எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி,

எம்.ஜி.ஆர்., கண்ணதாசன், வாலி, மணிவாசகர் பதிப்பகம், விலை 90ரூ. கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோர் பாடல்கள் எழுத, எம்.ஜி.ஆர். நடித்த காலக்கட்டம், தமிழ்த்திரை உலகில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். சிறந்த பாடல்கள் வரிசையாக வந்தன. அருமையான பாடல்கள் அணிவகுத்தன. கவிஞர் பொன்.செல்லமுத்து எழுதிய இந்தப் புத்தகத்தில், எம்.ஜி.ஆர். படங்களில் கண்ணதாசனும், வாலியும் எழுதிய பாடல்கள் விவரம் இடம் பெற்றுள்ளன. எம்.ஜி.ஆருக்கு பாட்டு எழுதிய மற்ற கவிஞர்களின் விவரமும் உள்ளது. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் அனைவரும் விரும்பி ரசிக்கும் புத்தகம். நன்றி: தினத்தந்தி, 3/5/2017.

Read more

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள்

எம்.ஜி.ஆர். நடித்த 133 படங்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 350ரூ. எம்.ஜி.ஆர். நடித்த முதல் படம் “சதிலீலாவதி”. இது 1936-ம் ஆண்டு வெளிவந்தது. அறிவிருந்து பல படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்தார். அவருடைய 15-வது படமான ‘‘ராஜகுமாரி” , அவரை கதாநாயகனாக உயர்த்திய படம். அது முதல் ஏறுமுகம்தான். 1977-ல் சட்டசபை தேர்தலில் அவருடைய அ.தி.மு.க. போட்டியிட்டு ஆட்சியைப் பிடித்தது. முதல் – அமைச்சராகப் பதவி ஏற்பதற்கு முன் அவர் நடித்து முடித்து படம் “மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்” (1978). இது […]

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. மனிதனுக்கு வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்க வழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக் கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. -இரா. மணிகண்டன் நன்றி: குமுதம், 4/1/2017.

Read more

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும்

நோய்களின் தாக்கமும் தடுப்பு முறைகளும், டாக்டர் பெ. போத்தி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128,விலை 60ரூ. மனிதனுக்க வரக்கூடிய மாரடைப்பு, மூளை அடைப்பு, நீரிழிவு, சிறுநீரக நோய்கள், கல்லீரல் நோய்கள் உள்ளிட்ட பல நோய்களை உணவு, உடற்பயிற்சி, பழக்கவழக்கங்கள் மூலம் எவ்வாறு நோய்வரும் முன் தடுக்க முடியும் என்பதை எடுத்துக்கூறுகிறார் நூலாசிரியர். நோய்த் தடுப்புக்கான வழிகாட்டி நூல் இது. நன்றி: குமுதம், 4/1/2017.   —-   உள்ளம் உலகம், சேகர் பதிப்பகம், விலை 125ரூ. “உருவகக் கடல் கவியரசு” என்று புகழ் பெற்ற […]

Read more

தமிழாய்வு சில மயக்கங்கள்

தமிழாய்வு சில மயக்கங்கள், சா. பன்னீர்செல்வம், மணிவாசகர் பதிப்பகம், பக். 320, விலை 200ரூ. தமிழ் இலக்கணம், இலக்கியம் ஆகியவை குறித்து எழுதப்பட்ட பத்து கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தொல்காப்பியர் நோக்கில் திசைச்சொல் என்பது என்ன, தமிழில் பேச்சுமொழியே எழுத்துமொழியாகி விடுமா, தமிழில் தன்வினை – பிறவினை பொருள் மரபுகளும் அவற்றிற்கான சொல்லாட்சிகளும் எவ்வாறு அமைகின்றன, தமிழ் கலப்புமொழி ஆகாமல் காப்பதெப்படி, வள்ளுவர் கொல்லாமையை முதலாவதாகவும் பொய்யாமையை இரண்டாவதாகவும் கூறியது சரியா – இப்படிப்பட்ட ஆழமான செய்திகளை எடுத்துக்கொண்டு அவற்றைப் பல கோணங்களிலும் அலசி […]

