திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள்

திருக்குர்ஆனில் அறிவியல் கூறுகள், ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர், நந்தினி பதிப்பகம், விலை 240ரூ. திருக்குர்ஆன் அறிவியல் சார்ந்த கருத்துகளையும், சிந்தனைகளையும் உள்ளடக்கிய கருவூலமாகத் திகழ்கிறது. இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனில் உள்ள அறிவியல் சார்ந்த கருத்துக்களைத் திரட்டி அவற்றோடு இன்றைய அறிவியல்   சிந்தனைகளைத் தொடர்புபடுத்தி ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்ஆ.ப.ஜெ.மு. நசீமா மரைக்காயர். இவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களின் சகோதரர் முத்து மீரா லெப்பையின் மகள். இந்த நூலில் அவர் திருக்குர்ஆனின் தோற்றம், அறிவியல் பொருள் விளக்கம், இறைமறையும் […]

Read more

வருடம் முழுவதும் வசந்தம்

வருடம் முழுவதும் வசந்தம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 254, விலை 200ரூ. இன்றைய இளைய சமுதாயம் ஆற்றல் மிக்க சமுதாயமாக விளங்குகிறது. அவர்களுக்கு நம் நாட்டில் தோன்றி நம் நாட்டு மக்களுக்காக பாடுபட்ட தியாகிகள் பலரின் வரலாற்றை சாதனையை தெரிந்து கொண்டால் இன்னும் உற்சாகமாக செயல்படுவார்கள். அந்த வரிசையில் நம் தலைவர்கள் சிலரின் வீரத்தியாகம் பற்றிய ஒரு வரலாற்றுத் தொகுப்பாக இந்நூலை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். நன்றி: குமுதம், 19/4/2017.

Read more

அப்துல் கலாம் சாதிக்கலாம்

அப்துல் கலாம் சாதிக்கலாம், ச. உமாதேவி, நந்தினி பதிப்பகம், பக். 176, விலை 140ரூ. ‘பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’ என்ற தனது கூற்றுக்கு, தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். படகோட்டியின் மகனாகப் பிறந்து பாரதத்தின் முதல் குடிமகனாக உயர்ந்த இந்த மாபெரும் தலைவர், தன் நலன் கருதாது தேச நலனையே உயிர் மூச்சாகக் கருதி வாழ்ந்தவர். தனது மறைவால் தமிழகத்தை மட்டுமன்றி, பாரதத்தின் குக்கிராமம் வரை பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தி […]

Read more

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108

மாணவர்களுக்கு மகாத்மா மணியான நிகழ்வுகள் 108, ந. சண்முகம், நந்தினி பதிப்பகம், திருவண்ணாமலை, பக். 208, விலை 100ரூ. காந்தியடிகளின் வாழ்க்கை சம்பவங்களை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள உதவும் நூல். கல்கி இதழில் இதுவரை மகாத்மா காந்தி தவிர, எந்த மனிதரது இறப்பின் புகைப்படமும் பிரசுரமாகவில்லை. கல்கியில் காந்தியின் மரணப்புகைப்படம் மட்டும் ஏன் அச்சிடப்பட்டது என்பதற்கான காரணம் பதிவு செய்யப்பட்டிருப்பது ஆவணச் செய்தி. ரஸ்கின் எழுதிய கடையனுக்கும் கதிமோட்சம் புத்தகத்தைப் படித்தது, காந்தியின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. சென்னையில் காந்திஜியின் முதல் […]

Read more

மீண்டும் என் தொட்டிலுக்கு

மீண்டும் என் தொட்டிலுக்கு, பாவலர் சொல்லினியன், நந்தினி பதிப்பகம், 117, புறவழிச்சாலை, திருவண்ணாமலை 606601, பக்கங்கள்116, விலை 60ரூ. குழந்தைகள் உலகமே தனிதான். அங்கே கோபதாபங்கள் இருப்பதில்லை. சாதி பேதங்கள் இருக்காது. அடிதடிகளும் ஏமாற்றும் இல்லை. அரசியல் இருக்கவே இருக்காது.  ஆன்மிகம் இல்லை. தோல்விகள் இல்லை. எல்லோரும் சரிநிகர் சமமானவர்கள். இப்படிப்பட்ட குழந்தைகள் உலகத்தை எட்டிப் பார்க்க வைக்கும் ஒரு சாளரம்தான் இந்நூல். குழந்தைகளைக் கொஞ்ச நேரமில்லாத மனிதர்கள்கூட இந்த மழலைக் கவிஞரின் கவிதை உலகிற்குள் போனால் குழந்தைகள் உலகத்தை ரசிக்கத் தொடங்கிவிடுவார்கள். இது […]

Read more
1 2