ஏர்வாடியார் கருவூலம்

ஏர்வாடியார் கருவூலம், கவிஞர் இரா.ரவி, வானதி பதிப்பகம், பக். 114, விலை 70ரூ. கலைமாமணி ஏர்வாடியார் எழுத்தாளர், பேச்சாளர், நாடக ஆசிரியர், இதழாசிரியர் என பன்முக ஆற்றலாளர். இந்த நுாலின் ஆசிரியர், ஏர்வாடியாரின் படைப்புலகம் குறித்து இரு பெரும் தகுதிகளை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார். ஒன்று, ஏர்வாடியார் தன் படைப்புகள் மூலம் எவ்வாறு மற்றவர்களை ஈர்த்தார் என்பது. மற்றொன்று, அவர் தன் திறனாய்வுகள் மூலம் எவ்வாறு படைப்பாளிகளை ஊக்குவித்தார் என்பது. சரியாகச் சொன்னால் இந்த நுாலாசிரியரான கவிஞர் ரவியை, அவர் எவ்வாறு ஊக்குவித்தார் […]

Read more

ஆதார் கார்டு A to Z

ஆதார் கார்டு A to Z, வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், பக். 256, விலை 230ரூ. இந்திய மக்களின் ஆதாரத்திற்கான அடையாளமாக இருக்கும், ‘ஆதார்’ அடையாள அட்டை பற்றி, அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் எளிமை தமிழிலும், விளக்கங்களை ஆங்கிலத்திலும் தந்துள்ளார், இதன் ஆசிரியர். ஆதார் அடையாள எண் பெறுவது எப்படி என்பது துவங்கி, ‘ஆன்லைன்’ மற்றும் அலுவலகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது எப்படி என்பது வரை விபரமாக குறிப்பிட்டு உள்ளார். ஆதார் மையங்கள் எங்கெங்கு உள்ளன; தொலைந்து போனால் மீண்டும் பெறுவது எப்படி […]

Read more

மனம் சொல்லுமே மகிழ்ச்சி

மனம் சொல்லுமே மகிழ்ச்சி, ந.ஸ்ரீதர், மணிமேகலைப் பிரசுரம், பக். 96, விலை 80ரூ. அன்றாட நிகழ்வை சுட்டிக்காட்டி, அதன் மூலம் நமக்கு வாழ்க்கையின் புரிதலை, ‘மனம் சொல்லுமே மகிழ்ச்சி’ என்ற நுாலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் வழியே காட்டுகிறார். நாளை நிகழவுள்ள நிகழ்வுக்காக, இன்றுள்ள பொழுதை வாழ வழியில்லாமல் தவிக்கும் மனிதர்களுக்கு, ‘நம் மனதில் உள்ள குப்பைகள்’ என்ற தலைப்பில் புத்துணர்ச்சி மலரச் செய்யும் பொக்கிஷம் இந்நுால் என்றால் மிகையாகாது. நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் […]

Read more

அறம் கூறும் ஆத்திசூடி

அறம் கூறும் ஆத்திசூடி, துரை. சக்திவேல், மணிமேகலைப் பிரசுரம், பக். 160, விலை 100ரூ அறம் செய விரும்பு முதல், சக்கர நெறி நில் வரையிலான அவ்வையின் நீதி போதனைகளை, புனைப்புக் கதை வடிவில் சித்திரக் காட்சிகளுடன் எளிய நடையில் படைத்துள்ள ஆசிரியர் சக்திவேல் பாராட்டிற்குரியவர். கணினி மயமான இன்றைய வாழ்க்கைச் சூழலில், நன்னெறி புகட்டும் அறக் கருத்துகளை  சிறார்களுக்கு வழங்கும் நல்ல வாழ்வியல் நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 2/2/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள்

மதுரை மாவட்ட தகவல் பெட்டகம் ஆயிரம் செய்திகள், எஸ்.கணேசன், சண்முகம் பதிப்பகம், பக். 240, விலை 200ரூ. உலகம் தோன்றியபோதே தமிழகமும் தோன்றியிருக்கக் கூடும் என்கின்றனர். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாறு இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டமும் எப்படி தோன்றியது என்று வரலாறு இருக்கிறது. ஆனால், மதுரை எப்போது தோன்றியது என்று வரலாற்று ஆய்வாளர்களால் கணிக்க முடியவில்லை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய மாவட்டம் என்கின்றனர் சிலர். எனவே, கோவில் மாநகர், அரசியல் நகரம், துாங்கா நகரம், பண்பாட்டு நகரம், கடம்பவனம் என, பல்வேறு […]

