ஆத்திசூடிக் கதைகள்

ஆத்திசூடிக் கதைகள், பி.எஸ்.ஆச்சார்யா, நர்மதா பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.200. ஒளவையாரின் ஆத்தி சூடியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாக்களுக்கு சின்னஞ் சிறு கதைகள் மூலம் நீதி போதிக்கும் சிறுகதைத் தொகுப்பு. இந்நூலில் ஆத்திசூடியின் கருத்துகளோடு, பல்வேறு கதை மாந்தர்களையும், விலங்குகளையும் வைத்து எளிய நடையில் கதைகள் புனையப்பட்டுள்ளன. இவை படிக்க சுவையாக இருப்பதுடன், சிந்தனைக்கும் விருந்தாக அமைந்துள்ளன. “ஊக்கமது கைவிடேல்’ என்பதற்கு சிலந்தியின் விடாமுயற்சியைக் கண்டு ஊக்கம் பெற்ற ராபர்ட் புரூஸின் வாழ்க்கைச் சம்பவம் ஓர் உதாரணம். “நேரிலும் பார்க்காத… நல்லதும் அல்லாத, யாருக்கும் ஒரு […]

Read more

திருவருட் பயன் விளக்க உரை

திருவருட் பயன் விளக்க உரை, ஆ.ஆனந்தராசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.250.   சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் வந்த உமாபதி சிவம், 600 ஆண்டுகளுக்கு முன் இயற்றிய, ‘சிவப்பிரகாசம்’ நுாலை விளக்கும் வகையில், அவரே படைத்த விளக்கவுரை நுால். சிவப்பிரகாசம் நுாலில் கூறப்பட்டுள்ள, பொங்கொளி ஞான வாய்மை, அதன் பயனை இணைத்துப் பயில்வதால் கிட்டுவதே திருவருட்பயன் என்பதாக முன்வைத்து பல தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. திருவருளின் இயல்பும், திருவருளால் உயிர்கள் அடையும் பயனும், உயிருக்கான விளக்கமும் எளிய நடையில் தரப்பட்டுள்ளது. ஞானத்தின் ஒளி நிலையும் அஞ்ஞானத்தின் […]

Read more

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள்

மன வயலில் விளைந்த சிந்தனை மணிகள் – பாகம் 1, டி.எஸ்.தியாகராசன், நர்மதா பதிப்பகம், பக்.240. விலை ரூ.225. மத நல்லிணக்கம், கல்வித்துறை மேம்பாடு, நெகிழியால் வரும் கேடு, இலவசங்களால் அரசுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பு, நீதிமன்றங்களின் வித்தியாசமான தீர்ப்புகள், நதிநீர்ப் பிரச்னையில் மாநிலங்களுக்கிடையே நிகழும் மோதல்கள், பொதுத்துறை தனியார்மயமாவதில் உள்ள சாதக, பாதகங்கள் – இவ்வாறு பல்வேறு பொருண்மைகள் குறித்து எழுதப்பட்ட முப்பத்தெட்டு கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். அண்ணல் காந்தியடிகள் குறிப்பிட்ட “ஏழு பாவங்களும்’ இன்றுவரை சமுதாயத்தைவிட்டு நீங்கவில்லை என்பதில் தொடங்கி, கரோனா […]

Read more

ஸ்ரீபாஷ்யம் பேருரை

ஸ்ரீபாஷ்யம் பேருரை, க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம், விலைரூ.950 அகிலத்து மாந்தர் அனைவரையும் சமமாகவே பாவித்து வாழ்ந்த, ஆன்மநேய முனிவர் ஸ்ரீராமானுஜர், 1,000 ஆண்டுகள் கடந்தும் அழியாப் புகழோடு நிலைப்பவர். பாதராயண மகரிஷி சமஸ்கிருதத்தில் இயற்றிய பிரம்ம சூத்திரத்திற்கு, ராமானுஜரால் வழங்கப்பட்ட பேருரையே ஸ்ரீபாஷ்யம் நுால். பிரம்மம் என்பதற்கு ஒப்புயர்வற்ற பொருள் அல்லது அனைத்தையும் வளர்க்கின்ற பொருள் என்று விளக்கம் தந்து, பிரம்ம சூத்திரங்கள் நுட்பமாக விளக்கப்படுகின்றன. சூத்திரங்களைப் புரிந்து கொள்ள எளிய உரைகள் தேவைப்பட்ட நிலையில், உருவாக்கப்பட்ட ஐந்து வகை உரைகளில் ஒன்று […]

