ஈடேற்றும் சமத்துவம்

ஈடேற்றும் சமத்துவம், பிரபா ஸ்ரீதேவன், வி பாட்டில் பவுண்டேஷன், விலை 200ரூ. நீதிபதி பிரபா ஸ்ரீதேவனின், ‘ஆப் வைன்யார்ட் ஈகுவாலிட்டி’ எனும் ஆங்கில நுாலின் தமிழாக்கம் இந்நுால். தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதியும், வழக்குரைத்தும் வல்லமை பெற்ற நீதியரசி எழுதிய, 20 கட்டுரைகள் அடங்கிய இந்நுாலில், சமூக நீதியை சரியாக உணர்த்தும் திறனையும், எடுத்துரைக்கும் கருத்துகளின் மீதுள்ள நியாயமான போக்கையும் காண முடிகிறது. மூன்றாம் பாலினத்தவரின் கவுரவத்திற்கான உரிமை குறித்து கூறும் நுாலாசிரியர், நேபாள உச்ச நீதிமன்றம் யோக்கர்த்தா கொள்கைகளைப் பயன்படுத்தி, தம் கருத்தை வெளிப்படுத்துகிறார். […]

Read more

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம்

ஓஷோ 1000 ஒரு ஞானியின் தீர்க்க தரிசனம், மு.அப்பாஸ் மந்திரி, நர்மதா பதிப்பகம், பக். 272, விலை 140ரூ. இன்றைய அறிவியல் உலகத்தில், மனித வாழ்க்கை பரபரப்பான சூழ்நிலையோடு ஓடிக் கொண்டிருக்கிறது. மனித எண்ணங்கள் அனைத்தும் தன்னுடைய குடும்பம், வேலையால் வரக்கூடிய வருமானம், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை என்னவாகும் என சிந்தித்துக் கொண்டே ஒவ்வொரு நாளும் நகர்கிறது. என்ன தான் வாழ்க்கையை சிக்கனமாக ஓட்டினாலும், வாழ்க்கையில் என்ன நடக்குமோ அது நடக்கத்தானே போகிறது என நினைப்போருக்கு இந்த நுால் ஒரு அற்புத மருந்து. இந்த […]

Read more

நானும் என் எழுத்தும்

நானும் என் எழுத்தும், தொகுப்பாசிரியர் தீபம் எஸ்.திருமலை, சஞ்சீவியார் பதிப்பகம், பக். 160, விலை 110ரூ. அகர முதல எழுத்து’ என, கடவுளுக்கு நிகராக எழுத்தை போற்றுகிறது, உலக பொது மறையான திருக்குறள்! கூர்மையான ஆயுதத்தை விட பலம் வாய்ந்தது, பேனா முனையால் எழுதும் எழுத்து என்பதை அனைவரும் அறிவோம். உலக மாந்தர் ஒவ்வொருவரது வாழ்க்கை, சிலருக்கு வரலாறாகவும், பலருக்கு செய்தியாக கேட்கவும் படிக்கவும் உதவுவது, எழுத்தாளர்களின் படைப்புகளாகும். நிகழ்வுகளை, நம் கண்முன் சுவாரசியமாக நிறுத்துவதில் துவங்கி, நாளும் பொழுதும் நம் சிந்தனையை துாண்டுவது […]

Read more

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள்

குழந்தைகளுக்கான ஆப்பிரிக்க பழங்கதைகள், மொழிபெயர்ப்பாளர் எம்.பாண்டியராஜன், பக். 100, விலை 99ரூ. குழந்தைகளுக்கான கதைகள் என்று தலைப்பிலேயே தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பெரியவர்களும் விரும்பி படிக்கும் வகையில் தான் இந்த கதைகள் உள்ளன. பல கதைகளில் குழந்தைகளுக்கு தக்க அறிவுரை மற்றும் ஆலோசனையும், பல கதைகளில் நாம் அறிந்திராத தகவல்களும் அழகாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றன. ஆப்பிரிக்க மொழியிலிருந்து ரஷிய மொழியில் பெயர்க்கப்பட்ட இந்த கதைகளை, ஆங்கிலவழி தமிழில் தந்திருக்கிறார் ஊடகவியலாளர் பாண்டியராஜன். குழந்தைகளுக்கான அறிவுத் தேடலில் பல நுால்கள் வெளிவந்தாலும், இந்நுால் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறது. குழந்தைகள் […]

Read more

தாமஸ் பெய்னின் பொது அறிவு

தாமஸ் பெய்னின் பொது அறிவு, மொழியாக்கம் மருத்துவர் ஜீவானந்தம், மேன்மை வெளியீடு, பக். 64, விலை 50ரூ. அமெரிக்க சுதந்திர போராட்ட காலகட்டத்தில், சிந்தனையாளர் தாமஸ் பெய்னால், 1776ம் ஆண்டு இயற்றப்பட்டது இந்நுால். மன்னர் ஆட்சியில் எழுதப்பட்டது. தற்போதைய மக்களாட்சிக்கும் பொருந்துகிறது. இதை தமிழில் அழகாக மொழியாக்கம் செய்துள்ளார், மருத்துவர். ஜீவானந்தம். அமெரிக்காவில், 240 ஆண்டுகளுக்கு முன் இருந்த மன்னராட்சி முறை, அரசியல் சாசனம், காலனி ஆதிக்கம் போன்றவை குறித்து, எளிய நடையில் எழுதப்பட்டுள்ளது. இன்றைய மக்களாட்சிக்கும் இது பொருந்தும் என்பதே நிதர்சனம். அறிவுப்பூர்வமாக […]

