திருமாலின் பெயர்கள் 1000

திருமாலின் பெயர்கள் 1000, வரத நம்பி இளநகர் காஞ்சி நாதன், ஜெயதாரிணி அறக்கட்டளை, விலை 330ரூ. (குறுந்தகடுகள் 2 இலவசம்) தமிழில் முதல்முறையாக ராகமாலிகை வடிவில், இனிமையாக கேட்பதுடன், விளக்கத்துடன் இருப்பதால், விஷ்ணு சஹஸ்ர நாமத்தின் பெருமையை மேலும் அறியலாம். அம்புப்படுக்கையில் இருந்த பீஷ்மர், தன் முன் கண்ணன் நிற்க, அருளிய இந்த, 1,000 பேர் நாமம் மிக அரியதாக போற்றப்படுகிறது. அதிலும் இசையுடன் கூடிய, 1,000 பேர் பெருமை பேசுவது இந்த நுாலின் சிறப்பாகும். சோகமற்ற ஆனந்த வடிவினன்: நினைத்ததும் சோகத்தைப் பொசுக்கிடுவோன், […]

Read more

ஒளி உன்னால் அறியப்படுகிறது

ஒளி உன்னால் அறியப்படுகிறது, பழநிபாரதி, குமரன் பதிப்பகம், பக். 104, விலை 80ரூ. இலக்கண நடையில் எழுதி, இக்கால இலக்கியத்திற்கு சிறப்பு சேர்க்கும், பழநிபாரதியின் கவிதைகள் எண்ணற்றவை. ‘இந்த வைகறை உன்னிடமிருந்து துயிலெழுகிறது; ஒளி உன்னால் அறியப்படுகிறது; முதல் மலர்களின் நறுமணத்தை நுகர்ந்தபடி விடைபெற்ற நட்சத்திரங்களில் ஒன்று கடைசியாக உன்னைத் திரும்பிப் பார்க்கிறது!’ என்ற கவிதை வரிகள், நம்மை நெகிழ வைப்பதாக உள்ளன. இந்நுால், இன்றைய இளைய தலைமுறையினருக்கு பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர்,17/3/19, இந்தப் […]

Read more

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு

முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு, அ.சவரிமுத்து, சங்கர் பதிப்பகம், பக். 240, விலை 225ரூ.   முத்தரையர் என்ற பழம்பெரும் சமூகத்தின் தொடக்கக் காலம் முதல் இன்று வரை, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளது, முக்காலம் தொடும் முத்தரையர் வரலாறு எனும் இந்நுால். முத்தரையர் என்பதற்கு சேர, சோழ, பாண்டியரை அடக்கி, ஓர் கொடையின் கீழ் ஆண்ட அரசர் முத்தரையர் என்றும், மூன்று + தரையர் = முத்தரையர் என்றும் விளக்கம் கூறுவர். நுாலின் முகப்பிலேயே, இந்த நுால் எந்த சமுதாயத்திற்கும் எதிராக எழுந்த […]

Read more

மகான் பாம்பன் சுவாமிகள்

மகான் பாம்பன் சுவாமிகள், முனைவர் ஆ. சந்திரசேகர், செம்மூதாய் பதிப்பகம், பக். 160, விலை 50ரூ. பாம்பன் சுவாமிகளின் பாடல்கள் அனைத்தும் மந்திரங்கள். அவருடைய பல பாடல்களில், சில பாடல்களையாவது நித்திய பாராயணம் செய்தால், நமக்கு, அளவு கடந்த பலன்கள் கிட்டும். பகைக்கடிதல், குமாரஸ்தவம், சண்முகக் கவசம் ஆகிய இந்த மூன்று பாடல்களுக்கும், சிறப்பாக விரிவுரை எழுதியுள்ளார் ஆசிரியர். குமாரஸ்தவம் – இம்மைத் துன்பம், பிறவித் துன்பம் எனும் வெப்பங்களைப் போக்கும். பக்தி இலக்கியம். – எஸ்.குரு. நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை […]

Read more

காஞ்சியன்பன் கவிதைகள்

காஞ்சியன்பன் கவிதைகள், வழக்கறிஞர் ப.திருவேங்கடம், ஆனந்தா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ. இன்றைய காலகட்டத்தில் பெரும் பிரச்னையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது, வேலையில்லாத் திண்டாட்டம். இந்நுாலில், ‘வேலை தேடும் வேலையைச் செய்பவர்கள்… கரிகூட திரும்ப எரியும்! வாலிபத்திலேயே வாழ்விழந்த நாங்கள் வாழ்வது யாருக்காக?’ என்ற கவிதை, மனித வாழ்க்கையின் மையப் பிரச்னையை கனத்த நெஞ்சோடு சொல்லிச் செல்கிறது. புதிய வெளிச்சங்களை சமூகத்திற்கு தருபவையாக, காஞ்சியன்பனின் கவிதைகள் திகழ்கின்றன. – மாசிலா இராஜகுரு நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

