இதழியல் நுணுக்கங்கள்

இதழியல் நுணுக்கங்கள், எஸ்.ஸ்ரீகுமார், என்.கிருஷ்ணன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 280ரூ. ஊடகங்களில் பணிபுரிய இப்போது பலரும் ஆர்வம் காட்டும் நிலையில், அவர்களுக்கு வழிகாட்டியாக இந்த நூல் அமைந்து இருக்கிறது. செய்திகளை சேகரிப்பது, துணை ஆசிரியர், செய்தி ஆசிரியர் ஆகியோரின் பணிகள் என்ன? சிறப்புக் கட்டுரை, பேட்டிக் கட்டுரை ஆகியவற்றை எழுதும் முறை, பத்திரிகை தொடர்புடைய சட்டங்கள், தமிழகத்தில் இதழியல் வளர்ந்த வரலாறு போன்றவற்றையும் இந்த நூல் தாங்கி இருப்பதால், இதழியல் பயில்வோருக்கு மிக்க பயன் உள்ளதாக இருக்கும். நன்றி: தினத்தந்தி, 21/2/21 இந்தப் […]

Read more

இந்துமத இணைப்பு விளக்கம்

இந்துமத இணைப்பு விளக்கம்,  கே.ஆறுமுக நாவலர், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,  பக்.208, விலை ரூ.200.  இந்து மதம் என்றால் என்ன? இந்து மதத்தின் வேத, புராண, சாத்திர, இதிகாச நூல்கள் எவையெவை? இந்து மதத்தில் உட்பிரிவுகள் எத்தனை? துவைதம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம் இவற்றுக்கு இடையே என்ன வேறுபாடு? ஆலயம் அமைக்கும் முறை, திருவிழாக்களின் தத்துவம் என்ன – இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அமைந்துள்ளது இந்நூல். நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆகமங்கள், 14 சைவ சித்தாந்த சாத்திரங்கள், நாலாயிர திவ்விய பிரபந்தம், ராமாயணம், மகாபாரதம் […]

Read more

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள்

தமிழக சாவகக் கலைத் தொடர்புகள், சாத்தான்குளம் அ.இராகவன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.168, விலை ரூ.150.  பண்டைக்காலத்தில் இந்தியாவுக்குத் தெற்கே, இந்து மகாசமுத்திரத்தில் பூமியின் நடுக்கோடு வரை பரவிக் கிடந்த ஒரு மாபெரும் நிலப்பரப்பு சாவக நாடு. அது தமிழகம் அல்லது லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதியாகும். கடல்கோள்களால் இந்நிலப் பரப்பின் பெரும்பகுதி அழிந்தது போக, சிதறுண்ட தீவுகளில் ஒன்றாக இன்றைய சாவகத் தீவு (ஜாவா) உள்ளது. இத்தீவு பண்டைய தமிழகத்தின் தொடர்ச்சி என்பதை மெய்ப்பிக்கும் வகையில் பல சான்றுகள் […]

Read more

தமிழ்மந்திரம்

தமிழ்மந்திரம், பாலூர் கண்ணப்ப முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 275ரூ. உலகிற்கே ஒரு மந்திரம் திருமந்திரம். மந்திரத்திற்குரியது சமஸ்கிருதம் மட்டுமே எனும் கூற்றைப் பொய்யாக்கிய ஒரே மந்திரம், திருமூலர் இயற்றிய திருமந்திரம். திருக்குறளும், திருமந்திரமும், திருவாசகமும் தமிழின் ஞானக்கருவூலங்கள். புலமைக் கடலாகவும், சாத்திர ஞானச்செறிவு உடையவராகவும் திகழ்ந்த பாலுார் கண்ணப்ப முதலியார், இந்நுாலுக்கு விளக்கவுரை எழுதியுள்ளார். சைவப்பெரியார்கள் வகுத்தவாறு, 10ம் திருமுறையாகத் திகழும் திருமந்திர நுாலில் உள்ள, 304 திருமந்திரங்களும், திருமூலர் பாடியதாகக் கருதப்படும் வயித்தியப் பகுதி நுாலிலிருந்து, 25 மந்திரங்களும் விளக்கத்துடன் […]

Read more

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், அ.பழனிசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 152, விலை 100ரூ. குமரகுருபரர் அருளிய மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் சொற்சுவை, பொருட்சுவை, கற்பனை, வருணனை கொண்ட சிற்றிலக்கியமாகும். ஏனைய பிள்ளைத் தமிழ் நுால்களை விட, இது பலராலும் போற்றப்படும் சிறப்பிற்குரியது. இதற்கு, இந்நுாலாசிரியர் பழனிசாமி மிக எளிமையாகவும், தெளிவாகவும் பொருள் விளங்கக்கூடிய வகையில் உரை எழுதியுள்ளார். மேலோட்டமாகப் பொருள் கூறாமல், தாம் தமிழ்ச் சுவையில் கரைந்து உரை வரைந்துள்ளார். ‘பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற பச்சைப்பசுங் கொண்டலே’ என்ற அடிகளுக்கு, எளிய […]