Read more

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா

எழில் கொஞ்சும் அஜந்தா – எல்லோரா, முனைவர் இரா.இராமகிருட்டினன், நர்மதா பதிப்பகம், விலைரூ.175 சிறப்பு மிக்க இந்திய கலை பொக்கிஷங்களை அடக்கியுள்ள அஜந்தா, எல்லோரா பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ள நுால். வரலாற்று பின்னணியுடன் ஆய்வுப் பார்வையில் விரிவாக எழுதப்பட்டுள்ளது.இந்த நுால், ஒன்பது இயல்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அஜந்தா குடவரை பற்றி முழுமையான அறிமுகத்தை முதல் இயலில் விளக்குகிறது. உரிய படங்கள் செய்திகளை புரிய வசதியாக சேர்க்கப்பட்டுள்ளன. கலை வரலாற்றை தெளிவாகக் கூறுகிறது. கையைப் பிடித்து, நேரில் அழைத்துச் சென்று காட்டுவது போல் கட்டுரைகள் அமைந்துள்ளன. பவுத்த, […]

Read more

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும்

ராகு கேது தரும் யோகங்களும் தோஷங்களும் பரிகாரங்களும், எஸ்.பி.சுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 100ரூ. ராகு கேது கிரகங்கள் ஒவ்வொருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் பாதிப்புகளும், பலாபலன்களும், செய்ய வேண்டிய பரிகாரங்களும் இந்த நூலில், உதாரண ஜாதகங்களுடன் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றிய தகவலும் இந்த நூலில் உள்ளது. நன்றி: தினத்தந்தி, 2/5/21 இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

தியாகச் செம்மல் காமராஜ்

தியாகச் செம்மல் காமராஜ், சாவி, நர்மதா பதிப்பகம், விலைரூ.75. மறைந்த காமராஜரின் அரசியல் வாழ்வை விவரிக்கும் நுால். பத்திரிகையாளர் சாவி, நேரடியாக பார்த்தவற்றை பதிவு செய்துள்ளார். கேள்வி – பதிலாகவும் உள்ளது. பதவியில் இருந்து விலகுவதால், அசவுகரியங்கள் ஏற்படாதா என்ற கேள்விக்கு, ‘ஓய்வூதியத்தில் வீட்டு வாடகை, வரி போக, 1,000 ரூபாய் மீதமிருக்கும். அதில், காங்கிரஸ் கமிட்டி கூட்டத்திற்கு சென்று வரும் செலவு, 600 ரூபாய்; மீதமுள்ள, 400 ரூபாயை என் செலவுக்கும், தாய்க்கும் அனுப்பியது போக, மீதி பணத்தை ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன்…’ […]

Read more

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள்

உலக சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், விலைரூ.90 உலக அளவில் சாதனை படைத்த விளையாட்டு வீராங்கனைகளின் வாழ்க்கை குறிப்பை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள தொகுப்பு நுால். சாதனைக்கும் துாண்டும் வகையில் அமைந்துள்ளது. 37 வீராங்கனைகள் பற்றிய குறிப்புகள் உள்ளன. தகவல் மிக எளிமையாக சொல்லப்பட்டுள்ளது. வாழ்வில் முன்னேறத் துடிப்போருக்கு வழிகாட்டும் வகையில் உள்ளது. பெண்கள் ஏற்றமிகு வாழ்வில் நடை போட துணை புரியும். நன்றி:தினமலர், 17/1/2021 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 […]

Read more

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள்

சரித்திரம் படைத்த சாதனைப் பெண்மணிகள், சூர்யகுமாரி, நர்மதா பதிப்பகம், பக். 288, விலை 120ரூ. உழைப்பாலும், சேவையாலும் புகழ்பெற்ற 75 பெண்களின் சாதனை வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் தொகுப்பு நூல். சுய முன்னேற்றத்துக்கு உத்வேகம் தந்து வாழ்க்கைக்கு வழிகாட்டும். நன்றி: தினமலர், 10/5/20 இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000006631_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள்

உடல் நலம் காக்கும் எளிய அக்குபிரஷர் முறைகள், பி.சி.கணேசன், நர்மதா பதிப்பகம், விலைரூ.80 நோயின்றி வாழ வழியும், நோய் வந்தால் நீக்க எளிய வழிமுறைகளும் கூறப்பட்டு உள்ளன. மனித உடல் ஓர் இயற்கை அற்புதம் என்று துவங்கி, 14 தலைப்புகளில் பயனுள்ள கருத்துகள் இடம் பெற்றுள்ளன. பஞ்ச பூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவற்றுடன் உடலுக்கு உள்ள தொடர்பை அழகாகக் கூறியுள்ளார். உடலில் ஆறு நரம்பு மையங்களை, ஏழு பிரிவுகளாக கூறப்பட்டுள்ளது. அக்கு பங்சர், அக்குபிரஷருக்கு இடையே உள்ள வேறுபாடுகளையும் கூறுகிறது. […]

Read more
1 2 3 14