்ள பெற்றோர் கடமைகள், நுாலகப் பயன்பாடு அவசியம், நல்லவர் உறவு நலம் தரும் வரவு, வீட்டின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என, 25 தலைப்புகளில் சிறந்த கருத்துகளை இந்நுால் […]

Read more

நல்கிராமம்

நல்கிராமம், கோ.கமலக்கண்ணன், மணிமேகலைப் பிரசுரம், பக். 416, விலை 250ரூ. இருபத்தோராம் நுாற்றாண்டின் மென்பொருள் பொறியாளர் ஒருவர் பெண் பார்க்க செல்வதாக துவங்கும் கதை, ஆரம்பத்திலேயே வெகு வேகமாக செல்கிறது. புத்தகத்தை எடுத்துவிட்டால், 74ம் அத்தியாயம் வரைக்கும் படிக்க கதையோட்டம் நீரோட்டமாய் அமைந்துள்ளது. ‘பேஸ்புக், சாட்டிங்’ என்று தற்கால மொழியில் தற்காலப் பிரச்னைகளைச் சாதுர்யமாக அணுகுவதுடன், மெல்லிய காதலையும் படம் பிடித்துக் காட்டுகிறது. நாவலாசிரியர் கோ.கமலக்கண்ணனுக்கு இந்த கால பேச்சு மொழி, மிகவும் எளிமையாக வந்திருக்கிறது. கொஞ்சமும் சிரமப்படாமல், கதையை நகர்த்தும் துல்லியத்தை இந்த […]

Read more

மனவெளிப் பறவைகள்

மனவெளிப் பறவைகள், பேராசிரியர் தி.இராசகோபாலன், வானதி பதிப்பகம், பக். 248, விலை 200ரூ. பொற்கால சங்கத் தமிழ் எழுச்சியும், தற்கால சமுதாய வீழ்ச்சியும், எதிர்கால சீர்திருத்த முயற்சியும் கொண்டு தொண்டாற்றும் பேச்சாளர், எழுத்தாளர் பேராசிரியர் தி.இராசகோபாலன். இவரது சிறகடித்த சிந்தனைப் பறவைகள் தடம் பதித்த இதழ்களின் கட்டுரைகள் இந்நுாலில் வலம் வருகின்றன. மாலனின் அணிந்துரை மந்திரச் சாவியாய் நம் மனங்களைத் திறந்து ஆர்வமாய் படிக்க அழைத்துச் செல்கிறது. வாக்களாரின் கடமைகள், பேரிடர் மேலாண்மை, சித்தர்கள், திருமழிசை ஆழ்வார், கபீர்தாசர், அத்திகரி வரதர், பசவேசர், குல்தீப் […]

Read more

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

மாவீரன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவ்வை மு.ரவிக்குமார், ஸ்ரீ ஆனந்த நிலையம், விலை 150ரூ. தன்னந்தனி மனிதராக இருந்து ஆங்கிலேயருக்கு எதிராக, உலகமே வியக்கும் அளவிற்கு ஒரு அரசாங்கத்தையே உருவாக்கி நடத்தி, மகத்தான சாதனை புரிந்தவர் வீர மிகு நேதாஜி! சுதந்திரம் பெற ஒரு லட்சம் வீரர்களைத் திரட்டி பிரிட்டிஷாருடன் போரிட்டு, மணிப்பூர் வழியாக வந்து இரண்டு நகரங்களைப் பிடித்து, பிரிட்டிஷாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சுபாஷ் போஸ்! இந்தியாவின் விடுதலைப் போராட்டத்தில், இந்திய தேசிய ராணுவம் எந்த வகையிலும் ஜப்பானையோ, வேறு நாடுகளையோ […]

Read more

கதை இல்லாதவனின் கதை

கதை இல்லாதவனின் கதை, முனைவர் த.விஷ்ணு குமாரன், சாகித்திய அகாடமி, பக். 544, விலை 400ரூ. மலையாளக் கவிஞர் எம்.என்.பாலுார் எழுதியுள்ள தன் வரலாற்றை அதன் சுவை கெடாமல் தமிழில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் பேராசிரியர் த.விஷ்ணு குமாரன். மலையாளம், ஜெர்மன், ஆங்கிலம் முதலான மொழிகளை நன்கு அறிந்த தமிழ்ப் பேராசிரியர் என்பதால், மொழிபெயர்ப்புஉலகில் குறிப்பிடத்தக்க இடத்தை இவர் பெற்று உள்ளார். மலையாளத்தில் வீட்டை, ‘மனை’ என சொல்வது வழக்கம். மனை என்றால் நாம் கட்டுவது போன்ற அடுக்குமாடி வீட்டையோ அல்லது நான்கு பக்கமும் நடமாடுவதற்கு […]

