சங்க கால மக்கள் வாழ்க்கை

சங்க கால மக்கள் வாழ்க்கை, சு.தண்டபாணி, ஜெயலட்சுமி பப்ளிகேஷன்ஸ், பக். 300, விலை 350ரூ. மதுரையில் இருந்து, 13 கி.மீ., தொலைவில் வைகையாற்றின் கரையில் உள்ள கீழடி எனும் இடத்தில் நிகழ்த்தப்பெற்ற அகழ்வாராய்ச்சியில், ஆயிரக்கணக்கான மிகத் தொன்மையான பொருட்கள் கிடைத்து உள்ளன. இவற்றை ஆய்வு செய்து, தொல்பொருள் ஆய்வு செய்வோர் இவை, 2,600 ஆண்டுகள் பழமையானவை என்றும், பல நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும் இப்பொருட்கள் மூலம் தெளிவாக உணர முடிகிறது. சங்க இலக்கியங்கள், 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டு தோன்றியவை. இவை […]

Read more

கந்தபுராணம்

கந்தபுராணம், மூலமும் உரையும், முனைவர் சிவ.சண்முகசுந்தரம், பாரி நிலையம், பக். 1648, விலை 1500ரூ. சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முருகன் தலம் குமரக் கோட்டம். அந்தக் குமரக் கோட்டத்ததில் அர்ச்சகராக விளங்கிய காளத்தியப்ப சிவாச்சாரியரின் மகன் கச்சியப்ப சிவாச்சாரியார். அவர் படைத்த நுால் கந்த புராணம். உற்பத்தி காண்டம், அசுர காண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவ காண்டம், தட்ச காண்டம் என்னும் ஆறு காண்டங்களில், 135 படலங்களை அமைத்து, 10 ஆயிரத்து, 345 பாடல்களை பாடியுள்ளார் கச்சியப்ப சிவாச்சாரியார். […]

Read more

மாலை பூண்ட மலர்

மாலை பூண்ட மலர், கி.வா.ஜகந்நாதன், ஏ.கே.எஸ்.பதிப்பகம், பக். 184, விலை 115ரூ. அபிராபி அந்தாதியில் முதல், 25 பாடல்களுக்கு எழில் உதயம் எனும் பெயரில் கட்டுரைகளை எழுதிக் கொடுத்து நுாலாக வெளியிட்ட நுாலாசிரியர், ‘சங்கரகிருபா’ என்ற மாத இதழில், 26 முதல், 50 வரையிலான பாடல்களுக்கு விளக்கக் கட்டுரைகளை எழுதி, ‘மாலை பூண்ட மலர்’ என்ற பெயரில் இரண்டாம் தொகுதியை, 1970களில் வெளியிட்டுள்ளனர். அத்தொகுப்பே தற்போது மறு அச்சு வடிவம் பெற்றுள்ளது. ‘ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்’ இவ்வாறு மும்மூர்த்திகளும் […]

Read more

வேணுவனவாசம்

வேணுவனவாசம், சுகா, தடம் பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. திருநெல்வேலியின் ஆதி பெயர், வேணுவனம்’ என்பது இந்நுாலின் பெயராய் இடம்பெற்றுள்ளது. கதை மற்றும் கட்டுரை வடிவில், நெல்லையின் வட்டார மொழி நடையிலேயே எழுதியுள்ளார் ஆசிரியர் சுகா. இதில் முத்திரை பதித்துள்ள, ‘ராயல் டாக்கீஸ்’ சிறுகதை, ‘விருட்சம்’ விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறப்புக்குரியது. அந்த கதையின் முதலும், முடிவும் படிக்கும்போதே வலியைத் தருவதாக அமைந்துள்ளது. – மாசிலா ராஜகுரு நன்றி: தினமலர், 23/2/20. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000029578.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம், வேணு சீனிவாசம், அழகு பதிப்பகம், விலை 380ரூ. சிவபெருமான் மதுரையில் நிகழ்த்திய, 64 திருவிளையாடல்களை எளிய உரைநடையில் எல்லாரும் படித்து இன்புறும் வகையில் எழுதி உள்ளார், ஆசிரியர். வேதாரண்யம் என்று இந்நாளில் சொல்லப்படும் திருமறைக்காட்டில் வாழ்ந்த பரஞ்சோதி முனிவர் கனவில் மதுரை மீனாட்சி அம்மனே தோன்றி, சிவபெருமானின் திருவிளையாடல்களை இனிய தமிழில் பாடுக என அருளிட, அவ்வாறே செய்து திருவாலவாய் நகரில் அரங்கேற்றம் செய்யப்பட்டது. சிவனின் முக்கண்களாகப் போற்றப்படுவன பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், கந்த புராணம் ஆகியனவாம். மதுரை காண்டம், […]

