கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்

கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ், ஷாலினி, கருஞ்சட்டை பதிப்பகம், விலை 80ரூ. பிரித்தறிவோம் எதற்கெடுத்தாலும் ‘நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ என்று கேட்டுப் பழமைவாதங்களைப் பரப்பும் போக்கு அண்மைக்காலமாக தலைதூக்கி இருக்கிறது. ஆனால், பழங்காலத்தில் நிகழ்ந்ததாகவும் இருந்ததாகவும் சொல்லப்படுபவற்றில் எது உண்மை, எது பொய் என்பதைப் பிரித்து அறிவதுதானே பகுத்தறிவு! இதை அறிவியல்பூர்வமாகவும் வரலாற்று சமூகவியல் பார்வையிலும் அலசி ஆராயும் புத்தகம்தான் மனநல மருத்துவர் ஷாலினியின் ‘கொஞ்சம் டார்வின் கொஞ்சம் டாக்கின்ஸ்’. நன்றி: தினமலர், 15/1/19, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

காலமெல்லாம் கண்ணதாசன்

காலமெல்லாம் கண்ணதாசன், ஆர்.சி.மதிராஜ், தமிழ் திசை பதிப்பகம், விலை 130ரூ. திரைப்படக் கவிஞர்கள் தாங்கள் படித்தவற்றையும் கேட்டவற்றையும் தங்கள் சிந்தனைக் கேற்ப பாடலாக வடித்தார்கள். அது நம் மூளையைத் தொட்டது. ஆனால் கண்ணதாசன் தம் அனுபவங்களைப் பாடலாக்கிக் கொடுத்தார். அது நம் இதயத்தைத் தொட்டது. வாழ்க்கைக்குப் பல படிப்பினைகளைக் கொடுத்தது. அதனால் கண்ணதாசன் பாடல்கள் காலம் கடந்து நிற்கிறது’ என்ற பாடலாசிரியர் முத்து லிங்கம் முன்னுரையுடன் துவங்குகிறது, இந்நுால். கண்ணதாசன் பாடல்களைத்தான் காலம் முழுக்க எல்லாரும் எழுதி, சிலாகித்து, கொண்டாடி விட்டார்களே, இவர் புதிதாக […]

Read more

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!

முக்தி அளிக்கும் மலை! முதல்வனாய் நின்ற மலை!, கோ.தியாகராஜன், நந்தினி பதிப்பகம், பக். 80, விலை 90ரூ. திருமாலும், பிரம்மாவும் அடிமுடி காண முடியாத இறைவன் அருள் பாலிக்கும் மலை திருவண்ணாமலை. அண்ணாமலையாரின் சிறப்பு மட்டுமல்லாமல், அவரின் பல்வேறு பெருமைகளை தனித்தனி தலைப்புகளில் அழகாக நமக்கு தந்திருக்கிறார் நுாலாசிரியர். சிவ பக்தர்கள் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 10/2/19. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

குறுந்தொகை ஓவியம்

குறுந்தொகை ஓவியம், வெ.பரமசிவ பாண்டியன், வனஜா, பக். 242, விலை 100ரூ. சங்க இலக்கியங்களில், 4 முதல், 8 அடிகள் கொண்ட, 401 காதல் பாடல்களின் தொகுப்பே எட்டுத் தொகை. எட்டாத காதலின் சுவை நம் மனதை எட்டி தொட்டு இழுக்கும். இதில் உள்ள பறவை, விலங்கு, மனித பாசப் போராட்டங்கள். 205 புலவர்கள் இதைப் பாடியுள்ளனர். கபிலர், பரணர், அவ்வையார் போன்ற புகழ் பெற்ற, 205 புலவர்களும், பெயரே தெரியாத, 10 புலவர்களும் பாடியுள்ளனர். கடந்த, 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தப் பாடல்களைப் […]

Read more

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?

ஏற்றுமதி செய்து பணம் குவிப்பது எப்படி?, எம்.ராமச்சந்திரன், முன்னாள் வங்கி ஏற்றுமதி இறக்குமதித் துறைத் தலைமை அதிகாரி,வசந்த் பதிப்பகம், பக். 650, விலை 700ரூ. ஏற்றுமதித் தொழில் என்பது வருமானம் ஈட்டும் தொழில். அதே சமயம் அதைப் பின்பற்ற ஏராளமான விதிகளும், நடைமுறைகளும் உள்ளன. அவற்றை அறிந்து கொள்ள வசதியாக, தமிழில் இந்த நுால் வந்திருப்பது சிறப்பாகும். ஏற்றுமதி – இறக்குமதிக்கான கொள்கை, 2002 – 2007ல் வந்த பின், பலரும் இத்தொழிலில் அதிக முனைப்பு காட்டுகின்றனர். உலக அளவில், 200 நாடுகள் இத்தொழிலில் […]

