தண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை

  தண்ணீர் தேசத்தில் அறிவியல் பார்வை, இந்திரா ஞானசம்பந்தன், காவ்யா, பக். 80, விலை 100ரூ காதல், கடல், மீனவர்கள் சார்ந்து, கவிஞர் வைரமுத்து எழுதிய நாவல், தண்ணீர் தேசம். அது, கடல் பற்றியும், புயல் பற்றியுமான அறிவியலை பேசும். அதில் உள்ள அறிவியல் கூறுகளை ஆராய்ந்து, முனைவர் பட்டம் பெற்ற இந்திரா ஞானசம்பந்தன், வைரமுத்துவின் பேட்டியுடன் இந்த நூலை தொகுத்துள்ளார். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

பாஸ்ராவின் நூலகர்

பாஸ்ராவின் நூலகர், ஜேனெட் வின்டர், அன்பு வாகினி, பாரதி புத்தகாலயம், பக். 32, விலை 30ரூ. ஈராக் நாட்டில் போர் மூண்ட போது அந்த நாட்டின் பாஸ்ரா நகரில், தலைமை நூலகத்தின் தலைமை நூலகராக இருந்தவர் ஆலியா முகமது பேக்கர். நாடே குண்டு மழைக்கிடையில் கருகியது. அந்த நிலையிலும், தானும், தன் நண்பர்களும் இணைந்து, முக்கிய நூல்களை சுமந்து காத்தவர் ஆலியா. குழந்தைகளுக்குள் புத்தக நேசத்தை வளர்க்க, இந்த படக்கதை நூல் உதவும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

கண்ணதாசன் 365

கண்ணதாசன் 365, கண்ணதாசன், கண்ணதாசன் பதிப்பகம், பக். 368, விலை 200ரூ. எளிய மனிதரும் உணர்ந்து, முணுமுணுக்கும் திரைப்பாடல்களை எழுதியவர் கண்ணதாசன். மடைதிறந்த வெள்ளம் போல், தங்குதடையின்றி வழியும் அவர் சொற்பொழிவு. வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ்ந்து, உணர்ந்து வெளிப்படுத்தி, இறவாப்புகழ் படைத்தவர். அவரின் பாடல்கள், நூல்களில் இடம்பெற்ற, வாழ்விற்கு தேவையான நேர்மறை சிந்தனைகளின் தொகுப்பே இந்நூல். நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030094.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் […]

Read more

உதிர்ந்தும் உதிராத

உதிர்ந்தும் உதிராத, எஸ்.வி.வேணுகோபாலன், பாரதி புத்தகாலயம், பக். 135, விலை 135ரூ. மனதிற்கு நெருக்கமானவர்களை, மரணம் பிரிக்கும் போது, பெரும் துயரத்திற்கு ஆளாகிறோம். அழுகையால் துயரத்தை கடக்கிறோம். பிரபலங்களின் மறைவு செய்தி, அவர்கள் வாழ்க்கையை தெரிந்துகொள்ள தூண்டும். அதற்கு விடைகாணும் வகையில் இந்நூல் உள்ளது. மறைந்த அப்துல்கலாம், கிரேஸி மோகன், வாலி, எம்.எஸ்.விஸ்வநாதன், மனோரமா, தென்கச்சி கோ.சுவாமிநாதன், நா.முத்துக்குமார், ஓவியர் கோபுலு போன்ற, 24 ஆளுமைகளின் வாழ்க்கையை தொகுத்து வழங்கி உள்ளார் நூல் ஆசிரியர். தன்னம்பிக்கையின் அடையாளமாக இந்நூல் உள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 […]

Read more

இதிகாசம்

இதிகாசம், எஸ்.திவாகர், கே.நல்லத்தம்பி, காலச்சுவடு, பக். 128, விலை 150ரூ. கன்னடத்தில், 1970களில் எழுதப்பட்டு, பல்வேறு பத்திரிகைகளில் பிரசுரமாகி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் சிறுகதைப் போட்டிகளில், முதல் பரிசு பெற்ற, 9 சிறுகதைகளின் தொகுப்பாக இந்த நூல் உள்ளது. சிறுகதைகளின் நிஜம், கனவு சார்ந்த பொருட்களின் அடிப்படையில், இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

