ரத்த ஞாயிறு

ரத்த ஞாயிறு, டாக்டர். கோவி. மணிசேகரன், பூம்புகார் பதிப்பகம், 127-63, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, விலை 260ரூ. பாரத தேசத்தை எப்படிக் கட்டிக் காக்க வேண்டும் என்கிற அக்கறையுடன் போராடிய சரித்திர மகாபுருஷர்கள் ஏராளம். அவர்களுள் மக்களுக்காகவும், மதத்துக்காகவும், மொழிக்காகவும் போராடியவர்கள் சொற்பமானவர்கள். அவர்களுள் ஒருவர் சத்ரபதி சிவாஜி. இந்த மாவீரரை கதாநாயகனாகக் கொண்டு படைக்கப்பட்டுள்ளது இந்நூல். சிவாஜியின் காலத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் விடுதலைப் போராட்டம் போன்றதே. பின்னாளில் ஆங்கிலேயனை விரட்டுவதற்காக எழுந்த போராட்டத்தின் தொடக்கத்தை சிவாஜிதான் அமைத்துக் கொடுத்தார் […]

Read more

லதா ரஜினிகாந்த் எழுதிய அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்

அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள், லதா ரஜினிகாந்த், பூம்புகார் பதிப்பகம், விலை 270ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-015-1.html இன்றைய குழந்தைகள் நாளைய நல்ல பிரஜைகளாக மலர, நூலாசிரியர் பல்வேறு பாரம்பரிய கருத்துக்களை இந்த நூலில் தருகிறார். அமைதிக்காக, முழுமைக்காக, ஒழுக்கத்துக்காக, நிறைவுக்காக, என்று இருந்த கல்வி மாறி பட்டத்துக்காக, பெயருக்காக, பிழைப்புக்காக, பணத்துக்காக என ஆகிவிட்டது. நமக்குள் இருப்பதை வெளிக்கொண்டு வருவதுபோய், வெளியில் இருப்பதை உள்ளுக்குள் திணிக்கும் கல்வி முறை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறார். இப்படி பல்வேறு […]

Read more

சட்டச் சொல் அகராதி

சட்டச் சொல் அகராதி, வீ. சந்திரன், புத்தகப் பூங்கா, 17/9, சுந்தரேஸ்வரர் கோவில் தெரு, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 250ரூ. நீதிமன்றங்களில் வழக்காடும் தமது வக்கீல்கள் என்ன சொல்லி வாதாடுகிறார்கள் என்பது குறித்து அந்த வழக்குக்கு உரியவர்கள் புரிந்து கொள்ள முடியாத சூழ்நிலை இருக்கிறது. தற்போது சட்டத்துறையில் ஏற்பட்டுள்ள தமிழ் வளர்ச்சியின் காரணமாக, சட்ட நுணுக்கங்களை தமிழில் மொழிபெயர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. எதிர்காலத்தில், நீதிமன்றங்களில் தமிழில் வாதாடும் வழக்கறிஞர்களுக்கு தேவைப்படும் சட்டக்கலை சொற்களை அனைவருக்கும் பயன்படும் வகையில் தமிழில் வடிவமைத்துள்ளார் ஆசிரியர் […]

Read more

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்)

பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகள் (நான்கு தொகுதிகள்), பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை 108, முதல் தொகுதி 240ரூ, இரண்டாம் தொகுதி 280ரூ, மூன்றாம் தொகுதி 290ரூ, நான்காம் தொகுதி 260ரூ. தமிழர்களின் உள்ளத்தில் மொழியுணர்வு என்ற விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் பாவேந்தர் பாரதிதாசன், காலத்தால் அழிக்க முடியாத அவரது கவிதைகளை, இளம் தலைமுறையினருக்கு அவர் விட்டுச் சென்ற சொத்தாகவே கருதலாம். தமிழ் அழியுமானால் தமிழர் அழிவர் என வீராவேசமாக அவர் முழங்கிய பாக்கள், படித்தவர்களின் மனதில் உணர்ச்சிகளை தூண்டின. இந்த புரட்சி […]

Read more

காலச்சுவடுகள்

காலச்சுவடுகள், சாகித்திய அகாதெமி, குணா பில்டிங்ஸ், 443, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,சென்னை – 18, விலை: ரூ. 545. ஆந்திரா மாநிலம் தெலுங்கானப் பகுதியில் 50 ஆண்டுகளுக்கு முன்பு, விவசாயிகள் போராட்டம், சட்டங்கள் அமல்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகள், தனித்தெலுங்கானா மாநிலத்திற்கான கோரிக்கை போராட்டம் உட்பட பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடத்திருக்கின்றன. இந்தப் போராட்டங்களால் அப்பகுதி மக்களின் பொருளாதாரம், சமூக, அரசியல் சார்ந்த வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை விரிவாக விவரிப்பதே இந்த “காலச் சுவடுகள்” நாவல். நவீன் (எ) டொங்கரி மல்லய்யா தெலுங்கில் எழுதிய இந்த நாவலை […]

