ஸ்ரீராமஜயம்

ஸ்ரீராமஜயம், அபூர்வ ராமாயணம், தொகுதி 3, திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், பக். 248, விலை 240ரூ. பலமுறை படித்தாலும் சலிக்காத- அலுக்காத- நூலாகத் திகழ்வது ராமாயணம் எனலாம். எத்தனை விதமான ராமாயணக் கதைகள் இருந்தாலும் அத்தனையும் கற்கண்டு தான். இந்நூலில், அபூர்வ ராமாயணத்திலிருந்து சில கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ஊர்மிளை கேட்ட வரம் குறித்தும் (பக்.74), சீதைக்குப் பறவைகளின் மொழி தெரியும் என்பதும் (பக்.98), காக்கையாக வந்த ஜெயந்தன் செயலை நியாயப்படுத்துவதும் (பக்.102), ஊனமுற்றோரைக் கேலி செய்யக்கூடாது என்பதை, கபந்தன் நிகழ்ச்சி மூலம் […]

Read more

கண்ணன் கதைகள்

கண்ணன் கதைகள், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை, பக். 134, விலை 130ரூ. கண்ணன் கதைகள் என்றாலே, கரும்பு தின்கிற மாதிரிதான். கரும்பை எங்கே கடித்தாலும் இனிக்கும். கண்ணன் கதைகளில் எதைப் படித்தாலும் மகிழ்வும், பரவசமும் கூடும். இந்த நூலில் 26 கதைகள் கண்ணன் பெருமை பேசுகின்றன. முதல் கதை, அந்த மூன்று கத்திகள். அதிலேயே, உத்தமங்க மகரிஷிக்கு மனிதரின் இனவேற்றுமை, உயர்வு தாழ்வு காண்பது தவறு என்று கண்ணபிரான் பாடம் நடத்துகிறார். அவருக்கு மட்டுமல்ல, உலகோர் அனைவருக்கும்தான். பாண்டவரை அழிக்க, […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-7.html தெய்வீக இலக்கியமான இராமாயணத்தை நினைத்த நேரத்தில், நினைத்தபடி அனுபவித்து மகிழலாம். ஒவ்வொரு சிறு நிகழ்வையும் மையப்படுத்தி எத்தனையோ சிறுகதைகளைப் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்த வகையில் தேர்ந்த இலக்கியவாதியுமான திருப்பூர் கிருஷ்ணன் தமக்கே கைவந்த எளிய நடையில் பல காட்சிகளைக் கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்துகிறார். சரயூ நதியில் கலந்து மறைய முடிவெடுத்த ஸ்ரீ ராமன் முன்னால், […]

Read more

பிரபஞ்ச வசியம்

பிரபஞ்ச வசியம், டாரட் எம். ஆர். ஆனந்தவேல், ஆனந்தா பதிப்பகம். இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு ஆகிய பஞ்ச பூதத்தை, குருவின் அருளினாலும், இஷ்ட தெய்வத்தின் ஆசியினாலும், வசியம் செய்துவிட இயலும் என்று சொல்லுகிறார் இந்த நுலாசிரியர். எந்த அறிவியல் அற்புதக் கண்டுபிடிப்புகளினாலும், பஞ்சபூத சக்திகளை எதிர்கொள்ள இயலாது என்று கூறும் நூலாசிரியர், கர்ம வினைப் பயன்களின் சுக துக்கங்களிலிருந்தும், எந்த மனிதனாலும் தப்பிவிட முடியாது என்றும் கூறியுள்ளார் நூலாசிரியர். ரிஷிகள், ஞானிகள், சித்தர்கள் போன்றோரின் அமானுஷியச் செயல்கள் […]

Read more

ஞாபகம் வருதே

ஞாபகம் வருதே, சித்ராலயா கோபு, குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை 10, பக். 192, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-216-6.html சித்ராலயா கோபுவும் டைரக்டர் ஸ்ரீதரும் ஐந்தாம் வகுப்பு முதல் ஒன்றாகப் படித்தவர்கள். பழகியவர்கள், அந்த எழுபது வருட நட்பை, திரை உலகில் ஸ்ரீதர் உடனான அனுபவத்தை உள்ளது உள்ளபடி கோபு எழுதியிருக்கும் நூல். ஸ்ரீதரின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிக் கொடுத்த அனுபவங்கள் அவரை எப்படி இயக்குநராக உருமாற்றியது என்பது […]

Read more

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள்

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள், வேளுக்குடி கிருஷ்ணன், விகடன் பிரசுரம், சென்னை 2, பக். 216, விலை 115ரூ. சகல புண்ணியங்களும் பெற வேண்டுமென்றால் பகவானின் திவ்ய நாமங்களைச் சொன்னாலே போதும் என்று புராணங்கள் கூறுகின்றன. அந்த வகையில் கண்ணன் நாமம் சொல்லும் க9தைகள் என்ற தலைப்பில் பல்வேறு அத்தியாயங்களை, மாருதியின் உயிரோட்டமான வண்ண ஓவியங்களுடன் தந்து விளக்கி இருக்கிறார் நூல் ஆசிரியர். கண்ணனைப் போற்றம் கதைகள் அனைத்தும் ஸ்ரீ கண்ணனக்கே உரிய குணங்களான சுறுசுறுப்பு, துறுதுறுப்பு, குதூகலம் ஆகியவற்றை எளிமையாக அனைத்துத் தரப்பு […]

Read more

காற்றின் குரல்

காற்றின் குரல், திருப்பூர் கிருஷ்ணன், திருப்பூர் குமரன் பதிப்பகம், சென்னை 92, பக். 264, விலை 250ரூ. ராமாயண காவியத்தின் நாயகனான ஸ்ரீராமன், ஒரு மாதக் குழந்தையாகத் தொட்டிலில் உறங்கிக் கொண்டிருக்க, அன்னை கௌசல்யை தன் குழந்தையை ரசித்து மகிழ்வதில் தொடங்கி ஸ்ரீ ராமர் சரயூ நதியில் கலந்து விண்ணுலகம் செல்வது வரை உள்ள ராமாயணக் கதையிலுள்ள முக்கிய நிகழ்வுகள் 44 அத்தியாயங்களாகத் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வால்மீகி ராமாயணத்திலிருந்தும், ஒரு சில சம்பவங்கள் வேறு சில ராமாயணங்களிலிருந்தும் ஒன்றிரண்டு நிகழ்ச்சிகள் […]

Read more