ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள்

ஏ.எம்.ராஜா ஜிக்கி திரையிசை பாடல்கள், தொகுப்பு ஜே,விஜயராகவன், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. தன்னுடைய குரல் வளத்தாலும், இசையாலும் 35 ஆண்டுகள் மக்கள் மனதில் கொடி கட்டிப்பறந்த பாடகரும், இசையமைப்பாளருமான ஏ.எம்.ராஜா, மற்றும் அவருடைய காதல் மனைவி ஜிக்கி என்கிற கிருஷ்ணவேணி ஆகிய இருவரும் தமிழ் திரையிசையில் எண்ணற்ற வெற்றி பாடல்களை தந்திருக்கிறார்கள். இவர்கள் இருவரின் வாழ்க்கை வரலாற்றையும், திரையிசையில் அவர்களின் பயணத்தையும் விரிவாக இந்த நூல் அலசுகிறது. இருவர் பற்றியும் அறிந்திடாத அரிய தகவல்களும், புகைப்படங்களும் இடம் பெற்றிருப்பது நூலின் தனி சிறப்பு. […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3)

திரையிசை வளர்த்த தமிழ்க்கவிகள் (தொகுதி 3), கவிஞர் பொன்.செல்லமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 250ரூ. திரைப்பட பாடலாசிரியர் மதுர பாஸ்கரதாஸ் தொடங்கி பஞ்சு அருணாசலம் வரை 100 பாடலாசிரியர்களையும், அவர்களின் படைப்புகளையும் முதல் தொகுதியில் ஆவணப்படுத்தி, 1963-1981 காலகட்டத்தில் பாடல்கள் எழுதிய 19 பேரையும், அவர்களின் பாடல்களையும் 2வது தொகுப்பில் ஆவணப்படுத்திவிட்டு, இந்த 3ம் தொகுதியை நூலாசிரியர் தந்து உள்ளார். இதில் எம்.ஜி.வல்லபன் தொடங்கி யுகபாரதி வரையில் 21 திரைப்பட பாடலாசிரியர்களின் வாழக்கைச்சுருக்கம், படைப்புகள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. திரைப்படத்துறைக்கு அப்பால் இருந்து ஒருவர், அதுவும் […]

Read more

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்

திரையிசை வளர்த்த தமிழ்க் கவிகள்,  தொகுதி -3, பொன்.செல்லமுத்து,  மணிவாசகர் பதிப்பகம், பக்.320, விலை ரூ.250. ‘சினிமா எக்ஸ்பிரஸ்‘ இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் நூல் வடிவம். ஏற்கெனவே இரண்டு தொகுதிகள் வெளிவந்திருக்கின்றன. இந்த மூன்றாம் தொகுதியில் 1979 இல் இருந்து 2001 வரை பாடல்கள் எழுதத் தொடங்கிய கவிஞர்களைப் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரு திரையிசைக் கவிஞர் எத்தனை படங்களுக்குப் பாடல்கள் எழுதியுள்ளார் என்பது ஆண்டு வரிசைப்படியும் அகரவரிசைப் படியும் கூறப்பட்டுள்ளது. கவிஞரைப் பற்றிய சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு, அவர் எழுதிய குறிப்பிடத்தக்க […]

Read more

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும்

வள்ளுவரும் வள்ளல் எம் ஜி ஆரும், மேகலா சித்ரவேல், மணிவாசகர் பதிப்பகம், விலை 125 ரூ. உலக தத்துவங்களை ஈரடி குறளில் எடுத்துரைக்கும் திருக்குறள் எனும் உன்னத படைப்பை நமக்கு அளித்த திருவள்ளுவர், பொய்யில் புலவர், தெய்வப்புலவர், நாயனார், தேவர், செந்நாப்போதார், பெருநாவலர், பொய்யாமொழி புலவர் என பல்வேறு பெயர்களில் போற்றப்படுகிறார். அதே போன்று மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், வள்ளல், மனிதநேய பண்பாளர், புரட்சித்தலைவர், இதய தெய்வம் என பல பட்டப் பெயர்களைக் கொண்ட முன்னாள் முதலமைச்சர் எம் ஜி ஆர் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் […]

Read more

சங்கீத மும்மணிகளின் திரையிசைப் பாடல்கள்

சங்கீத மும்மணிகளின் திரையிசைப் பாடல்கள், தொகுப்பாசிரியர் ஆர்.ரெங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. மதுரையில் பிறந்தவரான எம்.எஸ்.சுப்புலட்சுமி, 10 வயதிலேயே இசைத் தட்டில் பாடி புகழ் பெற்றவர். பிறகு சேவா சதனம், சகுந்தலை, சாவித்திரி, மீரா ஆகிய படங்களில் நடித்தார். அதன்பின் கச்சேரிகள் நடத்தி, மகாத்மா காந்தி, நேரு உள்பட தலைவர்களின் நன்மதிப்பை பெற்றார். “பாரத ரத்னா” பட்டம் பெற்று புகழின் சிகரத்தைத் தொட்டார். டி.கே.பட்டம்மாள், எம்.எல். வசந்தகுமாரி ஆகியோர் சினிமாவில் பின்னணி பாடகிகளாக விளங்கினர். மூன்று பேரும் சினிமாவில் பாடிய பாடல்கள் இப்புத்தகத்தில் […]

