வானொலிக் கதைகள்

வானொலிக் கதைகள், தளவை மா.சவுந்தரராசன், அருள்மொழி பிரசுரம், பக். 320, விலை 220ரூ. இலங்கை சர்வதேச வானொலியில், ஸ்ரீராம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஒலிபரப்பாகிய, ‘வெற்றிப்பாதை’ நிகழ்ச்சியில் வாசிப்பட்டு, நேயர்களின் வரவேற்பை பெற்றது. அறிவிப்பாளர், பி.எச்.அப்துல் ஹமீதின் குரல்வளத்தில் வாசிக்கப்பட்ட இந்த சிறுகதைகள், இப்போது வாசகர்களின் பார்வைக்கு நூலாக்கம் செய்யப்பட்டு வெளிவந்துள்ளது. நன்றி: தினமலர்,6/1/19. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027124.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

அதிசயம்

அதிசயம், அ.ஞானகுரு, தமிழ்வனம், பக். 200, விலை 200ரூ. இந்த நுாலில் சொல்லப்பட்டிருக்கிற பரிகாரங்கள், தாந்த்ரீக முறைகள், வழிபாடுகள், தியான முறைகள் யாவும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. இவற்றை மிகுந்த நம்பிக்கையோடு செய்து பாருங்கள், அதிசயம் நிகழ்வதை கண்கூடாக காண்பீர்கள். பன்முக குருநாதர்களும், பல்வேறு ஆன்மிக நுால்களும் அள்ளித் தந்த அரிய பொக்கிஷம் தான் இந்நுால். இறுதியில், செல்வத்தை ஈர்க்கும் நட்சத்திர ஆழ்நிலை தியானம் பற்றியும் குறிப்பிடுவது சிறப்புக்குரியது. வாழ்வில் வெற்றி பெற நினைப்பவர்களுக்கும், எண்ணற்ற வழிமுறைகளைக் கையாண்டும் வாழ்வில் உயரத்தை அடைய முடியவில்லை […]

Read more

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம்

போலீஸ் ஒரு நிருபரின் வாக்குமூலம், க. விஜயகுமார், தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட், பக். 96, விலை 90ரூ. இந்த புத்தகத்திற்கு மதிப்புரை எழுதுவதற்கு முன், முதலில் இந்நுாலின் ஆசிரியர் க.விஜயகுமாருக்கு வாழ்த்துரையை வழங்கி விடுவோம். காவல் துறை குறித்து, இப்படி ஒரு வெளிப்படையான வாக்குமூலத்தை புத்தகமாக எழுத, மனதில் நிறைய, ‘தில்’ வேண்டும். அந்தளவுக்கு காவல் துறையில் ‘தில்லுமுல்லு’ செய்யும் கறுப்பு ஆடுகளை தோலுரித்து காட்டியுள்ளார். 15 ஆண்டுகளாக, ‘தினமலர்’ நாளிதழில் ‘க்ரைம் ரிப்போர்ட்டர்’ ஆக பணியாற்றிய காலகட்டங்களில், அவர் சந்தித்த […]

Read more

சொல்லித் தருவது இல்லை

சொல்லித் தருவது இல்லை, சீத்தலைச் சாத்தன், ஒப்பிலான் பதிப்பகம், விலை 120ரூ. ஜாதகத்தை நம்புவதும், மறுப்பதும், சில நேரங்களில் அதன் பலன்களை அசைபோடுவதும் மனித சுபாவம். அந்த அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதைகள். முதுமைக் காதல் அரவணைப்பு என்ற கருத்தில், ‘இன்னும் என்னவள் தான்’ எழுதப்பட்ட கருத்து, வயதான முதியோர் எண்ணிக்கையை பிரதிபலிக்கிறது. இம்மாதிரிச் சுவைகளில் பல கதைகள் உள்ளன. நன்றி: தினமலர், 3/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பசும்பொன் சரித்திரம்

பசும்பொன் சரித்திரம், பேரா. காவ்யா சண்முகசுந்தரம், காவ்யா வெளியீடு, பக். 373, விலை 350ரூ. பாரத ராஜசிங்கம் பக்தர் கொண்டாடும் தங்கம், வீராதி வீரசிங்கம், முத்துராமலிங்கம், வெற்றியே முழங்குவது எங்கும் என்று கவிராயரால் பாராட்டி வாழ்த்தி தெய்வமாய் வணங்கப்பட்ட முக்குலத்துப் பெருமக்களின் நாயகனாம் தேவர் திருமகனது வாழ்வியல் சரிதை நூல் இந்நூல். “”பத்தரை மாற்றுப் பசும்பொன்” என்ற தலைப்போடு 146 அதிகாரங்களை நல்ல கட்டமைப்புடன் காவ்யாவிற்கே உரிய அழகோடு வெளியிட்டுள்ளது. தேவரது வீர உரைகள் பக்கத்திற்குப் பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. “”காமராசர் மீது எவரேனும் […]

