ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள்

ஜே.பி.சந்திரபாபு திரையிசைப் பாடல்கள், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக்.168, விலை ரூ.125. ஒரு சிலர் குறித்து எத்தனை புத்தகங்கள் வெளிவந்தாலும் அத்தனையும் வாசகர்களின் வரவேற்பைப் பெறும். அவர்கள் குறித்த சம்பவங்களும், செயல்பாடுகளும் ஏற்படுத்தும் வியப்பு அத்தகையவை. மக்கள் மனதில் அவர்கள் ஏற்படுத்தியிருக்கும் தாக்கமும் அதற்குக் காரணம். அந்தப் பட்டியலில் இடம் பெற்றவர்களில் ஒருவர் நகைச்சுவை நடிகராகவும், பாடகராகவும் தமிழகத்தால் கொண்டாடப்படும் ஜே.பி.சந்திரபாபு. சந்திரபாபு நடித்த திரைப்படங்கள் 70. அதில் 25 திரைப்படங்களில் அவரது பாடல்கள் இடம் பெறவில்லை. 45 படங்களில் 65 பாடல்களைப் பாடியிருக்கிறார். […]

Read more

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள்

எஸ்.எஸ்.இராஜேந்திரன்-திரைப்பட ஆளுமைகள், பொன்.செல்லமுத்து, வைகுந்த் பதிப்பகம், பக். 448, விலை ரூ.450. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் நடித்துள்ள 81 திரைப்படங்களின் முழு விவரங்கள் அடங்கிய ஆவணம் இந்நூல். எம்.ஜி.ஆருடன் எஸ்.எஸ்.ஆர். 2 படங்கள் (ராஜா தேசிங்கு, காஞ்சித் தலைவன்), சிவாஜியுடன் 16 படங்கள், ஜெமினியுடன் 2 படங்கள் (குலவிளக்கு, வைராக்கியம்), விஜயகுமாரியுடன் 32 படங்கள் மற்றும் முத்துராமன், பிரேம் நஸீர் உடனும் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். இயக்குநர்கள் ஏ.பீம்சிங், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன், முக்தா சீனிவாசன் போன்றவர்களின் முதல் பட நாயகனாக எஸ்.எஸ்.ஆர். நடித்துள்ளார். அவர் இயக்கி நடித்த […]

Read more

திரையெனும் கடலில் பாடலெனும் படகோட்டி

திரையெனும் கடலில்பாடலெனும் படகோட்டி, பொன் செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. தமிழ்த் திரைப்பட உலகில் பாடலாசிரியராக இருந்து கோலோச்சியவர்களில் குறிப்பிடத்தக்கவரான கவிஞர் வாலி, கன்னட நடிகரும் இயக்குனருமான டி.கெம்பராஜ் அர்ஸ் மூலமாக திரைப்பட உலகுக்கு அறிமுகம் ஆனவர் என்ற தகவல் உள்பட, கவிஞர் வாலி தொடர்பான பல ருசிகர செய்திகளை இந்த நூல் தருகிறது. கவிஞர் வாலி, 1959ம் ஆண்டு முதல் 1980ம் ஆண்டு வரை 22 ஆண்டுகள் 297 படங்களுக்கு திரைப்படப் பாடல்கள் எழுதினார் என்று கூறி அந்தப் பாடல்கள் அனைத்தையும் […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்,  தொகுதி -3, பொன்.செல்லமுத்து,  மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. ‘சினிமா எக்ஸ்பிரஸ்‘ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க […]

Read more

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல்

வெள்ளித்திரையில் அள்ளிய புதையல், பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், பக். 544, விலை 500ரூ. இந்த நூல், தமிழ்த் திரைப்படப் பாடல்களை சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தலைப்புகளில் இனம் பிரித்து தொகுத்தளித்திருக்கிறது. நூலாசிரியரின் கடின உழைப்பு ஒவ்வொரு பக்கத்திலும் பளிச்சிடுகிறது. ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த நூலின், பொருளடக்கத்தில் உள்ள தலைப்புகளைப் படிப்பதுவே ஒரு சுவையான அனுபவமாகத்தான் இருக்கிறது. பல தலைப்புகளை உட்பிரிவாகவும் பிரித்து, அதில் அடங்கக்கூடிய பாடல்களையும் பட்டியலிட்டிருக்கிறார் ஆசிரியர். உதாரணமாக இசைக்கருவிகள் என்ற தலைப்பில் தோல் இசைக்கருவிகள், துளை இசைக்கருவிகள், நரம்பு இசைக்கருவிகள், […]

Read more