ஜெகாதா குறுநாவல்கள்

ஜெகாதா குறுநாவல்கள், ஜெகாதா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 608, விலை 380ரூ. ஜெயகாந்தனை துரோணராக வரித்துக்கொண்ட ஜெகாதா (ஜெயகாந்தன்தாசன்) என்ற ஏகலைவன், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி உச்சியைத் தொட்டிருக்கிறார். ஜெகாதாவின், 18 நீள் கதைகளைக் கொண்ட தொகுதி இது. ‘அவ்வளவு பெய்த மழையிலும் நிலவு நனையாமல் பளீரிடுவதைப் பார்த்தாள். ஒளியேற்றிய கற்கண்டுக் கட்டிகளாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன’ என்பது போன்ற வர்ணனைகள் நம்மை, உற்சாகப்படுத்துகின்றன. ராமேஸ்வரம் சங்கு குளித் தொழிலாளர் பிரச்னைகளைச் சித்தரிக்கும், ‘சமுத்திர குமாரர்கள்’, கந்து வட்டிக்குக் கடன் […]

Read more

பத்துப்பாட்டு பொருளடைவு

பத்துப்பாட்டு பொருளடைவு, ச.பொ.சீனிவாசன், சேகர் பதிப்பகம், விலை 350ரூ. தமிழின் உயிர்நிலை இலக்கியங்களாக திகழ்வன சங்க இலக்கியங்கள். தமிர் மொழிக்கு செம்மொழி தகுதியையும், நிலைபேற்றையும் பெற்றுத்தந்த பெருமை, சங்க இலக்கியங்களுக்கு உண்டு. சங்க இலக்கியங்களை பொதுவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆய்வு செய்த அதிகமான நூல்கள் வெளிவந்துள்ளன. அவை போதுமானதாக இல்லை. தவிர, சொல்லடைவுகள், சொல், பொருள், வருமிடம் இலக்கணக் குறிப்பு இவற்றோடு நின்றுவிடுகின்றன. இத்தகைய தரவுகளின் தேவையை மனதில் கொண்டு எழுதப்பட்டுள்ள நூல்தான் “பத்துப்பாட்டு – பொருளடைவு” என்னும் ஆய்வு நூல். நன்றி: தினத்தந்தி, […]

Read more

சுந்தரி

சுந்தரி, வ.ரா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 150ரூ. தமிழ் வசன நடையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய முன்னோடியும் மணிக்கொடி ஆசிரியருமான வ.ரா. எழுதிய நான்கு நாவல்களில் இதுவும் ஒன்று. சுந்தரி ஓர் அற்புதமான நவ இலக்கிய பொக்கிஷம். எனக்கு இலக்கியப் பிரக்ஞை ஓரளவு உண்டானதாக நான் மதிக்கும் காலத்துக்குப் பின்பு, ஒரே மூச்சாய்ப் படித்து முடித்த நாவல்கள் நாலே நாலுதான். அதில் ஒன்று சுந்தரி என்ற நூலுக்கு முன்னுரை அளித்துள்ள தி.ஐ.ர. குறிப்பிட்டுள்ளார். நாவலில் வரும் அத்தனை பாத்திரங்களும் உயிர் […]

Read more

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள்

காந்திஜி நேதாஜி கடிதத் தொடர்புகள், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, விலை 90ரூ. சுதந்திரப் போராட்டத்தை அகிம்சை வழியில் மகாத்மா காந்தி நடத்திக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தினால்தான் சுதந்திரம் பெறமுடியும் என்று கருதினார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் நேதாஜி வெற்றி பெற, காந்தியின் வேட்பாளர் பட்டாபி சீத்தா ராமையா தோல்வி அடைந்தார். பட்டாபியின் தோல்வி, என் தோல்வி என்று காந்தி கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து காந்திக்கும், நேதாஜிக்கும் நடந்த கடிதப் […]

Read more

பல்லவர் வரலாறு

பல்லவர் வரலாறு,டாக்டர் மா. இராசமாணிக்கனார்,  ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000010375.html தமிழகத்தை ஆண்ட மன்னர்களில், பல்லவ மன்னர்கள் மற்றவர்களுக்குச் சளைத்தவர்கள் அல்லர். பல்லவர்கள் ஏழு நூற்றாண்டுகள் வரை தமிழ்நாட்டில் மன்னர்களாக ஆண்டு புகழ் பெற்றவர்கள். ஆனால் அவர்களுடைய பண்டைக்குலம், இன்னதென்று உறுதியாகக் கூறுவார் எவருமிலர். அவர்களது ஆட்சிக்காலத்தில் அரிய பல சாதனைகள் நிகழ்த்தப்பட்டன என்பதை எவரும் மறுக்க முடியாது. குறிப்பாக பல்லவ மன்னர்களின் இறைப்பணி அனைவராலும் இன்றளவும் பாராட்டப்படுகிறது. இறைப்பணி என்றாலே […]