Read more

குக்கூவென

குக்கூவென, மு.முருகேஷ், அகநி, பக். 80, விலை 50ரூ. மூன்று வரியில் ஒரு, ‘அடடே’ போட வைக்கும் கவிதையே ஹைக்கூ. ஒரு பக்கம், ஒரு என, உள்ளங்கைக்குள் அடக்கும் வகையில், புதுமையான நூலை வெளியிட்டிருக்கிறார் மு.முருகேஷ். இவரின், ‘விரல் நுனியில் வானம், தோழமையுடன்’ உள்ளிட்ட ஹைக்கூ நூல்களைப் போலவே, இதுவும் கவனிக்கப்படும். நன்றி: தினமலர், 14/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

சில கருத்துகள் சில சிந்தனைகள்

சில கருத்துகள் சில சிந்தனைகள், லட்சுமணப் பெருமாள், தடம் பதிப்பகம், பக். 216, விலை 200ரூ. அரசியல் கட்சிகளின் நுண்ணரசியல், சூழலியல் என, அவ்வப்போதைய சூழல்களைச் சார்ந்து, லட்சுமணபெருமாள், இணையதளத்தில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல். இதில், ஹைட்ரோ கார்பன், லோக் ஆயுக்தாவின் மாநில உரிமை, முத்ரா வங்கி திட்டம் என, பலவற்றை புள்ளி விபரங்களுடன் பேசுகிறது இந்நூல். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பாம்பு இல்லாத பாம்பாட்டி

பாம்பு இல்லாத பாம்பாட்டி, ஸாய் விட்டேகர், அ.குமரேசன், புக்ஸ் பார் சில்ட்ரன், பக்.32, விலை 30ரூ. படிக்கத் தெரியாத வயதில் உள்ள குழந்தைகளுக்கு, கதை கேட்பது மிகவும் பிடித்தமானது. வாசிக்கத் தெரியும் போது, அவர்களை வசீகரிக்கக்கூடியது படக்கதைகள். அந்த வகையில், இந்த ஊர்வன பற்றிய காட்டின் கதை, அவர்களை கவரும். ஒற்றுமை உணர்வையும் வளர்க்கும். நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மகிழம்பூ மணம்

மகிழம்பூ மணம், ஜயந்த் காய்கிணி, கே.நல்லதம்பி, காலச்சுவடு வெளியீடு, பக். 136, விலை 150ரூ. இந்திய மாநிலங்களுக்குள், நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியாக, யாளி அமைப்பின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இலக்கிய பங்களிப்பின் வழியாக இந்த நூல், கன்னடத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பணியை, இந்த நூலில் உள்ள, 11 சிறுகதைகளும் செய்யும், அவை, வாசகர்களின் வாசிப்பை விசாலப்படுத்தும்.   நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

கடல் நிச்சயம் திரும்ப வரும்

கடல் நிச்சயம் திரும்ப வரும், சித்துராஜ் பொன்ராஜ், வம்சி புக்ஸ், பக். 240, விலை 240ரூ. புலம்பெயர் தமிழர்களின் எழுத்துக்கள், தமிழக தமிழர்களின் எழுத்துக்களில் இருந்து மாறுபடுகின்றன. அந்த வகையில் சிங்கப்பூரை தாயகமாகக் கொண்ட சித்துராஜ் பொன்ராஜ் எழுதிய, 18 சிறுகதைகள் இதில் உள்ளன. கதைக்களம் வெவ்வேறாக இருந்தாலும், எல்லா முகங்களிலும் நேசம் அப்பிக்கிடக்கிறது. நன்றி: தினமலர், 17/1/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000030089.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more
1 49 50 51 52 53 240