Read more

திருமந்திர நெறி

திருமந்திர நெறி, ஜி. வரதராஜன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக்கங்கள் 176, விலை 75ரூ நெறி என்றால் சமயக் கொள்கைக்காகவோ, தனிமனித ஒழுக்கத்துக்காகவோ ஏற்படுத்தப்பட்ட விதி அல்லது முறை எனப்படும். திருமூலர் தாம் அருளிய திருமந்திரம் வாயிலாக இத்தகைய வழிமுறைகளை அருளிச் செய்துள்ளார். பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாக உள்ளது திருமூலரின் திருமந்திரம்- திருமூலர் அருளிச்செய்த திருமந்திரம் தோத்திர நூலாகவும் சாத்திர நூலாகவும் திகழ்கிறது. எல்லா சமயங்களும் மதங்களும் இறைவனை அடைவதற்குரிய வழியாக அன்பையே வலியுறுத்திக் […]

Read more

மேஜர் ஜீவா

மேஜர் ஜீவா, எஸ். விஜயராஜ், பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை (பிராட்வே), சென்னை 108, விலை 325ரூ. கடமை உணர்ச்சி மிக்க நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியை கதைத் தலைவனாகக் கொண்ட நாவல். ஊழல்களை ஒழிக்கவும், மக்கள் நலனை பாதுகாக்கவும் அரசியல்வாதிகளுடனும், பணபலம் மிக்கவர்களுடனும் அவர் பெரும் போராட்டங்கள் நடத்தி வெற்றி பெறுகிறார். வேகமும், விறுவிறுப்பும் கொண்ட நடையில் கதையை நடத்திச் செல்கிறார் எஸ். விஜயராஜ். கதையைப் படிக்கும்போது, ஒரு அருமையான சினிமாப் பாடத்தைப் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேஜர் ஜீவா, […]

Read more

சரஸ்வதி – ஒரு நதியின் மறைவு

சோழர் வரலாறு, பூம்புகார் பதிப்பகம், 127, பிரகாசம் சாலை, பிராட்வே, சென்னை – 108, விலை 150 ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-636-4.html சோழர்கள் ஆட்சி நடத்திய காலம் தமிழ் நாட்டின் பொற்காலமாகும். தென்னிந்தியா முழுவதையும் சுமார் 300 ஆண்டுகள் சோழர்கள் ஆண்டனர். நாட்டில் அமைதி நிலவியது. கம்பர், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்ற புலவர்கள் சிறந்த நூல்களை எழுதி, தமிழை வளர்த்தனர். கல்வெட்டுகள், செப்பேடுகள் முதலியவற்றை ஆராய்ந்த, சோழர் வரலாற்றை சிறப்புடன் எழுதியுள்ளார், டாக்டர் மா. இராசமாணிக்கனார். அவர் […]

Read more

குண்டலகேசி

அவஸ்தை – கன்னட நாவல், யு. ஆர். அனந்தமூர்த்தி, காலச்சுவடு பதிப்பகம், பக்கம் 207, விலை 150ரூ. கன்னட இலக்கிய உலகில் மரியாதைக்குரிய ஒரு இலக்கியவாதி, யு. ஆர். அனந்த மூர்த்தி. ஞானபீடம் உள்ளிட்ட, பல பெரிய இலக்கிய அமைப்புகளிடமிருந்து விருதுகளும் பரிசுகளும் பெற்றவர். இவருடைய சமஸ்கர, பாரதிபுர என்ற இரண்டு புதினங்களும், இந்திய மற்றும் சர்வதேச மொழிகளில் மாற்றம் பெற்றுள்ளன. இவருடைய ‘அவஸ்தை’ என்ற நாவலை நஞ்சுண்டன் மொழி பெயர்ப்பில் காலச்சுவடு கிளாசிக் நாவல் வரிசை வெளியீடாக வந்துள்ளது. இதற்கு முன்னரே, வேறு ஒரு […]

Read more

1945ல் இப்படியெல்லாம் இருந்தது…

நினைவு அலைகள், டாக்டர் தி.சே.சவு. ராஜன், சந்தியா பதிப்பகம், பக்கங்கள் 352,விலை 225 ரூ. இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களில் மிகவும் மதித்துப் போற்றப்பட வேண்டியவர், இந்நூலின் ஆசிரியர் டாக்டர் தி.சே.சவு.ராஜன். 1947ல் வெளிவந்த பதிப்பிற்குப்பின், தற்போதுதான் இந்நூல் வெளிவந்துள்ளது. ராஜனின் சுயசரிதையாக இந்நூல் இருப்பினும், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட பலரின் நிகழ்வுகளும் உள்ளன. அக்கால சிறைக் கொடுமை குறித்தும், தேர்தல் குறித்தும், ஹரிஜன சேவை குறித்தும், அவர் எழுதியுள்ள நிகழ்வுகள், படிக்கப்படிக்க, ஒரு நாவலைப் படிக்கும் விறுவிறுப்புடன் உள்ளன. நூலிற்கு, கல்கி எழுதியுள்ள முன்னுரை […]

Read more
1 7 8 9