மனநலமே உடல்நலம்

மனநலமே உடல்நலம், முனைவர் சசி. வின்சென்ட், வைகறை பதிப்பகம், விலை 50ரூ. உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனம் சீராக இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்க முடியும். அலைபாயும், அச்சப்படும் மனதை ஒரு நிலைப்படுத்தி, சங்கடங்களை சமாளிக்க வழிகாட்டும் புத்தகம். நன்றி: குமுதம், 13/6/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://www.nhm.in/shop/1000000026852.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

மலர்களே கொஞ்சம் மலருங்கள்

மலர்களே கொஞ்சம் மலருங்கள், சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள், லூர்து எஸ்.ராஜ், வைகறை பதிப்பகம், விலை 40ரூ. பூக்கள் குறித்த அறிவியல் சார்ந்த விஷயங்கள், வித்தியாசமான கதை பாணியில் சொல்லப்படுகின்றன. மாணவர்கள் மனதில் எளிதில் இடம்பிடித்து மணம் வீசும். நன்றி: குமுதம், 28/3/2018.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

சருகுகள்

சருகுகள், போசு, டினோ, பெர்லின், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வீழ்ந்த பிறகும் நிலத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கவும் தன்னை உருவாக்கிய மரத்திற்கே உரமாகவும் உருமாறும் சருகுகளின் பங்கு அதிகம். இதை அடிநாதமாகக் கொண்டு 18 சமூகப் பிரச்னைகளை இந்நூலில் நாடகவடிவில் அலசியிருக்கிறார்கள் மூன்று இளைஞர்கள். விழிப்பூட்டும் சிந்தனை நாடகங்கள். நன்றி: குமுதம், 22/2/2017.

Read more

உள்ளங்கையில் உலகம்

உள்ளங்கையில் உலகம், அ.ஸ்டீபன், வைகறை பதிப்பகம், பக். 64, விலை 40ரூ. உலகில் நடக்கும் எந்த விஷயமாக இருந்தாலும் – அது குடும்பம், உறவு, நட்பு, எதிர்ப்பு, நீதி, மனிதநேயம், நாடுகள் பற்றிய சர்ச்சை, தகவல் பரிமாற்றங்கள், அண்மையில் நிகழ்ந்த காவிரி பிரச்னை என்று அனைத்தையும் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும் வசதியை ஊடகங்கள் தந்துவிட்டன. ஆனால் அந்த ஊடகங்கள் குறித்த சரியான புரிந்துணர்வு இல்லை. அதை கற்பிக்கும் நூல் இது. நன்றி: குமுதம், 28/9/2016.

Read more

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்குத் தெரியுமா?, எஸ். சிதம்பரதாணுப்பிள்ளை, சித்தா மெடிக்கல் லிட்ரேச்சர் ரிசர்ச் சென்டர் வெளியீடு, பக். 158, விலை 100ரூ. பல நூல்களில் செய்தித்தாள்களில் வெளிவந்த செய்திகளின் சேகரிப்பு என்றாலும் பல கருத்துகள் படிக்க பயனுள்ளவையாக உள்ளன. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 8/2/2016.     —- துடுப்பும் தூரிகையும், முனைவர் செ. வில்சன், வைகறை பதிப்பகம், பக். 128, விலை 65ரூ. வாழ்க்கைக்கு வழிகாட்டும் வாழ்வியல் சிந்தனைகளைக் கொண்ட தொகுப்பு நூல். குறிப்பாக நம் மனதில் குடிகொண்டிருக்கும் தாழ்வு மனப்பான்மையை உடைத்தெடுக்கும் நூல். […]

Read more

பிருகு சம்ஹிதா

பிருகு சம்ஹிதா, தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன், குமரன் பதிப்பகம், விலை பிருகு சம்ஹிதா ரூ.500, விவாக தீபிகா ரூ.400. இந்து ஜோதிடத்தின் தந்தையாக விளங்கும் பிருகு மகரிஷியின் ஜோதிட நூல், “பிருகு சம்ஹிதா”. இந்த நூலை தமிழில் எட்டயபுரம் க. கோபி கிருஷ்ணன் மொழி பெயர்த்துள்ளார். வடமொழியில் உள்ள மகரிஷியின் ஜோதிடக் கருத்துகளை தமிழ் மரபுக்கேற்ற வகையில், எல்லோருக்கும் புரியும் வகையில் எளிமையாக எழுதியுள்ளார். 12 ராசிக்குரிய பலன்கள் இதில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1,296 லக்ன பாவ பலன்களை உள்ளடக்கியது. இதே ஆசிரியர் […]

Read more

நான் வந்த பாதை

நான் வந்த பாதை, எஸ்.எஸ். ராஜேந்திரன், அகநி வெளியீடு, வந்தவாசி, விலை 500ரூ. இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆரின் சுயசரிதம் இந்நூல். தமிழக வரலாற்றில் ஒரு நூற்றாண்டு கலை, அரசியலைப் புரிந்து கொள்வதற்கு, அவரது வாழ்வியல் அனுபவங்களுடன் சொல்லப்படும் இந்நூல் உதவக்கூடும். அவரது இளம்பிராயம், அவர் பிறந்த ஊர், படித்த பள்ளி, நாடக ஆர்வத்தைத் தூண்டிய ஆசிரியர்கள், நாடகம் பயின்ற மதுரை பாய்ஸ் கம்பெனி,  அவரது அரசியல் பயணம் என்று எல்லாவற்றையும் படிப்பவர் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். பெரியார், அண்ணா, என்.எஸ்.கே., எம்.ஆர்.ராதா, கருணாநிதி போன்றோருடனான […]

Read more

அங்கீகாரம்

அங்கீகாரம், கலைமாமணி பி.ஆர். துரை, சந்திரிகா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.   To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-274-7.html ஒண்ணாம் வகுப்பு மட்டுமே படித்த சினிமா மற்றும் நாடகக் கலைஞரான துரை, தன் 55 ஆண்டுகால கலையுலக அனுபவங்களை வாழ்க்கை வரலாறாக வடித்திருக்கிறார். மேடை நாடகம், திரைப்படம், டி.வி. நாடகம், டப்பிங் தொடர், வானொலி நாடகம், கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் என்று பல்வேறு பரிமாணங்களில் அவர் ஆற்றிய பணிகள் பிரமிப்பு. மோட்டார் சுந்தரம் பிள்ளை, புது […]

Read more

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத்

வளர்ச்சிப் பாதையில் மோடியின் குஜராத், என்.எஸ். அப்துல் ஜலீல், சிராக் ஃபவுன்டேஷன் ட்ரஸ்ட், சென்னை, விலை 150ரூ. குஜராத்தில் நரேந்திர மோடியின் ஆட்சியில் மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகச் சொல்லப்படுவதை மறுத்து கல்வி, விவசாயம், கிராம முன்னேற்றம், ஒடுக்கப்பட்டோர் நிலையை ஆதாரங்களுடனும் புள்ளி விவரங்களுடனும் விளக்குகிறது இந்நூல். ஆனால் நூலின் தலைப்பு உள்ளடக்கத்திற்கு எதிரானதுபோல் உள்ளது. நன்றி: இந்தியா டுடே, 4/6/2014.   —- மழைக்காடுகளின் மரணம், நக்கீரன், பூவுலகின் நண்பர்கள், சென்னை, விலை 20ரூ. காடுகள் குறித்த ஒரு விரிவான பார்9வையை அளிக்கிறது இந்நூல். […]

Read more
1 2