தொன்மைச் செம்மொழி

தொன்மைச் செம்மொழி, பேராசிரியர் க. முத்துசாமி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 256, விலை 190ரூ. பண்டைத் தமிழின் பெருமை. குமரிக் கண்டம் இருந்தது என்பதைக் கிரந்த ஆகமம் தெரிவிக்கிறது என்றும், அந்தக் கண்டம் மூன்று பிரிவுகளாக இருந்தது என்றும் இந்த நூலின் முதல் கட்டுரை தெரிவிக்கிறது. குமரி, ஆறு, குமரி மலை, பறுளி ஆறு பற்றியும், சிவன், திருமால், காளி முதலான வழிபாடு பற்றியும் தெரிவிக்கும் செய்திகள் நம் காதில் தேனாகப் பாய்கின்றன. தொல் தமிழ் எழுத்து தான் பிராமி எழுத்து என்றும் […]

Read more

சேதுபதியின் காதலி

சேதுபதியின் காதலி, எஸ்.எம். கமலா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 150ரூ. கி.பி. 1710 முதல் 1728 வரை சேது நாட்டை ஆண்ட முத்து விசய ரகுநாத சேதுபதியின் வாழ்வியல் நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்ட வரலாற்று புதினம். மன்னரது பண்பு நலன், கொடை, வீரம், கலைப்பணிகள் ஆகியவற்றை இப்புதினத்தின் வழியாக புலப்படுத்தியுள்ளார் நூலாசிரியர் எஸ்.எம். கமலா. நன்றி: தினத்தந்தி, 14/9/2016

Read more

மாந்தரீகச் சித்தர்கள்

மாந்தரீகச் சித்தர்கள், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பதினெண் சித்தர்கள் பற்றி இந்த ஒரே புத்தகத்தில் முழு விவரங்களையும் கொடுத்துள்ளார் ஜெகாதா. மச்சமுனி, சட்டமுனி, அகப்பைமுனி ஆகியோருக்கு தலா 10 மனைவிகள். குதம்பை, தன்வந்தரி ஆகியோருக்கு தலா 16 மனைவிகள். போகருக்கு மனைவியரும், குழந்தைகளும் ‘கணக்கில் அடங்காதவர்கள்’ என்று குறிப்பிடுகிறார் ஆசிரியர். சித்தர்களின் தாய், தந்தை, குரு, சாதி, தலைமுறை, பிறந்த நட்சத்திரம் முதலிய விவரங்களம் உள்ளன. நன்றி: தினத்தந்தி, 24/8/2016.

Read more

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள்

தமிழில் விமர்சனக் கலை – விமர்சனத்தின் எல்லைகள், எம்.ஆர். ரகுநாதன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 104, விலை 65ரூ. இலக்கிய விமர்சனம் குறித்த ஆழமான கருத்துகள் அடங்கிய நூல். எவ்வாறு விமர்சனம் அமைய வேண்டும்? என்பதை விளக்கும் நூலாசிரியர், கலை, இலக்கியங்களின் தோற்றம், இலக்கியம் படைப்பவரின் அனுபவம், அறிவு, அவருடைய வாழ்க்கைப் பார்வைக்கும், இலக்கியத்துக்கும் இடையிலான உறவு, இலக்கியத்தின் உள்ளடக்கத்துக்கும் அதன் வடிவத்துக்குமான தொடர்பு, ஓர் இலக்கியம் உருவான காலம், சமூகப் பின்னணி, வாசகர்களிடம் அது ஏற்படுத்தும் தாக்கம் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதாக […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. நினைவில் புரளும் ஜே.கே. ஜெயகாந்தன் தொடர்பான அநேக நூல்கள் தமிழ்ச் சூழலில் வந்து கொண்டேயிருக்கின்றன. அப்படியொரு நூலான இது பெருங்கடலில் ஒரு தனித் துளியாகச் சேர்ந்திருக்கிறது. ஜெயகாந்தனுடனான நேரடி உரையாடல், தகவல்கள், ருசிகரச் சம்பவங்கள் ஆகியவற்றின் வழியே ஒரு சித்திரத்தைத் தீட்டுகிறார் நூலாசிரியர் நவபாரதி. ஜெயகாந்தனின் கதை உலகம் பற்றிய பார்வைகள், விமர்சனங்கள், சக எழுத்துக்கும் ஜே.கே.வின் எழுத்துக்குமான ஒப்பிடல்கள் என ஒரு நீண்ட கட்டுரையும் நூலில் இடம் பெறுகிறது. ஜே.கே. மறைந்து […]