Read more

கௌடலீயம் பொருணூல்

கௌடலீயம் பொருணூல் (அர்த்த சாஸ்திரம் முதல் பகுதி), மொழிபெயர்ப்பாளர் மு. கதிரேசச் செட்டியார், ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, பக். 664, விலை 400ரூ. ஆட்சியியல் என்ற மையக் கருத்தின் அடிப்படையில், ராஜதந்திரி என்று அழைக்கப்படும் கௌடில்யரால் உருவாக்கப்பட்ட இந்நூல், அன்றைய இந்தியாவிலிருந்து பலதுறைசார் அறிவியலையும் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. அன்றைய இந்தியாவின் சிறந்த பகுதிகளை மட்டுமன்றி இருண்ட பக்கங்களையும் அறிய உதவுகிறது. அர்த்த சாஸ்திரத்தின் முதல் பகுதியான இந்நூலில் அரசியல், தொழிற்தலைவர் செயன்முறை, ஒற்றாடல், உழவிலா நிலத்தைப் பயனுற அமைத்தல், கடன் கோடல், தண்டக் […]

Read more

உணர்ச்சிகளின் ஊர்வலம்

உணர்ச்சிகளின் ஊர்வலம், நா. பார்த்தசாரதி, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை, விலை 65ரூ. வித்தியாசமான தலைப்பில் உணர்ச்சி பூர்வமாக எழுதப்பட்ட வரிகள் கொண்ட நாவல். பெண்ணின் மனநிலையை அற்புதமாக நூலாசிரியர் படம் பிடித்து காட்டியுள்ளார். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.   —-   நலமா? நலமே!, பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன், சென்னை, விலை 100ரூ. நடைப்பயிற்சி, எளிய உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, முத்திரை பயிற்சி, ஆசனங்கள், தியானம் போன்றவற்றில் ஈடுபட்டால் ஒரு மனிதன் நலமுடன் வாழ முடியும் என்பதை மருத்துவர் வே. வீரபாண்டியன் இந்த […]

Read more

கலீல் கிப்ரானின் காதல் கதை

கலீல் கிப்ரானின் காதல் கதை, ராஜ்ஜா, ஸ்ரீ செண்பகா பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. நீங்கள் மாதந்தோறும், 300 ரூபாய் செலவில் புத்தகங்கள் வாங்குகிறீர்கள். அந்த ரசீதை அரசிடம் கொடுத்தால், உங்களுக்குப் பணம் திரும்பக் கிடைத்துவிடும் என்றால் எப்படியிருக்கும்? ஹாலந்து நாட்டின் அரசு ஊழியர்களுக்கு, இப்படியொரு சலுகை வழங்கப்படுகிறது. தங்கள் நாட்டு மக்கள், படிப்பதில் ஆர்வம் குன்றாதிருக்க, புத்தக பதிப்பாளர்களுக்கு அவற்றை அச்சிட வேண்டிய காகிதத்தை, மிகக் குறைந்த விலைக்கு அளிக்கிறது. புத்தக விலையை ஏற்ற வேண்டிய அவசியமே அங்கு இல்லை. இப்படி […]

Read more

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2)

வெற்றிப் படிக்கட்டு (பாகம் 2), ஹெச். வசந்தகுமார், வசந்த அண்ட் கோ, சென்னை, பக். 194, விலை 150ரூ. தொழில் அதிபரும், காங்கிரஸ் பிரமுகருமான எச். வசந்த்குமார் தொலைக்காட்சியில் 5 நிமிட நேரம் சின்ன சின்ன குட்டிக்கதைகளைக் கூறி வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான வழிகளை எடுத்துரைத்தார். அவை இப்போது ‘வெற்றிப் படிகட்டு பாகம் 2’ என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. குழந்தைகள், இளைஞர்கள், பெரியவர்களைக் கவரும் வகையில் தன்னம்பிக்கைக் கதைகளை எளிய நடையில் எடுத்துச் சொல்கிறார். வெற்றிப் படிக்கட்டுகளுக்கு நம்மை அழைத்துச் செல்கிறார். வாழ்வில் […]

Read more

இரட்சணிய யாத்திரகம்

இரட்சணிய யாத்திரகம், பாரி நிலையம், சென்னை, விலை 500ரூ. கிறிஸ்தவ கம்பர் என்று அழைக்கப்படுகிற சிறப்பை பெற்றவர் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த எச்.ஏ. கிருட்டிணப்பிள்ளை. பிறப்பிலே வைணவராக இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறிய இவர் படைத்த இட்சணிய யாத்திரம் கிறிஸ்தவ இலக்கியங்களில் உன்னதமான இடத்தில் வைத்துப் போற்றப்படுகிறது. 3766 பாடல்களை கொண்டு, ஜான் பனியன் எழுதிய திருப்பயணிகள் முன்னேற்றம், சாமுவேல் பவுல் ஐயரின் மோட்சப் பிரயாணம், பைபிள் ஆகிய 3 நூல்களின் வழி நூலாக அழகு தமிழ் காப்பியமாக, இயேசு பிரானுக்கு மணி மகுடமாக […]

Read more
1 3 4 5 6 7 10