Read more

அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம்

அயோத்தி தாசர் துவக்கி வைத்த அறப்போராட்டம், பிரேம், எதிர் வெளியீடு, பக். 184, விலை 200ரூ. இந்தப் படைப்பு பண்டிதர் அயோத்தி தாசரை முழுமையாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. அயோத்திதாசர் சமூக விடுதலைக்கான கோட்பாட்டு அடையாளம். பூமியை உழுபவன் சின்ன சாதி, உழைப்புள்ளவர்கள் சிறிய ஜாதி, சோம்பேறிகள் பெரிய ஜாதிகள் என்று சொல்லித்திரிவது இன்றைய வழக்கமாகிவிட்டது என்று சாடியவர் அயோத்திதாசர். பொய் ஜாதி கட்டுகளை ஏன் அகற்றினீரில்லை? என்று தட்டிக் கேட்ட புரட்சிக்காரனை சிறப்பாக அறிமுகப்படுத்தும் நூல். நன்றி: தினமலர், 9/2/20. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

துக்ளக் 50 பொன்விழா மலர்

துக்ளக் 50 பொன்விழா மலர், துக்ளக் வெளியீடு, விலை 150ரூ. துக்ளக் பத்திரிகையும், அரசியலும் இரண்டற கலந்தவை. இதன் ஆசிரியர், மறைந்த சோ பார்வையில் அலசப்பட்டு, அந்தந்த காலகட்டங்களில் ெவளியான கட்டுரைகள், செய்திகள், கார்ட்டூன்கள், கேள்வி – பதில்கள் போன்றவற்றின் குவியல் தான் இந்த புத்தகம். இந்த புத்தகத்தை முதல் அட்டையிலிருந்து கடைசி அட்டை வரை, சில மணி நேரங்கள் புரட்டிப் பார்த்தால், இந்திய அரசியல் மட்டுமின்றி, தமிழக அரசியலையும் தளபாடமாக அறிந்து கொள்ளலாம். அப்போதைய அரசியல் தலைவர்களின் பேச்சுகளை, இந்த நுாலில் இப்போது […]

Read more

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020

நக்கீரன் பொது அறிவு உலகம் இயர்புக் 2020, நக்கீரன், பக். 1120, விலை 160ரூ. தமிழில் நிறைய இயர்புக்ஸ் வெளிவருகின்றன. அவற்றில், நக்கீரன் வெளியிடும் இயர்புக் 2020யும் ஒன்று. தொடர்ந்து, 14 ஆண்டுகளாக இயர்புக்கை இந்த நிறுவனம் வெளியிடுகிறது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வசதிக்காகவும், பொது அறிவுத் தகவல்களை தெரிந்து கொள்வோருக்கும் இந்த நுால் மிகவும் உதவிகரமாக இருக்கும். பொருளாதாரம், அறிவியல் தொழில்நுட்பம், சட்டங்கள், திட்டங்கள், சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளும் ஏராளமாக இடம்பெற்றுள்ளன. விலை மிகவும் குறைவாக இருப்பதால், எளிதாக அனைவராலும் வாங்கி, […]

Read more

பிற்காலச் சோழர் சரித்திரம்

பிற்காலச் சோழர் சரித்திரம், டி.வி.சதாசிவ பண்டாரத்தார், ஜீவா பதிப்பகம், பக். 592, விலை 570ரூ. ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று அறிஞர்கள் கருதுவனவற்றுள் அந்நாட்டின் சரித்திர நுால் சிறந்ததொன்றாம். முன்னோர் ஒழுகிக் காட்டிய உயர்ந்த நெறிகளையும் அன்னார் கொண்டிருந்த சிறந்த பண்பினையும், பின்னோர்க்கு நினைப்பூட்டி அவர்களை நல்வழிப்படுத்துவன நாட்டின் பழைய சரிதங்களே என்லாம் என்று தன் முன்னுரையில் கூறுகிறார் சதாசிவ பண்டாரத்தார். சோழன் விசயாலயன், முதல் ஆதித்த சோழன், முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், அரிஞ்சய சோழன், சுந்தர சோழன், உத்தம […]

Read more
1 48 49 50 51 52 240