Read more

ஜெயகாந்தனின் பர்ணசாலை

ஜெயகாந்தனின் பர்ணசாலை, நவபாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 100ரூ. சிறுகதை, நாவல் இலக்கிய உலகில் சிகரம் தொட்டவர், ஜெயகாந்தன். நண்பர்களால் அவர் ‘ஜே.கே.’ என்று அன்புடன் அழைக்கப்பட்டார். ஜெயகாந்தனின் கே.கே. நகர் வீட்டு மாடியில் நண்பர்கள் கூடி அடிக்கடி கூடி விவாதிப்பது வழக்கம். அந்த இடத்தை ‘பர்ணசாலை’ என்று அழைத்தனர். ஜெயகாந்தனோடு 50 ஆண்டுக் காலம் பழகிய எழுத்தாளர் நவபாரதி, அவரோடு பகிர்ந்து கொண்ட எண்ணங்கள், அவரிடம் இருந்து பெற்ற அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்து இருக்கிறார். மேலும் அவரது சிறுகதைகள் […]

Read more

யோசிக்கும் வேளையில்

யோசிக்கும் வேளையில், ஜெயகாந்தன், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 45ரூ. 80களில் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. சமூக அவலங்களை தனது பாணியில் சாடியிருக்கிறார். 5-ம் வகுப்பில் மூன்றுமுறை தான், பின்தங்கிய உண்மையை ஒப்புக் கொண்டுள்ள அவர் உழைப்பும் கல்வியும் என்னும் கட்டுரையில் தனது குடும்ப பின்னணி குறித்து மனம் திறந்து எழுதியிருப்பது பாராட்டத்தக்கது. நன்றி: தினத்தந்தி, 27/4/2016.   —- உணவுப்பொருள் தயாரிப்பு சட்டங்களும், கலப்படத் தடுப்புச் சட்டங்களும், வழக்கறிஞர் எஸ்.சேஷாச்சலம், நர்மதா பதிப்பகம், விலை 80ரூ. உணவுப் பொருள் […]

Read more

கடல்களும் கண்டங்களும்

கடல்களும் கண்டங்களும், வாண்டுமாமா, கவிதா பப்ளிகேஷன்ஸ், விலை 180ரூ. அறிவியல் நூல்களை எழுதுவதில் புகழ் பெற்ற “வாண்டுமாமா” எழுதிய நூல் “கடல்களும் கண்டங்களும்”. “உலகம் உருண்டையானது அல்ல; தட்டையானது” என்று மக்கள் நினைத்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் அஞ்சா நெஞ்சம் படைத்த சிலர் கடலின் சீற்றத்தைப் பொருட்படுத்தாமல் கப்பலில் பயணம் செய்து, புதிய நாடுகளைக் கண்டுபிடித்தனர். அவர்களில், அமெரிக்காவைக் கண்டு பிடித்த கொலம்பஸ், இந்தியாவுக்கு கடல் மார்க்கத்தை கண்டு பிடித்த வாஸ்கோடகாமா, ஆஸ்திரேலியாவைக் கண்டுபிடித்த கேப்டன் குக், கனடாவை கண்டுபிடித்த ஜான் கபாட் உள்பட 14 […]

Read more

தென்மொழி

தென்மொழி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், விலை 75ரூ. பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரை தமிழ், ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், மலையாளம் என்னும் 5 மொழிகளில் படிக்கவும், பேசவும், எழுதவும் வல்லமை பெற்று விளங்கியவர். அவரது ஆராய்சித் திறனாலும், நுண்பொருளை மிக எளிதாக உணர்ந்து பிறருக்கு உணர்த்தும் பிண்பாலும், ஈர்த்த தனது எளிய நடையாலும் “தென்மொழி” என்னும் இந்நூலைத் தந்துள்ளார். தமிழ் மொழி எவ்வளவு பழமையானது, உலக மொழிகளில் தலைமை தாங்கும் பண்புடையது, உயர் தனிச் செம்மொழிகளில் உயிருடன் இயங்கி வரும் தனிச்சிறப்பும் பெற்றது போன்ற […]

Read more

ராணி மங்கம்மாள்

ராணி மங்கம்மாள், (சரித்திர நாவல்), நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 176, விலை 100ரூ. தென்னாட்டின் ஒரே பெண்ணரசியாக, வீரதீர பெண்மணியாக வாழ்ந்து வரலாற்றில் இடம் பிடித்து இன்றளவும் மக்கள் மனதில் அபிமானத்தைப் பிடித்திருப்பவர் ராணி மங்கம்மாள். கணவனை இழந்த பிறகு தன் திறமையாலும், புத்திசாதுர்யத்தாலும் பதினெட்டு ஆண்டு காலம் சிறப்பாக மதுரையை ஆண்ட அவருயை தீரத்தை அழகாக எடுத்துரைக்கிறது ‘ராணி மங்கம்மாள்’ வரலாற்று நாவல். மேலும் ராணி மங்கம்மாள் செய்த தான தருமங்களையும் எடுத்துரைக்கிறது. மறவர் நாட்டு மன்னர் கிழவன் […]

Read more
1 2 3 4 5 6 10