Read more

நான்காம் தடம்

நான்காம் தடம், ரா.ஆனந்தக்குமார், விஜயா பதிப்பகம், பக். 670, விலை 600ரூ. சமகால தந்த்ர மார்க்கத்தின் உச்ச குரு என, ஓஷோவால் குறிப்பிடப்பட்டவர், ஜார்ஜ் இவானோவிட்ச் குர்ட்ஜிப். இவர், ருஷ்ய பேரரசின் ஆட்சிக்குட்பட்ட அர்மேனியாவில் பிறந்தவர். பல மார்க்கங்களை கற்றறிந்து, அதன்பின் முற்றிலும் மாறுபட்ட மெய்த்தேடலை கண்டுபிடித்தவர். அந்த ஞானத் தேடலை நுட்பமாக விவரிக்கும் பொருட்டு விழைந்தெழுந்துள்ளது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609   இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: […]

Read more

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும்

மார்க்ஸின் கோட்டும் அடகுக் கடைகளும், ராஜதுரை, என்.சி.பி.எச்., பக். 278, விலை 230ரூ. அழகு, அறம், அரசியல் உள்ளிட்ட, கார்ல் மார்க்ஸின் பரிமாணங்கள். உலக இலக்கிய ஆளுமைகளான ஆன்டன் செகோவ், ஆல்பெர்ட் காம்யூ, மேரி ஷெல்லி உள்ளிட்டோர் படைப்புகள் மீதான மதிப்பீடுகளை கட்டுரைகளாக வடித்துள்ளார், இந்நூல் ஆசிரியர். இனவாதம், வர்க்கச்சுரண்டல், ஆணாதிக்கம் என்பனவற்றிற்கு எதிராக போராடிய போராளிகளை பற்றிய கட்டுரைகளும் இதில் உள்ளன. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more

பதிலிகள்

பதிலிகள், மணிநாத், காவ்யா, பக். 140, விலை 150ரூ. முற்போக்கு சிந்தனை, மனித நேயம், அடித்தட்டு மக்களிடம் அக்கறை, நேர்த்தியான படைப்பாக்கம் கொண்ட பதிலிகள் எனும் இந்நூலானது, லவகுசா பாலம், அவலம், நீர்க்கோடுகள், பசி, உறுத்தல் உள்ளிட்ட 15 சிறுகதைகளின் தொகுப்பு. இந்நூலில் உள்ள சிறுகதைகள், செம்மலர், தாமரை, வண்ணக்கதிர், கல்கி, மக்கள் வீதி, கணையாழி உள்ளிட்ட இதழ்களில் ஏற்கனவே வெளியாகி வாசகர்களின் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000026541.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: […]

Read more

நமது கச்சத்தீவு

நமது கச்சத்தீவு, செ.ராசு, வேலா வெளியீடு, பக். 126, விலை 100ரூ. தமிழக மீனவர்களின் கலைந்த கனவு, கச்சத்தீவு. இந்தியாவில் நெருக்கடி நிலை, தமிழகத்தில் கவர்னர் ஆட்சி நடந்தபோது, கட்சத்தீவு தாரை வார்க்கப்படுகிறது. ராமேஸ்வரம் மீனவர்களால் இதை இன்னும் ஏற்கமுடியவில்லை. தமிழர்கள் எழுப்பிய செபஸ்தியர் ஆலயம், அவர்களின் வழிபாட்டுத் தலமாய் இன்றும் கச்சத்தீவில் இருக்கிறது.ஆனால், தமிழர்களால் அங்கு சென்று வழிபட அனுமதி இல்லை. இது ஏன் என்பது குறித்து விரிவாக விவரிக்கிறது இந்நூல். நன்றி: தினமலர்,6/1/19 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027242.html இந்தப் புத்தகத்தை […]

Read more

பாமரருக்கும் பரிமேலழகர்

பாமரருக்கும் பரிமேலழகர், சிற்பி பாலசுப்பிரமணியம், சந்தியா பதிப்பகம், விலை 850ரூ. இன்று வரை, வள்ளுவர் வான் குறளுக்கு உரை வகுத்த பெருமக்களில் முதன்மை இடம் பரிமேலழகருக்கே உரியது. துல்லியத் தெளிவு, ஆற்றொழுக்கான தமிழ் நடை என மாண்புகளால் ஓங்கி ஒரு கொடி மரம் போல் உயர்ந்து நிற்பது பரிமேலழகர் உரை. மற்றைய உரையாசிரியர்களிடம் காண முடியாத சில சிறப்புகள் பரிமேலழகரிடம் உண்டு. மூல நுாலை வேர் நுனி முதல், உச்சித் துளிர் முனை வரை ஒரு முழுமையாகப் பார்க்கும் விரிந்த பார்வை இவருடையது. இப்போது, […]

Read more
1 76 77 78 79 80 240