எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள்

எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள், ஆ.சங்கரசுப்பிரமணியன், சைவ சபை, பக். 75, விலை 80ரூ. அன்றாட வாழ்விற்கு பயன்படும் சட்டங்களை எல்லாரும் அறிந்து கொள்ளும் வகையில் தன், 53 ஆண்டு கால வழக்கறிஞர் தொழிலில் கிடைத்த அனுபவங்களை கொண்டு, எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய சட்டங்கள் என்ற நுாலில் தந்துள்ளார். சட்டங்களை விளக்குவதுடன், அதை வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிட்டு தந்துள்ளது, படிக்க அலுப்பு தட்டாமல் கொண்டு செல்கிறது. இந்து வாரிசுரிமைச் சட்டம், திருமணச் சட்டம், வரதட்சணை தடுப்பு சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து […]

Read more

நவீன சூரிய மின்சக்தி

நவீன சூரிய மின்சக்தி, குன்றில்குமார், அழகு பதிப்பகம், பக். 112, விலை 100ரூ. சூரிய ஒளியை இரண்டு விதமாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க முடியும். ஒளி மின் அழுத்தம் என்பது நேரடியாக சூரிய ஒளியை மின்சாரமாக மாற்றுவதாகும். சூரியக் கதிரை மின்சாரமாக மாற்றும் ஒளிமின் கலங்களைப் பற்றியும், அவற்றை இணைத்து மின் ஆற்றலை வழங்கும் ஆய்வு மற்றும் தொழிலைப் பற்றியும் குறிப்பதாகும். தினமும் தவறாமல் சூரிய ஒளி கிடைத்துக் கொண்டே இருப்பதால், இது வற்றாத ஆற்றலாக விளங்குகிறது என்கிறார் நுாலாசிரியர். இறைவன் நமக்கு அளித்த […]

Read more

அகமும் முகமும்

அகமும் முகமும், வே.தி.அரசு, திலகவதி பதிப்பகம், பக். 132, விலை 100ரூ. காதலர் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டதே இன்பம் என்ற பழைய பாடல், கணவன் – மனைவி இருவரும் ஒத்தக் கருத்துடன் வாழ வேண்டும் என்ற கருத்தை விளக்குகிறது. அகமும், முகமும் என்ற நுால், வே.தி.அரசு தன் சொந்த அனுபவத்தைக் கடிதம் மூலம் நுால் வடிவம் கொடுத்துள்ளார். பிரிந்து வாழும் தன் மனைவியுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்துகிறார். இரு மனம் இணைவது தான் திருமணம். ஒரு மனதில் விரிசல் ஏற்பட்டால், […]

Read more

தீந்தமிழ்த் திறவுகோல்

தீந்தமிழ்த் திறவுகோல், தி.மு.அப்துல்காதர்,வே.பதுமனார், எல்.சி.குப்புசாமி, வேலூர் தமிழ்ச் சங்கம் அறக்கட்டளை, பக். 60, விலை 50ரூ- எல்லா மொழிகளுக்கும் முதன்மையாக அகரம் உள்ளது. அந்த அகர எழுத்தின் அமைப்பே, எல்லா மொழிகளின் அமைப்புக்கும் மூலமாகும். தமிழ் எழுத்து வரிசை அறிதல், எழுத்து வகைகள், ‘ண – ந – ன’ பயன்பாடு அறிதல், ‘ல – ழ – ள, ர – ற’ வேறுபாடு அறிதல், வல்லினம் மிகும் – வல்லினம் மிகா இடங்கள் அறிதல். சொற்பிழை திருத்தம், மரபுப் பெயர்கள் அறிதல், […]

Read more

உனக்கும் ஓர் இடம் உண்டு

உனக்கும் ஓர் இடம் உண்டு. கவி.முருகபாரதி, இனிய நந்தவனம் பதிப்பகம், பக். 80, விலை 100ரூ. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமூக மேம்பாட்டிற்கும், மனித வளம் மிக முக்கியம் என்பதை எடுத்துரைத்துள்ள ஆசிரியர், அந்த வளத்தை சரியாக பயன்படுத்த உரிய பயிற்சிகள் தேவை என்கிறார். பயிற்சித் துறையில், பல ஆண்டு அனுபவம் உள்ள இந்நுாலின் ஆசிரியர், தனக்கே உரிய பாணியில், தன்னம்பிக்கை பற்றியும், வித்தியாசமான சிந்தனை பற்றியும் மிக அழகாகவும், நேர்த்தியாகவும் பல விஷயங்களை எடுத்துரைத்துள்ளார். வெறும் கட்டுரையாக இல்லாமல், பல உதாரணங்கள், மெய் […]

