வேர்ச்சொற் கட்டுரைகள்

வேர்ச்சொற் கட்டுரைகள், ஞா.தேவநேயப் பாவாணர், பூம்புகார் பதிப்பகம், விலை 450ரூ. தனது வாழ்நாள் முழுவதும் வேர்ச் சொல் ஆராய்ச்சிலேயே மூழ்கிக் கிடந்தவர் தேவேநேயப் பாவாணர். தமிழ் மொழியில் ஒவ்வொரு வேர்ச்சொல்லும் எவ்வாறு திரிகின்றன என்பதை தனது பல ஆண்டுகால ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து அவற்றைத் தொகுத்துத் தந்து இருக்கிறார். சில தமிழ்ச் சொற்களை வேறு மொழிகள் எடுத்துக் கொண்டாலும், அவை மூலத்தினாலும், தொடர்புடைய தமிழ்ச் சொற்களாலும் அவை தமிழ் என்றே அறியப்படும் என்பதை நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். தமிழ் ஆய்வாளர்களுக்கும், புலவர்களுக்கும் இந்த நூல் […]

Read more

குந்தியின் குருசேத்திரம்

குந்தியின் குருசேத்திரம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 352, விலை 275ரூ. தாம்பத்திய உறவு கொள்ள முடியாத கணவனை பெற்றாலும், வரத்தால் குழந்தை பெற்று, கணவன் இறந்தபோது, தன் சக்களத்தியை, உடன்கட்டை ஏற வைத்து, தன் பிள்ளைகளுக்கு, அரசாளும் உரிமை பெற போராடிய, பெண்ணரசியான குந்தியின் ராஜதந்திரங்களை, இந்நூல் விவரிக்கிறது. கர்ணன் இறந்த பின், அவனை அணைத்து கதறும், அவளின் தாய்மையையும் இந்நூல் சிறப்பாக படம் பிடிக்கிறது. நன்றி: தினமலர், 16/1/2018

Read more

பீஷ்மரின் தேசம்

பீஷ்மரின் தேசம், விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், பக். 272, விலை 225ரூ. கங்கையின் மைந்தராக பிறந்து, பிரம்மச்சாரியாக வளர்ந்து, தன் சகோதரர்களுக்கும், தந்தைக்கும் உறுதுணையாக இருந்தவர் பீஷ்மர். அஸ்தினாபுர சாம்ராஜ்யத்தை, அரணாக இருந்து, நான்கு தலைமுறையை வழிநடத்திய பீஷ்மரின் வரலாற்றை, இந்நூல் விரிவாக விவரிக்கிறது. நன்றி: தினமலர், 17/1/2018.

Read more

மல்லிகைபூ

மல்லிகைபூ, ஞா.சிவகாமி, பூம்புகார் பதிப்பகம், விலை 50ரூ. தலைமைச் செயலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றிய ஞா.சிவகாமி எழுத்துறையிலும் முத்திரை பதித்தவர். அவர் எழுதியுள்ள மல்லிகைப்பூ என்ற இந்தப் புத்தகத்தில், 25 சிறுகதைகள் அடங்கியுள்ளன. எல்லாமே மனதைத் தொடும் கதைகள். நன்றி: தினத்தந்தி, 1/11/2017.