Read more

மொழித் தொல்லியல்

மொழித் தொல்லியல், முனைவர் செ.வை.சண்முகம், மணிவாசகர் பதிப்பகம், விலை 125ரூ. கடந்த இரண்டாண்டுகளில் செ.வை. சண்முகம் பங்கேற்ற கருத்தரங்குகளில் வாசித்த 9 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. ‘மொழித் தொல்லியல்’ எனும் முதல் கட்டுரையே தொல் மொழி, இலக்கியத் தொல்லியல், இலக்கணத் தொல்லியல், எழுத்தாக்கம் உள்ளிட்ட பல உட்தலைப்புகளின் கீழ் விரிவான ஆய்வுக் கட்டுரையாக உள்ளது. வ.சுப.மா-வின் தொல்காப்பியச் சிந்தனை, சங்க இலக்கியத்தில் சூழலியல், கவிதைக் கருத்தாடல் நோக்கில் திருக்குறள் ஆகிய கட்டுரைகள் சண்முகத்தின் இலக்கிய, மொழியியல் சிந்தனையின் விரிந்த தளத்தை உணர்த்துவதாக உள்ளன. நன்றி: தி […]

Read more

வெற்றி வாகை

வெற்றி வாகை(உங்கள் தொடர் வெற்றியின் திறவுகோல்), பரமன் பச்சைமுத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 150ரூ. வெற்றியை தக்க வைத்துக்கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? அப்படி வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாகச் செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே என்று நினைப்பவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக நிற்கும் இந்நூல். நன்றி: தினமணி, 13/1/2018.

Read more

சாதனை மலர்கள்

சாதனை மலர்கள், தொகுப்பாசிரியர்: மக்கள் குரல் வீ.ராம்ஜீ, மணிவாசகர் பதிப்பகம், பக்.224, விலை ரூ175. மக்கள் குரல் நாளிதழில் வாரம்தோறும் வெளியான விருந்தினர் குரல் என்ற சிறப்புப் பகுதியில் இடம்பெற்ற 32 பல்துறை வித்தகர்களின் பேட்டி நூலாக்கம் பெற்றிருக்கிறது. இயல், இசை, நாடகம், நாட்டியம், நடிப்பு, கதை, கவிதை, இலக்கியம், பதிப்பு, தயாரிப்பு, மென்திறன், குழந்தை இலக்கியம், பாடலாசிரியர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், மனநல ஆலோசகர், அறிவியல் ஆய்வாளர், நூலகர், சமூக ஆர்வலர், பொதுப்பணி ஆகிய துறைகளில் சாதனை புரிந்தவர்களின் வாழ்க்கை வழித்தடத்தை சுருக்கமாக தொகுப்பாசிரியர் […]

Read more

அரங்கில் மலர்ந்த கம்பன்

அரங்கில் மலர்ந்த கம்பன், கவிஞர் அரு.நாகப்பன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. நூலாசிரியரின் இலக்கியப் பணியின் பொன் விழா வெளியீடாக வந்துள்ள இந்நூலில், அவர் பங்கேற்ற கவியரங்கக் கவிதைகள் தொகுக்கப்பட்டு உள்ளன. கம்பன் கண்ட கருணை, பக்தி, சமுதாயம், மரவுரி, அரசியல் மாண்பு, வாலி, கணையாழி, அனுமன், கைகேயி, கம்பன் ஒரு தெய்வம் போல, பல தலைப்புகளில், பல்வேறு சான்றோர் தலைமையில் அரங்கேறிய கவிதைகள் இதில் அடக்கம். ‘தன்னையே இறைவனுக்குத் தானளித்தால் தானய்யா அன்னையாய் வந்திருந்து அருட்பாலைச் சுரந்திடுவான்’ (பக். 36) என பக்தி […]

Read more

பாரதி காவியம்

பாரதி காவியம், நெல்லை சு. முத்து, மணிவாசகர் பதிப்பகம், விலை 300ரூ. மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் தனிச்சிறப்பு வாய்ந்த “பாரதி காவியம்” என்ற நூல் இப்போது வெளிவந்துள்ளது. இதை எழுதிய நெல்லை சு.முத்து, இந்திய விண்வெளித்துறை முதல் நிலை விஞ்ஞானி என்றாலும், இலக்கியத்தில் மூழ்கித் திளைப்பவர். தமிழில் 140 நூல்கள் எழுதியுள்ள சாதனையாளர். பாரதி வரலாற்றை அருமையான கவிதைகளில் வடித்துத் தந்துள்ளார். படிப்பவர்கள் “நிச்சயமாக இது ஒரு காவியம்தான்” என்று ஒப்புக்கொள்வார்கள். அந்த அளவுக்கு அருமையும், […]

Read more
1 2 3 4 5 6 13