Read more

மூளைக்குள் சுற்றுலா

மூளைக்குள் சுற்றுலா, வெ. இறையன்பு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், பக். 658, விலை 1500ரூ. ‘மூளைக்குள் சுற்றுலா’ என தலைப்பிட்டு, நம் மூளையின் மூலை முடுக்குக்கெல்லாம் செல்ல வைத்து விட்டார், நுாலாசிரியர். சிம்பன்சியை விட, மூன்று மடங்கு மூளை, நமக்கு அதிகம் என்பதில் துவங்கி, புராணம், கடவுள், மதங்கள் தோன்றியதன் காரணத்தை விளக்குகிறார். உலகச் சண்டைகள் ஏன் உருவாகுகின்றன என்பதற்கு, இதுவரை யாரும் சொல்லாத, அழகான விளக்கமும் வேறு. ‘ஹைட்ரா’ விலங்கின் தலையை வெட்டினால், இரண்டு தலைகள் முளைக்கின்றன. அதற்கும், ஜெல்லி மீனுக்கும் […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தன் நாட்டின் நிலப்பரப்பை விரிவாக்கிக் கொள்ள வேண்டுமென்றால், வேறொரு நாட்டுடன் கடுமையாக போரிட்டு கைப்பற்றுவது தான் பண்டைய காலந்தொட்டு நடந்து வருகிறது. ஆனால், இந்திய நாட்டின் பூர்வீக நிலப்பகுதியான ஒரு தீவோ, மிக எளிதாக இன்னொரு தீவு நாட்டிற்குத் தாரை வார்க்கப்பட்ட நிகழ்வு இன்றும் மண்ணின் மைந்தர்களை உறுத்திக் கொண்டிருப்பதன் விளைவே இந்நுால். வளர்ச்சிப்பாதையில் விரைந்து சென்று கொண்டிருந்த இந்தியா, இராமநாதபுர மாவட்டத்துக்குச் சொந்தமான, மீன்வளமும் கனிம வளமும் நிறைந்த கச்சத்தீவை, […]

Read more

வானமே எல்லை

வானமே எல்லை, வரலொட்டி ரெங்கசாமி, கவிதா பப்ளிகேஷன்ஸ், பக். 192, விலை 170ரூ. விறுவிறுப்பான நடையில் வாழ்க்கைச் சம்பவங்களை சுவை குன்றாமல் தரும் இந்நுாலாசிரியர், தம் வாழ்க்கை அனுபவங்களைச் சிறு சிறு துணுக்குகளாக, சிறு குறிப்புகளாகப் படைத்து அளித்துள்ளார். எதையும், மெல்லிய நகைச்சுவையோடு சொல்லக்கூடிய இந்த எழுத்தாளரின் சிந்தனை, பல கோணங்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கோள்களாகப் பயன்படும் விதத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு கருத்தை உணர்த்திச் செல்வது, நம் சிந்தனையைத் துாண்டுவதாக உள்ளது. ‘காதலைச் சொல்லத் தான் வார்த்தை தேவை: அதைத் துய்க்க மவுனம் போதும்; […]

Read more

திருஞான சம்பந்தர்

திருஞான சம்பந்தர், முகிலை இராசபாண்டியன், முக்கடல் வெளியீடு, பக். 192, விலை 150ரூ. பெரிய புராணம் அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றைத் தெரிவிக்கும் நுால் என்றாலும், சுந்தரரைத் தலைவனாகக் கொண்டது என்றாலும், நுாலின் பெரும்பகுதி திருஞானசம்பந்தரின் வரலாற்றையே கொண்டிருக்கிறது. பாணர் குலத்தைச் சேர்ந்த திருநீலகண்டரைத் தன்னுடன் அனைத்துக் கோவில்களுக்கும் அழைத்துச் சென்று, ஜாதி பேதத்தைப் போக்கியவர் திருஞான சம்பந்தர். பிராமண வகுப்பைச் சேர்ந்த திருநீல நக்க நாயனாரின் இல்லத்தில், வேள்வி செய்யும் இடத்தில் அந்தத் திருநீலகண்ட யாழ்ப்பாணரைத் தங்க வைத்தவர் திருஞான சம்பந்தர். சைவத்தை […]

Read more

கண்ணதாசன் என்னும் கடல்

கண்ணதாசன் என்னும் கடல், ஆண்டாள் பிரியதர்ஷினி, ழகரம் வெளியீடு, பக்.136, விலை 110ரூ. மகாகவி பாரதிக்குப் பின், கடலில் மூழ்கி முத்தெடுத்த கவியரசரின் பாடல்களில், என்றென்றும் மக்களின் நெஞ்சத்தை விட்டு அகலாத கவித்துவத்தின் சிறப்பைச் சொல்கிறார், நுாலாசிரியர் ஆண்டாள் பிரியதர்ஷினி. ‘காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, ஒருநாள் இரவு பகல்போல் நிலவு, தெய்வம் தந்த வீடு, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு, மயக்கமா? கலக்கமா? பரமசிவன் கழுத்திலிருந்து, வசந்தகால நதிகளிலே, நீரோடும் வைகையிலே’ உள்ளிட்ட திரைப்பட பாடல்கள், காலத்தால் அழியாத கருத்தாழம் மிக்க பொக்கிஷம் என […]

Read more
1 77 78 79 80 81 240