Read more

உலக வரலாறு

உலக வரலாறு, ஐ. சண்முகநாதன், பூம்புகார் பதிப்பகம், விலை 750ரூ. உலகம் தோன்றியது முதல் இன்று வரை நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. உலகம், இந்தியா, தமிழ்நாடு என்ற தலைப்புகளில் நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளன. உலகம் என்ற தலைப்பில் பூமி தொடங்கியது எப்படி என்பது தொடங்கி உலகில் நடந்த முக்கிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக முதல் உலகப்போர், இரண்டாம் உலகப் போர், சந்திரனில் மனிதன், கென்னடி சுட்டுக்கொலை, இலங்கையில் போர் முடிந்தது போன்ற அனைத்துச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. இந்தியா […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்,  க.வெள்ளைவாரணன், பூம்புகார் பதிப்பகம்,  பக். 461, விலைரூ.290. தமிழ் மொழியின் இலக்கணத்தையும், தமிழர் வாழ்வியல் நெறிமுறைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைக்கும் தொல்காப்பியத்தை உள்ளது உள்ளவாறு அறிந்துகொள்ள வேண்டுமானால், நூலாசிரியர் வாழ்ந்த காலம், இந்நூல் இயற்றப்பட்டதன் நோக்கம், நூலின் அமைப்பு, சமயச்சார்பு முதலியவற்றை அறிந்துகொள்வது அவசியம். இந்நூலின் நோக்கமும் அதுதான். இந்நூல் இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளன. முற்பகுதியில் தொல்காப்பியத்தின் தோற்றம், நூலாசிரியரான தொல்காப்பியர் வாழ்ந்த காலம், இந்நூலை இயற்றியதற்கான காரணம் முதலியவற்றை விரித்துரைக்கிறது. இறையனார் களவியலுரை ஆசிரியர், நச்சினார்க்கினியர், இளம்பூரணர், பேராசிரியர், அடியார்க்கு […]

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க.வெள்ளை வாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. ‘தமிழ் நூல்களில் மிகப்பழமையானது ‘தொல்காப்பியம்’. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம்

தமிழ் இலக்கிய வரலாறு தொல்காப்பியம், வித்துவான் க. வெள்ளைவாரணனார், பூம்புகார் பதிப்பகம், விலை 290ரூ. தமிழ் நூல்களில் மிகப்பழமையானது “தொல்காப்பியம்”. உலகின் மிகப் பழமையான நூல்களில் ஒன்று என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தொல்காப்பியத்தின் சிறப்புகளை இந்த நூல் விளக்குகிறது. நன்றி: தினத்தந்தி, 19/4/2017.

Read more

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம்

தமிழ் மொழி இலக்கிய வரலாறு சங்ககாலம், பூம்புகார் பதிப்பகம், விலை 200ரூ. தமிழ்நாட்டில் மூன்று சங்கங்கள் இருந்ததாகக் கருதப்படுகிறது. அந்த சங்கங்கள் எக்காலத்தில் இருந்தன? அதில் இடம் பெற்றிருந்த புலவர்கள் யார்? அக்காலத்தில் இயற்றப்பட்ட நூல்கள் எவை? என்று ஆராய்ந்து, தான் கண்டறிந்த உண்மைகளை இந்த நூலில் எழுதியுள்ளார் தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். அத்துடன் தமிழ் மொழியின் தோற்றம், வளர்ச்சி ஆகியவை பற்றியும் ராசமாணிக்கனார் புதுத்தகவல்களை விவரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப்பின், புதிய வடிவமைப்பிலும் சிறந்த கட்டமைப்பிலும் நூல் வெளிவந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 15/3/2017.

Read more

வடமொழி வரலாறு

வடமொழி வரலாறு, பூம்புகார் பதிப்பகம், விலை 250ரூ. “வடமொழி (சமஸ்கிருதம்) ஆதிக்கத்தில் இருந்து தமிழை மீட்பதற்காகவே இறைவன் என்னைப் படைத்தான்” என்று கூறியவர் தேவநேயப் பாவாணர். “தேவபாஷை” என்று ஒரு காலத்தில் போற்றப்பட்ட வடமொழி, இன்று பேச்சு மொழியாக இல்லை. கோவில்களில் அர்ச்சனை செய்வதற்குப் பயன்படும் மொழியாகவே இருந்து வருகிறது. “திராவிடத்திற்கு தாயாக மட்டுமின்றி, ஆரியத்திற்கு (வடமொழி) மூலமாகவும் தமிழ் விளங்குகிறது” என்று இந்த நூலில் ஆணித்தரமாக விளக்குகிறார் பாவாணர். நன்றி: தினத்தந்தி, 1/3/2017.

Read more
1 2 3 4 9