மகாபாரதமும் மாயக்கண்ணனும்

மகாபாரதமும் மாயக்கண்ணனும், இரா.ஜீவரத்தினம், கைத்தடி பதிப்பகம், பக். 114, விலை 120ரூ. இதிகாச நுால்களில் ஒன்றான மகாபாரதத்தில் கண்ணனின் ஆளுமை அதிகம். இந்த காவியத்தில் பலவிதமான மாயங்களை புரிந்து, எல்லாருடைய மனதிலும் நீங்கா இடம் பெற்றுள்ளவன் கிருஷ்ணன். இந்நுாலில், கண்ணனின் மாயச் செயல்களை தொகுத்து வழங்கியுள்ளார் ஜீவரத்தினம். படிக்கும் வாசகர்களின் மனதில், அழகிய சித்திரங்களுடன் திரை காவியம் படைக்கிறது இந்நுால். நன்றி: தினமலர், 3/3/2019. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் […]

Read more

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?

இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பு ஷரிஅத்திலா? சட்டத்திலா?, முவப்பிகா பப்ளிஷர்ஸ், விலை 100ரூ. மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா அரசு, நாடாளுமன்றத்தில் முத்தலாக் மகோதாவைக் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் இஸ்லாத்தில் பெண்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன என்பது போன்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளது. பெண்களுக்கு சொத்துரிமை, வழிபாட்டு உரிமை, கல்வி கற்பதில் உரிமை, கணவரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை, விவாகரத்து உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் வழங்கி உள்ளது. அந்த வகையில் முத்தலாக் சட்டம் தேவையற்றது என்பதை உடன்குடி மு.முகம்மது யூசுப் பல்வேறு ஆதாரங்களுடன் திருக்குர்ஆன் […]

Read more

சத்திய வெள்ளம்

சத்திய வெள்ளம், நா.பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 384, விலை 250ரூ. சில நூல்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும். சில நூல்கள் நம் சிந்தனையைத் தூண்டி அறிவு பெற உதவும். சில நூல்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நூல்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். சத்திய வெள்ளம் என்ற இந்நூல் எக்காலத்திற்கும் பயன்படும் நூலாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவ மாணவியரின் மன உணர்ச்சிகளையும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நூலின் பெருமை […]

Read more

கவிமணி வரலாற்றாய்வாளர்

கவிமணி வரலாற்றாய்வாளர், அ.க.பெருமாள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், பக். 104, விலை 85ரூ. கவிமணியை ஒரு பெருங்கவிஞர் என்ற முறையில் நாடு நன்கு அறியும். இந்நுால், கவிமணி கவிஞர் மட்டுமின்றி, வரலாறு மற்றும் கல்வெட்டு ஆய்வாளராகவும் இருந்திருக்கிறார் என்பதை பல ஆதாரங்களுடன் விளக்குகிறது. நுாலின் முதல் தலைப்பாக கவிமணியின் வாழ்வும் பணியும் பற்றி விளக்குகிறது. கவிமணியின் கவிதைகள், வரலாற்று ஆய்வாளர், கவிமணியும் நாட்டார் வழக்காறுகளும், கவிமணியின் சமகால நோக்கு என்ற தலைப்புகளிலும் பின் இணைப்பாக ஆதார நுால்கள், கவிமணி ஆற்றிய […]

Read more

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள்

ஏர்வாடியாரின் மனதில் பதிந்த மாண்புறு மனிதர்கள், ஆர்.மோகன், வானதி பதிப்பகம், பக். 862, விலை 1000ரூ. சாதனையாளர்களின் பண்புகள் பற்றிய பெட்டகம். ஏர்வாடியார் தன் இதழான கவிதை உறவில் தொடர்ந்து வெளியிட்டு வரும், ‘மனத்தில் பதிந்தவர்கள்’ என்ற கட்டுரைத் தொடர் அவ்விதழின் சிறப்புகளில் ஒன்று. அக்கட்டுரைத் தொடர் பிரபலங்கள் பலரைப் பற்றியது. நடைச் சித்திரமாக மட்டுமல்லாமல், பல துறைகளிலும் சிறக்கப் பணியாற்றுகிற பிரபல பிரமுகர்கள் குறித்த, சின்னஞ்சிறு தகவல் களஞ்சியமாக இந்நுால் தொகுக்கப்பட்டு உள்ளது. பெருந்தகையோர், அரசியல் தலைவர்கள், ஆன்மிகச் சுடர்கள், இலக்கிய ஆளுமைகள், […]

Read more
1 74 75 76 77 78 240