Read more

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம்

மதுவை மறந்து நல்வாழ்வு வாழ்வோம், எழில்மதி, மணிமேகலை பிரசுரம், பக்.140, விலை 55ரூ. குறள் பாக்கள் மூலம் குடியின் தீமைகளை விளக்குகிறார் நுாலாசிரியர். முதன் முதலில் இந்நுால் வெளிவந்த போது, ‘மது விலக்கில் முழு மூச்சுடன் இறங்கியுள்ள நம் மாநில அரசு இந்நுாலை வெளியிடுவது, நாட்டு மக்களுக்கு நலம் பயப்பதாக அமையும்’ என, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் சொன்னார். மது பிரச்னைக்குரிய எல்லா அம்சங்களையும் பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்துள்ளமை பாராட்டிற்கும், சிறப்பிற்கும் உரியது. குடிகாரர்களை இந்த நுால் திருத்தும்; நல்வழி காட்டும் என்பதில் […]

Read more

மூங்கில் கனவுகள்

மூங்கில் கனவுகள், கி.பத்மநாபன், வாசகன் பதிப்பகம், பக்.112, விலை 80ரூ. ந்நுாலில் வெளியாகியுள்ள கவிதை வரிகள், முற்றிலும் பெண்களின் பெருமையையும், பாதுகாப்பையும் வலியுறுத்துகின்றன. ‘அடகு’ என்ற கவிதையில் நடுத்தர குடும்பங்களின் இயலாமைகளை அருமையாகச் சொல்லி, உள்ளத்தை நெகிழ வைக்கிறார். மலைப்பாம்பால் வளைக்கப்பட்ட உயிரினமாய், நடுத்தர குடும்பங்கள் சிக்கி திணறும் அவலத்தை அப்பட்டமாய் உணர்ந்து வெளிப்படுத்தியுள்ளார். இரைப்பை – கருப்பை – இடைவெளி என்கிற சிந்தனை, இதுவரை நாம் படித்த உலக பெருங்கவிஞர்களின் கவிதைகளில் கூட படித்திராத ஒன்று. நன்றி: தினமலர், 28/10/2018. இந்தப் புத்தகத்தை […]

Read more

பேட்டை

பேட்டை, தமிழ்ப்பிரியா, காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட், பக். 352, விலை 390ரூ. கடந்த, 1735ம் ஆண்டு வாக்கில் மதராஸ் ராஜதானியின், 14வது கவர்னர், ‘மாடர்ன் பிட்’ என்பவரது முயற்சியால் பல நெசவாளர் குடும்பங்கள் இடப்பெயர்ச்சி செய்யப்பட்டு, சென்னை யில் இப்போது சிந்தாதிரிப்பேட்டை என அழைக்கப்படும் பகுதியில் குடியமர்த்தப்பட்டன. இந்த நெசவாளர்கள், ‘காலிகோ பிராண்ட்’ வகை துணிகளை கலை நேர்த்தியுடன் நெசவு செய்து தயாரிப்பதில் நிபுணர்கள். இந்தத் துணிக்கு அப்போது லண்டன் மாநகரில் ஏக டிமாண்டு. இந்த நெசவாளர்கள் முதலில் சின்ன சின்ன தறிகளை […]

Read more

தமிழ்ச் சான்றோர்கள்

தமிழ்ச் சான்றோர்கள், ஆர். குழந்தை அருள், செந்தமிழ் பதிப்பகம், பக். 176, விலை 160ரூ. உலக மனித இனத்திற்கே முதல் இனம் தமிழ் இனம். உலக மொழிகளுக்கெல்லாம் முதல் தொன்மையான மொழி நம் தமிழ் மொழி என பெருமைப்பட்டுக் கொண்டாலும், அந்த மொழி வளர்ச்சிக்கு தற்போது கொடுத்துக் கொண்டிருக்கும் வலிமை குறைவே என்றால் அது மிகையாகாது. தமிழ்ச் சான்றோர்கள் எனும் இந்த நுாலில், 21 தமிழ் அறிஞர்களின் வரலாறும், தமிழ் வளர்க்க அவர்கள் எடுத்துக் கொண்ட பெரும் முயற்சியும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மகா வித்வான் […]

Read more

ஒரு மிடறு பச்சைக் குருதி

ஒரு மிடறு பச்சைக் குருதி, கலைச்சித்தன், விஜயா பதிப்பகம், பக். 136, விலை 120ரூ. அடர் காட்டுக்குள் சலசலத்து ஓடும் சிற்றோடை எழில் வாய்ந்தது மட்டுமல்ல, பிரதிபலிக்கும் கண்ணாடி கவிதை என்பர். ‘முற்றிய பாண்டத்தை பிரித்தெடுக்கிறான்… அறுகிறது மண்ணின் தொப்புள்கொடி. வெம்மை தகிக்கும் நாற்சுவருக்குள் சுட்டெடுக்கிறான்… எரிதழல் கொப்பளிக்கும் இசை தின்ற மண் பொதி கடமென்று சமைகிறது’ என்ற கவிதை, இசை தின்ற மண் பொதி கடமென கவிஞரால் உருவாகின்ற அற்புதத்தை விதைக்கிறது. நன்றி: தினமலர், 7/10/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026708.html இந்தப் […]

Read more
1 80 81 82 83 84 240