Read more

கர்த்தரின் நாமத்தில்

கர்த்தரின் நாமத்தில், சகோதரி லூசி களப்புரா, தமிழில் ஜி.வி.ரமேஷ்குமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 128, விலை 130ரூ. நுாலாசிரியர் ஜி.வி.ரமேஷ்குமாரின் நான்காவது படைப்பு இது. மலையாளத்தில் வெளிவந்த சகோதரி லுாசி களப்புராவின், ‘கர்த்தரின் நாமத்தில்’ என்ற நுாலை தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். கேரள கிறிஸ்துவ மிஷனரிகளில் நடக்கும் அதிகார துஷ்பிரயோகம், ஆணாதிக்க மனநிலை, பெண் அடிமைத்தனம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக துணிச்சலாக குரல் எழுப்பியவர் கன்னியாஸ்திரி லுாசி களப்புரா; அவரின் வாழ்க்கை கதையே இந்த நுால். மலையாளத்தில் அவர் எழுதியதை […]

Read more

சுவேதாச்’வதர உபநிஷத்

சுவேதாச்’வதர உபநிஷத், பேரா.க.மணி, அபயம் பப்ளிஷர்ஸ், பக். 280, விலை 350ரூ. ‘சுவேதம்’ என்றால் வெண்மை; துாய்மையையும் குறிக்கும். ‘அச்வதரம்’ என்பது குதிரை இனம். ஐவகை பிராணன்களையும் – புலன்களையும் குதிரை உவமையால் காட்டி வேதாந்த ரகசியத்தை ப்ரம்மம் மூலம் கூறுகின்றன. அனந்தம், சத்தியம், ஞானம் பற்றிய ரகசிய கேள்விக்கு விடை இப்புத்தகம் என்றால் மிகையாகாது. இறவா நிலைக்கு இட்டுச் செல்லும் வேதாந்த ரகசியம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – த.பாலாஜி நன்றி: தினமலர், 19/1/2020 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

திருக்கேதீச்சரம் சிவபூமி

திருக்கேதீச்சரம் சிவபூமி, மறவன்புலவு க.சச்சிதானந்தன், காந்தகளம், பக்.72, விலை 80ரூ. தல வரலாற்றில் பண்டைய தமிழ்ச் சொற்களின் மூலம் ஆசிரியர் வாசகர்களை வியக்கச் செய்கிறார். கேது முனிவர் வழிபட்ட சிவன் பற்றிய சிறப்பைச் சொல்கிறது இந்நுால். காலக் கணக்கை திருவள்ளுவர் ஆண்டு, தி.பி., – தி.மு., என புதியதாய் விளக்கம் தருகிறார். மகா துவட்டாபுரம் முதல் கத்தோலிக்கர் காலம் வரை வாழ்ந்த மன்னர்கள் மற்றும் இலக்கியங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்கிறது இந்நுால். எளிய விலையில் புராதன சொற்கள் அடங்கிய குறுநுால் எனலாம். நன்றி: தினமலர், […]

Read more

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை

மதுரை வீரன் கதைகள் மறுபார்வை, சு.சண்முகசுந்தரம், காவ்யா, பக்.290, விலை 230ரூ. வீரமும், விவேகமும், அஞ்சா நெஞ்சமும் கொண்டவன் மதுரை வீரன். இவன், காசியிலே பிறந்து பொம்மண சீமையிலே வளர்ந்து, மதுரையிலே தெய்வமாகிறான். மதுரையில் தெய்வமானதால் இவன் மதுரை வீரனாகிறான். சாதாரண மனிதனைப் போலவே மதுரை வீரனுக்கும் காமம், கொள்ளை, கொலை ஆகிய தீய பண்புகள் இருந்துள்ளன. இவனைப் பற்றிய கதையை தற்காலத்தில் பரப்பிய பெருமை திரைப்படத்தையே சாரும். எனினும், மதுரை வீரனைக் கதைப் பாடல்களும், வில்லுப் பாடல்களும், கூத்துப் பாடல்களும், கோலாட்டப் பாடல்களும் […]

Read more

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள்

கலைவாணர் மதுரம் திரையிசைப் பாடல்கள், கவிஞர் பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக்.223, விலை 250ரூ. செல்லமுத்து வருவாய் பணியில் இருந்து ஓய்வு பெற்றாலும், கவிஞர் என்ற எழுத்து பணியில் இருந்து ஓய்வு பெறாமல் தொடர்கிறார். காலத்தால் அழியாத என்.எஸ்.கிருஷ்ணனின் கலையுலக பயணத்தை தெரிந்து கொள்ளும் பொருட்டு அவர் பாடி, நடித்த, 176 பாடல்களையும், மதுரம் அம்மையாருடன் இணைந்து நடித்த, 74 படங்களையும் நுால் வழியே தொகுத்து அளித்ததன் மூலம் சினிமா மீதும், கலைவாணர் மீதும் இருக்கும் அன்பு வெளிப்படுகிறது. கலை வித்தகனின் நடிப்பு, குணம், […]

Read more
1 52 53 54 55 56 240