கவிமணி நினைவோடை

கவிமணி நினைவோடை, சுந்தர ராமசாமி, காலச்சுவடு, பக். 80, விலை 100ரூ. சுந்தர ராமசாமி, தான் பழகிய க.நா.சு., சி.சு.செல்லப்பா, கிருஷ்ணன் நம்பி, ஜீவா உள்ளிட்ட இலக்கிய ஆளுமைகளைப் பற்றி, நினைவோடை என்ற பகுதியில் பகிர்ந்து வந்தார். அதன் தொடர்ச்சியாக, நாஞ்சில் நாட்டுக்காரரான, கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையைப் பற்றிய நினைவுகள், இதில் பதியப்பட்டுள்ளன. நன்றி: தினமலர், 19/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030090.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம்

நலம் காக்கும் உணவுக் களஞ்சியம், டாக்டர் கு.கணேசன், காவ்யா, பக். 445, விலை 450ரூ. வாய் ருசிக்காக உண்பது நாகரிகம் என்ற பெயரில் இந்தியப் பாரம்பரிய உணவு மாறி, துரித உணவு வந்த காலத்தில், சரியான உணவைப் புரிந்து கொள்ள இந்த நுால் வழிகாட்டுகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் என்பது மேலும் சிறப்பு.உதாரணமாக மொச்சைப் பயறு நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது என்றாலும், சிறுநீரகப்பிரச்னை கொண்டவர்களுக்கும், வாயுத்தொல்லை கொண்டவர்களுக்கும் நல்லதல்ல: இப்படி ஏராளமான தகவல்கள் புரியும் வகையில் எழுதப்பட்ட நுால். நன்றி: தினமலர், 5/1/20. இந்தப் […]

Read more

மொபைல் ஜர்னலிசம்

மொபைல் ஜர்னலிசம், சைபர் சிம்மன், கிழக்கு பதிப்பகம், பக். 216, விலை 225ரூ. இதழியல் துறையில் புதிதாக ஒரு புயல் வீசிக் கொண்டிருக்கிறது. ‘மொஜோ’ என அழைக்கப்படும், மொபைல் ஜர்னலிசம், இத்துறையில் ஒரு புதிய வாசலை திறந்து வைத்திருக்கிறது. அறிமுகமாகும் புதிய தொழில்நுட்பங்களை தன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் வளைத்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது இதழியல் துறை. இப்போது அந்த வரிசையில், செல்பேசியையும் இத்துறை சேர்த்துக் கொண்டுள்ளது. நம் நாட்டில், செல்பேசி இதழியல் இப்போது தான் முதல் அடி எடுத்து வைக்க துவங்கியிருக்கும் நிலையில், […]

Read more

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள், அந்துமணி, தாமரை பிரதர்ஸ், பக். 312, விலை 280ரூ. நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்தது, ‘தினமலர் – வாரமலர்’ அந்துமணியின், ‘கேள்வி – பதில்’ தொகுப்பு… இதோ புத்தகமாக வெளி வந்துவிட்டது. எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பாக வந்துள்ளது புத்தகம்! ‘நான் எழுதிய கருத்துக்கள், புத்தகத்தின், 312 பக்கங்களிலும் குவிந்து கிடக்கும் போது, எதற்கு என்னுரை, முன்னுரை எல்லாம்…’ என, அந்துமணி அவர் பாணியில் நேரடியாக களத்திற்கு வந்து விடுகிறார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், தன் அணிந்துரையில் குறிப்பிட்டது போல, 50 லட்சத்திற்கும் மேலான […]

Read more

எழுதாப் பயணம்

எழுதாப் பயணம், லக்ஷ்மி பாலகிருஷ்ணன், கனி புக்ஸ், விலை 100ரூ. இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ… இப்படி ஆகிடிச்சே…’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன். இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன் இருக்கும் குழந்தையை வளர்ப்பது எப்படி என்பதைப் பற்றி விளக்குகிறது. ஆசிரியர், அத்தகைய குழந்தையை அணு அணுவாய் ஆராய்ந்து வளர்த்து வருபவர். ‘கழிவிறக்கமே வேண்டாம் எனக்கு… உங்கள் […]

Read more
1 50 51 52 53 54 240