Read more

கந்தரலங்காரம் மூலமும் உரையும்

கந்தரலங்காரம் மூலமும் உரையும், கவிஞர் பத்மதேவன், ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ், பக். 120, விலை 120ரூ. கந்தன் என்ற சொல்லுக்கு பற்றுக்கோடானவன் என்பது பொருளாகும். கந்தன் என்றால் ஒன்று சேர்க்கப்பட்டவன். பல்வேறு மலர்களைக் கொண்டு, பூமாலை கட்டி அழகனுக்கு அணிவித்து அழகு செய்வது போல, முருகனின் பல செயல்களைக் கொண்டு செய்யுளால் அலங்காரம் செய்து அருணகிரிநாதரால் பாடப்பட்டது கந்தரலங்காரம். கந்தரலங்காரத்தில் முருகனுடைய அடி முதல், முடி வரை வருணிக்கப்பட்டுள்ளது. யாக்கை நிலையாமை, செல்வம் நிலையாமை, யம பயம் நீங்குதல் போன்ற வாழ்வியல் செய்திகள் விளக்கப்பட்டுள்ளன. […]

Read more

கொ.மா.கோதண்டம் நாவல்கள்

கொ.மா.கோதண்டம் நாவல்கள், காவ்யா, பக். 588, விலை 600ரூ. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக, ஓங்கிக் குரல் கொடுப்பவர் கொ.மா.கோதண்டம். முற்போக்கு எழுத்தாளரான இவர் கதைகள் ரஷ்ய, ஆங்கில, ஹிந்தி, தெலுங்கு, சிங்கள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆரண்ய காண்டம் என்ற இவரது குறிஞ்சிக் கதைகள் முதுகலை படிப்பிற்கு பாடமாக உள்ளது! கொ.மா.கோதண்டம் நாவல்கள் என்ற இந்த நுாலில் மூன்று நாவல்கள் இடம் பெற்றுள்ளன. அவை, ஏலச்சிகரம், குறிஞ்சாம் பூ, ஜன்ம பூமிகள். ஏலச்சிகரம் என்பது தமிழக ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றிய தமிழின் முதல் நாவல்! மலைப்பிரதேசத்தின் […]

Read more

ஆண்டாள்

ஆண்டாள், பேரா.ஜெய.குமார பிள்ளை, சங்கர் பதிப்பகம், பக்.112, விலை 100ரூ. தமிழ்மொழியின் வளமைக்கும், உயிர்ப்புக்கும் பெருமை சேர்த்தோர் ஆழ்வார்களும், நாயன்மார்களும் ஆவர். தமிழ் மொழியின் இருண்ட காலமான களப்பிரர்கள் காலத்தில், தமிழை அழியாமல் காத்தவர்கள் அவர்கள். பாவைப் பாடல் என்ற புதிய இலக்கிய மரபைத் தமிழுக்குத் தந்த பெருமை ஆண்டாள் நாச்சியாருக்கே உரியது. அக்றிணை பன்மைக்கு, ‘கள்’ விகுதி சேர்த்து எழுதும் முறையை ஆண்டாள் பாடலால் அறியலாம் என்று பெரியோர் கூறுவர். அத்தகு ஆண்டாளின் திருப்பாவையையும், நாச்சியார் திருமொழியையும் விளக்கும் உரை நுாலாக, இந்நுால் […]

Read more

திருக்குறள் களஞ்சியம்

திருக்குறள் களஞ்சியம், கீழாம்பூர், கலைமகள் பப்ளிகேஷன்ஸ், பக். 560, விலை 600ரூ. திருவள்ளுவரும் திருக்குறளும், நம் பண்டைய நீதி நுாலாசிரியர், கம்பன் கண்ட வள்ளுவர், வாழ்க்கை துணை நுால், திருக்குறளும் பொது நோக்கமும், இரந்து வாழும் வாழ்வு, தோன்றின் புகழோடு, குறள் நெறி, குறள் உணர்த்தும் பாடங்களை பட்டியலிடுகிறது இந்நுால். குறளில் சைவ சித்தாந்தம், கீதையும் குறளும், நுண்பொருள்மாலை ஆய்வுரை, குறள் வழங்கும் செய்தி, வள்ளுவரும் புத்தரின் ஒழுக்க இயல்பும், சீர்திருத்தம் உள்ளிட்ட கட்டுரைகள் அடங்கியது இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், […]

Read more

காட்டுக்குள்ளே கணித மாயாவி

காட்டுக்குள்ளே கணித மாயாவி, இரா.செங்கோதை, மகா யுகம், பக்.72, விலை 60ரூ. கணிதத்தில் தோன்றும் பல்வேறு சிறந்த புதிர்களை மையமாகக் கொண்டு, ஒவ்வொரு அத்தியாயமும் செதுக்கப்பட்டுள்ளது. இந்நுாலை படிக்கும் இளம் மாணவர்களுக்கு, கணிதம் மீதுள்ள அச்சம் நீங்கி மகிழ்வை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அழகிய கதை வடிவில் கணித கோட்பாடுகளை திறமையாக வெளிப்படுத்திய நுாலாசிரியரை நிச்சயம் பாராட்டலாம். நன்றி: தினமலர், 21/10/2018. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more
1 79 80 81 82 83 240