Read more

திரைப்பட இசைப்பாடல்கள்

திரைப்பட இசைப்பாடல்கள், மணிவாசகர் பதிப்பகம், விலை 75ரூ. திருச்சி தியாகராஜன், எம்.கே. ஆத்மநாதன் ஆகியோர் சினிமாவுக்காக எழுதிய பாடல்களை கவிஞர் பொன்.செல்வமுத்து தொகுத்துள்ளார். இரண்டு சிறந்த கவிஞர்களின் பாடல்களுடன், அவர்களுடைய வாழ்க்கைக் குறிப்பு, அவர்களுடைய பாடல்கள், இடம்பெற்ற படங்கள் முதலிய விவரங்களுடன் புத்தகம் சிறப்பாக அமைந்துள்ளது. நன்றி: தினத்தந்தி, 5/10/2016.   —-   பஷீர் தனிமையில் பயணிக்கும் துறவி, சாகித்திய அகாடமி, விலை 335ரூ. தனது எளிமையான எழுத்துக்களின் மூலம் மலையாள இலக்கியத்தில் தன்னிகரற்ற ஆளுமையாக திகழ்ந்தவர் வைக்கம் முஹம்மது பஷீர். அவரது […]

Read more

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள்

ஜமுனாராணி திரையிசைப் பாடல்கள், ஆர். ரங்கராஜன், மணிவாசகர் பதிப்பகம், விலை 200ரூ. திரைப்படங்களில் இனிமையான பாடல்களைப் பாடி, ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்தவர் ஜமுனாராணி. அவர் சினிமாவுக்காகப் பாடிய முதல் பாடலே புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய பாடல்தான், “குளிர் தாமரை மலர்ப் பொய்கை கண்டேன்” என்று தொடங்கும் அந்தப் பாடல் இடம் பெற்ற படம் “வளையாபதி” (1952). சுமார் 40 ஆண்டு காலம் தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் பாடிய ஜமுனா ராணி கடைசியாகப் பாடிய பாடல் 1992-ல் வெளிவந்த “அண்ணன் என்னடா […]

Read more

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்

சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள், ம. நித்யானந்தம், மணிவாசகர் பதிப்பகம், பக். 144, விலை 90ரூ. காசி முதல் ராமேஸ்வரம் வரை 400க்கும் மேற்பட்ட கோயில்களுக்குச் சென்று தரிசித்த அனுபவம் கொண்ட ம. நித்யானந்தம், ‘சிறப்புமிக்க சென்னைக் கோயில்கள்’ என்ற நூலை எழுதியுள்ளார். வரலாற்றுக் குறிப்புடன் புராணத் தகவலுடன் ஒவ்வொரு கோயிலைப் பற்றியும் இந்நூலில் அளித்துள்ளார். கோயில்கள் என்பது நம் கலாசாரத்தின், பண்பாட்டின் பிரதிபலிப்பு. ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பதை இந்த நூல் ஆணித்தரமாகச் சொல்கிறது. நன்றி: கல்கி, 21/8/2016.

Read more

சிந்தனைக் கீற்றுகள்

சிந்தனைக் கீற்றுகள், கா. வேழவேந்தன், மணிவாசகர் பதிப்பகம், விலை 100ரூ. மாணவப் பருவம் முதல் கவிதைகள் எழுதி வருபவர் கா. வேழவேந்தன். தமிழ் இலக்கியப் பூங்காவில், புதுக்கவிதை என்ற சூறாவளி வீசியபோதும், இவருடைய மரபுக் கவிதைகள் தென்றலாய்த் தவழ்ந்தன. அதனால் ‘கவிவேந்தர்’ என்று போற்றப்பட்டார். அமைச்சர் பதவி வகித்தபோதும், இவருடைய கவிதைத் தொண்டு தொய்வில்லாமல் தொடர்ந்தது. “சிந்தனைக் கீற்றுகள்” என்ற இந்த நூல் அவருடைய சிந்தனைச் சிறப்புக்கும், கவிதைப் புலமைக்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மொத்தம் 147 கவிதைகள் உள்ள இந்த நூலில், முதல் […]

Read more

உங்களில் ஒருவன்

உங்களில் ஒருவன், மாமணி, மணிவாசகர் பதிப்பகம், பக். 128, விலை 60ரூ. வறுமையில் வென்று, முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கு தூண்டுதலாய் இருக்கும் தன் வரலாற்று நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 27/4/16.   —- முதல் மனித வெடிகுண்டு: பி. சந்திரசேகரன், தமிழில் ராஜசியாமளா, குமுதம் பு(து)த்தகம், பக். 272, விலை 580ரூ. பெண் ஒருத்தி மனித வெடிகுண்டாக மாறி உலகத் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்காந்தியைக் கொலை செய்த பின்னணியை அலசி ஆராய்ந்து உண்மையை உலகுக்கு உணர்த்திய முதல் நூல். இந்த வழக்கில் தடயவியல் […]

Read more
1 3 4 5 6 7 13