Read more

கம்பரச ஆராய்ச்சி

கம்பரச ஆராய்ச்சி, கு. பாலசந்திர முதலியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 160, விலை 150ரூ. கடந்த, 1949ல் அண்ணாதுரை எழுதிய, ‘கம்பரசம்’ என்ற நுாலுக்கு மறுப்பு நுாலாக வெளிவந்த இந்த நுால் ஒரு மறுபதிப்பாகும். எதிர்வினைத் திறனாய்வு செய்ய சரியான சான்றுகளும், தரவுகளும் வேண்டும். அப்போது தான், ஒருவர் கூறியுள்ள கருத்திற்கு மறுப்பான கருத்தை முன்வைக்க முடியும். இந்த நுால், அண்ணாதுரை எழுதிய கம்பரசத்தை அடி முதல், நுனி வரை ஆழ்ந்து படித்து ஆராய்ந்து, தம் கருத்தை நுாலாசிரியர் தடை விடைகளால் பதிவு […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்,எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக்.448; ரூ.420; வைணவ தத்துவம், வைணவத் திருத்தலங்கள் பற்றிய இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது. முதற்பகுதியில் வைணவ தத்துவம் பற்றிய விளக்கம், வைணவ ஆகமங்கள், வைணவத்தின் சடங்குகளும் மந்திரங்களும், வைண விழாக்கள், ஆலய வழிபாடுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. இரண்டாம் பகுதியில் திருவரங்கம்,திருக்குடந்தை, திருநந்திபுர விண்ணகரம், திருவெள்ளியங்குடி, திருக்கச்சி, திருநின்றவூர், காஞ்சிபுரம், திருநீர்மலை, திருப்பதி, திருப்புலியூர் உள்ளிட்ட 108 வைணவத் திருப்பதிகளைப் பற்றி விரிவான தகவல்களைக் கூறுகின்றன. ஒவ்வொரு திருப்பதியின் முக்கியத்துவம், மூலவர், உற்சவர், தாயார், […]

Read more

சத்திய வெள்ளம்

சத்திய வெள்ளம், நா.பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 384, விலை 250ரூ. சில நூல்கள் பொழுது போக்குவதற்கு மட்டும் பயன்படும். சில நூல்கள் நம் சிந்தனையைத் தூண்டி அறிவு பெற உதவும். சில நூல்கள் சில காலத்திற்கு மட்டுமே பொருந்தும். சில நூல்கள் எக்காலத்திற்கும் பொருந்தும். சத்திய வெள்ளம் என்ற இந்நூல் எக்காலத்திற்கும் பயன்படும் நூலாக அமைந்துள்ளது. பல்கலைக்கழக மாணவ மாணவியரின் மன உணர்ச்சிகளையும் சமுதாயத்திற்கு அவர்களின் பங்களிப்பு குறித்தும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலின் சில முத்தான கருத்துக்களைப் படித்தாலே நூலின் பெருமை […]

Read more

வைணவமும் வைணவத் திருத்தலங்களும்

வைணவமும் வைணவத் திருத்தலங்களும், எஸ்.ஸ்ரீகுமார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 420ரூ. உலகின் மிகப் பழமையான சமயங்களில் ஒன்றான வைணவ சமயத்தின் தனித்துவங்கள், அவை தொடர்பான விழாக்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள், ஆலய வழிபாடு, பன்னிரு ஆழ்வார்கள், வைணவ பெரியோர்கள், குரு பரம்பரை ஆகிய அனைத்தும் மிக விரிவாக இந்த நூலில் தரப்பட்டுள்ளன. அத்துடன் ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்கள், அவை தொடர்பான வரலாறு, அந்த ஆலயங்கள் அமைந்து இருக்கும் இடம், அவற்றுக்கு எப்படிச் செல்வது என்பது போன்ற அனைத்து பயனுள்ள தகவல்களும் இதில் […]

Read more

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க

அறிவியல் தொழில் நுட்பம் பற்றி அறியலாம் வாங்க, பொறிஞர் எஸ்.சுந்தரம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. உலகத்தின் எந்த ஒரு பகுதியையும் ஓரிரு மணித் துளிகளில் தொடர்பு கொள்ளும் நிலை இன்று உருவாகியுள்ளது. இந்த சூழலில், நம்மை சூழ்ந்துள்ள இயற்கையான சுற்றுப்புறம், நாம் பயன்படுத்தும் தொழில் நுட்பம், நம் உடல் இயங்கும் முறை, அவற்றுள் பொதிந்து கிடக்கும் எண்ணற்ற அறிவியல் ரகசியங்கள் பற்றியும் அறிந்துகொள்ள உதவும் அற்புத நுால் இது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more
1 2 3 4 10