ஊடகத் தேனீ ஸ்ரீதர்

ஊடகத் தேனீ ஸ்ரீதர், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 248, விலை 225ரூ. தன் பணிக்காலம் முழுவதையும், ஒளி, ஒலி ஊடகங்களுடன் தன்னை இணைத்து, ஊடகங்களை கல்விக்காகவும், அறிவியல் விழிப்புணர்வுக்காகவும் பயன்பட வைத்தவர் ஸ்ரீதர். அவரது வாழ்க்கை வரலாற்றை, ‘ஊடகத் தேனீ ஸ்ரீதர்’ என்ற தலைப்பில் இந்த நுாலை வெளியிட்டுள்ளது. சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில், பகுதி நேர தயாரிப்பாளராக, அறிவியல் நிகழ்ச்சிகளை தயாரிக்க துவங்கிய ஸ்ரீதர், அ.இ.வானொலியின் சயின்ஸ் ஆபீசர், கோல்கட்டா தொலைக்காட்சி நிலைய இயக்குனர் என, பொது சேவை […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை,  பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம், பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

எலும்போடு ஒரு வாழ்க்கை

எலும்போடு ஒரு வாழ்க்கை, பிரபல ஆர்த்தோபீடிக் சர்ஜன் மயில்வாகனன் நடராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ராணி மைந்தன், வானதி பதிப்பகம்,  பக்.224, விலை ரூ.275. முடநீக்கியலின் தந்தை என்று போற்றப்படும் டாக்டர் எம்.நடராஜனின் வழிகாட்டுதலால், அவருடைய மகனான டாக்டர் மயில்வாகனன் நடராஜன், முடநீக்கியல்துறையில் கடந்த 30 ஆண்டுகளாகச் சிறந்து விளங்கி அத்துறையில் புகழின் உச்சியை எப்படி அடைந்தார் என்பது இந்நூலில் எளிய நடையில் விவரிக்கப்பட்டுள்ளது. நூலாசிரியர் ராணிமைந்தன் டாக்டர் மயில்வாகனன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றையும், முடநீக்கியல் மருத்துவம் தொடர்புடைய அனைத்துத் தகவல்களையும் இந்நூலில் பதிவு செய்திருப்பது […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், பக். 224, விலை 200ரூ. திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் வி.சி. குகநாதனின், திரையுலக வாழ்க்கை வரலாற்றை, சுவைபட விவரித்திருக்கிறார் நூலாசிரியர். இந்தியா – இலங்கை இடையே உள்ள பல தீவுகளில், ஒன்றான, புங்குடு தீவில் பிறந்து, எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனாக வளர்ந்து, அவரின் படத்துக்கு திரைக்கதை, வசனம் எழுதும் அளவுக்கு உயர்ந்தவர் குகநாதன். சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆவலில் வந்தவரை, மடைமாற்றிவிட்டவர், அண்ணாதுரை. எம்.ஜி.ஆருக்காக, எடுத்த திரைப்படம், தெலுங்கு திரையுலகில் செய்த சாதனைகள் […]

Read more

அடையாற்றில் இன்னோர் ஆலமரம்

அடையாற்றில் இன்னோர் ஆலமரம், ராணி மைந்தன், தி கேன்சர் இன்ஸ்டிடியூட், பக். 288, விலை 150ரூ. திசை நோக்கி தொழுவோம்! அடையாற்றின் அடையாளங்கள், ஆலமரம், அன்னி பெசன்ட் அம்மையார், அடையாறுகேன்சர் இன்ஸ்டிடியூட். இவற்றுள் இன்றும் தன்னை உலகெங்கும் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கும் கேன்சர் இன்ஸ்டிட்யூட் எனும் விருட்சத்திற்கு வித்திட்டவர், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி. தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். அவர் கண்ட கனவுதான், கருமவினை என ஒதுக்கித் தள்ளப்பட்ட புற்றுநோயைக் குணப்படுத்த, தனி மருத்துவமனை வேண்டும் எனும் லட்சியம். அந்த லட்சியம் ஈடேற, உலக நாடுகள் […]

Read more

கலைமாமணி வி.சி. குகநாதன்

கலைமாமணி வி.சி. குகநாதன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், விலை 200ரூ. 250 படங்களுக்கு கதை, வசனம் எழுதிய வி.சி. குகநாதன். எம்.ஜி.ஆரால் திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் வி.சி. குகநாதன். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு என்று பல துறைகளிலும் முத்திரை பதித்தவர். தமிழிலும் மற்றும் பல மொழிகளிலும் தயாரான 250 படங்களுக்கு கதை வசனம் எழுதியவர். 48 படங்களை இயக்கியவர். 51 படங்களைத் தயாரித்தவர். திருப்பங்கள் பல நிறைந்த இவருடைய வாழ்க்கை வரலாற்றை கலைமாமணி வி.சி. குகநாதன் என்ற தலைப்பில் புத்தகமாக […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, பக். 244, விலை 200ரூ. துவக்க காலத்தில், ‘கடவுள் இல்லை’ என்று நம்பியவன், கால ஓட்டத்தில், ‘கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன’ என்று எண்ணி காலத்தை ஓட்டினான். ஆனால் இன்று, கடவுளின் கருணை இல்லாமல், எதுவுமே இல்லை என்று நம்புகிறான். இந்த மூன்றாம் கட்டத்து வாழ்க்கையில்தான், நான் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதாக, ஆத்மார்த்தமான வாழ்வு வாழ்வதாக மனப்பூர்வமாக நம்புகிறேன்’ (பக். 16) – நீதியரசர் மு. கற்பகவிநாயகத்தின் இந்த வாக்குமூலம் […]

Read more

ஒரு நீதியரசரின் நெடும் பயணம்

ஒரு நீதியரசரின் நெடும் பயணம், ராணி மைந்தன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 200ரூ. நீதியரசர் கற்பகவிநாயகத்தின் வாழ்வும், அவர் சமுதாயத்துக்கு காட்டி வரும் நல்ல வழிகளை மையமாக வைத்து வண்ண புகைப்படங்களுடன், 24 அத்தியாயங்களில் எழுதப்பட்ட நூலாகும். வீழ்வது கேவலம் அல்ல, வீழ்ந்தே கிடப்பதுதான் கேவலம், விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமை அல்ல. விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை என்ற நீதியரசரின் வைரவரிகளை இளைஞர்கள் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்பதற்கான வழிமுறைகள் நூலில் இடம் பெற்றுள்ளன. நீதியரசரின் […]

Read more

இலக்கிய வீதி இனியவன்

இலக்கிய வீதி இனியவன், ராணி மைந்தன், கலைஞன் பதிப்பகம், சென்னை, பக். 224, விலை 150ரூ. இலக்கிய வீதி என்ற அமைப்பின் மூலம் வளரும் எழுத்தாளர்கள் பலரை ஊக்குவித்து, வளர்ந்தெடுத்த இனியவனின் வாழ்க்கை வரரலாற்றை எழுதியுள்ளார் ராணிமைந்தன். இனியவனின் பண்புகள், அவர் தொடங்கிய அமைப்பு, அதன் நோக்கம், அவரது இளம்பிராயம் தொட்டு அவரது எழுத்தாற்றல், இலக்கியத்திற்காக அவர் பட்டபாடு, எழுத்தாளர்களுக்கு அவர் அளித்த ஊக்கம், கம்பன் கழக விழா உள்ளிட்ட அவர் நடத்திய பல்வேறு விழாக்கள், எழுத்துலக மேதைகள் முதல் அவரால் ஊக்கம் பெற்ற […]

Read more

நான் மருத்துவம் மற்றவை

நான் மருத்துவம் மற்றவை, டாக்டர் வி.வி. வரதராசனின் தன்வரலாறு, ராணி மைந்தன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை, விலை 240, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-317-7.html சிக்கல்களில் மாட்டினால் எப்படி மீள வேண்டும்? எறும்பாகப் பிறந்தபோது, அடி சறுக்கவில்லை. யானையாக வளர்ந்தபோது அடி சறுக்கியது. ஆனால் வாழ்க்கை அனுபவங்கள், சறுக்கலில் எக்கச்சக்கமாய் விழுந்து விடாமல் காப்பாற்றின என்பதை, நேரடியாக உணர்ந்து, அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் வெற்றியுடன் சாதித்து உள்ளார் டாக்டர் வரதராஜன். இதை, எளிமையாக, சுவையாக எடுத்துரைத்ததில் […]

Read more
1 2